செஸ் ஆடுவீர்களா? ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல!!!
செஸ் போர்டில் மொத்தம் எத்தனை கட்டங்கள்? (அட! இது இல்ல சார் கேள்வி! சும்மா ஒரு கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லிடறதா!!!) மொத்தம் 64 கட்டங்கள். இப்பொழுது செஸ் போர்டில் சரியாக இரண்டு கட்டங்களை மட்டும் மூடுவது போல் ஒரு அட்டையில் வெட்டி கொள்ளுங்கள்(அல்லது எதையாவது செய்து கொள்ளுங்கள்!! மூட வேண்டும் அவ்வளவுதான்). இந்த மாதிரி மொத்தம் 32 அட்டைகள் இருந்தால் போர்டிலுள்ள எல்லா கட்டங்களையும் மூடி விடலாம்(அட மேட்டருக்கு வாப்பா!).
சரி! இப்பொழுது நம்மிடம் அந்த மாதிரி 31 அட்டைகள் இருக்கின்றன(நல்லா கவனிங்க, 32 இல்ல, 31!). கீழே படத்தில் உள்ளதுபோல் ஓரத்திலிருக்கும் இரண்டு வெள்ளை கட்டங்களையும்(செவப்பு கலரடிச்சிருக்கு பாருங்க!!) விட்டு விடுங்கள்.
மீதியுள்ள 62 கட்டங்களையும் நம்மிடமுள்ள 31 அட்டைகளால் மூட வேண்டும். எப்படி மூடுவீர்கள்?
Sunday, October 01, 2006
செஸ் கட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
முடியாது. ஏனெனில் எந்த ஒரு கட்டையும் இரு வேறு நிறக் கட்டங்களை மறைக்கும். ஆனால் இருப்பதோ 30 வெள்ளைக் கட்டங்கள் மற்றும் 32 பச்சை (மற்ற நிற)க் கட்டங்கள்.
அதென்ன கருப்பு கட்டங்கள்???
12345678-
x__--__|1
__--__||2
|__--|||3
||__?|||4
|||--?||5
|||--__|6
||__--__7
|--__--x8
இன்னும் யோசிச்சிட்டிருக்கேன்... | என்பது செங்குத்து அட்டைகள்; -வும் _வும் படுக்கை போட்டவை....
? ரெண்டும் ரொம்ப இடிக்குது... கொஞ்சம் நேரம் கொடுங்க...
ஆமா, நான் போற ரூட்டு சரிதானா, விடை கிடைக்குமா இந்த ரூட்டுல?
டாங்ஸுபா.
உங்க தேன்கூடு வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
கெ.பி.
பாலராஜன்கீதா : உங்கள் விடையை நாளை வரை நிறுத்தி வைக்கிறேன்;)
ஜயராமன் : அது சும்மா, ஒரு அட்டை வைத்து காட்டியிருக்கிறேன்.
கெ.பி. : யோசிச்சுகிட்டே இருங்க. ஆமா, எதுக்கு டாங்ஸ்?
விடை எங்கய்யா?
கொத்தனாரே,
அதான் நம்ம பால ராஜன் கீதா விடை சொல்லிட்டாரே, நாம வேற தனியா சொல்லனுமான்னு நினைச்சேன். பாலராஜனோட விடை சரிதான்னு சொல்லவும் மறந்து போச்சு. இப்ப சொல்லிடறேன். பாலராஜனோட விடை சரியானது.
Post a Comment