Friday, January 20, 2012

கலைமொழி 10

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


சென்ற கலைமொழிக்கான விடை :- கரும்பு எப்படிமா இருக்கும் கருப்பாக இனிப்பாக இருக்கும் என்று படித்திருக்கிறேன் இப்ப கரும்பு எங்க கிடைக்கும் இப்ப எங்கேயும் கிடைக்காதுடி அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!


விடை கூறியவர்கள் :- ஹரிஹரன், முத்து, பூங்கோதை, 10அம்மா, கலை, ராமசாமி ஆகியோர்.

Friday, January 13, 2012

கலைமொழி - 9

கலைமொழி போன்ற வார்த்தை விளையாட்டுக்களை ஒவ்வொரு முறை வெளியிடும்போதும், அறிவிப்பதற்கென vaarthai_vilayaatu@googlegroups.com என்ற கூகிள் மடல் குழுவை ஆரம்பித்திருக்கிறேன். தொடர்ந்து வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும், வெளியிடவும் ஆர்வமிருப்பவர்கள் இதில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அநேகமாய் இதுதான் எனது பொங்கல் பதிவாக இருக்கும் என்பதால், அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

இந்த முறை பேச்சு வழக்கு இருக்கலாம். மேலும் வாக்கியங்களுக்கிடையில் சில இடங்களில் தொடர்பு இல்லாமலும் இருக்கலாம்!!;)

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


கலைமொழி 8 விடை :- கடலிலே நீங்கள் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி உலகத்துக்கு அக்கறை இல்லை. கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா? அதில்தான் அக்கறை.


விடை கூறியவர்கள் :- பூங்கோதை, இளந்தென்றல், ஹேமா, மாதவ், 10அம்மா, ராமசாமி, அரசு. அனைவருக்கும் நன்றி!!

Friday, January 06, 2012

கலைமொழி - 8 மற்றும் சில....

சென்ற புதிருக்கு ஆளாளுக்கு வித விதமா யோசிச்சி பதில் சொல்லியிருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. ஒரு மாதிரியா ஒரு பத்து பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடறாங்க. அதுக்கும் மேல செல்ஃப் எடுக்க மாட்டேங்குது. பரவாயில்லை!!

என்னைத் தவிர மனு, பூங்கோதை, 10அம்மா ஆகியோர் இவ்வகைப் புதிர்களை உருவாக்கி வருகின்றனர். இவர்கள் மூவரும் இதுவரை எந்தத் திரட்டியிலும் தங்கள் வலைத்தளங்களை இணைக்கவில்லை என்பதால் இங்கே சிறு விளம்பரம்.

மனு - http://tamilpuzzles.blogspot.com/ - இவரது வலைத்தளத்தில் கணிதம், சொல் விளையாட்டுக்கள், லாஜிக் புதிர்கள் என்று பல வகைப் புதிர்கள் போட்டுக் கலக்குகிறார். இவரது லேட்டஸ்ட் புதிர் லாஜிக் புதிர். அடிக்கடி ஒரு எட்டு போய் பாருங்கள்.

பூங்கோதை :- http://www.tamilpuzzles.com/ - வீக் எண்ட் விளையாட்டுகள். சொல்லாங்குழி, கலைமொழி, குறுக்கெழுத்து, குறள்வளை என்று சொல் விளையாட்டுக்களாக வாரா வாரம் கலக்குகிறார்.

10அம்மா :- http://galagalakudumbam.blogspot.com/ - இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறார். இப்போதைக்கு கலைமொழி விளையாட்டு மட்டும் தான் போடுகிறார். விரைவில் மற்ற வகைப் புதிர்களும் போடுவதாக உறுதியளித்திருக்கிறார். இவரது லேட்டஸ்ட் கலைமொழியில் ஒரு விடுகதையை உள்ளடக்கியிருந்தது சிறப்பாக இருந்தது.

கலைமொழி விளையாட்டை எப்படி விளையாடுவது :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


கலைமொழி - 7 விடை :- நீங்க அறிவாளின்னா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது பாட்டியா? காக்காவா? உடனடியா பதில் தேவை


கலைமொழி - 7 விடை கூறியவர்கள் :- மாதவ், அரசு, கலை, ஹேமா, 10அம்மா, முத்து, ஜி.கே.சங்கர், பூங்கோதை, ராமசாமி, அகிலா ஸ்ரீராம்

Thursday, January 05, 2012

கணிதக் குறுக்கெழுத்து - விடை

மனு மட்டுமே விடையளித்திருந்தார்.
 

Tuesday, January 03, 2012

கலைமொழி - 7

எப்படி விளையாடுவது என்று தெரிந்து கொள்ள - http://yosinga.blogspot.com/2011/12/4.html

இந்த முறை BEWARE OF பேச்சு வழக்கு!!!




கலைமொழி - 6 விடை : இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது. கோனாரே இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஓரு முடிவும் காணாரே


விடை சொன்னவர்கள் :- பூங்கோதை, மனு, முத்து, ஹேமா, இளந்தென்றல், ஹரி, ராமசாமி, பத்மா, ஸ்ரீதேவி, அரசு. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!!

1 டூ 9 விடை

இப்போதைக்கு விடை மட்டும் சொல்லிடறேன். எப்படி வரும்னு தெரிஞ்சுக்கனும்னா, ஒரு தனி மெய்ல் தட்டி விடுங்க. இப்போதைக்கு தமிழ்ல அதை எக்ஸ்ப்ளெய்ன் பண்றதுக்கு ஆயாசமா இருக்கு.

சரியான விடை : 381654729

சரியான விடை சொன்னவர்கள் ரமேஷ் கார்த்திகேயன், முத்து, ஹேமா, தமிழினி.