முதலில் தேன்கூடு நிர்வாகிகளிடமும், வாசகர்களிடமும், முக்கியமாக தேன்கூடு செப்டம்பர் மாத போட்டியில் எனக்கு அடுத்ததாக வந்த அனைவரிடமும், என்னை பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறு வேண்டி கொள்கிறேன். எதற்கு இந்த மன்னிப்பு என்று கேட்கிறீர்களா? தேன்கூடு போட்டியில் எனது கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது நேர்மையான முறையில் பெறப்பட்ட வெற்றியல்ல!!! கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நானும் எனது நண்பர்களும் கள்ள வோட்டு போட்டிருக்கிறோம். இதை ஒத்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமுமில்லை. ஏன் இப்படி செய்தேன்? எழுத்து திறமையுள்ளவர்களை சிறந்த முறையில் ஊக்கப்படுத்துவதற்காக தேன்கூடு குழுவினர் இந்த மாதாந்திர போட்டியை நடத்துகின்றனர். பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் சிறந்த படைப்பை தேர்ந்தெடுக்கும் முறையில் உள்ள குறைகளை அவர்களுக்கு சுட்டிகாட்டவே இப்படி செய்தேன். போட்டிக்கு படைப்பை அனுப்பி விட்டு, தேர்ந்தெடுக்கும் முறையிலுள்ள இந்த குறையினால், வெற்றி பெற முடியாதவர்களின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்.
எனக்கு கிடைத்த வோட்டுகளின் மொத்தக் கணக்கு(இந்த கணக்கு எப்படியென்று தெரியவில்லை?) 31. இதில் கள்ளவோட்டுக்கள் மொத்தம் 15. மீதியுள்ளது 16 வோட்டுக்கள், அதாவது 9.09%. நியாயமாக பார்த்தால் எனது கதை முதல் பத்துக்குள்ளேயே வந்திருக்க கூடாது. முதல் பத்திற்குள் வந்தால்தானே நடுவர் குழுவுக்கு அனுப்புவதற்கு!!!
கள்ள வோட்டு எப்படி போடப்பட்டது? வோட்டு போட ஒரு மின்னஞ்ஜல் முகவரியிருந்தாலே போதுமானது! என்னிடமே மூன்று முகவரிகள் இருக்கின்றன! எனது நண்பர்களிடம் கடன் வாங்கியது மீதி 13. இதில் அந்த பதிமூன்று வோட்டுகளையும் போட்டவர்கள் எனது இந்த கதையை இன்னும் படிக்கவேயில்லை. நான் கேட்டு கொண்டதற்காக வோட்டு மட்டும் போட்டார்கள்.
என்னை கேட்டால், சிறந்த படைப்புகளை, இந்த மாதிரி வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது என்பதே சரியான முறையில்லை. ஏனென்றால், ஒவ்வொரு வாசகர்க்கும் ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும். ஒருவருக்கு மிகவும் பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காது. மேலும் கதை, கவிதை, கட்டுரை என்ற பேதங்கள் இல்லாமல், எல்லாமே ஒரே கூரையின் கீழ் போட்டியில் கலந்து கொள்கின்றன. இது மிக மிக தவறான அணுகுமுறையாக எனக்கு படுகிறது.
இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த மூன்றாம் பரிசை வாங்கி கொள்வதா? மீண்டும் மன்னிக்கவும். மறுதலிக்கிறேன்.
Thursday, September 28, 2006
உண்மையில் வெற்றியா?
Posted by யோசிப்பவர் at 6:38 PM
Labels: அறிவிப்புகள், மொத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
யோசிப்பவரே,
எல்லாரையும் யோசிக்க வெச்சியிருக்கீங்க :-)
ஆனாலும் நீங்க செஞ்சது எனக்கு சரியாப்படல :-(
உங்கள் நேர்மைக்கு ஒரு சபாஷ்....
இதுபற்றி ஏற்கனவே நிறைய வலைப்பதிவாளர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் வெற்றி பெறுபவர்களில் ஒருவர் இதே கள்ள ஓட்டு முறையில் தான் வெற்றி பெறுகிறார். அதற்காக ஒரு குழுவே தயாராக இருக்கிறது...
ஒரு முறை ஒரு வலைப்பதிவாளர் என்னிடம் சொன்னார். ஒரு வெத்து பதிவுக்கு நிறைய ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கலாமா என்று.... அதை நாங்கள் பரிசோதித்துப் பார்க்கவில்லை.... நீங்கள் பரிசோதித்து உண்மையை வெளியே கொண்டுவந்து விட்டீர்கள்....
இதே முறை அடுத்த மாதமும் நீடித்தால் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து முதல் மூன்றுக்குள் ஒன்றாய் சொல்லிவைத்தபடி வந்து பரிசை அள்ளிச் செல்வார்கள்....
தேன்கூடு நிர்வாகம் பரிசுக்குரிய படைப்புகளை தேர்ந்தெடுக்க வேறு ஏதாவது முறையை முயற்சிக்கலாம்...
ஆமாம் இது எதுவும் கணக்கு புதிர் இல்லையே??? :-)
உண்மையை ஒப்புக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும் தம்பி,
பாராட்டுக்கள்!
இந்தக் குறையைத் தேன்கூடு இதழ் நிர்வாகிகள் களையட்டும்
பல நாட்களாக இருக்கும் குறை தான் இது.. ஆனால், ஓட்டு போடுபவர்களின் நேர்மையில் தான் இதன் விடை இருக்கிறது. இப்போதெல்லாம் இந்தப் போட்டிக்கு எழுதாமல் இருப்பது இதனால் தான்.
அத்துடன், எனக்கென்னவோ, இந்த முறையைப் பயன்படுத்துவது நீங்கள் மட்டுமே அல்ல என்று தோன்றுகிறது. பலரும் இதைப் பயன்படுத்தும்போது, இந்த முறையின் குறைகள் மிகக் குறைவாகிவிடும்.
அத்துடன் உங்கள் கதை ஒன்றும் அப்படி மோசமில்லையே! மற்ற படைப்புகள் படிக்கவில்லை என்பதால், அவற்றுடன் ஒப்பு நோக்கி சொல்ல என்னால் முடியவில்லை. ஆனால், மற்றபடி, நல்ல கதை தான். பரிசை ஏற்கலாம்..
:-)))
உண்மையில் யோசிக்க வச்சுட்டீங்க.
உங்க தைரியத்துக்குப் பாராட்டுக்கள்.
எல்லோரும் இதையே செய்திருப்பார்கள் என்றெல்லாம் நம்ப முடியாது. சிலர் செய்திருக்கலாம். அது அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்வது தான்.
பதிவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதி வாக்கெடுப்பு நடத்தும் தேன் கூட்டை குறை சொல்வதிற்கில்லை.
கள்ள ஓட்டுப் போடுவதால் என்ன பெரிதாக கிடைத்துவிடப் போகிறது என்று பதிவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் நேர்மையாக ஒப்புக் கொண்டதற்கு பாராட்டுக்கள்
நிசமாவே யோசிக்க வச்சுட்டீங்க.
ஒங்க நேர்மைக்குப் பாராட்டுக்கள்.
அப்படியா விஷயம்..
ஆனா ஒண்ணு.
உங்களுக்கு உளுந்த நல்ல ஓட்டுல ஒண்ணு நான் போட்டது.
வெட்டிப்பயல்,
//ஆனாலும் நீங்க செஞ்சது எனக்கு சரியாப்படல :-( //
நான் இதை இப்படி செய்யவில்லையென்றால், நாம் சொல்வது சம்பந்தபட்டவர்களுக்கு சரியாக போய் சேர்ந்திருக்காது!;)
உங்க கதை நல்லாவே இருந்தது. நான் கூட வோட்டுப் போட்டேன். மற்ற எல்லா பதிவுகளையும் முழுமையாகப் படிக்கவில்லை என்பதால் வேறு எதுவும் பரிசு பெறத் தகுதியுள்ளதா என்று நான் சொல்ல முடியாது.
அன்புடன்,
மா சிவகுமார்
பொன்ஸ்,
//
அத்துடன், எனக்கென்னவோ, இந்த முறையைப் பயன்படுத்துவது நீங்கள் மட்டுமே அல்ல என்று தோன்றுகிறது.
//
நான் இந்த முறை மட்டுமே, இதை பயன் படுத்தினேன்.
//பலரும் இதைப் பயன்படுத்தும்போது, இந்த முறையின் குறைகள் மிகக் குறைவாகிவிடும்.
//
பலரும் பயன்படுத்தினால், உண்மையிலேயே திறமை வாய்ந்த படைப்புகள் தொலைந்து போகுமே?!?
கோவி.கண்ணன்,
//கள்ள ஓட்டுப் போடுவதால் என்ன பெரிதாக கிடைத்துவிடப் போகிறது என்று பதிவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
//
அட! 1000 ரூபாய் கிடைக்குமே சார்!;)
luckylook,
//உங்கள் நேர்மைக்கு ஒரு சபாஷ்....
//
சிறில் அலெக்ஸ்,
//ஒங்க நேர்மைக்குப் பாராட்டுக்கள்.
//
எப்பவுமே ஒருவர் நேர்மையாக இருப்பதற்காக பாராட்டாதீர்கள். ஏனென்றால் அதனால், அந்தக்கணமே அவர்களது நேர்மை குலைந்து போகிறது.;)
//உங்களுக்கு உளுந்த நல்ல ஓட்டுல ஒண்ணு நான் போட்டது.
//
நன்றி பிரபு;)
சரி இதுக்கு தீர்வு என்னவா இருக்கும்னு நினைக்கறீங்க???
இலக்கியத்தனமுள்ள படைப்புகள் இந்த ஓட்டு முறையால் ஜனரஞ்சக படைப்புகளிடம் தோற்றுவிடுகின்றன.
கவிதைகள் வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒன்று.
இந்த தேர்வு முறைக்கு ஒரேடியா லிப்ட் குடுத்து மேல அனுப்பிட்டீங்களே. அதுக்கே பரிசை வாங்கிக்குமய்யா!
வெட்டி மற்றும் வைசாவுடன் ஒத்துப் போகிறேன். உங்களுடையது நல்ல கதைதான், நல்ல படைப்புகள் எப்படியாகிலும் கவனிப்பைப் பெறும்
மேலும் என் எண்ணங்களை இங்கே பதிவிட்டிருக்கிறேன் http://raasukutti.blogspot.com/2006/09/blog-post_29.html
இணையத்தில் இருக்கும் அத்தனை ஓட்டெடுப்புகளிலும் உள்ள குறைபாடுதான் இது. இதில் ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு இல்லை. எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் இதில் முக்கியம்.
குறை சொல்வது எளிது. அத்துடன் நல்ல மாற்று ஆலோசனைகளையும் சொல்லலாமே! யோசிப்பவரே, உங்கள் மாற்று ஆலோசனைகள் என்ன?!
ஆகா. இதையெல்லாம் யோசிக்காம 12 பேர் ஓட்டு போட்டு கடைசியில தன்னந்தனியா நிக்குறனே. தனியனாத்தேன் இருக்கணும்னு எழுதி வெச்சிருக்கு போல.
உண்மைய ஒத்துக்க நல்ல மனசு வேணும் அண்ணாச்சி. யோசிச்சு செஞ்சிருக்கீங்க. எல்லாரையும் யோசிக்க வெச்சிருக்கீங்க. நல்லாயிருங்க.
யோசிப்பவரே, உங்கள் முழு கதையையும் ஒரே மூச்சில் படித்து விட்டு ஓட்டுப் போட்டவர்களில் நானும் ஒருவன். 'லக்கிலூக்'கின் கதைக்கும் அப்படியே. ஏனென்றால், இவை யாவும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்தன (எல்லோரும் பைக்கிலும், காரிலும் லிப்ட் கேட்டுக்கொண்டிருந்த போது, விண்வெளி கலத்தில் லிப்ட் கேட்டவர்கள்..)
ஆனால், வைசா சொல்லியது போல் -
"குறையைச் சுட்டிக் காட்டும் நல்ல பதிவு. ஆனால் அதை செய்து காட்டாமல் சுட்டியிருக்கலாமோ?" என்றே எனக்குத் தோன்றுகிறது.
//கவிதைகள் வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒன்று. //
வெட்டிப்பயல் சொல்லியது மிகச் சரி. வெண்பாக்களும், கவிதைகளும் மேலே வரவே இல்லை என்பது வருத்தம் தான். :-(
பிரச்னையில்லாத வேறு எதாவது முறை வரும் வரை கோவி.கண்ணன் சொல்வதுதான் இப்போதைக்கு ஒரே வழி..
//எப்பவுமே ஒருவர் நேர்மையாக இருப்பதற்காக பாராட்டாதீர்கள். ஏனென்றால் அதனால், அந்தக்கணமே அவர்களது நேர்மை குலைந்து போகிறது.;)
//
100% உண்மையான கருத்து..
பி.கு: உங்க நேர்மையை நான் பாராட்டலை.. ;)
Actually, வெற்றி பெற்றமைக்கு, தனிமடலாக ஒரு பாராட்டு அனுப்பத்தான் வந்தேன்...
யோசிக்க வேண்டிய விசயம் தான்...
வளர்க!!
இந்த எண்ணிக்கை பிரச்சனைதானய்யா நாட்டுத் தேர்தல் வரைக்கும் நடக்குது. ஓட்டுப் போடுற அரசியல்வாதியப் பத்தி முழுக்கத் தெரிஞ்சிக்கிட்டா போடுறோம். ஏதோ நம்மளா பிடிச்சது பிடிககதது..ஒரே மதம்..ஒரே இனம்...ஒரு ஊரு..இப்படித்தானய்யா நடக்குது...அதுதான் சரீன்னு வலைப்பூல பலர் வந்து கருத்துச் சொன்னாங்களே....இங்க நடந்தா மட்டும் தப்பாயிருமா!
ஆனாலும் இந்த மாதிரி நடக்காம இருக்க என்ன செய்யனும்? சுழல் முறை நடுவர் குழு அமைச்சி தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நடுவர்கள் யாருன்னு கடைசி வரைக்கும் சொல்லவே கூடாது. அப்புறம் என்னாகும் தெரியுமா? பாரபட்சம் பார்க்கப்பட்டது. சாதி, மதம், மொழி, ஊர், எல்லாம் பார்க்கப்பட்டது. ஈனப்பிறவிகள்...மானமில்லாதவர்கள்...நடுவர்களைச் சரிக்கட்டும் வழி...இப்படியெல்லாம் நடக்கும்.
பொதுவுல போட்டியில கலந்துக்கிறத ஆரோக்கியமான முறையில அனுகுறதும்...நம்மைப் பொருத்த வரையில் நேர்மையா நடந்துக்கிறதும் மட்டுமே உதவும். அப்படியில்லைன்னா எந்த முறை வெச்சாலும் பிரச்சனை தீராது.
Post a Comment