Saturday, April 28, 2007

புலன் விசாரணை

ஓடும் ரயிலில் ஒருவன் கொலை செய்யப்பட்டு விட்டான்(இது செயப்பாட்டு வினைதானே?!?!). சிஐடி யோசி கொலை நடந்த பொழுது அந்தப் பெட்டியில் பயணம் செய்தவர்களை விசாரித்தார். ஒவ்வொருவரும் பின் வருமாறு வாக்குமூலமளித்தனர்.

மஞ்சள் சட்டை போட்டவர்(பேன்ட் வேற கலர்!), "நான் நிரபராதி. சிகப்பு சேலையணிந்த பெண்தான், கொலையுண்டவனோடு கடைசியாக பேசிக் கொண்டிருந்தாள்."

சிகப்பு சேலையணிந்த பெண்(ரோசாப்பூ ரவிக்கைகாரி), "நான் நிரபராதி. நான் கொலை செய்யப்பட்டவனோடு பேசவே இல்லை."

வழுக்கைத் தலை ஆசாமி(அர்விந்த்சாமி இல்லை! ஆசாமி), "நான் நிரபராதி. குதிரை வால் கொண்டை போட்ட பெண்தான் கொலை செய்தாள்."

குதிரை வால் கொண்டைக்காரி(அண்டங்காக்கா கொண்டை அப்போ ஃபேஷனில்லை!), "நான் நிரபராதி. இரண்டு ஆண்களில் யாரோ ஒருவர்தான் கொலை செய்தது."

இந்த முரண்பாடான வாக்குமூலங்களால் முதலில் குழம்பிப் போன சிஐடி யோசி, பின்னர், இவர்கள் கூறியவற்றில் சரியாக நான்கு வாக்கியங்கள் உண்மையென்றும், மீதி நான்கு வாக்கியங்கள் பொய் என்றும் கண்டுபிடித்தார்(அது எப்டின்னெல்லாம் கேனத்தனமா கேக்கக் கூடாது!).

இப்பொழுது நீங்கள் கண்டுபிடியுங்கள், இந்த நான்குபேரில் யார் கொலையாளி?

3 comments:

Show/Hide Comments

Post a Comment