சம்யுக்தா ஒரு கல்லூரி வீராங்கனை. கல்லூரி வீராங்கனை. கல்லூரியில் நடந்த ஒரு ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டாள். பந்தயத்தில் மொத்தம் 3 கி.மீ. ஓட வேண்டும். இரண்டு கி.மீ ஓடி முடித்ததுமே, சம்யுக்தா தனது கைக்கடிகாரத்தை பார்த்தாள்.
'ஓ! நான் சராசரியாக மணிக்கு நான்கு கி.மீ வேகத்தில் ஓடி கொண்டிருக்கிறேன். ஆனால் சராசரியாக மணிக்கு ஆறு கி.மீ வேகத்தில் ஓடினால்தானே இதில் ஜெயிக்க முடியும்! இன்னும் விரைவாக ஓட வேண்டும்'. என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டுமென்றால், மீதியுள்ள ஒரு கி.மீ தொலைவை எவ்வளவு வேகத்தில் ஓடி கடக்க வேண்டும்?
Thursday, April 12, 2007
ஓட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அதாவது, 3 கி.மீ. தொலைவை அரை மணி நேரத்தில் கடந்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது. சம்யுக்தா 2 கி.மீ. தூரம் ஓட ஏற்கனவே அரைமணி நேரம் ஆகிவிட்டது. எனவே, மீதியுள்ள தொலைவை எவ்வளவு வேகமாக ஓடிக் கடந்தாலும், சம்யுக்தா வெற்றி பெறப் போவதில்லை.
-சுந்தர் ராம்ஸ்
சராசரியாக நாலு கிமீ வேகத்தில் ஓடினால் இரண்டு கிமீ கடக்க அரை மணி நேரம் ஆகும்.
சராசரியாக ஆறு கிமீ வேகத்தில் ஓடினால் அரை மணியில் 3 கிமீ ஓடி ஓட்டத்தை முடித்திருக்க முடியும்.
அரைமணியில் 3கிமீக்குப் பதிலாக 2 கிமீ கடந்ததால் சம்யுக்தா பந்தயத்தில் வெற்றி பெற இயலாது.
(சம்யுக்தா எனக்கு பிடித்தமான பெயர்களில் ஒன்று. எங்கள் பையன் பிறந்த நேரத்தில் பெண் பிறந்து இருந்தால் இந்தப் பெயர்தான் வைத்திருப்போம்.)
1/6 = 0.16666666666666666 hr
1/4 = 0.25 hr
3*0.16666666666666666 = 0.5hr req for 3km
2*0.25 = 0.5hr took 0.5 hr for 2 km.
so already lost.
சுந்தர் ராம்ஸ், கொத்தனார் மற்றும் அனானி மூவருமே சரியான பதிலை கொடுத்திருக்கிறார்கள். எல்லோருமே விளக்கமான விடையே கொடுத்து விட்டதால் நான் விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
கொத்ஸ்,
//சம்யுக்தா எனக்கு பிடித்தமான பெயர்களில் ஒன்று. எங்கள் பையன் பிறந்த நேரத்தில் பெண் பிறந்து இருந்தால் இந்தப் பெயர்தான் வைத்திருப்போம்//
பொதுவாக இது போன்ற பெயர்கள் வைப்பதற்கு நான் அதிகமாக யோசிப்பதில்லை. சுற்றியிருப்பவர்களின் பெயர்கள், அந்த நேரத்தில் காதில் விழும், அல்லது படித்த பெயர்கள் என்றுதான் வைப்பேன்(கதைகளுக்கு கூட!!). ஆனால் இந்தப் பெயர் திடீரென்று இதை எழுதும்பொழுது அதுவாக தோன்றிய பெயர். அவ்வளவுதான்!!!;-)
Post a Comment