கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது முயற்சி பண்ணலாமே என்று இதை ஆரம்பிக்கிறேன். நமது சினிமா பாடல்களில் அவ்வப்பொழுது சில சங்கப் பாடல்கள் எட்டிப் பார்ப்பதுண்டு(உபயம் - இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்). அந்த சங்கப் பாடல்களையெல்லாம் இங்கே திரட்டலாம் என்று நினைக்கிறேன். வெறுமனே பாடல்களை மட்டும் போடாமல் அந்த சங்கப்பாடல் பற்றிய தெரிந்த தெரியாத விஷயங்களையும் இங்கே நாம் அலசுவோம்.
முதலில் ஏ.ஆர்.ரஹ்மானே ஆரம்பிக்கட்டும்!
"கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமை கவினே"
இந்தப் பாடல் இடம்பெற்ற படம் எதுவென்று உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதனால் அதையும் நீங்களே சொல்லுங்கள். அப்புறம் இந்தப் பாடலை எழுதியவர் யார்? இந்த பாடலுக்கு என்ன அர்த்தம்? இதையெல்லாம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. தெரியாதவங்க தெரிஞ்சுக்கட்டும்.
எனக்கும் அதிகமான பாடல்கள் தெரியாது. வாசகர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட பாடல்களை எதிர்பார்க்கிறேன். நீங்கள் புதிதாக ஏதேனும் பாடலை இந்த திரட்டில் சேர்க்க விரும்பினால் அதை ஒரு தனி பின்னூட்டமாக இதில் இடுங்கள். அடுத்த பதிவில் அந்த பாடல் இடம்பெறும்.
Sunday, March 26, 2006
சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - I
Posted by யோசிப்பவர் at 3:15 PM
Labels: சங்கத்தமிழ், மொத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இந்த பாடல் இடம் பெற்ற படம் "என் சுவாசக் காற்றே".
இந்த சங்கப்பாடலை இயற்றியவர் "வெள்ளி வீதியார்"
இடம் பெற்றுள்ள தொகுப்பு "குறுந்தொகை"
நல்ல தலைப்பில் நிறைய நல்ல விஷயங்களை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
சிவா
This is from Movie Iruvar
சிவா! இந்த பாடலை இயற்றியவர் கொல்லன் அழிசி என்று நான் படித்தேன். நீங்கள் வெள்ளி வீதியார் என்கிறீர்கள் எது சரியென்று தெரியவில்லை. அது சரி பாடலுக்கு விளக்கம் யாருமே சொல்லவில்லையே?
தெய்வா, இருவர் பாடல் வேறு பாடல். அது அடுத்த பதிவில்.
மதுரைத் திட்டம்
இது மாதிரி ஒண்ணு பண்ணனும்னு நெனச்சிக் கெடப்புல போட்டதையெல்லாம் ஞாபகப்படுத்தக்கூடாது :)
நீங்களாவது முழுசா பண்ணுங்க.
வார்த்தைக்கெல்லாம் தனித்தனியா அர்த்தம் கண்டுபிடிக்க முடிஞ்சாலும் முழுசா அர்த்தம் தெரியல.
இந்தப் பக்கம் கெடைக்கலாம்.
பரி, முழுசா பண்றதெல்லாம் நம்ம கையிலா இருக்கு? முயற்சி பண்ணலாம் அவ்வளவுதான்.
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக்கு
ஆங்கு எனக்கும் ஆகாது அன்னைக்கும் உதவாது
பசலையும் தீயர் வேண்டும்
தீதலை அல்குல் என் மாமை கவினே
நல்ல இனிமையான பால் கன்றும் உண்ண முடியாது, கலத்திலும் சேராது, நிலத்தில் வீணாக விழுந்தது போல், எனக்கும் நன்மை, அன்னைக்கும் உதவாது பசலை என்னும் நோய் படர்ந்து (தலைவன் இன்மையால்) என் இளமை வீணாகிக்கொண்டிருக்கிறது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1248&sid=59a18f75d07b6237592e80f2d8241943 - இங்கும் விளக்கப் பட்டிருக்கிறது
நன்றி poons
this song is from Kurunthogai n its written by velli veethiyaar
இன்று இதற்காகவே வேறு ஒரு புத்தகத்தை படித்தேன். அதிலும் இந்தப் பாடலை எழுதியவர் கொல்லன் அழிசி என்றே போட்டிருக்கிறது
Post a Comment