Saturday, January 28, 2006

வார்த்தை விளையாட்டு - IV விடைகள்

இந்த வார்த்தை விளையாட்டில் சுரேஷின் பெனாத்தல்களுக்கு இரண்டு மதிப்பெண்கள். கணித புதிர்களுக்கு வேகமாக விடையளிக்கும் கீதா மதிப்பெண் எதுவும் பெறவில்லை. தருமி புலவருக்கு ஒரு பொற்காசு.

இவை எல்லாமே புகழ்பெற்ற கதைகளின் பெயர்கள், குறிப்பாக அறிவியல் புனைக் கதைகள். அந்த தொடர்பை பயன்படுத்தி யாராவது யோசித்தீர்களா?

1) நிலவில் முதல் மனிதன். (The First Man On The Moon)
2) உலகை சுற்றிவர என்பது நாட்கள். (Around The World In 80 Days)
3) கண்ணுக்கு தெரியாதவன். (Invisible Man)
4) மீண்டும் ஜீனோ.
5) பூமியிலிருந்து நிலவுக்கு. (From Earth To Moon)

சில...





Thursday, January 26, 2006

ஒரு அவசரமான அறிவிப்பு

ஒரு திருவாளர் மிக மிக அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் கடந்த இரண்டு நாட்களாக என்னை அர்ச்சித்துக் கோண்டிருக்கிறார், டோன்டு பிளாகில் பின்னூட்டமிட்டதற்காக.இந்த காலி(கள்)யின் நடவடிக்கையை தடுக்க எனது வலைத்துணுக்குகளில் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறேன். அந்த பின்னூட்டங்களால் சங்கடப்பட்டவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வார்த்தை விளையாட்டு - IV

மறுபடியும் வார்த்தை விளையாட்டு. (என்ன செய்ய? பொழுது போக மாட்டேன்கிறது!). கீழேயுள்ள சொற்றொடர்கள்(இந்த வார்த்தையை ஸ்கூல்ல தமிழ் கேள்வித்தாள்களில் பார்த்த ஞாபகம்!) என்னென்னன்னு(தமிழ்ல பூந்து விளையாடறேன் பாருங்க!!) கண்டுபிடிங்க.

1) நி1லமனிதன்வு

2) --எ ன்
---ள்உலகுப
-----நா து

3) கண்ணுக்கு

4) ஜீனோ ஜீனோ

5) பூமி->நிலவு

Tuesday, January 24, 2006

குருட்டுப் புள்ளிகள்

Monday, January 16, 2006

இஷ்டத்துக்கு யோசிங்க - விடைகள்

சரி. ரொம்பவும் இழுக்கலை. விடையை சொல்லிவிடுகிறேன்.

1) உயரரரரமான கட்டிடத்திலிருந்து குதித்தவன் எப்படி சாகாமல் தப்பித்தான் என்று நீங்கள் யோசித்திருந்தால் விடையை ஊகிக்கலாம். அவன் குதித்த பொழுது அந்த கட்டிடம் தீப்பிடித்திருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரித்த வலையில் விழுந்ததால் அவன் உயிர் தப்பினான். தீயிலிருந்து தப்பிக்கவே அவன் குதித்ததாக எண்ணியதால் போலிசார் அவன் மீது வழக்கு பதியவில்லை.

2) பெயரிலேயே க்ளூ கொடுத்திருந்தேனே. (நரேன்) கார்த்தி(கேயன்) ஒரு ஃபார்முலா ஒன் ரேசர். பந்தயத்தில் அவன் ஓட்டிக்கொண்டிருந்தபொழுது சேர வேண்டிய இடம் அவன் கண்ணுக்கு தெரிந்தது(ஒரு லேப் முடிவில்). ஆனாலும் அவன் இன்னும் 400 மைல் பயணம் செய்ய வேண்டும்.

3) இந்த கேள்விக்குதான் ராஜ் சரியான விடை கூறியிருந்தார். அவன் கிராமத்தில் வசிப்பவன். சேவல் கூவவும் எழும் பழக்கம் உள்ளவன். அன்று இரவு அவன் சுட்டது அவன் சேவலைத்தான். அதனால் அதற்கு பிறகு அவனால் விடியலுக்கு முன் எழ முடியவில்லை.

4) டாமிடம் நெருப்பு பற்ற வைக்க வசதியிருந்தாலும் விறகுகள் குறைந்த அளவிலேயே இருந்தன. அதனால் அவற்றை வீணாக்க அவன் விரும்பவில்லை. பத்தாவது நாள் இரவு ஒரு கப்பல் அந்த தீவின் ஓரமாக கடப்பதை கவனித்த டாம், அவர்கள் கவனத்தை கவர நெருப்பு பற்ற வைத்தான்.

Saturday, January 14, 2006

இஷ்டத்துக்கு யோசிங்க - இன்னும் கொஞ்சம்...

இஷ்டத்துக்கு யோசிங்க மேலும் மேலும் சுவாரஸ்யமான பதில்கள் வந்திருக்கின்றன. முதலில் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை உங்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு கேள்விக்கு கூட சரியான விடை வராது என்று நினைத்தேன். ஆனால் ஒரு சரியான விடை வந்து விட்டது. அது எந்த விடை என்று இப்பொழுது சொல்ல மாட்டேன்(இதுவும் ஒரு க்ளு). உங்களுக்கு இன்னும் நாலு நாள் டைம் கொடுக்கிறேன்.

அப்புறம் கலை, நீங்கள் முதல் முறை பதில் சொல்லியிருந்தது ஹாலோஸ்கான் மூலமாக. இரண்டாவது முறை பிளாக்கர் கமென்ட் மூலமாக. அதில் பதிவது இதில் வராது. கவலை படாதீர்கள். நான் இரண்டையுமே பார்வையிடுவேன்.

Thursday, January 12, 2006

இஷ்டத்துக்கு யோசிங்க - சில க்ளூஸ்

போன துணுக்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாருமே நல்லா இஷ்டத்துக்கு யோசிச்சிருக்கீங்க. ஆனாலும் சரியான விடைகள் அல்லது அதற்கு நெருக்கமான விடைகள் கூட வரவில்லை. அதனால் மேலும் சில க்ளூஸ் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இஷ்டத்துக்கு யோசிச்சதாலே வந்த விடைகள் எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு. மேலும் சுவாரஸ்யமான விடைகளை எதிர்பார்க்கிறேன். இன்னும் கொஞ்சம் யோசிங்க.


1)
அ. அவன் நிஜமாவே தற்கொலை செய்து கொள்ள சென்றானா? - ஆமாம். குதித்தும் விட்டான். தற்கொலை செய்து கொள்பவன் பேரஷூட் கட்டிக்கொண்டு குதிக்க மாட்டான் என்று நினைக்கிறேன்.
ஆ. அது நிஜமாகவே உயரமான கட்டிடமா? - ஆமாம். நாலடியெல்லாம் இல்லை.

2)
அ. அவன் பயனம் செய்தது சராசரியாக எல்லோரும் ஓட்டும் கார்தானா? - இல்லை. அதற்காக ஜேம்ஸ் பான்ட் டைப் காரும் இல்லை.
ஆ. அவன் சேர வேண்டிய இடத்தை விஷேச கருவிகள் மூலம் பார்த்தானா? - இல்லை.

3)
அ) சம்பவத்துக்கு பின் அவன் உயிரோடிருந்தானா? - ஆமாம். தீர்காயுசு.
ஆ) சம்பவத்துக்கு பின் அவனுக்கு கண் தெரியுமா? - ஆம். நன்றாகத் தெரியும்.
இ) அவன் நகரத்தில் வசிப்பவனா? -இல்லை.
ஈ) அவன் சும்மா சுட்டானா? - இல்லை. ஒரு உயிர் ஹோகயா.


4)
அ) அவனிடம் நெருப்பு பற்ற வைப்பதற்க்கு போதுமான வசதி இருந்ததா? - ஆமாம் இருந்தது.
ஆ) ஒன்பதாவது நாளே மழை பெய்திருந்தால், அன்றே அவன் நெருப்பை பற்ற வைத்திருப்பானா? - மாட்டான்.
இ) முதல் நாளே அவன் நினைத்தால் நெருப்பை பற்ற வைக்க முடியுமா? - முடியும்.
ஈ) அப்படி அவன் முதல் நாளே நெருப்பு பாற்ற வைத்திருந்தால் ஏதாவது உபயோகம் இருந்திருக்குமா? - இல்லை. குளிர் காய்வதை தவிர.

Tuesday, January 10, 2006

இது கஷ்டமா?!?

என்னடா கொஞ்ச நாளா ஆளை காணோமேன்னு சிலர் என்னை தேடியிருக்காங்கன்றதை Counter மூலமா தெரிஞ்சிகிட்டதில் கொஞ்சம் சந்தோசமா இருக்கு. ஒரு வாரமா எனது கணிணி கொஞ்சம்
பிரச்சனை கொடுத்தது. அதனாலதான் ஒன்னுமே எழுதலை(இல்லேன்னாலும் கிழிச்சிருவே!). அதுவும் இல்லாம அடுத்த கேள்வி கொஞ்சம் கஷ்டமா வேற கேக்கிறேன்னு சொல்லிட்டேனா?! நான் சொன்னதிலேருந்து ஒரு கஷ்டமான கேள்வியுமே சிக்கலை(அதானே பார்த்தேன். இதுதான் உண்மையான காரணமா?!).

இன்னைக்கு சில "லேட்டரல் திங்கிங்"(தமிழ் வார்த்தை!?!) புதிர்கள் போடப் போறேன். Latteral Thinkingனா விடை கண்டுபிடிக்க பல வழிகளிலும் சிந்திக்கிறது(அதாவது இஷ்டத்துக்கு யோசிக்கிறது!!!). இது கஷ்டமா இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்.(கஷ்டப்பட்டு யோசிக்காதீங்க! இஷ்டத்துக்கு யோசிங்க!!!)

1) ஒரு மனிதன் உயரரரரமான(அவ்வளவு உயரம் இல்லை!) கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றான். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டான். ஆனால் தற்கொலைக்கு முயன்றதற்காக அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை. ஏன்?

2) கார்த்தி ஒருமுறை பயணம் மேற்கொண்டான்(காரில்தான்). அவன் சேர வேண்டிய இடம் அவன் கண்களுக்கு தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் அதை அடைவதற்கு, அவன் இன்னும் 400 மைல் பயணம் செய்தாக வேண்டும். இது எப்படியென்று விளக்க முடியுமா?

3) ஒரு நாளிரவு, ஒரு மனிதன் அவனுடைய வீட்டின் பின்கட்டுக்கு சென்றான். பின் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டான். அதன் பிறகு அவன் சூரிய உதயத்தை பார்க்கவே இல்லை. ஆனால் அவன் தன்னை தானே சுட்டுக் கொள்ளவில்லை. என்ன நடந்தது?

4) டாம் (ஹாங்ஸ் இல்லை!) ஒரு தீவில் தனியாக மாட்டிக்கொண்டான். அவனிடம் நெருப்பு குச்சிகளும், விறகுகளும் இருந்தன. ஆனாலும் ஒன்பது நாள் குளிரில் வாடினான். பத்தாவது நாள் மழை பெய்ய ஆரம்பித்தது. டாம் நெருப்பை பற்ற வைக்க ஆரம்பித்தான். என்ன நடக்குது இங்க?