Saturday, December 30, 2006

அறுவை - 2

இப்ப நம்ம குக்கிராமத்து மருத்துவமனைக்கு, அரசாங்கம் மேலும் இரண்டு சர்ஜன்களை வேலைக்கமர்த்தியது. சிறிது நாட்களுக்கு பிறகு அந்த கிராமத்தில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்தது. நடந்து சென்று கொண்டிருந்த ஒருவனை ஒரு கார் அடித்து சென்று விட்டது. அந்த ஆளுக்கு பயங்கர அடி. அவனை நமது மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவனை பரிசோதித்த நமது மருத்துவர்கள், அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தால்தான் பிழைப்பான் என்று முடிவு செய்தார்கள். அந்த மூன்று அறுவைகளையும் ஒருவரே செய்ய முடியாது. ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு அறுவை செய்யத்தான் தெரியும். அதாவது முதல் மருத்துவருக்கு முதல் அறுவை, இரண்டாமருக்கு இரண்டாவது அறுவை, இப்படி... ஆக மூவருமே அவனுக்கு ஒருவர் பின் ஒருவராக அளுக்கு ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும்.

மீண்டும் பற்றாக்குறை! இரண்டே இரண்டு ஜதை கையுறைகள்தான் இருந்தன. நமது பழைய சர்ஜன் இப்பொழுதும் சிறிது யோசனை செய்துவிட்டு, ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி மூவரும், அடிபட்டவனுக்கு பாதுகாப்பான முறையில் மூன்று அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக செய்து முடித்து அவனை காப்பாற்றினர்.

இப்பொழுது கையுறைகளை எப்படி உபயோகப்படுத்தினர்? விளக்க முடியுமா?

Thursday, December 28, 2006

அறுவை புதிர்

ரயில் புதிர் கேட்டு கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகப் போகிறது. அதனால் அடுத்ததும் கொஞ்சம் கஷ்டமான புதிர்தான்.

அது ஒரு குக்கிராமம். அங்கே ஒரு சின்ன(ரொம்ப சின்னது!) மருத்துவமனை. ஆனா அங்கே இருந்த டாக்டர் ஒரு சர்ஜன். ஒரு வாரத்துக்கு ஒரு முறை பக்கத்து ஊரிலிருந்து, மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். இதனால் மருத்துவமனையில் அடிக்கடி பற்றாக்குறை ஏற்படுவதுண்டு.

ஒரு வெள்ளிகிழமை, நம்ம சர்ஜனுக்கு சோதனையாக, கிராமத்தில் ஒரு பெரிய விபத்து நடந்தது. ஒரு வேனும் காரும் மிக பயங்கரமாக மோதியதில், கார் டிரைவர், ஓனர், வேன் டிரைவர் மூவருக்கும் சரியான அடி. மூவரையும் நமது சின்ன மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவர்களை பரிசோதித்த நமது சர்ஜன் மூவருக்கும் அவசரமாக ஒரு சின்ன ஆப்பரேஷன் செய்தால்தான் பிழைப்பார்கள் என்று உணர்ந்தார். இப்பொழுது ஒரே ஒரு பிரச்சனைதான். அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் மொத்தம் இரண்டே இரண்டு ஜதை கையுறைகள்தான் இருப்பிலிருந்தன. இரண்டு ஜதை கையுறைகளை வைத்துக் கொண்டு எப்படி மூன்று பேருக்கு ஆப்பரேஷன் செய்வது? சிறிது நேரம் யோசித்த நமது சர்ஜன், ஒரு முடிவிற்கு வந்தவராக, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மூவருக்கும் வெற்றிகரமாக அறுவையை முடித்து, அவர்கள் உயிரை காப்பாற்றினார். இதில் முக்கியமான விஷயம் அவர் யாருக்கும் பாதுகாப்பற்ற முறையில் ஆப்பரேஷன் செய்யவில்லை. மூவருக்குமே பாதுகாப்பான முறையில்தான் ஆப்பரேஷன் செய்தார். அதே சமயம் தனக்கும் எந்த விதமான கிருமிகளின் பாதிப்பும் இல்லாதபடி பார்த்து கொண்டார். கையுறை இல்லாமலும் அவர் யாருக்கும் அறுவை செய்யவில்லை. அப்படியானால் இரண்டே இரண்டு ஜதை கையுறைகளை வைத்து கொண்டு எப்படி மூன்று பேருக்கு பாதுகாப்பான முறையில் அறுவை செய்தார்?

கொஞ்சம் விளக்குங்கள்!!!

Friday, December 22, 2006

சில தவறுகள்! சில திருத்தங்கள்!!!






Wednesday, December 13, 2006

ரயிலே ரயிலே... - விடை

ரயிலோட நீளம் 'L'னு வச்சுக்குவோம். ரயிலோட வேகம் 'S'னு வச்சுக்குவோம். சூர்யா/ஜோதிகா நடக்கிற வேகம் 'X'. ரயில் சூர்யாவ கிராஸ் பண்ணறதுக்கு 10 செகண்ட் ஆகுது. அதே ஜோதிகாவ கிராஸ் பண்ண 9 செகண்ட். அப்ப ரயிலோட வேகம்

S = (L+10X)/10 = (L-9X)/9.

இந்த ரெண்டு சமனிகளிலிருந்து(சரியான தமிழ் வார்த்தைதானா?!?!) நமக்கு கிடைப்பது

L = 180X
&
S = 19X.

இப்ப ரயிலோட கடைசிப் பெட்டி சூர்யாவ கிராஸ் பண்ணினதற்கப்புறம், அந்த ரயிலோட முகப்பு ஜோதிகாவ ரீச் பண்ணுது. அப்ப இருபது நிமிஷத்துல அந்த ரயிலோட முகப்பு கடந்த தூரம் = (1200S+L).

அதே இருபது நிமிஷத்துல சூர்யா நடக்கிற தூரம் = (1200X).

இப்ப ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள தூரம் = (1200S+L-1200X).

இதில் முன்னாடி கண்டு பிடிச்ச Sஓட மதிப்பையும், Lஓட மதிப்பையும் போட்டா,

(1200(19X)+180X-1200X) = 21780X.

இந்த தூரத்தை கடக்க ரெண்டு பேருக்கும் தேவை(ரெண்டு பேருமே நடக்கிறாங்க!),

21780X/2X = 10890 வினாடிகள். அதாவது 3 மணி நேரம், 1 நிமிடம், 30 வினாடிகள்.

அப்படின்னா சூர்யாவும், ஜோதிகாவும் சேரும்போது நம்ம வால் கிளாக் "ஒரு மணி நாற்பத்தி ஓரு நிமிஷம், 30 செகண்ட்"னு காட்டும்.

ஒரு மாதிரியா புரிஞ்சிரும்னு நினைக்கிறேன்!!!;)

Saturday, October 28, 2006

ஓ! பட்டர்ஃபிளை!!! பட்டர்ஃபிளை!!!





Friday, October 27, 2006

ரயிலே ரயிலே...

கஷ்டமான கேள்வி கேட்டு நாளாச்சுன்னு நினைக்கிறேன். இது கொஞ்சம் கஷ்டம்தான்(எனக்குப்பா!! உங்களுக்கு எப்படின்னு நீங்கதான் சொல்லனும்).

என்னை மாதிரி ஒரு அழகான பையன், பேரு வேணா சூர்யான்னு வச்சுக்கலாம், ரயில் தண்டவாளம் ஓரமா சோகமா நடந்து போயிட்டிருக்கா(கே)ன். இன்னொரு இடத்துல ஜோதிகான்னு ஒரு அழகான பொண்ணு(நெஜமாவே ஜோதிகாதான்! மாதிரியெல்லாம் கிடையாது!!!) அதே மாதிரி சோகமா ரயில் தண்டவாளம் ஓரமா நடந்து போயிட்டிருக்கா. பேக்ரவுண்டுல "மின்னலேலே, நீ வந்த..." அப்படின்னு பாட்டு போடறோம். "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்" அப்படின்னு பீட் வரும்போது, ஒரு ரயில், அதாவது Trainனு ஆங்கிலத்துல சொல்வாங்க; அந்த ரயில், சூர்யாவ கிராஸ் பண்ணுது. "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்...", பத்தாவது செகண்ட், அந்த ரயிலோட கடைசி பெட்டி சூர்யாவ கிராஸ் பண்ணிச்சு. 'வால் கிளாக்'க காட்டறோம். மணி சரியா பத்து இருபது. "கண் விழித்து பார்த்த போது..." சரணம் முழுக்க ரெண்டு பேரும் நடந்து போயிட்டே இருக்காங்க. சரணம் முடிஞ்சதும் மறுபடியும் "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்...". மறுபடி 'வால் கிளாக்'க காட்டறோம்,சரியா பத்து நாற்பது. "டும்டும்டும்டும் டும்டும்டும்டும்...", அதே ரயில் ஜோதிகாவ கிராஸ் பண்ணுது. ஒன்பதாவது செகண்ட் முடியும் போது ரயிலோட கடைசி பெட்டி கிராஸ் பண்ணிருச்சு. "பால் மழைக்கு காத்திருக்கும் பூமியில்லையா..." சரணம் முழுக்க மறுபடியும் ரெண்டு பேரும் நடக்கறதை காட்டறோம். பாட்டு முடியும்போது ரெண்டு பேரும் மீட் பண்றாங்க. அதுக்கப்புறம்...(உங்கள் கற்பனைக்கு!!)

சரி! ஃபீல் பண்ணது போதும்!! இப்ப நம்ம கேள்விக்கு வாங்க.

பாட்டு முடியறதுக்கு முன்னாடி, அதாவது சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ரதற்கு முன்னாடி நாம 'வால் கிளாக்'க காட்டறோம்(காட்டறோம்!!!). அப்ப அதுல மணி என்ன?

Friday, October 13, 2006

கல்லறைகள்



Wednesday, October 11, 2006

சொன்னா கேட்டியா?

ஐந்து காட்டுமிராண்டிகளுக்கு(நர மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ரமராக வேலை கிடைத்தது. முதல் நாள் அவர்களை வேலைக்கெடுத்த HR அவர்களிடம், "இங்க நீங்க நிறைய சம்பாதிக்கலாம். கம்பெனியிலேயே கான்டீன் இருக்கு. என்ன வேனா சாப்பிடலாம். ஆனா ஒன்னே ஒன்னு, மத்தவங்களுக்கு தொல்லை கொடுக்காம இருங்க!". காட்டுமிராண்டிகளும் ஒத்து கொண்டனர்.

ஒரு மாதம் கழித்து, HR அவர்களிடம் வந்தார், "நீங்க எல்லாருமே ரொம்ப கடுமையா வேலை பார்க்கறீங்க. கம்பெனிக்கு ரொம்ப திருப்தி. ஆமா, நம்ம ப்ரோக்ரமர்ஸ்ல ஒருத்தனை காணோமே. அவனை பத்தி உங்க யாருக்காவது ஏதாவது தெரியுமா?. காட்டுமிராண்டிகள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

HR போன பிறகு, காட்டுமிராண்டிகளின் தலைவன், "எந்த மடையன்டா அந்த ப்ரோக்ரமரை தின்னது?" கோபமாக கேட்டான்.

ஒரு காட்டுமிராண்டி தலையை குனிந்து கொண்டு கையை தூக்கினான். தலைவன் அவனை பார்த்து, "அறிவு கெட்டவனே! ஒரு மாசமா டீம் லீடர்ஸ், ப்ராஜக்ட் லீடர்ஸ், ப்ராஜக்ட் மேனேஜர்ஸ்னு சாப்பிட்டுகிட்டிருந்தோம். யாராவது கண்டுபிடிச்சாங்களா? இப்ப நீ ஒரு ப்ரோக்ரமரை சாப்பிட்டதும், உடனே கண்டுபிடிச்சுட்டாங்க பார்! இனியாவது 'வேலை செய்யறவங்களை' சாப்பிடாதே!"

Monday, October 02, 2006

மனதோடு ஒரு ஸ்கூல் காலம்!!!




Sunday, October 01, 2006

செஸ் கட்டங்கள்


செஸ் ஆடுவீர்களா? ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல!!!

செஸ் போர்டில் மொத்தம் எத்தனை கட்டங்கள்? (அட! இது இல்ல சார் கேள்வி! சும்மா ஒரு கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லிடறதா!!!) மொத்தம் 64 கட்டங்கள். இப்பொழுது செஸ் போர்டில் சரியாக இரண்டு கட்டங்களை மட்டும் மூடுவது போல் ஒரு அட்டையில் வெட்டி கொள்ளுங்கள்(அல்லது எதையாவது செய்து கொள்ளுங்கள்!! மூட வேண்டும் அவ்வளவுதான்). இந்த மாதிரி மொத்தம் 32 அட்டைகள் இருந்தால் போர்டிலுள்ள எல்லா கட்டங்களையும் மூடி விடலாம்(அட மேட்டருக்கு வாப்பா!).

சரி! இப்பொழுது நம்மிடம் அந்த மாதிரி 31 அட்டைகள் இருக்கின்றன(நல்லா கவனிங்க, 32 இல்ல, 31!). கீழே படத்தில் உள்ளதுபோல் ஓரத்திலிருக்கும் இரண்டு வெள்ளை கட்டங்களையும்(செவப்பு கலரடிச்சிருக்கு பாருங்க!!) விட்டு விடுங்கள்.



மீதியுள்ள 62 கட்டங்களையும் நம்மிடமுள்ள 31 அட்டைகளால் மூட வேண்டும். எப்படி மூடுவீர்கள்?

Thursday, September 28, 2006

உண்மையில் வெற்றியா?

முதலில் தேன்கூடு நிர்வாகிகளிடமும், வாசகர்களிடமும், முக்கியமாக தேன்கூடு செப்டம்பர் மாத போட்டியில் எனக்கு அடுத்ததாக வந்த அனைவரிடமும், என்னை பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறு வேண்டி கொள்கிறேன். எதற்கு இந்த மன்னிப்பு என்று கேட்கிறீர்களா? தேன்கூடு போட்டியில் எனது கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது நேர்மையான முறையில் பெறப்பட்ட வெற்றியல்ல!!! கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நானும் எனது நண்பர்களும் கள்ள வோட்டு போட்டிருக்கிறோம். இதை ஒத்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமுமில்லை. ஏன் இப்படி செய்தேன்? எழுத்து திறமையுள்ளவர்களை சிறந்த முறையில் ஊக்கப்படுத்துவதற்காக தேன்கூடு குழுவினர் இந்த மாதாந்திர போட்டியை நடத்துகின்றனர். பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் சிறந்த படைப்பை தேர்ந்தெடுக்கும் முறையில் உள்ள குறைகளை அவர்களுக்கு சுட்டிகாட்டவே இப்படி செய்தேன். போட்டிக்கு படைப்பை அனுப்பி விட்டு, தேர்ந்தெடுக்கும் முறையிலுள்ள இந்த குறையினால், வெற்றி பெற முடியாதவர்களின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்.

எனக்கு கிடைத்த வோட்டுகளின் மொத்தக் கணக்கு(இந்த கணக்கு எப்படியென்று தெரியவில்லை?) 31. இதில் கள்ளவோட்டுக்கள் மொத்தம் 15. மீதியுள்ளது 16 வோட்டுக்கள், அதாவது 9.09%. நியாயமாக பார்த்தால் எனது கதை முதல் பத்துக்குள்ளேயே வந்திருக்க கூடாது. முதல் பத்திற்குள் வந்தால்தானே நடுவர் குழுவுக்கு அனுப்புவதற்கு!!!

கள்ள வோட்டு எப்படி போடப்பட்டது? வோட்டு போட ஒரு மின்னஞ்ஜல் முகவரியிருந்தாலே போதுமானது! என்னிடமே மூன்று முகவரிகள் இருக்கின்றன! எனது நண்பர்களிடம் கடன் வாங்கியது மீதி 13. இதில் அந்த பதிமூன்று வோட்டுகளையும் போட்டவர்கள் எனது இந்த கதையை இன்னும் படிக்கவேயில்லை. நான் கேட்டு கொண்டதற்காக வோட்டு மட்டும் போட்டார்கள்.

என்னை கேட்டால், சிறந்த படைப்புகளை, இந்த மாதிரி வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது என்பதே சரியான முறையில்லை. ஏனென்றால், ஒவ்வொரு வாசகர்க்கும் ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும். ஒருவருக்கு மிகவும் பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காது. மேலும் கதை, கவிதை, கட்டுரை என்ற பேதங்கள் இல்லாமல், எல்லாமே ஒரே கூரையின் கீழ் போட்டியில் கலந்து கொள்கின்றன. இது மிக மிக தவறான அணுகுமுறையாக எனக்கு படுகிறது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த மூன்றாம் பரிசை வாங்கி கொள்வதா? மீண்டும் மன்னிக்கவும். மறுதலிக்கிறேன்.

Monday, September 25, 2006

என்ன சத்தம் இந்த நேரம்?!?!

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.

ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."

ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"

அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"

நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"

கொள்ளை - விடை

இந்த புதிரில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கொள்ளைக்காரர்கள் எல்லோருமே அறிவாளிகள், ஆதலால் தங்களுக்கு கிடைக்க கூடிய அதிகபட்சமான பங்கிலிருந்து கொஞ்சம் குறைந்தாலும் ஒப்பந்தத்தை ஒப்புகொள்ளமாட்டார்கள்.

இப்பொழுது சதீஷ் மட்டுமே இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது எல்லா பொற்காசுகளுமே அவனுக்குத்தான்.

சரி. இப்பொழுது சதீஷும், ராஜேஷும் மட்டுமே இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். ஒப்பந்தம் சொல்பவனுக்கு எதுவுமே கிடைக்காது. ஏனென்றால் ஒப்பந்தம் சொல்பவன் எவ்வளவு கொடுப்பதாக சொன்னாலும், கேட்பவன் அதை மறுத்து விட்டு அவனை கொன்று விடுவான். அதனால் இருவர் மட்டுமே இருக்கும்பொழுது ஒப்பந்தம் கேட்பவனுக்குத்தான் எல்லா காசுகளும் கிடைக்கும்.

இப்பொழுது இவர்களுடன் கலையும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது என்ன ஆகும்? ஒப்பந்தம் கூறுபவன் சொல்வது மறுக்கப்பட்டால், அவன் இறந்து விடுவான்; அப்புறம் இருவர் மட்டுமே இருப்பர்; அப்பொழுது ஒப்பந்தம் கூறப்போகிறவனுக்கு எதுவுமே கிடைக்க போவதில்லை. அப்படியிருக்கையில் அவன் மூன்றாமவன் கூறும் ஒப்பந்தத்துக்கு கண்டிப்பாக ஒத்து கொள்வான். அதனால் ஒப்பந்தம் கூறுபவன் 1000 பொற்காசுகளையும் எடுத்து கொண்டு, மற்ற இருவருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டான்.

இப்பொழுது சுரேஷும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். மொத்தம் நான்குபேர். குறைந்தபட்சம் மூன்று பேர் ஒப்பந்தத்தை ஒப்புகொண்டால்தான் ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்படும். ஒப்பந்தம் கூறுபவன் மேலும் இருவரை தனது ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளுமாறு செய்யவேண்டும். ஏற்கெனவே மூவர் மட்டுமே இருந்தால், ஒப்பந்தம் கேட்கும் இருவருக்கு ஒன்றுமே கிடைக்காதென்பது தெரியும். அதனால் அந்த இருவருக்கும் தலா ஒரு பொற்காசு கொடுத்தால், அவர்கள் ஒப்பந்தம் கூறுபவனின் ஒப்பந்தத்தை ஏற்று கொள்வார்கள். அப்பொழுது மூன்றாமவனுக்கு ஒன்றும் கொடுக்க தேவையில்லை. ஒப்பந்தம் கூறுபவன் மீதியுள்ள 998 பொற்காசுகளையும் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் இப்பொழுது மணியும் இருக்கிறான். இப்பொழுதும் குறைந்த பட்சம் மூவர் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். நான்கு பேர் இருந்தால் மூன்றாமவனுக்கு ஒன்றுமே கிடைக்காது. அதனால் அவனுக்கு ஒரு காசு கொடுத்தால் அவன் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வான். நான்கு பேர் இருந்தால் ஒரு பொற்காசு பெறும் இருவரில் யாராவது ஒருவருக்கு இரண்டு பொற்காசுகள் கொடுக்க வேன்டும், அதாவது, நாங்குபேர் இருந்தால் அவனுக்கு கிடைப்பதை விட அதிகம் கிடைப்பதாக ஆசை காட்டவேண்டும்; இன்னொருவனுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். நான்காமவனுக்கும் எதுவும் கொடுக்க தேவையில்லை. மீதியுள்ள 997 பொற்காசுகளையும் மணி எடுத்து கொள்ளலாம்.

ஸ்ஸ்ஸ்....! அப்பாடா! ஒரு வழியாக விடையை பதித்து விட்டேன். அட! மழை கூட வந்து விட்டதே!!!;)

Thursday, July 27, 2006

கொள்ளை

சதீஷ், ராஜேஷ், கலை, சுரேஷ், மணி ஐவரும் கடற் கொள்ளையர்கள். ஒரு முறை கொள்ளையில் ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன. அதை ஐவரும் பங்கு போட்டுக் கொள்வதென தீர்மானித்து, பங்கு போடும் பொறுப்பை மணியிடம் முதலில் ஒப்படைத்தனர். பங்கு போடுபவன் சொல்லும் பங்கு ஒப்பந்தம் ஒப்புக்கொள்ள படாவிட்டால், மீதியுள்ளவர்கள் சேர்ந்து பங்கு போட்டவனை கொன்று விடுவார்கள். பெரும்பான்மையானவர்கள் ஆதரித்தால் மட்டுமே ஒப்பந்தம் ஒப்புகொள்ளப்படும். முக்கியமான விஷயங்கள் சில - ஐவருமே அறிவாளிகள், ரத்தம் பார்க்க தயங்காதவர்கள்(ஒரே சீவுதான்), பேராசைக்காரர்கள். இப்படியிருக்கையில் மணி எப்படி 1000 பொற்காசுகளை பங்கிட்டிருப்பான்?

Saturday, July 08, 2006

இது கொஞ்சம் ஓஓஓஓவர்



Wednesday, June 28, 2006

கொஞ்ச(சு)ம் கணிதம்

இன்று என் அண்ணன் ஒரு கணக்கு போட்டார்(அவரது சொந்த சரக்காம்!!!). நான் கணிணியை வைத்து போராடி 20 நிமிடத்தில் விடையனுப்பிவிட்டேன்(ப்ரோக்ராம் எழுதுவதற்குத்தான் 15 நிமிடமானது). கணக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அனாலும் போட்டு பார்க்க சுவையாயிருந்தது!!!

ஒரு பத்து இலக்க எண். பத்து இலக்கங்களும் வெவ்வேறு எண்கள்(0-9). இலக்க வரிசையை கணக்கில் இடதுபுறமிருந்தே எண்ணவும்(அதாவது 4வது இலக்கம் பத்து லட்சம், 8வது இடம் நூறு..).

ஒற்றை படை எண்கள் - ஒற்றை படை இடங்களிலும், இரட்டை படை எண்கள் - இரட்டை படை இடங்களிலும்(ie. odd numbers are in odd places & even nos are in even places) இருக்கின்றன. இதில் 2வது, 3வது, 4வது இடங்களில் உள்ள எண்களை மட்டும் ஒரு தனி மூன்றிலக்க எண்ணாக கவனித்தால்(Ex : if n=x456xxxxxx, consider it as four hundred and fifty six) அதன் ஒரு multiple(சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை!) தான் 8வது, 9வது, 10வது இலக்கங்கங்களை இணைத்து கிடைக்கும் எண்.

அதே போல், 1வது, 2வது இலக்க எண்களை இணைத்து கிடைக்கும் இரண்டிலக்க எண்ணின் ஒரு multiple தான் 7வது, 8வதை இணைத்தால் கிடைக்கும் எண்.

மேலும், இந்த இரண்டு multipleகளும் ஒரே mutiplierஆல் கிடைப்பவைதான்!!
அந்த பத்து இலக்க எண் என்னவென்று கண்டுபிடியுங்கள்!!!

பி.கு. :
-------
கணக்கு புரியுமென்றே நினைக்கிறேன், இதை விட எளிமையாக இந்த கணக்கை புரியும்படி எனக்கு எழுதி அனுப்பினால், அதையும் பிரசுரிக்க தயாராயிருக்கிறேன்!!!

Tuesday, June 27, 2006

பத்திரிக்கைகளை ஏமாற்றியவர்!

ராஜாஜி காலமாவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னால், ஒரு சமயம் கடுமையாய் உடல் நலம் குண்றியிருந்தார். ஸி.எஸ். அவரை பார்க்க வந்தார். அப்பொழுது ராஜாஜி அவரிடம்,"இந்த முறை செய்தியாளர்களுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டேன்" என்றார். ஸி.எஸ். 'சரிதான், யாரோ பேட்டி எடுக்க வந்தவர்களை திருப்பியனுப்பி விட்டார் போலிருக்கிறது' என்று நினைத்து கொண்டார். ராஜாஜி தொடர்ந்து சொன்னார், "எல்லா பத்திரிக்கைகளும் நான் காலமாகி விடுவேன் என்று எண்ணி, என் வாழ்க்கை குறிப்பு முதலியன எழுதி தயாராக வைத்திருந்தன. நான் ஏமாற்றி விட்டேன்."

-பழைய கல்கியில் படித்தது.

பழமொழிகள்

உன்னுடைய பிள்ளைகள் கெட்டவர்களாயிருந்தால், நீ அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்க தேவையில்லை. உன் பிள்ளைகள் நல்லவர்களாயிருந்தால், உன்னுடைய சொத்து அவர்களுக்கு தேவையில்லை.

- பல்கேரியா
(யோசிப்பவர் : அப்ப கடைசீல நம்ம சொத்து யாருக்குதான் போகும்?!?!)


காப்பியும், காதலும் சூடாயிருந்தாலே ருசி.
- ஜெர்மனி
(யோசிப்பவர் : கரெக்டு! இனிமேயாவது சுட சுட காப்பியடிக்கனும்!!!)


பழமொழிகள் உதவி :- நன்றி பழைய கல்கி

Sunday, June 25, 2006

6 + 5 + 4 + 3 + 2 + புதிர்

நாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. அதனால நானும் ஆத்துக்குள்ள விழுந்துட்டேன்.


1) மறக்க முடியாத ஆறு ஞாபகங்கள்
================================


அ. யூ.கே.ஜி. படிக்கும்போது மிஸ்ஸிடம் அடிவாங்கி அழுதது. அன்னைக்கு முடிவு பண்ணேன். இனிமே யார் அடிச்சாலும் அழக்கூடாதுன்னு. அப்படியே மெய்ன்டெய்ன் பண்றேன்.(நீ ரொம்ப நல்லவன்டா!!!)

ஆ. ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொழுது பிடித்த பெண் அருகிலேயே உட்கார்ந்திருந்தும், விவரம் ஏதும் தெரியாததால், ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டேன்.

இ. ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது, வாழ்க்கையில் முதல் முறையாக பரிட்சையில் ஃபெயிலானது(காலாண்டுன்னு நினக்கிறேன்). அதுக்கப்புறம் அப்படியே பழகி போச்சு.

ஈ. கல்லூரியில் முதல் முறையாக மேடையேறி பாடினேன்!?! பாடினேன் என்றால், உல்டா பாட்டு.அதற்காக எனக்கு ஒன்றும் நல்ல குரல் வளம் என்றெல்லம் நினைக்காதீர்கள். உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த நிகழ்ச்சிகளை நான் தான் ஆர்கனைஸ் செய்தேன். அந்த பாட்டை பாட வேண்டியவன் கடைசி நேரத்தில் கூட்டத்தை பார்த்து பயந்து விட்டான். கடைசியில் வேறு வழியில்லாமல் நிலைமையை சமாளிக்க பாடினேன்!?!? ஆனால் அதுக்கப்புறம் நிறைய தடவை மேடையெறியாச்சு.

உ. முதுகலை முடிக்கும்பொழுது, பிராஜக்டுக்காக முதல் முறையாக எழுத்தாளர் சுஜாதாவை, அம்பலம் அலுவலகத்தில் சந்தித்தேன். அறிமுகபடுத்தியதும் ஒரு 'வெரிகுட்', அதற்கப்புறம் ஒரு அரை மணிநேரத்துக்கப்புறம், அவருடைய கதை ஒன்றின் பெயரை நான் ஞாபகப்படுத்தியதும் ஒரு 'குட்'.

ஊ. இந்த வருட ஆரம்பத்தில் புத்தக கண்காட்சியில், எனது எழுத்துக்களை முதல் முறையாக அச்சில் பார்த்தேன். மரத்தடி-திண்ணை இணைந்து போன வருடம் நடத்திய அறிவியல் புனைக்கதை போட்டியில் எனது கதை பிரசுரத்திற்கு (பரிசு கிடைக்கவில்லை) தேர்ந்தெடுக்கப்பட்டு 'எதிர்காலம் என்ற ஒன்று' புத்தகதில் இடம்பெற்றது.

2. பி(ப)டித்த ஐந்து புத்தகங்கள்
==========================

i) Around the World in 80 Days - Jules Verne - முதன் முதலாக ஆங்கிலத்திலேயே வாசித்த கதை. கல்லூரி நூலகத்தில் எடுத்து படித்தேன்.

ii) பொன்னியின் செல்வன் - கல்கி - இந்த புத்தகத்தை பள்ளி விடுமுறை நாட்களில் எனது வீட்டில் படித்து பார்க்க சொல்லியிருக்கிறார்கள்(பலமுறை). அப்பொழுதெல்லாம், 'இதையெல்லாம் மனுஷன் படிப்பானா' என்று சொல்லி விடுவேன். ஒரு கல்லூரி விடுமுறை நாளில் உருப்படியாக ஒரு புத்தகமும் எனது வீட்டு நூலகத்தில் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.அதுவும் இரண்டாம் பாகத்தில்தான் ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பித்த பிறகு புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. கடைசியாகத்தான் முதல் பாகத்தை படித்தேன்

iii) விளையாட்டு கணிதம் - யா. பெரல்மான் - சின்ன வயதிலேயே படித்த, பிடித்த புத்தகம். இந்த புத்தகம்தான் நான் புதிர்களை விரும்பி படிக்க காரணமாயிருந்தது. கணிததிலும் ஈடுபாடு அதிகரித்தது.

iv) பொழுது போக்கு பௌதிகம் - யா. பெரல்மான் - எனக்கு சயின்ஸ் சொல்லி கொடுத்த புத்தகம். சயின்ஸ் ஃபிக் ஷன்களை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இந்த புத்தகம்தான்.

v) அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - ஒரு சில பாகங்கள் போரடித்தாலும், மொத்தத்தில் ஒரு நல்ல நூல். ஆன்ம தேடலின் ஆரம்பத்திலிருப்பவர்களுக்கு சிறிதாவது உதவ கூடிய நூல்.

3. ரசித்த நான்கு படங்கள்
======================


1) கர்ணன் - சின்ன வயதில் திரும்ப திரும்ப பார்த்த படம். சம்பாதித்து வாங்கிய முதல் ஸி.டி. இந்த படத்து வசனங்கள்போல் வேறு எந்தப் பட வசனத்தையும் நான் ரசித்ததில்லை.

2) மிஸ்ஸியம்மா - கிளாஸிக்கான காமெடி படம். சாவித்திரி இதில் கொள்ளை அழகு.

3) தளபதி - சிறு வயதில் பார்த்தபொழுது ஒன்றுமே புரியவில்லை. வித்தியாசமான ரஜினி, "ஏன்?...தேவா!" போன்ற வசங்கள் பின்னாட்களில் புரிந்த பொழுது மிகவும் ரசித்தேன்.

4) அனுபவி ராஜா அனுபவி - முன்பு டிடி1ல் ஞாயிற்றுகிழமை படம் போடுவார்களே; அப்பொழுது இதை எங்கள் வீட்டு வி.சி.ஆரில் பதிந்து வைத்தோம். கிட்டத்தட்ட பள்ளி படிப்பு முடியும் வரை அடிக்கடி பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு வருவது தவிர்க்க முடியாதது!

4. வியக்கும் மூன்று நபர்கள்
========================


ஒ) ஏ.ஆர்.ரஹ்மான் - என்ன வென்றே தெரியவில்லை? நான் இவரின் பயங்கர ரசிகன். ரொம்ப பிடித்தவரை பற்றி அதிகமாக ஒன்றும் சொல்லமுடியாதல்லவா! பிடிச்சிருக்கு! அவ்வளவுதான்.

இ) சுஜாதா - முதலில் இவரின் கதைகளை படித்த பொழுது இவர் எழுபது வயது தாத்தா என்பது சத்தியமாக தெரியாது. ரொம்ப ஓவராக எழுதுகிறாரே, மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 30, 35 வயதிருக்கும் என்றுதான் வெகு நாட்களாக நினைத்திருந்தேன். இவரின் அறிவியல் கதைகள்தான் என்னை இவரின் ரசிகனாக்கியது.

மூ) மூன்றாவது நபர்...... வேறு யார்! நானேதான்!!! ஆனாலும் இந்த ஆளுக்குள் எவ்வளவு அறிவு, எவ்வளவு குசும்பு, எவ்வளவு அழகு(சரி! சரி! கண்ட்ரோல்!!!)

5. ரொம்ப யோசித்த இரண்டு புதிர்கள்
================================


ஒ) வயசு என்ன : இந்த புதிரை முதலில் படித்தவுடன், விடை காண முயன்றபொழுது எப்படி முன்னேறுவது என்றே புரியவில்லை. சிறிது நேரம் யோசித்து விட்டு அப்படியே விட்டு விட்டேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகு ஒரு லீட் கிடைத்தது. அதைப் பிடித்து கொண்டு வொர்க் அவுட் செய்ய ஐந்து நிமிடத்தில் விடை வந்துவிட்டது. இதை இட்லி வடைக்கு அனுப்பி அவரது வலை பதிவில் முன்பு பதிந்திருக்கிறேன்(வலைத்துணுக்கு ஆரம்பிக்காத பொழுது!).

டூ) வட்ட மேஜை கொள்ளையர்கள் : யோசிங்க வலைத்துணுக்கின் ஆரம்பத்தில் இந்த புதிரை பதிந்திருக்கிறேன். இந்த புதிர் பத்தாம் வகுப்பு என்று ஞாபகம், எனது அண்ணன் எனக்கு போட்டார். பத்து நிமிடத்தில் விடை கண்டுபிடித்தேன்.

6. எனது சங்கிலி!?!?
=================


சங்கிலியில் இணைக்க எனக்கு பிடித்த சில வலைப் பதிவாளர்களை கேட்டுப் பார்த்தேன். ஆனால் அவர்களில் யாராலும் இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் எனது சங்கிலி (புதிர்) கீழே இருக்கிறது. அதற்கு சரியான விடையளிக்கும் வலைப்பதிவாளர்களை, இந்த விளையாட்டுக்கு சங்கிலியாக அழைக்கிறேன். யாருமே விளையாட்டுக்கு கூப்பிடாத வலைப் பதிவாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!! நழுவ விடாதீர்கள்!!!!;)

மூன்று கண்ணிகள் கொண்ட சங்கிலிகளாக மொத்தம் ஐந்து சங்கிலிகள், ஒரு கொல்லனிடம் வேலைக்கு வருகிறது. இந்த ஐந்து சங்கிலிகளையும் கொல்லன் ஒரே நீள சங்கிலியாக்க வேண்டும்(15 கண்ணிகள் கொண்ட சங்கிலியாக). அப்படியானால் அந்த கொல்லன் குறைந்தபட்சமாக மொத்தம் எத்தனை கண்ணிகளை வெட்டி இணைக்க வேண்டும்?

Wednesday, June 21, 2006

நாணயம் எவ்வளவு பெருசு?

ஒரு காகிதத்தை எடுத்துக்கோங்க. அதுல 1செ.மி. விட்டமுள்ள ஒரு ஓட்டை போடுங்க. இப்ப அந்த ஓட்டை வழியா எவ்வளவு பெரிய நாணயம் உள்ளே போகும்? அதாவது நான் கேக்கறது அந்த நாணயத்தோட விட்டம்!

பி.கு.: நாணயத்தோட திண்ணம் மிக மிக குறைவு!, அதை புறக்கணித்துவிடலாம்னு வச்சுக்குங்க.

Monday, June 19, 2006

பொன்னியின் செல்வன் - எனது தேர்வுகள்

கார்த்திகேயன் பதிவில் நான் இட்ட மறுமொழி. பதிவாகவே போடலாம் என்று தோன்றியதால் பதித்து விட்டேன். பின்னூட்டத்தை சிறிது மாற்றமும் அப்புறம் செய்தேன்.

நான் இதை எத்தனை முறை படித்திருப்பேன் என்ற எண்ணியதில்லை. வேறு உருப்படியான புத்தகம் கிடைக்கவில்லையென்றால் உடனே பொ.செ. தூக்கி படிக்க ஆரம்பித்துவிடுவேன். அப்படி தூக்கும்பொழுது இந்த பாகம் என்ற விதிமுறையெல்லாம் நமக்கு கிடையாது. எந்த பாகம் முதலில் கைக்கு கிடைக்கிறதோ அதிலிருந்து தொடங்குவேன். ஆனால் பொ.செ.யில் உள்ள பெரிய குறையே(!?!) அதை எடுத்து விட்டால் கடைசி வரை முடிக்காமல் கீழே வைக்க முடியாது!

எனது கதாபாத்திரங்கள் சாய்ஸ்:

பொ.செ.க்கு கமல் பொருத்தம்தான். ஆனால் அவருக்கு இப்பொழுது வயது தெரிகிறது. பொ.செ.யை கல்கி இளமையானவராக காட்டியிருப்பார். மேலும் உயரமானவர். அதனால் எனது இப்போதைய தேர்வு மாதவன்.

வ.தே.வுக்கு சூர்யாவை விட மாதவன் மிக பொருத்தமாக இருப்பார். பொ.செ. கமலென்றால், மேடியை வ.தே. ஆக்கி விடலாம். ஆனால் மேடியை ஏற்கெனவே பொ.செ.யாக்கி விட்டதால், வ.தே.வுக்கு சூர்யாவை சிபாரிசு செய்கிறேன்.

பெ.பழுவேட்டயருக்கு கம்பீரம் மட்டும் போதாது; சில நேரங்களில் நந்தினியிடம் அசடு வழியவும் வேண்டும். அதனால் இந்த கேரக்டருக்கு நக்கலில்லாத சத்யராஜ் பொருந்துவார்.

சி.ப : இவர் பெ.ப.வை விட கொஞ்சம் உயரம் குறைவு(என்னை பொறுத்தவரையில்). ஆஜானு பாகுவான தேகம் கிடையாது. ஆனால் இரும்பூ போல் இருக்க வேண்டும். மூக்கும் கூர்மயாக இருக்க வேண்டும். ஓரளவு நாஸர் பொருந்துவார்(ஓரளவுதான்)

நந்தினி : அதுயேன் எல்லோரும் நந்தினிக்கு ஐஸையே சிபாரிசு செய்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நந்தினிக்கு உருண்டையான முகம். ஆசிரியரே இதை குறிப்பிடுகிறார். ஐஸ் உருண்டை முகம் கிடையாது என்பது எனது கருத்து. மேலும் நந்தினி உயரம் குறைவு. இப்போதைய ஹீரோயின்களில் மீரா ஜாஸ்மின் ஓரளவுக்கு நந்தினி பாத்திரத்துக்கு பொருந்துவார்.

ஆ.வா. வுக்கு இப்போதைக்கு யாரும் பொருத்தமில்லை.

குந்தவை : பொ.செ.யில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் இதுதான். குந்தவை ரசிகர் மன்றம் ஒன்று வைத்து அதற்கு தலைவராகலாமா என்று கூட ஒரு யோசனையிருக்கிறது. இதற்கு இப்போதைய ஹீரோயின்கள் யாருமே பொருந்த மாட்டார்கள். பழைய பத்மினி, சாவித்திரி இருவரும் இந்த பாத்திரத்துக்கு பொருத்தமானவர்கள்.

ஆதித்த கரிகாலனுக்கு பிரகாஷ் ராஜ் அல்லது விக்ரம் இருவருமே பொருத்தம் தான். இருவரில் பிரகாஷ் ராஜ் எனது சாய்ஸ்.



அட பொ.செ.யை பற்றி பேச ஆரம்பித்தாலே இப்படித்தான். உற்சாகம் பீறிட்டடிக்குது. பின்னூட்டம் எழுதலாம்னு ஆரம்பிச்சா, பதிவா போடுற அளவுக்கு டைப் பண்ணிட்டேன் ;)

Sunday, June 18, 2006

முதியோர் இல்லம் (Only for Super Heroes)

Tuesday, May 30, 2006

விடுகதையா.... இந்த கேள்வி

விடுகதையெல்லாம் நம்ம வலைதுணுக்கில் இதற்கு முன் கேட்டிருக்கிறேனா என்று ஞாபகம் இல்லை. எதற்கும் இந்த விடுகதையை ஆங்கிலத்திலேயே கேட்கிறேன். ஆனால் நீங்கள் தமிழிலிலேயே பதிலளிக்கலாம்;)


It's always 1 to 6,
it's always 15 to 20,
it's always 5,
but it's never 21,
unless it's flying.

Monday, May 29, 2006

சில குறிப்புகள் - மதுமிதாவுக்காக

வலைத்துணுக்கர் பெயர்
======================

யோசிப்பவர்


வலைத்துணுக்குகள்
==================

யோசிங்க - http://yosinga.blogspot.com/
குறு குறு குறுஞ்செய்தி - http://kurunjeythi.blogspot.com/
கதை எழுதுகிறேன் - http://kathaiezuthukiren.blogspot.com

இன்னும் மூன்று துணுக்குகள் சொந்த உபயோகத்துக்காக வைத்திருக்கிறேன். அவற்றை பற்றி குறிப்பு தர விரும்பவில்லை.



ஊர்
===

சொந்த ஊர் : தூத்துக்குடி

இப்பொழுது : சென்னை

நாடு : தமிழ்நாடு, இந்திய துணைக்கண்டம்(அட! நான் தனித் தமிழ்
நாடெல்லாம் கேக்கலீங்க!!!)



வலைப்பூ அறிமுகம் செய்தவர்
===========================

முதல் முதலாக பார்த்த வலைப்பதிவு : இட்லி வடை

அறிமுகப்படுத்தியவர் : மா.சிவக்குமார்('ழ' கணிணி)

விளக்கம் கொடுத்தவர் : ஜெயராதா('ழ' கணிணி)



முதலாவது
==========

முதல் வலைத்துணுக்கு : யோசிங்க

முதல் துணுக்கு ஆரம்பித்த நாள் : ஆகஸ்ட் 26, 2004.

முதல் துணுக்கு : என்னைப் பற்றிய சிறு அறிமுகம்



இந்த துணுக்கு
=============

இது எத்தனையாவது துணுக்கு : 300வது (மூன்று வலைத்துணுக்குகளையும் சேர்த்து)

இந்த துணுக்கின் சுட்டி : http://yosinga.blogspot.com/2006/05/blog-post_29.html



வலைப்பு ஏன் ஆரம்பித்தேன்
=========================

பொழுது போகவில்லை. ஆரம்பித்தேன்.(நிஜமாகவே அப்படித்தான்.
கிண்டலில்லை)



சந்தித்த அனுபவங்கள்
====================

நல்லவை : எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்தது, அவரது
மேற்பார்வையில் சில தினங்கள் இருந்தது, அம்பலமில் எனது சில
கதைகள் பிரசுரமானது, வலைப்பூவில் எனது துணுக்குகளை கவனிக்க
ஆரம்பித்தது, தினமலர் எனது துணுக்கை பற்றி பிரசுரித்தது,
குறுஞ்செய்தி வலைத்துணுக்கிற்கு கிடைத்த வரவேற்பு, மரத்தடி-திண்ணை
நடத்திய அறிவியல் புனைகதைகள் போட்டி பற்றி வலப்பதிவுகள் மூலம்
அறிந்து கொண்டதால், அதில் கலந்து கொண்டது, அதில் பிரசுரத்துக்கு
தகுந்ததாக எனது கதை தேர்ந்தெடுக்கப்பட்டு
பிரசுரிக்கப்பட்டது(எதிர் காலம் என்று ஒன்று),இப்பொழுது அதே போல்
நம்பிக்கையொளி போட்டியிலும் கலந்து கொள்வது.....

கெட்டவை : தோல்விகள், போலிகள்



பெற்ற நண்பர்கள்
================

அரசியலில் மட்டுமல்ல, எழுத்துலகிலும், குறிப்பாக
வலைத்துணுக்கர்களிடையில், யாரும் நிரந்தர நண்பர்களும் கிடையாது;
நிரந்தர எதிரியும் கிடையாது.



கற்றவை
========

அஞ்சல் முறையில் வேகமாக தமிழில் தட்டச்சு செய்ய. யுனிகோடு சப்போர்ட் இல்லாத கணிணியில்கூட ஆங்கிலத்திலேயே, தேவையானவற்றை
வேகமாக, பிழையில்லாமல் தட்டச்சு செய்து விட்டு, பின்பு கன்வெர்ட் செய்து
கொள்ளுமளவுக்கு!!!



எழுத்தில் கிடைத்த சுதந்திரம்
==========================

பொதுவாக நான் யாரிடமும் அவ்வளவாக பேசுவது கிடையாது. ரொம்பவும்
ரிசர்வ்ட். அந்த ரிசர்வ்ட் தனத்தை என்னால் என் எழுத்தில் உடைக்க
முடிகிறது.



இனி செய்ய நினைப்பவை
=======================

இதுவரை ஒன்றும் நினைக்கவில்லை.



என்னை பற்றிய சிறு குறிப்பு(மன்னிக்கவும்! முழுமையான
===================================================
குறிப்பு கொடுக்க ஒன்றுமில்லை!!!)
===============================

நான் ரொம்ப குழப்பமான ஆள். எனக்கே என்னை புரிவதில்லை.
'மிஸ்ஸியம்மா'வையும் விரும்பி பார்க்கிறேன். 'பேக் டு தி ஃபியூச்சரை'யும் விரும்பி பார்க்கிறேன். சுஜாதாவும் பிடிக்கிறது, கல்கியும் பிடிக்கிறது.செல்வ
ராகவனையும், எஸ்.ஜே சூர்யாவையும் ரசிக்க மாட்டேன், ஆனால்
பாராட்டுகிறேன். ஏனோ பெண்களை பிடிக்கவில்லை, அதற்காக
வெறுக்கவுமில்லை. ஒரு கணம் மிக சிறந்த அறிவாளியாயிருக்கிறேன், சில
கணம் வடி கட்டிய முட்டாளாயும் இருக்கிறேன். உங்களுக்கே தெரிந்திருக்கும். 'யோசிங்க'வையும் மெய்ன்டென்ய்ன் பண்ணுகிறேன், 'குறுஞ்செய்திகள்'யும் மெய்ன்டெய்ன் பண்ணுகிறேன். உங்களுக்கு என்னை புரிகிறதா?



கடைசியாக சொல்ல நினைக்கும் ஒன்று
====================================

ஒரு ஜென் குரு சொன்னது போல, "சொல்வதற்கு என்ன இருக்கிறது?"

Thursday, May 25, 2006

எண் வரிசை...

கீழேயுள்ள எண் வரிசையை பாருங்கள். இதில் உங்களால் ஒரு ஒழுங்கை காணமுடிகிறதா? அப்படியொரு ஒழுங்கை கண்டால் இந்த வரிசையில் அடுத்த எண் என்ன?

1 11 21 1211 111221 ............

Wednesday, May 17, 2006

எண் விளையாட்டு

கீழேயுள்ள புதிரில்,எல்லா வாக்கியங்களும் உண்மையாக இருக்கும்படிக்கு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

இந்தப் புதிரில் 0 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 1 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 2 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 3 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 4 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 5 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 6 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 7 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 8 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.
இந்தப் புதிரில் 9 என்ற இலக்கம் சரியாக ____ முறை இருக்கிறது.

Thursday, May 11, 2006

தேர்தல் முடிவுகள்














NDTV தேர்தல்



NDTVயில் நடந்து கொண்டிருக்கும் அதே கருத்து பதிவுதான். வலைப்பதிவாளர்கள் கருத்துகளை இங்கே பதிக்கவும். இந்த தேர்தல் முடிவுகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?






ஆம்
இல்லை
ஏதோ...

Current Results

Friday, April 21, 2006

கலவையான கேள்விகள்

இன்னைக்கு ஒரே விதமான கேள்விகளா கேக்காம சில கலவையான கேள்விகளா கேக்கப் போறேன்.


1) (x-a)(x-b)(x-c)(x-d)....(x-y)(x-z) = ?

2) திரு.பாஸ்கி சுமார் அரைமணிநேரம் மழையில் நடந்து வீடு திரும்பினார். அவர் வெளியே கிளம்பியபொழுது குடை, தொப்பி, ரெயின்கோட் போன்ற எதுவும் எக்ஸ்ட்ராவாக எடுத்து செல்லவில்லை. ஆனாலும் வீடு திரும்பிய பொழுது அவரது தலையில் ஒரு முடி கூட ஈரமாகவில்லை. இது எப்படி?

3) கீழேயுள்ள குறியீடுகள், நாம் அன்றாடும் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு ஆங்கில வார்த்தையை குறிக்கிறது. அந்த ஆங்கில வார்த்தை என்ன?
5436

4) கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்.
31 31 __ 31

5) கீழேயுள்ள தொடரை நிறைவு செய்யுங்கள்.
Y Y H L Y E Y T ? ? ? ?

Thursday, April 13, 2006

கடவுள் தரிசனம்

Friday, April 07, 2006

சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - II

நமது திரட்டில் இரண்டாவது பாடல் இது. இது போன்ற பாடல்களை சுட்டிக் காட்டி உதவுமாறு வாசகர்களை கேட்டிருந்தும் யாரும் சுட்டவில்லை. இன்றும் வாசகர்கள் இது போன்ற பாடல்களை சுட்ட வரவேற்கபடுகிறார்கள். இனி பாடல்...


யாயும் ஞாயும் யாரோ கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறை கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே


இந்த பாடல் இடம் பெற்ற படம் உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்தில் எல்லா வரிகளும் வராது. 1, 3, 4, 5 வரிகள் மட்டுமே வரும். அதுவும் இந்த பாடலில் உள்ளது போலவே வராது(உதா :- செம்புலம் பெயர்ந்த நீர்த் துளி போல்) . இந்த பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அதனால் இந்த பாடலை எழுதியவர் இதில் வரும் உவமையைக் கொண்டு "செம்புல பெயல் நீரார்" என்றே அழைக்கப்படுகிறார். இந்தப் பாடலின் அர்த்தம் உங்களுக்கு எளிதில் விளங்கும் என்றே நினைகிறேன். மேலும் இதில் ஒரு மறைபொருள்("சொல்லாமல் சொல்லப்பட்டது" அல்லது "சிறப்பு") இருக்கிறது. அதையும் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

Wednesday, April 05, 2006

சார்பியல் தத்துவம் - ஐன்ஸ்டைன் ரயில்

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம் 5.ஒளி 6.ஒளி-II 7.ஐன்ஸ்டைன் ரயில்
--------------------------------------------------


எல்லா திசைகளிலும் ஒளி ஒரே வேகத்தில் பரவுவது சார்பியல் தத்துவத்துக்கு நல்ல உதாரணமாகவே இருக்கிறது. ஆனால் ஒளியின் அந்த வேகம் மட்டும் சார்பிலா தனிமுதலாகிவிடுகிறது. இது உண்மையில் ஒரு முரண்பாடா? கிடையவே கிடையாது.

பூமி உருண்டையானது என்பதை மறுத்த மத்திய கால மனிதன், தனது மறுப்புக்கு அசைக்க முடியாத ஒரு காரணத்தை சொன்னான். அது பூமி உருண்டையாக இருந்தால், பொருட்கள் கீழே உருண்டு விழுந்து விடும் என்பது. அந்த நேரத்தில் பூமி உருண்டை என்று சொன்னவர்களால் கூட இந்த கேள்விக்கு சரியான ஒரு பதிலை கூற முடியவில்லை. ஆனால் இன்று நமக்கு தெரியும், இந்த கேள்வி எவ்வளவு அர்த்தமில்லாதது என்று. இதே போல் அர்த்தமில்லாததுதான் மேலே தோன்றிய முரண்பாடும். இயக்கத்தின் சார்பியலுக்கும், ஒளி வேகத்தின் சார்பிலா தனிமுதல் கொள்கைக்கும் முரண்பாடு காணுவது அர்த்தமில்லாதது.

நாம் மேலும் தவறு செய்யாமலிருக்க, இனிமேல் சோதனை அடிப்படையிலான நிர்ணயிப்பைத் தவிர, வேறு எதையும் நம்பாமல் பரிசீலிப்போம்.

54,00,000 கி.மீ.(ஒளியின் வேகத்தைப் போல் பதினெட்டு மடங்கு) நீளமுள்ள ஒரு ரயிலை கற்பனை செய்து கொள்ளுங்கள். அது பூமியை சாராத ஒரு நேர்கோட்டு பாதையில் வினாடிக்கு 2,40,000 கி.மீ.(ஒளியின் வேகத்தில் எட்டு பங்கு) வேகத்தில் செல்கிறதென வைத்து கொள்ளுங்கள்.

ரயிலின் நடுப்பகுதியில் ஒரு மின்விளக்கு இருக்கிறது. ரயிலின் முதல் பெட்டியிலும், கடைசிப் பெட்டியிலும் ஆட்டோமெடிக் கதவுகள் உள்ளன. இந்த அட்டோமெடிக் கதவுகள், நடுப்பெட்டியில் உள்ள மின்விளக்கின் ஒளி பட்டவுடன் திறந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பொழுது மின்விளக்கை ஆன் பண்ணுகிறோம். என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

நிலைமையை மைக்கெல்சனின் சோதனை முடிவுகளை கொண்டு ஆராய்வோம். முதலில் ரயிலின் நடுப்பெட்டியில் பயணம் செய்யும் ஒரு பயணி காணுவது : மைக்கெல்சனின் சோதனைப்படி ஒளியானது ரயிலை சார்ந்து எல்லா திசைகளிலும் ஒரே வேகத்தில்(3,00,000 கி.மீ/வினாடி) செல்லுமாதலால், முதல் பெட்டிக்கும் கடைசி பெட்டிக்கும் அது ஒரே நேரத்தில் - 9 வினாடிகளில்((54,00,000/2)/3,00,000) போய் சேரும். அதாவது இரண்டு கதவுகளும் ஒரே நேரத்தில் திறக்கும்.

இப்பொழுது ரயில் நிலைய பிளாட்ஃபார்மில் நிற்கும் ஒருவர் காணக்கூடியது : மைக்கெல்சனின் சோதனை முடிவுகளின் படி ஒளி எந்த தொகுப்பை(frame) சார்ந்தும் ஒரே வேகத்தில்தான் செல்கிறது. அதாவது ரயில் பிளாட்ஃபாரத்தை சார்ந்தும் ஒளி 3,00,000 கி.மீ. வேகத்தில்தான் செல்லும். ஆனால் ரயிலின் கடைசிப் பெட்டி ஒளி கற்றையை நோக்கி ஓடி வந்து அதை சந்திக்கிறது. அதாவது ஒளி கற்றை கடைசிப் பெட்டியை 27,00,000/(3,00,000+2,40,000) = 5 வினாடியில் வந்தடைந்துவிடும். அதேபோல் முதல் பெட்டியை ஒளி விரட்டி சென்று பிடிக்கிறது. அது முதல் பெட்டியை 27,00,000/(3,00,000-2,40,000) = 45வது வினாடியில்தான் சென்றடையும். ஆக பிளாட்பாரத்தில் நிற்பவருக்கு இரு கதவுகளும் வெவ்வேறு நேரங்களில் திறந்து கொள்ளும். கடைசிப் பெட்டியிலுள்ள கதவு திறந்து 40 வினாடிகளுக்கு பின்புதான் முதல் பெட்டி கதவு திறக்கும்.

இந்த ரயிலுக்கு பெயர் ஐன்ஸ்டைன் ரயில். இந்த ஐன்ஸ்டைன் ரயிலில் முன் கதவும் பின் கதவும் திறக்கும் இரண்டு நிகழ்ச்சிகள், ரயிலில் இருப்போருக்கு ஒரே நேரத்திலும், பிளாட்ஃபாரத்தில் இருப்பவருக்கு 40 வினாடிகள் இடைவேளையிலும் நடைபெறுகின்றன.

இது முதலையை தலையிலிருந்து வாலை நோக்கி அளக்கையில் இரண்டு மீட்டரும், வாலிலிருந்து தலையை நோக்கி அளக்கையில் மூன்று மீட்டரும் இருப்பதாக சொல்வது போல அல்லவா இருக்கிறது? ஆனால் உண்மை இதுதான். இதன் மூலம் நமக்கு தெளிவாவது காலமும் சார்பானதே. காலத்தின் சார்பியலில் மேலும் அதிசயங்கள் இருக்கின்றன. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

- மீண்டும் பார்(அறு)ப்போம்.

Saturday, April 01, 2006

இஷ்டத்துக்கு யோசிங்க - II

புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு!!! நம்ம வலைத் துணுக்கே அதுக்குத்தானே. அதனால இஷ்டத்துக்கு யோசிங்க இரண்டாவது பதிவு இது. இஷ்டத்துக்கு யோசிச்சு கீழேயுள்ள புதிர்களுக்கு பதில் சொல்லுங்க!!!

1) சரவணனும், அருணும் விவசாயிகள். இருவருடைய நிலங்களும் அடுத்தடுத்து இருந்தன. இருவருடைய நிலங்களின் நீள அகலங்களும் ஒரே அளவுதான். இருவரும் ஒரே பயிரைத்தான் எப்பொழுதும் பயிரிடுவார்கள். ஒரே மாதிரியான விவசாய முறைகளைதான் கையாள்வார்கள். ஆனாலும் எப்பொழுதும் சரவணன் அருணைவிட அதிக விளைச்சல் அறுவடை செய்கிறான். இது எப்படி?

2) ஒரு ஆணும் ஒரு பெண்ணும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து கொண்டனர். இருவருக்குமிடையில் மிகவும் அந்தரங்கமான உரையாடல் நடந்தது. ஆனாலும் ஒருவர் உருவத்தை பற்றி இன்னொருவர் தங்களது நண்பர்களிடம் விவரிக்க முடியவில்லை. ஏன்?


3) மத்திய சிறையில் மச்சாடோ தனது வக்கீலுடன் பேசிக்கொண்டிருந்தான். ஜட்ஜ் பெய்லை மறுத்துவிட்டதால் இருவரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். விவாதத்தின் முடிவில் மச்சாடோ கோபமாக சிறையிலிருந்து வெளியெறினான். இதை விளக்க முடியுமா?

4) பாண்டியராஜன் மூன்று முறை முயற்சி செய்த பிறகு கடைசியாக அந்த கொட்டகையின் கீற்றில் ஓட்டை போட்டு உள்ளே ஓடி கொண்டிருந்த படத்தை பார்க்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அங்கிருந்து போய்விட்டான். பிறகு அடுத்த நாள் அதே படத்தை டிக்கெட் வாங்கி போய் பார்த்தான். என்ன நடக்கிறது?

Thursday, March 30, 2006

சார்பியல்?!?!

சார்பியல் தத்துவத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னா நம்ப மாட்டேங்றாங்கப்பா!!!

Tuesday, March 28, 2006

தமிழ்மணம் - ஒரு சர்வே!!!

தேர்தல் சீசனா!? அதான் இப்படி!






அட! வோட்டு பெட்டி!!!

தமிழ்மணத்தில் நீங்கள் விரும்பி படிக்கும் பகுதி எது?




அரசியல்/சமூகம்
சிறுகதை/கவிதை
சினிமா/பொழுதுபோக்கு
விளையாட்டு/புதிர்
அனுபவம்/நிகழ்வுகள்
நூல்நயம்/இதழியல்
அறிவியல்/நுட்பம்
செய்தி விமர்சனம்
வணிகம்/பொருளாதாரம்
ஆன்மீகம்/இலக்கியம்
நகைச்சுவை/நையாண்டி
ஓவியம்/நிழற்படம்
விவாத மேடை
பதிவர் வட்டம்
பொதுவானவை





சார்பியல் தத்துவம் - ஒளி-II

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம் 5.ஒளி 6.ஒளி-II
--------------------------------------------------


சென்ற பகுதியின் முடிவில் ஏற்பட்ட முரண்பாடு ஏன் வந்தது? இந்தப் புதிர் வெகு நாட்கள் விஞ்ஞானிகளின் தூக்கத்தை கெடுத்தது.

இந்த முரண்பாடு உண்மையில் முற்றிலும் தவறாக கற்பித்து கொண்ட தர்க்க வாதத்தினால் விளைந்தது. நமது ரயில் எடுத்துகாட்டில் முழுதும் கற்பனையை நம்பி மட்டுமே செயல்பட்டதால் வந்த வினை. இது போன்ற நிலைகளில் ஒளி எப்படி செயல்படும் என்று சோதனை செய்யாமல் விட்டதன் விளைவு.

இதை எப்படி சோதிப்பது? இவ்வளவு வேகத்தை எப்படி அடைய முடியும்? இவையே அப்பொழுது சோதனை யோசனைகளுக்கு முட்டுகட்டை இட்டன.

ஓடும் பூமியில் நாம் இருக்கிறோம். பூமி சூரியனை சுற்றி வரும் வேகம் வினாடிக்கு 30 கி.மீ. நமக்கு தெரிந்தவற்றுள் இது குறிப்பிடத்தக்க அதிகமான வேகம்தான். பூமி தன்னைத்தானே சுற்றி கொள்ளும் அச்சு வழி சுழற்சியின் வேகம் வினாடிக்கு சுமார் 1/2 கி.மீதான். ஆகவே குறுகிய நேரத்துக்கு இதை புறக்கணிக்க தக்கதாய் கொள்ளலாம். ஆகவே பூமியினுள் ஒளி பரவும் விதத்தை ஆராயும் நாம், உண்மையில் வினாடிக்கு 30கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு வண்டியினுள் அதை ஆராய்கிறோம்.

ஆனால் நாம் எடுத்துகொண்ட ரயிலுக்கு இணையாக நமது பூமியை கருதுவது சரிதானா? ரயில் நேர்கோட்டு(linear) பாதையில் செல்கிறது. ஆனால் பூமியின் இயக்கமோ சுழற்பாதை(angular) இயக்கமல்லவா? எனினும் இப்படி எடுத்து கொள்வதில் பெரிய தவறொன்றுமில்லை. ஏனென்றால் இதனால் வரும் பிழை கணக்கிலெடுத்து கொள்ள தேவையில்லாதபடிக்கு அவ்வளவு அற்பமானது. இப்பொழுது ஓடும் ரயிலில் எப்படி ஒளி வேறு வேறு திசைகளில் வேறு வேறு வேகங்களில் செல்லும் என்று எதிர்பார்த்தோமோ அது போல பூமியிலும் வேறு வேறு திசைகளில் வேறு வேறு வேகங்களில் செல்கிறதா என்று நாம் சோதிக்க வேண்டும்.

19ம் நூற்றாண்டை சேர்ந்த சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் மைக்கெல்சன், 1881இல் இத்தகைய சோதனை ஒன்றை செய்தார். வெவ்வேறு திசைகளில் ஒளி செல்லும் வேகங்களை அவர் மிகத் துல்லியமாக அளந்தார். இவ்வளவு வேகத்தில் ஏற்படும் மிக மிக சொற்பமான வேறுபாடுகளையும்(differences) கண்டுபிடிப்பதற்கு மைக்கெல்சன் மிகவும் கறாரான ஒரு ஏற்பாட்டை அமைத்திருந்தார். அதனால் அவருடைய சோதனை மிகவும் துல்லியமாக இருந்தது.



மைக்கெல்சனின் சோதனை திரும்பத் திரும்ப வேறு வேறு இடங்களில், வேறு வேறு சூழ்நிலைகளில் செய்து பார்க்கப் பட்டது. ஆனால் முடிவு அப்போதைய விஞ்ஞானிகளின் கருத்தோட்டத்துக்கு மாறானதாய் இருந்தது; அதாவது ஒளியின் வேகம் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஓடும் தொகுப்பினுள்( frame - இங்கே நமது பூமி) எல்லா திசைகளிலும் ஒரே மாதிரியாய் இருந்ததது.

இந்த விஷயத்தில் ஒளி பரவுதல் நமது துப்பாக்கி குண்டு உதாரணத்தில் குண்டின் பாய்ச்சலைப் போல் இருக்கிறது. அதாவது ஓடும் தொகுப்பின்(frame - இங்கே நமது ரயில்) சுவர்களை சார்ந்து ஒளி எல்லா திசைகளிலும் ஒரே வேகத்தில்தான் செல்லும்.

பிரச்சனை தீர்ந்ததா? இன்னும் இல்லை. ஒன்றை சார்ந்து ஒன்று ஓடி இயங்கி கொண்டிருக்கும் தொகுப்புகள்(உதா-நமது பஸ்கள் வேறு வேறு வேகங்களில் சென்றால் அவை ஒன்றை சார்ந்து ஒன்று இயங்கி கொண்டிருக்கின்றன), வெவ்வேறு வேகங்கள் கொண்டதாய் இருக்க வேண்டும். ஆனால் ஒளியின் வேகம் மட்டும் எல்லா தொகுப்புகளிலும்(frames) அதை சார்ந்து அதே 3,00,000 கி.மீ/வினாடியாகவே இருக்கிறது. ஆக ஒளியின் வேகம் சார்பானதாய் இல்லாமல், சார்பிலா தனி முதலாய் இருக்கிறது!
குழப்பமாக இருக்கிறதல்லவா?


- மீண்டும் பார்(அறு)ப்போம்.

Sunday, March 26, 2006

சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - I

கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது முயற்சி பண்ணலாமே என்று இதை ஆரம்பிக்கிறேன். நமது சினிமா பாடல்களில் அவ்வப்பொழுது சில சங்கப் பாடல்கள் எட்டிப் பார்ப்பதுண்டு(உபயம் - இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்). அந்த சங்கப் பாடல்களையெல்லாம் இங்கே திரட்டலாம் என்று நினைக்கிறேன். வெறுமனே பாடல்களை மட்டும் போடாமல் அந்த சங்கப்பாடல் பற்றிய தெரிந்த தெரியாத விஷயங்களையும் இங்கே நாம் அலசுவோம்.

முதலில் ஏ.ஆர்.ரஹ்மானே ஆரம்பிக்கட்டும்!


"கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமை கவினே
"


இந்தப் பாடல் இடம்பெற்ற படம் எதுவென்று உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதனால் அதையும் நீங்களே சொல்லுங்கள். அப்புறம் இந்தப் பாடலை எழுதியவர் யார்? இந்த பாடலுக்கு என்ன அர்த்தம்? இதையெல்லாம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. தெரியாதவங்க தெரிஞ்சுக்கட்டும்.

எனக்கும் அதிகமான பாடல்கள் தெரியாது. வாசகர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட பாடல்களை எதிர்பார்க்கிறேன். நீங்கள் புதிதாக ஏதேனும் பாடலை இந்த திரட்டில் சேர்க்க விரும்பினால் அதை ஒரு தனி பின்னூட்டமாக இதில் இடுங்கள். அடுத்த பதிவில் அந்த பாடல் இடம்பெறும்.

Wednesday, March 22, 2006

பல்லவியை கண்டுபிடிங்க?

கீழே சில பாடல்களின் இடைவரிகளை கொடுத்திருக்கிறேன். அவற்றிலிருந்து அந்த பாடல்களின் பல்லவியை(முடிந்தால் படத்தையும்) கண்டுபிடியுங்கள். பாடல்களை விரைவாக கண்டுபிடிக்கும் முதல் மூன்று பேருக்கு, பல்லவி பூஷன் விருது வழங்கப்படும். இந்த தடவை எல்லாமே ஈஸியான பாடல்கள்தான்(விருதை முன்னிட்டு!!!)


1) பள்ளிக்கூட பாடமறந்து பட்டாம்பூச்சி தேடினோம்...

2) பட்டமரத்து மேல எட்டிபாக்கும் ஓனான்போல வாழ வந்தோம்...

3) உன் விழி என் இமை மூட வேண்டும்...

4) அழகிய கோலங்கள், அதற்கென தாளங்கள். ஏதேதோ நினைவுகள் தினசரி கடலலை போல்...

5) ஒரு ஓவியகவிதை கண்ணீரினில் நனையும்...

6) தனிமைக்கே விடுமுறையா. நாம் இதழ் சேர்ப்போம் முதல் முறையா...

7) என் கண் பார்த்தது, என் கை சேருமோ...

8) பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?

9) பாய்விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?

10) கண் கெட்டபின்னே சூரிய உதயம் எந்தப் பக்கமானால் எனக்கென்ன...

11) தேவதையை காண்பதற்கு வழியுமில்லை...

12) மானத்தின் மானத்தை வாங்கி விட்டான்...

Tuesday, March 21, 2006

சார்பியல் தத்துவம் - ஒளி

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம் 5.ஒளி
--------------------------------------------------
நமக்கு தெரிந்தவற்றுள் அதிகபட்ச வேகமுடையது ஒளிதான் என்பது நமக்கெல்லாம் தெரியும்(டாங்கியான்களை எல்லாம் இப்பொழுது கணக்கிலெடுக்காதீர்கள்! அவை கற்பனையானது). ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள். இந்த வேகத்தை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. அப்படிபட்ட வேகத்தில் செல்லும் ஒளியின் வேகம் மாறாதது என்றும் நமக்கு தெரியும்.

இங்கே மாறாதது என்பதற்கு சிறு விளக்கம் தேவை. ஒரு ஒளி கற்றையின் முன் ஒரு கண்ணாடி த்டுப்பை வைப்போம். வெற்றிடத்தைவிட கண்ணாடியினுள் ஒளியின் வேகம் கொஞ்சம் குறைவு. அதனால் சிறிது மெதுவாக செல்லும். ஆனால் கண்ணாடி தடுப்பை கடந்ததும் மீண்டும் தனது 3,00,000 கி.மீ வேகத்தையடைந்துவிடும். அதாவது ஒளியின் வேகம் ஒரே ஊடகத்துக்குள் மாறாததாயிருக்கும். அதை கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

இப்பொழுது ஒரு சின்ன புதிர். பயங்கரமான வேகத்தில் நேர்கோட்டில்(பூமியை சாராத நேர்கோடு) செல்லும் ஒரு ரயிலை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் வேகம் 2,40,000 கி.மீ/வினாடி. அதாவது ஒளியின் வேகத்தில் பத்தில் எட்டு பங்கு. இந்த ரயிலின் கடைசி பெட்டியில் ஒரு மின்விளக்கு இருக்கிறது. நீங்கள் முதல் பெட்டியில் இருக்கிறீர்கள். இப்பொழுது மின்விளக்கை போடுகிறோம். இப்பொழுது ஒளி உங்களை ரயிலை சார்ந்து, எவ்வளவு வேகத்தில் வந்தடையும்?

ஒளியின் வேகம் மாறாதது. அதனால் 3,00,000-2,40,000= 60,000கி.மீ வேகத்தில் ரயிலை சார்ந்து வந்திருக்க வேண்டும். அதாவது ரயிலின் முதல் பெட்டியை ஒளி விரட்டி சென்று பிடிக்க வேண்டும். இதே போல் ரயில் வண்டியின் முதல் பெட்டியில் விளக்கு இருந்து, நீங்கள் கடைசி பெட்டியிலிருந்தால் நிலைமை என்ன? அப்பொழுது ஒளி ரயில் பெட்டியை சார்ந்து 3,00,000+2,40,000=5,40,000 கி.மீ வேகத்தில் உங்களை வந்தடைய வேண்டும். அதாவது ரயிலும் ஒளியும் ஒன்றை நோக்கி ஒன்று ஓடி வர வேண்டும்.

நமது ரயில் வண்டியில் இப்பொழுது மின்விளக்குக்கு பதிலாய், துப்பாக்கியால் சுடுகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். சார்பியல் தத்துவப்படி ரயில் வண்டியை சார்ந்து, குண்டு முதல் பெட்டியிலிருந்து கடைசிக்கு சுட்டாலும், கடைசி பெட்டியிலிருந்து முதலுக்கு சுட்டாலும் ஒரே வேகத்தில்தான் செல்லும். அதாவது எல்லா திசைகளிலும் ஒரே வேகத்தில்தான் செல்லும். இது நமக்கு தெரியும்.

ஆனால் ஒளி மட்டும் ரயிலை சார்ந்து வேறு வேறு திசைகளில் வேறு வேறு வேகங்களில் செல்கிறது. இது சார்பியல் கோட்பாட்டை உடைப்பதாக இருக்கிறதல்லவா?

உண்மையில் ஒளி சார்பியல் தத்துவத்துக்குள் அடங்காததா? விடை அடுத்த பகுதியில்.


- மீண்டும் பார்(அறு)ப்போம்.

Saturday, March 18, 2006

நிழல்கள்

Thursday, March 16, 2006

ஒரேரரர கொழப்பமா இருக்குல்ல?!?!



எது மேல? எது கீழே?

Tuesday, March 14, 2006

பெருக்கல் தெரியுமா?

"யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய்?" அப்படினெல்லாம் கோபப்படாதீங்க. உண்மையிலேயே உங்களுக்கு பெருக்கத் தெரியுமா? எங்கே பார்ப்போம். ஒன்னுமில்லை! சாதாரணமா இரண்டு எண்களை பெருக்க வேண்டும். ஆனால் அதை கணினி செய்ய வேண்டும். கணிமொழி அறிந்தவர்கள் "C"யில் எழுதலாம். மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு Algorithm போல் கொடுக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் அந்த இரு எண்களையும் பெருக்க x குறியையோ, + குறியையோ உபயோகிக்க கூடாது. அதாவது இந்த பெருக்கலில் பெருக்கல் விதிகளையோ, கூட்டல் விதிகளையோ பயன்படுத்தகூடாது(புரியும் என்று நினைக்கிறேன்). இப்போ பெருக்குங்க பார்ப்போம்.


பி.கு.:
இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் உண்டு.

Sunday, March 12, 2006

சார்பியல் தத்துவம் - இயக்கம்

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம்
--------------------------------------------------
ஓய்வு நிலையே சார்பானது எனும்போது, அதற்கு நேர்மாறான இயக்க நிலையும் சார்பாகவே இருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

இதையும் நமது பழைய உதாரணத்தை கொண்டே விளக்கலாம். ஏழு மணி வண்டியில் நீங்கள் செல்கிறீர்கள். ஏழரை மணி வண்டியில் உங்கள் நண்பர் வருகிறார். விழுப்புரம் அருகே இரு வண்டிகளும் இணையாக வரும்பொழுது, உங்கள் இருவர் ஜன்னல்களும் நேருக்கு நேராக இருக்கிறது. இப்பொழுது உங்கள் நண்பர் உங்கள் கையிலிருக்கும் எதோ ஒரு பொருளை கேட்கிறார். அதை நீங்கள் உங்கள் ஜன்னல் வழியாக அவர் ஜன்னலை நோக்கி நேர் கோட்டில் எறிகிறீர்கள். காற்று தடையை புறக்கணித்துவிட்டால் உங்கள் பொருள் உங்கள் நண்பர் கைக்கு எளிதாக கிடைத்து விடும், இரண்டு பேருந்துகளும் நின்று கொண்டிருக்கும்பொழுது எவ்வளவு எளிதாக கிடைக்குமோ, அவ்வளவு எளிதாக.

சரி. இப்பொழுது பொருள் சென்ற பாதை எப்படிபட்டது? நேர்கோட்டு பாதையா(linear path)? பரவளைய பாதையா(Parabolic path)? பரவளைய பாதை என்றுதான் முக்கால்வாசிபேர் சொல்வீர்கள். ஆனால் இப்பொழுது உங்களுக்கு சார்பியல் பற்றி கொஞ்சம் தெரியுமாதலால் பதில் சொல்லுமுன் கொஞ்சம் யோசியுங்கள்.

உண்மையில் பொருள் சென்ற பாதை சார்பானது. பேருந்துகள் செல்லும் சாலையை பொறுத்து பொருள் சென்றது பரவளைய பாதைதான்(Parabolic path). ஆனால் இரண்டு பேருந்துகளையும் பொறுத்தவரை அது சென்ற பாதை நேர்கோடானதே(linear). நேர்கோட்டு பாதையில் இயங்கும் ஒரு பொருளுக்கு பொருந்தும் எல்லா விஞ்ஞான விதிகளும்(இங்கே இது முக்கியம், எல்லா விஞ்ஞான விதிகளும்), இரண்டு பேருந்துகளையும் சார்ந்து நமது பொருளுக்கும் பொருந்தும்.

ஆக இயக்கமும் சார்பானதாகி விட்டது. சார்பியல் தத்துவத்துக்கு ரொம்பவும் கண்ணாமூச்சி காட்டிய கதாநாயகன் ஒன்று உண்டு. அது ஒளி.


- மீண்டும் பார்(அறு)ப்போம்

மறுபடி ஒரு மன்னிப்பு

போன பதிவில் பதிந்த படங்களை அனுப்பியவர் கீதா அல்ல. கணேஷ். மெய்ல் ஐடியால் குழம்பி விட்டேன். மன்னிக்கவும்.

Tuesday, March 07, 2006

தெரு ஓவியங்கள்

நமது தோழி கீதா இரு தினங்களுக்கு முன் அனுப்பிய படங்கள் இவை. சில படங்களை மட்டும் இங்கே பதிகிறேன்.







Sunday, March 05, 2006

சார்பியல் தத்துவம் - ஓய்வு நிலை

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை
--------------------------------------------------


நீங்கள் அதே இடத்திலிருக்கிறீர்கள் என்பதே தவறானது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படியானால் ஓய்வு நிலை(rest state) என்பதே கிடையாதா? உண்டு. எந்தப் பொருளை சார்ந்து ஓய்வு நிலை(rest state) என்று பார்க்கவேண்டும்.

எளிய உதாரணம், எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

சென்னை கோயம்பேடு பஸ்டாண்டில் மதுரை செல்லும் ஏழு மணி பஸ்ஸிலேறி அமருகிறீர்கள். உங்கள் பஸ்ஸை அடுத்து ஏழரை மணி பஸ் நிற்கிறது. இப்பொழுது இரண்டு பஸ்களுமே ஒன்றை ஒன்று பொறுத்தவரை ஓய்வு நிலையிலிருக்கின்றன, அதே போல் பேருந்து நிலையத்தை பொறுத்தவரையும் ஓய்வு நிலையிலிருக்கின்றன. இதில் ஒன்றும் குழப்பமில்லை.

இப்பொழுது உங்கள் பஸ் கிளம்பி விட்டது. கிட்டத்தட்ட விழுப்புரம் அருகே வரும்பொழுது, ஏழரை வண்டி, உங்கள் வண்டிக்கு வலது பக்கத்தில் இணையாக வருகிறது. அந்த வண்டியால் உங்கள் வண்டியை முந்தவும் முடியவில்லை, பின்னாலும் போக முடியவில்லை. இரு வண்டிகளும் ஒரே வேகத்தில் செல்கின்றன. இந்த நேரத்திலும் இரண்டு பஸ்களும் ஒன்றை ஒன்று பொறுத்தவரை ஓய்வு நிலையில்தான் இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் சென்னை பேருந்து நிலையத்தை பொறுத்தவரை அவையிரண்டும் ஓய்வு நிலையிலில்லை. ஏனென்றால் ஓய்வு நிலை சார்பானது.

நீங்கள் உண்மையிலேயே அறிவியல் ஆர்வம் உள்ளவராயிருந்தால் இப்பொழுது உங்களுக்கு நியூட்டனின் இயக்க விதி ஞாபகம் வர வேண்டும். "ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதபொழுது, அந்தப் பொருள் ஓய்வு நிலையிலோ, அல்லது நேர்கோட்டுப் பாதையிலான சீரான இயக்க நிலையிலோ இருக்கும்". இப்பொழுது நமக்கு ஓய்வு நிலையைப் பற்றி அது சார்பானது என்று தெரிந்து விட்டதால், அடுத்தாக இயக்க நிலையைப் பற்றி சந்தேகம் வரும். வரவேண்டும். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
- மீண்டும் பார்(அறு)ப்போம்.

Tuesday, February 28, 2006

கோடிட்ட இடங்களை....

நீங்க கணக்குல சிங்கமா(எத்தனை நாளைக்குதான் புலியான்னு கேக்குறது), சிறு நரியா(நரியெல்லாம் இங்கே எதுக்கு வந்துச்சு?), இல்லைன்னா சாதாரண மனுசனான்னு பார்க்கலாமா? கீழேயுள்ள இரு கோடிட்ட இடங்களை முதலில் நிரப்புங்க. அப்புறமா யார் யார் என்ன Speciesன்னு சொல்றேன்.


அ) 32, 35, 40, 44, 52, 112, __?__

ஆ) 3, 3, 5, 4, 4, 3, 5, __?__

Monday, February 20, 2006

சார்பியல் தத்துவம் - வெளி சார்பானது

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி
--------------------------------------------------


பல நிகழ்ச்சிகள் ஒரே இடத்தில் நடப்பதாக சொல்கிறோம். இந்த கூற்று உண்மையிலேயே அர்த்தமற்றது. இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம்.

நீங்கள் சென்னையில்ரிருந்து டெல்லிக்கு உங்கள் Laptop சகிதம் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பயணத்தின்பொழுது அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரங்களில் நீங்கள் உங்கள் இருக்கையை விட்டு அசையவேயில்லை. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை உங்கள் இருக்கையில் சாய்ந்து கொண்டு சென்னையிலிருக்கும் உங்கள் அலுவலகத்துக்கு இமெயில் செய்கிறீர்கள். உங்களை பொறுத்தவரை நீங்கள் அனுப்பிய எல்லா இமெயில்களும் ஒரே இடத்திலிருந்து அனுப்பியவை. ஆனால் உங்கள் அலுவலகத்தில், அவை ஒரே ஆளிடமிருந்து வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவை.

இரண்டில் எது சரி? இரண்டுமே சரியில்லை. ஏனென்றால் இரண்டுமே கொஞ்சம் உண்மை. கொஞ்சம் பொய். வெளியில்(Space) எந்த இடமும் அல்லது எந்தப் புள்ளியும் அதே இடத்தில் இருப்பது என்ற கருத்து சார்பானாது.

நீங்கள் இதற்கு ரயிலில் கூட பயணம் செய்ய வேண்டாம். "நீங்கள் அதே இடத்தில் நிற்கிறீகள்" என்றால் அந்த இடம் பூமியை சார்ந்து மட்டுமே அதே இடம். பூமி சுற்றும் சூரியனையோ, பூமியை சுற்றும் சந்திரனையோ கூட சார்ந்து நீங்கள் அதே இடத்தில் நிற்கவில்லை.

இரண்டு நட்சத்திரங்கள் வெளியில் ஒரே கோட்டில் வருகிறது என்றோ, ஒருங்கிணைகிறது என்றோ சொல்கிறொம். இவையெல்லாம் அவையிரண்டும் எந்தப் புள்ளியிலிருந்து பார்வையிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

இதன் மூலம் உணர்த்தப்படுவது வெளியில் எந்தப் புள்ளியின் இடமும் சார்பானதே.

- மீண்டும் பார்(அறு)ப்போம்

Friday, February 17, 2006

மூன்று பெட்டிகள்

புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு. ஒரு சின்னப் புதிர்.

மூன்று பெட்டிகளில் பழங்கள் இருக்கின்றன. ஒன்றில் மாம்பழங்கள் இருக்கின்றன. ஒன்றில் வாழைப்பழங்கள் இருக்கின்றன. மற்றொன்றில் இரண்டும் கலந்திருக்கின்றன. பெட்டிகளின் மீது பெயரெழுதி ஒட்டும்பொழுது எல்லாவற்றையும் தவறாக மாற்றி மாற்றி ஒட்டி விட்டனர்.

இப்பொழுது குறைந்தபட்சமாக எத்தனை பெட்டிகளை திறந்து பார்த்தால் சரியான பெயர்களை பெட்டிகளின் மீது ஓட்ட முடியும்.

Wednesday, February 15, 2006

சார்பியல் தத்துவம் - சார்பு

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு
--------------------------------------------------
"உங்கள் வீடு இருப்பது வலப்பக்கமா, அல்லது இடப்பக்கமா?" என்று ஒருவர் உங்களைப் பார்த்து கேட்கிறார். இந்தக் கேள்விக்கு உங்களால் உடனே சரியாக பதிலளிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அப்படியே நீங்கள் சரியாக பதிலளித்தாலும் கேள்வி கேட்டவர் அதை சரியாக புரிந்து கொள்வார் என்று நினைக்கிறீர்களா?

ரொம்ப கஷ்டம்! அதிர்ஷ்டவசமாக அப்படி நடந்தால்தான் உண்டு.

ஆனால் நீங்கள் இப்படி பதிலளிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், "அந்த பிரிட்ஜிலிருந்து ரயில்வே கேட்ட நோக்கி வந்தீங்கன்னா வலது பக்கம்". அப்பொழுது உங்கள் பதில் ஒரு முழுமை பெறுகிறது. கேள்வி கேட்டவரும் சரியாக புரிந்து கொள்வார்.

அதாவது வலது, இடது என்பவை பற்றிப் பேசும் பொழுது அவை சார்பான திசையையும் நீங்கள் சொல்லியாக வேண்டும்.

ஆனால் "வண்டிகள் சாலையின் இடது பக்கம்தான் போகவேண்டும்" என்பது சாலை விதி. இங்கே திசை பற்றி ஏதும் சொல்ல வில்லை. ஆனாலும் நாம் சரியாக புரிந்து கொள்கிறோம். ஏன்? இங்கே வண்டியின் ஓட்டம் நமக்கு திசையை குறிப்பிட்டு சொல்லி விடுகிறது, மறைமுகமாக. வண்டி போகும் திசையை சார்ந்து இடது பக்கமாய் போகவேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

ஆகவே "வலம்", "இடம்" ஆகியவை சார்பான கருத்துக்கள்.

இப்பொழுது இரவா? பகலா?

இந்தக் கேள்விக்குரிய பதில், பதில் சொல்பவருடைய இடத்தை சார்ந்தது. பதில் சொல்பவர் நியூயார்க்கில் இருந்தால் இப்பொழுது இரவு என்று சொல்வார். ஒருவேளை அவரே சென்னையில் இருந்தால் அதே நேரத்தில் அதே கேள்விக்கு பகல் என்றுதான் பதிலளித்திருப்பார். இரண்டு விடையுமே தவறாகாது, இடத்தை சார்ந்து. ஏனென்றால் "இரவும்", "பகலும்" சார்பான கருத்துக்கள், இடத்தைப் பொறுத்து.

இப்பொழுது உங்களுக்கு சார்பு என்றால் என்னவென்று லேசாக புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


- மீண்டும் பார்(அறு)ப்போம்

சார்பியல் தத்துவம்

அறிவியல் விஷயங்களையும் அவ்வப்பொழுது இந்த வலைத் துணுக்கில் எழுத வேண்டும் என்ற ஆரம்பத்திலேயே ஆசைப்பட்டேன். இப்பொழுது இதை ஒரு தொடர் போல எழுதலாமா என்று யோசிக்கிறேன். இங்கே ஒன்றை சொல்லியாக வேண்டும். இந்த தொடர் எனது சொந்த தொடர் அல்ல. "சார்பியல் தத்துவம் என்றால் என்ன?" - லெ.லந்தாவு.யூ.ரூமர் எனற புத்தகத்தில் உள்ளதையே இதில் தரப் போகிறேன். ஆனாலும் புத்தகத்தில் உள்ள போரடிக்கும் சில விஷயங்களை தவிர்த்து தரப் போகிறேன். இனி தொடர்...

Sunday, February 12, 2006

சரணமும் பல்லவியும் - An Apology

Enakku nerame sariyillai. oru periya thappu paNNitten. Comment Moderation pannumbothu ellaa pinnuuttanggalaiyum check seythu vittu "publish"ai click pannuvathaRku pathil "Reject"ai click paNNivitten. pinnuttam itta anaivaridamum maNNippu keettuk koLkiReen. innum oru naaLil ungaL pinnuuttangaLai ellam mailil irunthu eduththu pathinthu vidukiRen. inRu mailboxum problem pannukiRathu(Time supera workout akuthu enna seyya?). anaivaraiyum konjam poRukkum padi keettuk koLkiReen. avasaraththukku ponguthamiz kuuda sariyaa open akalai. athaan aangilaththileeye thamizil type seythu vitten.

Saturday, February 11, 2006

சரணமும் பல்லவியும் (பாலா மன்னிக்கவும்)

வழக்கமா பாலாதான் இந்த வேலையை செய்வார். நாமளும் அதே மாதிரி ஒரு தடவை செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னைக்கு அந்த ஆசையை தீர்த்துகிட்டேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள இடை வரிகளின் பல்லவியை கண்டுபிடியுங்கள்(முடிந்தால் பாடல்கள் இடம்பெற்ற படங்களின் பெயரையும்).


1) தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்கபோகமே.

2) தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே.

3) மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்.

4) பழியே புரியும் கொடியோன் புசிக்க, பாலும் பழமும் தன்னை தேடித்தரும்.

5) எச்சிலை தன்னிலே எறியும் சோற்றுக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே.

6) நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது.

7) அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது, ஆணவம் இன்றோடொழிந்தது.

8) அச்சடித்திருக்கும் காகிதப் பெருமை, ஆண்டவனார்க்கும் இல்லையடா.

9) கஞ்சி குடிப்பதற்கில்லா, அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லா

10) அன்னங்கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்.


அப்புறம் மேலேயுள்ள எல்லா பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றும் கண்டுபிடியுங்கள்.

Wednesday, February 08, 2006

கிரிப்ட்அரித்மெடிக்(Cryptarithmatic)

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இது போன்ற கேள்வி ஒன்றை இட்லிவடை மூலமாக அவரது பதிவில பதித்தேன். கீழே ஒரு கூட்டல் கணக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் 0விலிருந்து 9க்குள் ஒரு எண். ஒரு எழுத்துக்கு ஒரு எண்ணை கொடுத்துவிட்டால் வேறு எந்த எழுத்துக்கும் அதே எண்ணை கொடுக்க கூடாது. இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை substitute(சரியான தமிழ் வார்த்தை சொன்னால் நலம்!) செய்யும் பொழுது கூட்டல் சரியாக வர வேண்டும். அந்த கூட்டலை கண்டுபிடியுங்கள்.

ONE
ONE
ONE
ONE
-------
TEN
-------

Wednesday, February 01, 2006

சில பழங்கள்....





Saturday, January 28, 2006

வார்த்தை விளையாட்டு - IV விடைகள்

இந்த வார்த்தை விளையாட்டில் சுரேஷின் பெனாத்தல்களுக்கு இரண்டு மதிப்பெண்கள். கணித புதிர்களுக்கு வேகமாக விடையளிக்கும் கீதா மதிப்பெண் எதுவும் பெறவில்லை. தருமி புலவருக்கு ஒரு பொற்காசு.

இவை எல்லாமே புகழ்பெற்ற கதைகளின் பெயர்கள், குறிப்பாக அறிவியல் புனைக் கதைகள். அந்த தொடர்பை பயன்படுத்தி யாராவது யோசித்தீர்களா?

1) நிலவில் முதல் மனிதன். (The First Man On The Moon)
2) உலகை சுற்றிவர என்பது நாட்கள். (Around The World In 80 Days)
3) கண்ணுக்கு தெரியாதவன். (Invisible Man)
4) மீண்டும் ஜீனோ.
5) பூமியிலிருந்து நிலவுக்கு. (From Earth To Moon)

சில...