இப்ப நம்ம குக்கிராமத்து மருத்துவமனைக்கு, அரசாங்கம் மேலும் இரண்டு சர்ஜன்களை வேலைக்கமர்த்தியது. சிறிது நாட்களுக்கு பிறகு அந்த கிராமத்தில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்தது. நடந்து சென்று கொண்டிருந்த ஒருவனை ஒரு கார் அடித்து சென்று விட்டது. அந்த ஆளுக்கு பயங்கர அடி. அவனை நமது மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவனை பரிசோதித்த நமது மருத்துவர்கள், அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அறுவை சிகிச்சைகள் செய்தால்தான் பிழைப்பான் என்று முடிவு செய்தார்கள். அந்த மூன்று அறுவைகளையும் ஒருவரே செய்ய முடியாது. ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு அறுவை செய்யத்தான் தெரியும். அதாவது முதல் மருத்துவருக்கு முதல் அறுவை, இரண்டாமருக்கு இரண்டாவது அறுவை, இப்படி... ஆக மூவருமே அவனுக்கு ஒருவர் பின் ஒருவராக அளுக்கு ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும்.
மீண்டும் பற்றாக்குறை! இரண்டே இரண்டு ஜதை கையுறைகள்தான் இருந்தன. நமது பழைய சர்ஜன் இப்பொழுதும் சிறிது யோசனை செய்துவிட்டு, ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி மூவரும், அடிபட்டவனுக்கு பாதுகாப்பான முறையில் மூன்று அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக செய்து முடித்து அவனை காப்பாற்றினர்.
இப்பொழுது கையுறைகளை எப்படி உபயோகப்படுத்தினர்? விளக்க முடியுமா?
Saturday, December 30, 2006
அறுவை - 2
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
முதல் புதிரின் விடையை போலவே தான் இதுவும். ஏன் யாருமே முயற்சி செய்யவில்லை என்று தெரியவில்லை?!?!
யோசிப்பவரே,
எல்லாரும் லீவுல ஊருக்கு போயிருப்பாங்க.
யோசிச்சு பாத்தேன் விடை தெரியலை, நீங்களே சொல்லுங்க. :-)
old one. the doctor will revert both gloves and join them
எனக்கு கேள்விகேட்டுத்தான் பழக்கம். பதில்சொல்லி பழக்கமே இல்லை.
Post a Comment