ராஜாஜி காலமாவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னால், ஒரு சமயம் கடுமையாய் உடல் நலம் குண்றியிருந்தார். ஸி.எஸ். அவரை பார்க்க வந்தார். அப்பொழுது ராஜாஜி அவரிடம்,"இந்த முறை செய்தியாளர்களுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டேன்" என்றார். ஸி.எஸ். 'சரிதான், யாரோ பேட்டி எடுக்க வந்தவர்களை திருப்பியனுப்பி விட்டார் போலிருக்கிறது' என்று நினைத்து கொண்டார். ராஜாஜி தொடர்ந்து சொன்னார், "எல்லா பத்திரிக்கைகளும் நான் காலமாகி விடுவேன் என்று எண்ணி, என் வாழ்க்கை குறிப்பு முதலியன எழுதி தயாராக வைத்திருந்தன. நான் ஏமாற்றி விட்டேன்."
-பழைய கல்கியில் படித்தது.
2 comments:
நல்லா சொல்லி இருக்காரு.. மரணத்தை பத்தி கூட இப்படி விளையாட்டா பேச முடிஞ்சா பெரிய விஷயம் தான் :)
செந்தழல் ரவி. சொன்னது : நான் யோசனை சொல்வதில்லை
:) :)
இது எப்படி இருக்கு...
Post a Comment