Thursday, December 29, 2005

ஸாஃப்ட்வேர் கம்பெனி

Monday, December 26, 2005

கோடிட்ட இடத்தை...

இந்த துணுக்கு கோடிட்ட இடத்தை நிரப்புக வகை. கோடுக்கு பதிலா ?

7 4
2 8

6 5
3 0

2 9
1 8

4 8
3 ?

Thursday, December 22, 2005

வார்த்தை குழப்பி - I

ஜம்புள் வோர்ட்ஸ்க்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாததால வார்த்தை குழப்பின்னு நானே பெயர் வச்சுட்டேன். கீழே குழப்பி கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்னென்னனு(எத்தனை 'ன்') கண்டுபிடிங்க. கருப்பு! உங்க வார்த்தையை காப்பாத்திட்டேன் பார்த்தீங்களா? குழப்பவாதின்னு நிரூபிச்சிட்டேன்.

1) தாரவத்யன்மா
2) வடோராண்கடுன்
3) தசனாரகிந்வ
4) ராப்பாசுலா
5) நாருவையண்தன்அ
6) மேகலரிபழர்
7) குயம்சுணைஇபன்
8) பாதுல்கோசிள
9) பசிவப்யோர்

பி.கு :- இந்தகேள்விக்கு வலை பதிவாளர்களும், தொடர்ந்து வலைப்பதிவுகளை படிப்பவர்களும் மட்டும்தான் பதிலளிக்க முடிஉம்.

Monday, December 19, 2005

முக்கோணம்

கீழேயுள்ள அளவுகளின் படி எந்த முக்கோணம் பெரியது?

300, 400, 500 ஆகியவை முதலாவதின் பக்க அளவுகள்.
300, 400, 700 ஆகியவை இரண்டாவதின் பக்க அளவுகள்.

Saturday, December 17, 2005

புதிய பகுதி!!! (மறுபடியும்!?!)

மறுபடியும் நமது வலைத்துணுக்கில் ஒரு புதிய பகுதி!!! SMS மூலை. இதனை தனி வலைத்துணுக்காகவும் http://kurunjeythi.blogspot.com இல் காணலாம். SMSக்கான பின்னூட்டங்களை அதிலேயே சொல்லிடுங்க.

Thursday, December 15, 2005

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!! - விடை

கீதா ஆரம்பித்த விதத்தை பின்பற்றி யாராவது விடை சொல்லி விடுவீர்கள் என்று நினைத்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.

இந்த கணக்கில் கேள்வி கேட்கபட்டவர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்கள் கூறிய விடைகள் 0விருந்து..8வரை. ஒவ்வொருவருக்கும் தனது இணையை கண்டிப்பாக தெரியும். வசதிக்காக இவர்களை அ0,அ1..அ8(அதாவது அ0 கூறிய விடை 0, அ1 கூறிய விடை 1..) என்றழைப்போம். இவர்களில் அ8 மொத்தம் 8 பேருக்கு வணக்கம் கூறியிருக்கிறார், தனது இணையை தவிர. அதே நேரத்தில் அ0 யாருக்கும் வணக்கம் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து தெளிவாவது அ0வும் அ8ம் தான் இணையாயிருக்க முடியும்.

அடுத்ததாக அ7. இவர் தனது இணைக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அ0வுக்கும் வணக்கம் தெரிவித்திருக்க முடியாது. அதே நேரத்தில் அ1, அ8க்கு மட்டும்தான் வணக்கம் தெரிவித்திருக்க முடியும்.இதன் மூலம் தெளிவாவது அ7ம், அ1ம் ஜோடி.

இதேபோல் அ6ம், அ2ம் ஒரு இணை, அ5ம், அ3ம் ஒரு இணை.

இனி பதில் சொன்னவர்களில் இணையில்லாமல் இருப்பவர் அ4 மட்டும்தான். அவர்தான் திருமதி. பாலகிருஷ்ணன். அவர் கூறிய விடை 4.

Monday, December 12, 2005

தோனியும் சேவாக்கும்

முந்தின கேள்விக்கு விடை சொல்ல இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதால், கிரிக்கெட் சீசனை வீணாக்காமல் ஒரு கிரிக்கெட் கேள்வி கேட்கிறேன்.

தோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்(எந்த கிரவுண்டில் என்று குதற்கமாக கேட்காதீர்கள்). இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா?

Friday, December 09, 2005

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

திரு. பாலகிருஷ்ணன் தம்பதியர், அவர்களுடைய பத்தாவது திருமணநாளை கொண்டாட நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர். நான்கு தம்பதிகள் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நான்கு தம்பதிகளில் சிலர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர். தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர். விருந்தின்போது திரு. பாலகிருஷ்ணன் ஒவ்வொருவரிடமும் "நீங்கள் எத்தனை பேருக்கு வணக்கம் தெரிவித்தீர்கள்?" என்று கேட்டார். கிடைத்த விடைகள் திரு. பாலகிருஷ்ணனை ஆச்சரியப்படுத்தின. ஏனென்றால் ஒவ்வொருவரும் வேறு வேறு விடைகளை தெரிவித்தனர். அப்படியென்றால் திருமதி.பாலகிருஷ்ணன் கூறிய விடையென்ன?


பின்குறிப்பு:

இந்த கணக்கில் மொத்தம் பத்து நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். திரு. பாலகிருஷ்ணன் தன்னைத் தவிர மற்ற ஒன்பது நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். கொஞ்சம் கஷ்டமான கேள்வி கேட்டு ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நம்ம வாசகர்கள் பயங்கர புத்திசாலிங்கங்கற நம்பிக்கைல இந்த கேள்வியை பதிக்கிறேன்.

எந்த இடம்?


சமீபத்தில் மெய்லில் எனக்கு வந்த படம் இது. இது எந்த இடம் என்று தெரிகிறதா பாருங்கள்.படம் அனுப்பியவர் : ஜிஜி

Tuesday, December 06, 2005

வார்த்தை விளையாட்டு - III

மறுபடியும் வார்த்தை விளையாட்டு. கீழேயுள்ள வார்த்தைகளை கண்டுபிடியுங்கள். "-" குறியீடுகளை கணக்கிலெடுக்காதீர்கள்.

1) துளி வெள்ளம்

2) வே ளை

3) எ-----எ
-----ழுழு
-----த்-த்
---து----து

4) பயனங்க

5) வண்ண்ண்ண்டி

ச்ச்ச்சும்மா!!!

Wednesday, November 30, 2005

குறுஞ்செய்தியில் குட்டி கணக்கு

சமீபத்தில் குறுஞ்செய்தி சேவையில் எனக்கு வந்த கணக்கு இது. விடை மிக அருகிலிருந்தும், ரொம்ப சுத்தவிட்ட கணக்கு.

1, 3, 4, 6 ஆகிய எண்களை சரியாக ஒருமுறை மட்டும்(கண்டிப்பக ஒருமுறை) பயன்படுத்த வேண்டும். +, -, *, / ஆகிய குறியீடுகளை எத்தனை முறை வேன்டுமானலும் பயன்படுத்தலாம்(சில சமயம் பயன்படுத்தாமல் கூட இருக்கலாம்). விடை சரியாக 24 வர வேண்டும். முயன்று பாருங்கள். எனக்கு வேறு விடைகள் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

Tuesday, November 29, 2005

சூடோகு மூலை

இன்றிலிருந்து நமது வலத்துணுக்கில் ஒரு புதிய பகுதி!!!

சூடோகு!!!(கீழே இருக்கு பாருங்க)

சூடோகு பற்றி அறிமுகம் தேவையில்லை என்றெண்ணுகிறேன். இருந்தாலும் தெரியாத ஒன்றிரண்டு பேருக்காக....

மொத்தம் 9x9 கட்டங்கள். இவை 3x3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 1 - 9 வரையிலான எண்களால் நிரப்ப வேண்டும். ஒரு எண் ஒரு வரிசையில் (இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்) ஒரு தடவைதான் வர வேண்டும். அதே மாதிரி ஒரு எண் அது இருக்கும் 3x3 கட்டத்திலும் ஒரு முறைதான் வர வேண்டும். ஆரம்பத்தில் சில எண்கள் கொடுக்கப்படும். அதிலிருந்து நீங்கள் மற்றவற்றை இட்டு நிரப்ப வேண்டும். குருட்டாம்போக்கில் நிரப்ப முடியாது. ஒவ்வொரு எண்ணையும் தர்க்கரீதியாக(Logical) நிரப்பினால் மட்டுமே முடிக்க முடியும்.

சூடோகு பற்றிய யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. முக்கியமாக Message Box எப்படி வருகிறது என்று தெரிய வேண்டும்.

வாசகர்களே! சூடோகு நிரப்பி மகிழுங்கள்.

Thursday, November 24, 2005

ஒரு தப்பு நடந்து போச்சு

நம்ம வலைதுணுக்க படிக்கிற, நம்ம ஸாதி ஸனம், எல்லார்ட்டையும் நா மன்னிப்பு கேட்டுக்குறேனுங்க. அன்னைக்கு நம்ம பிளாக் செட்டிங்க்ஸ்ல சும்மா நோண்டிக்கிட்டிருந்தேன். அப்ப கை தவறி(சரி! அது என்ன எழவுன்னு தெரியாமத்தான்) Comment Moderationஐ Enable பண்ணிட்டேன். அதுனால எல்லாரொட Commentங்களும் என்னோட mail boxக்கு பொயிருச்சு. இப்ப அதை Disable பண்ணிட்டேன். அசவுகரியத்துக்கு வருந்துறேனுங்க.:(

Wednesday, November 23, 2005

ஆங்கிலப் புதிர் - விடை

என்னன்னு தெரியலை! கடைசியா கேட்ட ஆங்கிலத்தில் ஒரு கேள்விக்கு யாரும் விடை சொல்ல முயற்சிகூட செய்யவில்லை. ஒரு வேளை அதிலிருந்த டெக்னிக்கல் பிராப்ளம் காரணமோ?

ஆங்கிலத்தில் அதிகமா உபயோகிக்க படற எழுத்து எது தெரியுமா? "E". இந்த "E" அந்த ஆங்கில பத்தியில் ஒரு இடத்தில்கூட இல்லைன்றதுதான் அந்த பத்தியோட அசாதாரணம்.

Tuesday, November 22, 2005

சென்னையில் கிரிக்கெட்

Monday, November 21, 2005

ஆங்கிலத்தில் ஒரு கேள்வி

கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு அசாதாரணமான ஆங்கில பத்தி. இந்த ஆங்கில பத்தியில் என்ன அசாதாரணம்ன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.

This is an unusual paragraph. I'm curious how quickly you can find out what is so unusual about it. It looks so plain you would think nothing is wrong with it. In fact, nothing is wrong with it! It is unusual though. Study it, and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!

Thursday, November 17, 2005

கேக்கு கணக்கு

இன்னைக்கு ஒரு கேக்கு கணக்கு கேக்கலாம்னா, கேக்கறதுக்குள்ள எனக்கு ஒரு கேக்கு மிஸ்ஸாயிருச்சி. சரி! இப்ப கணக்க பாக்கலாம். என்னோட நண்பனோட காதலிக்கு இன்னைக்கு பிறந்தநாள். அவளுக்கு கொடுக்கறதுக்குன்னு தலைவர் கேக் டப்பா வாங்கிட்டு போனார். ஆனாப் பாருங்க அவள பார்க்க போற வழியிலே அவனோட நண்பன் பழனி வந்துட்டான். எழவெடுத்தவன் வந்துட்டானேன்னு, வேற வழியில்லாம கொண்டு போன கேக்கில் பாதிய அவனுக்கு கொடுத்தான். ஆனா நம்ம பழனிக்கு பெரிய மனசு! ஒரு கேக்க திருப்பி கொடுத்துட்டான். ஆனாலும் நம்மாளுக்கு கெரகம் விடலை. இதே மாதிரி போற வழியில அவனோட நண்பர்கள் ஆறு பேர், ஒருத்தர் மாத்தி ஒருத்தரா பார்த்தான். ஒவ்வொருத்தருக்கும் தன்னோட கையிலிருந்த கேக்கில் பாதிய கொடுத்தான்(தர்மபிரபுபுபு...). அதே மாதிரி எல்லா நண்பர்களுமே ஒரு கேக்க திரும்ப கொடுத்துட்டாங்க. கடைசியா நம்ம தங்கச்சி(அதாங்க, அவன் காதலி! சே எப்பவும் அண்ணனாவே இருக்கேன்!?!) கைல ரெண்டே ரெண்டு கேக்கை போய் கொடுத்திருக்கான்.

இப்ப கணக்கு என்னன்னா நம்ம நண்பன் மொதல்ல எத்தன கேக் எடுத்துட்டுப் போனான்? இது பெரிய கணக்கான்னு கேக்கறீங்களா? சின்ன கணக்குதான். ஆனா நல்ல (சுவையான) கணக்கு.

Saturday, November 12, 2005

வார்த்தை விளையாட்டு - 2

ஐ! இந்த விளையாட்டு நல்லா இருக்கு!! இன்றைக்கு மேலும் சில வார்த்தைகள்.

1) வானம்
----தே
----ன்

2) புறா புறா

3) கநிலவுண்

4) திக்கு காட்டில்

Friday, November 11, 2005

வார்த்தை விளையாட்டு

கொஞ்சம் ஜாலியா வார்த்தை விளையாட்டு விளையாடலாம், வாரீங்களா? கீழே உள்ள வார்த்தைகள் என்னென்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்."-"குறிகளை கணக்கிலெடுக்காதீர்கள்.

1)
நீ
-ர்

2)
தூமீண்டின்ல்

3)
கா வி ரி

4)
பூக்ள்

Thursday, November 03, 2005

அவ்வளவு கடினமா?

போன துணுக்கில் கேட்கப்பட்ட கேள்வி அவ்வளவு கடினமா என்ன? யாருமே சரியாக பதிலளிக்கவில்லை. அதற்கான விடை.

அ) 3

ஆ) 1

இ) 2

Sunday, October 30, 2005

நுழைவு தேர்வு

ஒரு நுழைவு தேர்வில் கீழ்கண்ட மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. மூன்று கேள்விகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. சரியான விடைகளை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் TCS நுழைவுத் தேர்வு எழுத தகுதியுள்ளவர்;)


அ) கேள்வி 'ஆ'வுக்கான விடை

1) 2
2) 3
3) 1


ஆ) வரிசைப்படி இந்த கேள்விகளில் முதலில் எதற்கு '2'வது விடை சரியானது

1) இ
2) அ
3) ஆ


இ) இதுவரை எந்த விடை உபயோகிக்கப்படவில்லை

1) 1
2) 2
3) 3


அப்புறம் முக்கியமான விஷயத்தை மறந்துட்டேனே! எல்லோருக்கும் எனதினிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Wednesday, October 26, 2005

மணல் சிற்பங்கள்



Monday, October 24, 2005

இது கொஞ்சம் கஷ்டம்தான்

கடைசியாக கொடுத்த புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். அதனால் அதற்கு விடையை ஒரு Algorithm(தமிழ் வார்த்தை . . .!?!) வடிவில் தருகிறேன்.


மொத்தம் 12 பந்துகள். இவற்றை வசதிக்காக 1-12 என்று பெயரிட்டு அழைப்போம். முதலில் பந்துகளை நான்கு நான்காக பிரித்துக் கொள்ளுங்கள்.
முதலில் (1, 2, 3, 4) பந்துகளை ஒரு புறமும், (5, 6, 7, 8) பந்துகளை மறுபுறமும் வைத்து எடை போடுங்கள். இதில் நமக்கு மூன்று வித முடிவுகள் கிடைக்கலாம்.

I) இரண்டுமே சமமாக இருந்தால் (9, 10, 11, 12) பந்துகளில் ஒன்றுதான் தவறானது. அதனால் இரண்டாவது எடை, (6, 7, 8) பந்துகளை(நிச்சயமாக சரியான பந்துகள்) ஒரு புறமும், (9, 10, 11) பந்துகளை ஒரு புறமும் வைத்து போடுங்கள். இதிலிருந்தும் நமக்கு மூன்று வித முடிவுகள் கிடைக்கலாம்.


i) இரு பக்கமும் சமமாக இருந்தால், 12வது பந்துதான் தவறான பந்து. அதை சரியான மற்றோரு பந்துடன் வைத்து எடை போட்டால், 12வது எடை அதிகமா, குறைவா என்பது தெரிந்து விடும்.
ii) அப்படியில்லாமல் (9, 10, 11) உள்ள தட்டு எடை அதிகமாயிருந்தால், தவறான பந்து எடை அதிகம் என்பது முடிவாகிறது. இப்பொழுது 9வது பந்தை ஒரு புறமும், 10வது பந்தை ஒரு புறமும் வைத்து எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 11வதுதான் தவறானது. அப்படியில்லையென்றால் எந்த பந்து எடை அதிகம் இருக்கிறதோ அதுதான் தவறான பந்து.
iii) ஒருவேளை (9, 10, 11) உள்ள தட்டு எடை குறைவாயிருந்தால், தவறான பந்து எடை குறைவு என்பது முடிவாகிறது. பிறகு மேலேயுள்ள (ii)வது வரியின் படி தவறான பந்தை கண்டுபிடியுங்கள்.


II) அப்படியில்லாமல் (5, 6, 7, 8) பந்துகள் எடை அதிகமாயிருந்தால், ஒன்று (5, 6, 7, 8) பந்துகளில் எடை அதிகமுள்ள தவறான பந்து இருக்கிறது, அல்லது (1, 2, 3, 4) பந்துகளில் எடை குறைவுள்ள பந்து இருக்கிறது. இப்பொழுது (1, 2, 5)ஐயும், (3, 6, 10)ஐயும் எடை போடுங்கள். இதிலிருந்தும் மூன்று முடிவுகள் கிடைக்கலாம்.


i) அவை சமமாயிருந்தால், 4(குறைவு) அல்லது 7(அதிகம்) அல்லது 8(அதிகம்) தான் தவறான பந்து. இப்பொழுது 7ஐயும், 8ஐயும் எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 4வது எடை குறைவுள்ள தவறான பந்து, இல்லையென்றால் எந்த பந்து எடை அதிகமாயிருக்கிறதோ அது எடை அதிகமுள்ள தவறான பந்து.
ii) ஒருவேளை (3, 6, 10) பந்துகளின் எடை அதிகமாயிருந்தால், 1(குறைவு) அல்லது 2(குறைவு) அல்லது 6(அதிகம்) தான் தவறான பந்து. இப்பொழுது 1ஐயும், 2ஐயும் எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 6வது(அதிகம்) தான் தவறான பந்து, இல்லையென்றால் எந்த பந்து எடை குறைவாயுள்ளதோ அதுதான் தவறான பந்து.
iii) ஒருவேளை (3, 6, 10) பந்துகளின் எடை குறைவாயிருந்தால், 3(குறைவு) அல்லது 5(அதிகம்) தான் தவறான பந்து. இப்பொழுது 3ஐயும், 10ஐயும் எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 5வது(அதிகம்) தான் தவறான பந்து, இல்லையென்றால் 3வது தான் தவறான பந்து.


III) ஒருவேளை (5, 6, 7, 8) பந்துகள் எடை குறைவாயிருந்தால் மேலேயுள்ள (II) எண்ணிட்ட முறைப்படியே தவறான பந்தை கண்டுபிடிக்க உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியதில்லை.

Wednesday, October 19, 2005

துண்டில்லை! நாய்தான்!!!



இன்னொரு சந்தர்ப்பம்

போன புதிருக்கு விடை சொன்ன டைனோவும், சுகந்தியும் ஒரு விவரத்தை கவனிக்கவில்லை(அல்லது மறந்து விட்டீர்கள், அல்லது நான் சரியாக விளக்கவில்லை). குறைபாடுள்ள பந்து எடை அதிகமா அல்லது குறைவா என்பது தெரியாது. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த விவரத்தையும் மனதில் கொண்டு விடை கண்டுபிடியுங்கள். மீண்டும் ஒரு சந்தர்ப்பம்!

Tuesday, October 18, 2005

அட நாமளா இப்படி!?!

காலங்காத்தாலேயே (அதாவது 7.00 மணிக்கு) நல்ல தூக்கத்துல ஃபோன். வீட்டிலிருந்து. என்னன்னு பார்த்தா தினமலரில் நம்ம பிளாக்க பத்தி செய்தி வந்திருக்கு. அட பரவாயில்லையே! நம்ம இந்த அளவுக்கு வளர்ந்துட்டோமா! தினமலருக்கும், அதற்கு செய்தி சேகரித்து கொடுத்த புண்ணியவானுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கடந்த சில மாதங்களாக எந்த புதிய பதிவும் பதியாமலிருந்ததற்கு, நேரமின்மை முக்கிய காரணமாயிருந்தாலும், அக்கறையின்மையும் ஒரு காரணம். இந்த இரண்டாவது காரணத்தை கொஞ்சம் நீக்க (இனிமேலாவது) முயற்சி செய்கிறேன்.

இன்றைக்கும் ஒரு எடை புதிர்தான். உங்கள் முன் மொத்தம் பன்னிரண்டு பந்துகள் இருக்கின்றன. எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கின்றன. இதில் ஒரே ஒரு பந்து மட்டும் எடையில் மற்றவற்றை விட கொஞ்சம் அதிகமாகவோ, கம்மியாகவோ இருக்கிறது. உங்களிடம் ஒரு தராசு இருக்கிறது. இந்த பந்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை, மொத்தம் மூன்று முறைதான் எடை போடலாம். அந்த பந்தை கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, உலக XI அணிக்கு ஆறுதல் பரிசா அனுப்பிடுங்க!

Saturday, July 02, 2005

பத்து பெட்டி தங்ககட்டி

இன்னைக்கு ஆபீஸ்ல ரொம்ப வெட்டியா இருந்தேனா! சரி, நாம சுமார் பத்து மாசத்துக்கு முன்னால வலைத்துணுக்குன்னு ஓன்னு ஆ'ரம்பிச்சோமே', அதுல எத்தன துணுக்கு எழுதியிருக்கோமுன்னு கணக்கெடுக்கலாமேன்னு, உக்காந்து துணுக்குகளை(துக்கடாக்களையும் சேர்த்துதான்) எண்ண ஆரம்பிச்சேன்.இதுவரை மொத்தம் 103 துணுக்குகள் பதிவாயிருக்கு(இது 104). சரி அத விடுங்க. நாம பத்து பெட்டி கணக்குக்கு வருவோம்.

ஒரு ராஜாகிட்ட நிறைய தங்கம் இருந்தது(வேற யார்கிட்ட இருக்க முடியும்?!?). பத்து பொற்கொல்லர்களை அழைத்து, அந்த தங்கத்தையெல்லாம் ஒரே அளவுள்ள தங்க கட்டிகளாக செய்து தர சொன்னார். ஒரே ஒரு பொற்கொல்லர் மட்டும் கொஞ்சம் தங்கத்தை லவட்டி விட்டு மீதியிருந்ததை சொல்லப்பட்ட அளவைவிட ஒரு சவரன் குறைவான தங்ககட்டிகளாக செய்து விட்டார். எல்லா பொற்கொல்லர்களும் தாங்கள் செய்த கட்டிகளை ஒரு பெட்டியில் அடுக்கி ராஜா முன் கொண்டு சென்றனர். இதற்குள் ராஜாவுக்கு பத்து பேரில் யாரோ ஒருவர் ஒரு சவரன் குறைவான தங்ககட்டிகள் செய்திருக்கிறார் என்ற செய்தி ஒற்றர் மூலம் கிடைத்துவிட்டது. இப்பொழுது ராஜாவின் முன் பத்து பெட்டிகளும் இருந்தன. யார் குற்றவாளி என்பதை ராஜா ஒரே ஒரு தடவை மட்டும் சில தங்ககட்டிகளை எடைபோட்டு கண்டு பிடித்துவிட்டார். எப்படி கண்டுபிடித்தார்?(ஆஆ...வ்)

Thursday, June 09, 2005

இன்னும் சில வருடங்களில்...

இன்று எனது இன்பாக்ஸிலிருந்த பழைய மெய்ல்களை புரட்டி ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இது கண்ணில் பட்டது. இதை தமிழ்'படுத்தாமல்' அப்படியே தந்தால்தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அப்படியே தருகிறேன்.

Indians Dream for the year 2020
Place: Two Americans at IBM, USA.
Currency Conversion Rate: Rs. 1/- = $ 100/-.

Alex : Hi John, you didn't come yesterday to office?
John : Yeah, I was in Indian Embassy for stamping.
Alex : Oh really, what happened, I heard that nowadays it has become very strict.
John : Yeah, but I managed to get it.
Alex : How long it took to get it stamped?
John : Oh, it was nasty man, long queue. Bill Gates was standing in front of me and they played with him like anything. That's why it got delayed. I went there at 2 AM and waited and returned by 4 pm.
Alex : Really? In India, it is a matter of an hour to get stamped for USA
John : Yeah, but that is because who in India will be interested in coming to USA man , their economy has been booming.
Alex : So, when are you leaving?
John : Anytime, after receiving my tickets from the client in India and you know, I will be getting a chance to fly Air-India. Sort of dream come true.
Alex : How long are you going to stay in India.
John : What do you mean by how long. I will be settled in India, my company has promised me that they will process my Hara Patta.(green card)
Alex : Really, lucky person man, it is very difficult to get a Hara Patta in India.
John : Yeah, that's why, I am planning to marry an Indian girl there.
Alex : But you can find lots of US girls in Chennai, Bangalore and Mumbai.
John : But, I prefer Indian girls because they are beautiful and cultured.
Alex : Where did you get the offer, Chennai?
John : Yeah, salary is good there, but cost of living is quite high, it is Rs. 1000/- for a single room accommodation.
Alex : I see, that's too much for US people, Rs. 1/- = $100/-. Oh God! What about in Bangalore, Mumbai?
John : No idea, but it is less than what we have in Chennai. It is like the world headquarters of Software.
Alex : I heard, almost all the Indians are having one personal Robot for help.
John : You can get a BMW car for Rs. 5000/-, and a personal Robot for less than Rs. 7500/-. But my dream is to purchase Ambassador, which costs Rs.2; 00,000/- but has got a lovely design.
Alex : By the way, who is your client?
John : Iyer and Iyengar Associates, a pure Indian company, specializing in Embedded Software.
Alex : Oh, really, lucky to work in a pure Indian company. They are really intelligent and unlike American Body shoppers who have opened their Fly-by-night outfits in India. Indian companies pay you in full even when you are on bench. My friend Paul Allen it seems, used his bench time to visit Bihar, the most livable place in India, probably world. There you have full freedom and no restrictions. You can do whatever you want! I wonder how that state has perfected that system.
John : Yeah man, you are right. I hope our America also follows their footsteps.
Alex : How are you going to cope with their language?
John : Why not? From my school days I have been learning Hindi as my first language here at New York. At the Consulate they tested my proficiency in Hindi and were quite impressed by my 100% percent score in TOHIL (Test of Hindi as International Language).
Alex : So, you are going to have fun there.
John : Yeah, I will be traveling in the world's fastest train, world's largest theme park, and the famous Bollywood where you can see actors like Hrithik, Govinda and all. Esselworld is also near to Bollywood.
Alex : You know, the PM is scheduled to visit US next year, he may then relax the number of visas.
John : That's true. Last month, Narayanamurthy visited White House and donated Rs. 2000/- for infrastructure development at Silicon Valley and has promised more if we follow the model of High-Tech City of Hyderabad. Bill Gates also got a chance of meeting him. Very lucky person.
Alex : But, Indian government is planning to split Narayanamurthy's Infosys.
John : He is a hard worker man, he can build any number of Infosys like this. Every minute he is getting Rs. 1000/-. It seems, if you keep all his money converted as Rs. 100/- notes you can reach Pluto.
Alex : OK, Good Luck John.
John : Same to you Alex. And don't go to Consulate in a "Kurta Pyjama" because they will think you are too Indianised and may doubt you will never come back and hence your Non-Immigrant Visa may get rejected. But don't forget to say "Namaste, aap kaise hai" to the Visa officer at Window 5. It seems he likes that and will not give you a visa if you don't greet him that way.

Don't think it is a dream...
Let us work hard to make this dream possible in real life...

Saturday, May 28, 2005

இட்லி(வடையில்லை!?!)

சுஜாவும், பாலாவும் நண்பர்கள். ஒரு ஞாயிற்றுகிழமை இருவரும் மகாபலிபுரத்துக்கு பிக்னிக்(தமிழ் வார்த்தை ப்ளீஸ்(மன்னிக்கவும், தயவுசெய்து)) சென்றனர். மதிய உணவுக்கு இட்லி பொட்டலங்கள் சென்னையில்ருந்தே கொண்டு சென்றனர். சுஜா ஐந்து பொட்டலங்களும், பாலா மூன்று பொட்டலங்களும் எடுத்துச் சென்றனர். ஒவ்வொரு பொட்டலத்திலும் மூன்று மூன்று இட்லிகள். மதிய உணவுக்கு சாப்பிட உட்கார்ந்தபொழுது அவ்ர்களின் நண்பன் ஷங்கர் அங்கு வந்து சேர்ந்தான்(கரெக்டா சாப்பாட்டு டயத்துக்கு வந்திருக்கான்யா!). மூவரும் ஆளுக்கு எட்டு இட்லி சாப்பிட்டு, பொட்டலங்களை காலி செய்தனர். ஷங்கர் கிளம்பும்பொழுது சாப்பிட்ட எட்டு இட்லிக்கு எட்டு ரூபாய் கொடுத்து(மானஸ்த்தன்!), இருவரையும் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டான். இப்பொழுது அந்த எட்டு ரூபாயை சுஜாவும், பாலாவும் எப்படி பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்? யோசிங்க வலைத்துணுக்கு வாசகர்களுக்கு இது ஒரு கஷ்டமான கேள்வியல்ல. அதனால் உங்கள் பதிலை பதிவு செய்ய முந்துங்கள்.

Tuesday, April 26, 2005

துப்பறிந்த சிங்கம்

கணேஷ் சந்த்ரா(உங்க Office தம்புச்செட்டித் தெருவுல இருக்கோ!). அவருக்கு நமது பாராட்டுக்கள். போனப் துணுக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்,
"கொலை செய்யப்பட்டது சரவணன். அமுதாவின் கணவர் அருண். கீதாவின் கணவர் சரவணன். கீதா அருணோடு ஒரு முறை பேசியிருக்கிறார். அமுதா கீதாவோடு இருமுறை பேசியிருக்கிறார்."

Monday, April 18, 2005

துப்பறியுங்கள் பார்க்கலாம்!!!

அருண், சரவணன், அமுதா, கீதா நால்வரும் உறவுக்காரர்கள். இந்நால்வரில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். உங்களுக்கு இரண்டே இரண்டு Clueதான் கொடுப்பேன்.

1. அருணின் சகோதரி, கொலை நடந்த பிறகு, ஒரே ஒருமுறைதான் அமுதாவின் கணவரோடு பேசியிருக்கிறார்.
2. சரவணனின் சகோதரி, கொலை நடந்த பிறகு, சரியாக இரண்டு முறைதான், கொலை செய்யப்பட்டவரின் கணவனோடு அல்லது மனைவியோடு பேசியிருக்கிறார்.

இப்பொழுது கொலை செய்யப்பட்டது யார்? எங்கே பல் விளக்கி துப்புங்கள், சை! துப்புத்துலக்குங்கள் பார்க்கலாம்!

Thursday, April 07, 2005

Loveன்னா....

நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது வலைத்துணுக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு யாருமே (சரியான) பதிலளிக்கவில்லை. அதனால் விடை இந்த பதிவில்.

1. L'oeuv' என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது Love. இதற்கு அர்த்தம் முட்டை, அதாவது பூஜ்யம் அல்லது சூன்யம்(என்ன ஒரு பொருத்தம் பாத்தீங்களா?).

2. இது இங்கிலாந்து நாட்டிலிருந்து நமக்கு வந்த பழக்கம். குதிரையில் போகும்பொழுது, எதிரே எந்த எதிரியும் வந்து தாக்கக் கூடிய அபாயம் இருந்ததால், அப்படி தாக்கினால் சட்டென்று வலது கையினால் இடுப்பிலிருந்து வாளையோ, துப்பாக்கியையோ எடுத்து தாக்குவதற்கு வசதியாக, சாலையில் இடதுபுறமாக சென்று பழகினர். பிறகு இதுவே எல்லா வாகனங்களுக்கும் பொதுவான விதியாக மாறிவிட்டது.

Thursday, March 31, 2005

சில கேள்விகள்

1. LOVE என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது? அதன் அர்த்தம் என்ன?

2. இந்தியாவில் சாலையின் இடதுபுறமாகத்தான் வாகனம் ஒட்ட வேண்டும். இந்தப் பழக்கம் எந்த நாட்டிடமிருந்து நமக்கு வந்தது? எதனால் இந்த பழக்கம் அந்த நாட்டில் கடைபிடிக்கப்பட்டது?

Wednesday, March 23, 2005

சில அறிவிப்புகள்

ஒரு ஓட்டலின் முன் :

(எங்கள் ஓட்டல் காபியை)
குடித்துவிட்டு இங்கே கலாட்டா செய்யக் கூடாது.


ஒரு வீட்டின் முன் :

இங்கே (சின்ன) வீடு வாடகைக்கு விடப்படும்.


கவர்மென்ட் ஆபீஸின் உள்ளே :

சத்தம் செய்யாதீர்.
(தூக்கம் கலைந்துவிடும்)


ஒரு ஆட்டோவின் பின்னே :

பிரசவத்திற்கு இலவசம்.
(பிரசவம் வண்டியில் ஏற்பட்டால் மட்டும்)


சாலையின் நடுவே:

(வேலை தெரியாத)
ஆட்கள் வேலை செய்கிறார்கள்.


வக்கீல் ஆபிஸில்:

உண்மையே பேசு.
(கோர்ட் நேரம் தவிர)


மேலேயிருப்பவை சிரிக்க மட்டும். பழைய்யய குமுதத்திலிருந்து எடுத்தது(சுட்டது!?!).

Thursday, March 10, 2005

தேர்வு

பத்தாயிரம் தேர்வு எண்களை அச்சடிக்க ஒரு நாளிதழுக்கு மூன்று பக்கங்கள் தேவைப்படுகின்றன. இந்த வருடம் மொத்தம் 32425 பேர் தேர்வு எழுதினர். அனைவரும் பரிட்சையில் தேறுவதாக வைத்துக்கொண்டால் முடிவை அறிவிக்க அந்த நாளிதழுக்கு எத்தனை பக்கங்கள் தேவைப்படும்.

Wednesday, March 09, 2005

சும்மா பாருங்க


பதிய ஒன்னுமே இல்லைன்னா இப்படித்தான் ஏதாவது ஒன்னை(இரண்டை) பதிய வேண்டியுள்ளது.

Sunday, February 27, 2005

துணுக்கர்களுக்கு தொடுப்பு

ஒரு வழியா சில வலைத் துணுக்குகளுக்கு தொடுப்பு கொடுத்து விட்டேன். இந்த வலைத் துணுக்கை ஆரம்பித்த நேரத்திலிருந்து செய்ய வேண்டும், செய்ய வேண்டும் என்று நினைத்து இன்றுதான் முடிந்தது.

Tuesday, February 22, 2005

எழுந்திருங்கள், பார்க்கலாம்!!!

கயிற்றால் கட்டிப் போடாமலே, என்னால் உங்களை நாற்காலியிலிருந்து எழ முடியாமல் செய்ய முடியும்(உங்க ஒத்துழைப்போடதான்!). ஒன்றும் இல்லை. நாற்காலியில் நான் சொல்வது போல் உட்கார்ந்தால் உங்களால் எழுந்திருக்க முடியாது. சோதித்துப் பார்த்தால்தான் நம்புவீர்கள் என்றால் கீழே உள்ளபடி செய்யுங்கள்.



படத்தில் பையன் உட்கார்ந்து இருப்பது போல் நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள். நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நாற்காலிக்கு அடியில் உங்கள் பாதங்களை வைக்கக் கூடாது. கால் தொங்காமலும், அதே சமயம் வளையாமலும் இருக்கும்படியான நாற்காலியிலேயே(அதாவது உங்கள் உயரத்துக்கு ஏற்ற நாற்காலியிலேயே) உட்கார வேண்டும். இப்பொழுது 1)கைகளை எதிலும் ஊன்றாமல், 2)பாதங்களை பின்புறமோ, முன்புறமோ நகர்த்தாமல், 3)முன்புறம் குனியாமல், எங்கே! எழுந்திருங்கள் பார்ப்போம்!!!

என்ன? அப்படியே நாற்காலியோடு கட்டிப்போட்டாற்போல் உட்கார்ந்திருக்கிறீர்கள்!?!?

இதைப் பற்றி கேள்வி கேட்டால் எளிதாக விடை கூறிவிடுவீர்கள் என்று தெரியும். ஆனாலும் தெரியாதவர்கள் சிலர் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக கேள்வி.

ஏன் உங்களால் எழுந்திருக்க முடியவில்லை?

Wednesday, February 16, 2005

மறுபடியும் கவித!?!

நண்பர் நிலா ரசிகனின் கவிதை. இது கவிதை இலக்கணத்துக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லப்பட்ட விஷயம் எனக்கு பிடித்திருந்தது.

சொந்த நாட்டு அகதிகள்

அலுவலகம் செல்ல
தாமதமானாலும் கூட
ஐந்து நிமிடம்
செய்தித்தாளில்
தலைப்புச் செய்திகள்
படிக்க நேரமிருக்கிறது...

வாரத்தில் ஆறு
நாட்கள் வேலை
வேலை என்று
அலைந்தாலும்
தவறாமல் வாரம்
இருமுறை சினிமாவுக்கு
போக நேரமிருக்கிறது...

நேரத்தை வீணாக்குவது
பிடிக்காது என்று
சொல்லிக்கொண்டு
கிரிக்கெட் போட்டி என்றால்
மட்டும் தவறாமல்
பார்க்க நேரமிருக்கிறது...

பிறந்த ஊர்
விட்டு பிழைப்புக்காக
வந்த இந்த நகரவாழ்க்கையில்
எல்லாவற்றிற்க்கும் நேரமிருந்தாலும்,
"தாத்தா பாட்டியை பார்க்க

ஊருக்கு எப்பொ போறோம்பா?"
என்று மழலை மொழியில்
கேட்கும் மகனிடம் மட்டும்
உடனே சொல்ல முடிகிறது
"அதுக்கெல்லாம் அப்பாவுக்கு
நேரமில்லடா" என்று!

- நிலா ரசிகன்

உன் கண் உன்னை ஏமாற்றினால்?

மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிந்தனையை அலைய விடாதீர்கள். இப்பொழுது கீழே உள்ள படத்தை ஆழ்ந்து அலசுங்கள். படத்தில் மொத்தம் எத்தனை நிறங்கள் இருக்கின்றன? என்னென்ன நிறங்கள்?



விடை சொல்ல அவசரப் படாதீர்கள். நன்றாக கவனித்து(எத்தனை முறை வேண்டுமானாலும்) விடை சொன்னால் போதும்.

Saturday, February 12, 2005

பகடை + பகடை = சாத்தியக்கூறு

நண்பர் தர்மா அனுப்பியுள்ள இன்னொரு கணக்கு இது.

மணியும், வர்மனும் பகடைகள் வைத்து ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களிடம் இரு பகடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகடைக்கும் ஆறு முகங்கள். விளையாட்டு இதுதான் : பகடைகளை உருட்டிப் போடும்பொழுது இரண்டு பகடைகளிலும் ஒரே நிறம் தோன்றினால், மணி ஜெயித்ததாக அர்த்தம். இரண்டு பகடைகளிலும் வேறு வேறு நிறம் தோன்றினால் வர்மன் ஜெயித்ததாக அர்த்தம். இருவருக்குமே ஜெயிக்க சமமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

கேள்வி இதுதான் : ஒரு பகடையின் ஐந்து முகங்களிலும் நீல நிறம் இருக்கிறது. மீதி ஒரு முகத்தில் சிகப்பு நிறம் இருக்கிறது. அப்படியானால், இரண்டாவது பகடையில், எத்தனை முகங்களில் சிகப்பு இருக்க வேண்டும்?

ரொம்ப சின்னக் கணக்குதான். அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Thursday, February 10, 2005

என்ன தெரிகிறது?



Monday, February 07, 2005

நான் ஏன் இப்படி முட்டாளாகி போனேன்?

உங்கள் எல்லோருக்குமே ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்திருக்கும்(டேய் என்ன நக்கலா?!?!). கீழே உள்ள ஆங்கில வாக்கியத்தை ஒரு முறை உரக்கப் படியுங்கள்.


FINISHED FILES ARE THE RE- SULT OF YEARS OF SCIENTIF- IC STUDY COMBINED WITH THE EXPERIENCE OF YEARS.


இப்பொழுது மறுபடியும் மேலே சென்று அந்த வாக்கியத்தில் உள்ள 'F'ஐ மட்டும் எண்ணுங்கள்(சீக்கிரம் 2 வினாடிதான் நேரம்!).








எண்ணி முடித்து விட்டீர்களா? மறுமுறை எண்ணக் கூடாது. ஒரே ஒரு தடவைதான்(முக்கா முக்கா மூணு ஆட்டமெல்லாம் கிடையாது!).

இப்பொழுது கீழே படியுங்கள்.





வாக்கியத்தில் மொத்தம் ஆறு 'F'கள் இருக்கின்றன. சாதாரணமான புத்திசாலிகள் இதில் மூன்றைக் கண்டுபிடிப்பார்கள். நீங்கள் நான்கு 'F'கள் கண்டு பிடித்திருந்தால் நீங்கள் சாதாரணத்துக்கு மேற்பட்ட புத்திசாலி. நீங்கள் ஐந்து கண்டுபிடித்திருந்தால் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். ஆறையுமே கண்டுபிடித்திருந்தால் நீங்கள் ஜீனியஸ்("ஜீனியஸ்" சரியான தமிழ் வார்த்தை என்ன?)

இதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியவர் நண்பர் தர்மா. அவருக்கு நன்றி.

அப்புறம் என்னோட முட்டாள்தனம் என்ன என்று கேட்காமல் விட்டு விட்டீர்களே. நாம் இந்த சின்ன விஷயத்தில் எல்லாம் ஏமாறுவோமா என்ற ஒரு சின்ன தலைகனத்தில் கொஞ்சம் அசட்டையாகவே இந்த வாக்கியத்தைப் படித்தேன். என்னால் காலரைத்தான் தூக்கி விட்டுக் கொள்ள முடிகிறது.

Thursday, February 03, 2005

தவறான விளக்கம்

போன துணுக்கில் நாம் பார்த்த பரிசோதனைக்கு ஒரு தவறான விளக்கம் நம்மிடையே உலவுவதாகக் கூறியிருந்தேன். அந்த தவறான விளக்கம் என்னவென்று முதலில் பார்ப்போம்.

டம்ளருக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் எரிந்து போவதால், எரிந்து போன ஆக்ஸிஜனின் இடத்தை இட்டு நிரப்ப தண்ணீர் உள்ளே போவதாக பல புத்தகங்களில் இந்த பரிசோதனைக்கு விளக்கம் அளிக்கபடுகின்றன. இது தவறாகும். ஆக்ஸிஜன் எரிந்து எங்கும் போகவில்லை. உள்ளேயேதான் கார்பன் டை ஆக்ஸைடாக மாறியிருக்கிறது. ஆகையால் இது தவறான விளக்கம்.

சரியான விளக்கம் : டம்ளருக்குள் எரியும் காகிதத்தை போட்டதும், டம்ளருக்குள் இருக்கும் காற்று சூடாகிறது. காற்று சூடாகும்போது, அதன் அடர்த்தி(Density) குறைகிறது. அடர்த்தி குறையும் போது அதன் கொள்ளளவும்(Volume) அதிகமாக இருக்கும்(அல்லது காற்று விரிவடையும் என்று சொல்லலாம்). தீ அணைந்தபின் உள்ளிருக்கும் காற்று குளிரடைகிறது. அப்பொழுது அதன் அடர்த்தி அதிகமாகிறது. அதாவது உள்ளிருக்கும் காற்று சுருங்குகிறது. இதனால் டம்ளருக்குள் காற்றழுத்தம்(Pressure) குறைகிறது. இது டம்ளருக்கு வெளியே இருக்கும் காற்றழுத்தத்தைவிட குறைவாயிருப்பதால், வெளியே இருக்கும் காற்றழுத்தம்(Atmosphere Pressure) தண்ணீரை டம்ளருக்குள் தள்ளுகிறது. இதனாலேயே தண்ணீர் டம்ளருக்குள் போகிறது.

இன்னமும் ஆக்ஸிஜன் எரிந்து போவதாலேயே தண்ணீர் உள்ளே போகிறதென்று நம்புபவர்கள், கீழ்கண்டவாறு அதே பரிசோதனையை செய்யவும். டம்ளருக்குள் எரியும் காகிதத்தைப் போடாமல், டம்ளரை சிறிது நேரம் கொதிக்கும் வெண்ணீரில் போட்டு பின்னர் கவுத்தவும்(உடனே). இப்பொழுதும் தண்ணீர் உள்ளேறுவதைக் காண்பீர்கள். இங்கே எதுவும் எரியவில்லை(ஆக்ஸிஜன் உட்பட). அதனால் ஆக்ஸிஜன் விளக்கம் தவறென்பது இதன் மூலம் தெளிவாகிறது.

பத்ரி பாதி கிணறு தாண்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எரிந்து முடித்ததும் காற்றின் Volume குறைவாக இருக்கும் என்பதை சொன்னவர், அது ஏன் குறைவாக இருக்கிறது என்று சொல்லவில்லை. இவருக்கு அரை மதிப்பெண்.

காஸிலிங்கம் எரிவுக்கு முன்னிருக்கும் வாயுக்கள், எரிவுக்கு பின்னிருக்கும் வாயுக்கள் என்று பட்டியலிட்டு, இவற்றில் பிந்தயது, முந்தயதை விட குறைவாயிருக்கும் என்று கூறுகிறார். மேலும் அவை ஏன் அப்படியிருக்க வேண்டும் என்ரு கூறவில்லை. அவர் கூறியுள்ள பட்டியலில் முந்தயதற்கும், பிந்தயதற்கும், நிறை(mass) ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் அடர்த்தி (அதுவும் வெப்ப மாறுதல்களினால்) வேறுபடும். அதனால் அவருக்கும் அரை மதிப்பெண்தான்.

உங்கள் மூளையை ரொம்ப பிராண்டி விட்டேன் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

Monday, January 31, 2005

விரலில் ஈரம் படாமல்

இன்றைக்கு உங்களுக்கு ஒரு அறிவியல் வித்தை சொல்லித் தரப்போகிறேன். அதை நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு(கல்யாணமாகாதவர்கள், வீட்டில் உள்ள, அல்லது பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு) செய்து காட்டி ஆச்சர்யப்படுத்தலாம்.

ஒரு சமையலறைத் தட்டை எடுத்து, அதில் ஒரு ரூபாய்(அவரவர் வசதிக்கேற்ப) நாணயத்தை வையுங்கள். நாணயத்தை மூடும் வரைத் தட்டை தண்ணீரால் நிரப்புங்கள். இப்பொழுது குழந்தையிடம் விரலில் ஈரம் படாமல் அந்த நாணயத்தை எடுத்தால் அந்த நாணயத்தை அவர்களுக்கே பரிசளிப்பதாகக் கூறுங்கள். எப்படியும் குழந்தைகளால் அது முடியாது(சில அறிவாளி குழந்தைகள் அப்படி செய்து விட்டால் அதற்கு நான் பொறுப்பால்ல! நாணயத்தை நாணயமாக குழந்தையிடம் கொடுத்து விடுவது நல்லது!!).

இப்பொழுது நீங்கள் அதே காரியத்தை எப்படி செய்யப் போகிறீர்கள். ஒரு பழைய காகிதத்தையும், ஒரு டம்ளரையும்("டம்ளர்" தமிழ் வார்த்தை என்ன?) எடுத்துக் கொள்ளுங்கள். காகிதத்தைக் கொளுத்தி டம்ளரினுள் போட்டு அதை உடனே தட்டின் மீது கவுத்தி வையுங்கள்(தீயை உபயோகிப்பதால் குழந்தைகளை சற்று எட்ட நின்றே கவனிக்க சொல்லுங்கள்). அப்படி கவுத்தும்போது நாணயத்தையும் சேர்த்து மூடி விடாதீர்கள். காகிதம் எரிந்து அணைந்தவுடன் தட்டிலிருக்கும் தண்ணீர் டம்ளருக்குள் போய்விடும். இப்பொழுது நாணயத்தை சுலபமாக விரலில் ஈரம் படாமல் எடுக்கலாம்.

வித்தை காட்டி முடித்து விட்டீர்களா? சரி இப்பொ ஒரு சின்னக் கேள்வி. காகிதம் எரிந்து முடித்ததும் தண்ணீர் ஏன் டம்ளருக்குள் போனது? இது ஒரு கேள்வியா? நாலாம் வகுப்பு பள்ளி புத்தகத்திலேயே இருக்கிறதே என்கிறீர்களா? நம் வலைத்துணுக்கில் வருகிறதென்றால் விஷயம் இல்லாமல் கேட்க மாட்டேன் என்பதை நினைவில் இருத்தி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதற்கு ஒரு தவறான விளக்கம் நம்மிடையே உலவி வருவதாலேயே இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன்.


பி.கு.(ரோசாவசந்துக்கு):

இந்த வித்தை(அல்லது பரிசோதனை) பூமியில், தரைமட்டத்தில் நடத்தப்படுவதுதான்!!!


என்ன பண்றது?


ஒரு வேளை இப்படி நடந்துட்டா என்ன பண்றது?!?!

Saturday, January 29, 2005

ஒரு தவறு. ஒரு பதில்...

அவசரத்தில் பதித்த ஒரு துணுக்கிற்கு இத்தனை பின்னுட்டங்களா?(பரவாயில்லை! நானும் உங்களை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறேன்.) முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போன துணுக்கில் ஒரு சிறு தவறு செய்துவிட்டேன்(யாரோட இதயமோ வெடிக்கிற சத்தம் கேக்குதே?!?)

"நண்பர் சொல்லும் எண்களின் கூட்டுத்தொகையை 9தால் வகுக்கும்போது, மீதி 0 வந்தால் நண்பரிடம் நீங்கள் அடித்த எண் 9 அல்லது 0 என்று சொல்லி தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று போன துணுக்கில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். தட்டச்சும்போது மறந்து விட்டது. மன்னித்து விடுங்கள்.

karthikramas அவருடைய சொந்த தியரம் என்று ஒன்று கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கும் நம்முடைய வித்தைக்கும் சம்பந்தம் இல்லை.

மூர்த்தி என்னை குழப்ப விழைந்திருக்கிறார். ஆனால் அதில் ரோசாவசந்தே வெற்றி பெற்றிருக்கிறார். ரோசாவசந்த்! என் மேல் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமல் இப்படி போட்டு என்னை குழப்பலாமா?! எனக்கு இருப்பதே சின்ன மூளை(கை முஷ்டி அளவு என்று சொல்கிறார்கள்). அதையும் இவ்வளவு கஷ்டப்படுத்தினால் எப்படி? ஆனாலும் கஷ்டப்பட்டு நண்பர்கள் உதவியுடன் ரோசாவசந்தின் விளக்கத்தை புரிந்து கொண்டு விட்டேன். அவர் கொஞ்சம் அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவர் கேள்வியில் குறிப்பிடப்படும் கடைசிவிடை எது என்பது குழப்பமாய் உள்ளதாகக் கூறியுள்ளார். நான் நண்பருக்கு கிடைத்த கடைசி விடையையே( அதாவது அவர் ஒரு இலக்கத்தை அடிப்பதற்கு முன்பு) கடைசி விடை என்று கூறினேன். அவர் உங்களிடம் கூறும் எண்களிலிருந்து நீங்கள் அடிக்கப் பட்ட எண் எதுவென்று கண்டுபிடிக்கும் முறை, ஒரு எண் 9தால் வகுபடுமா, வகுபடாதா என்று கண்டறிய பயன்படும் முறையே. அதனால் நண்பருக்கு கிடைத்த கடைசி விடை ஏன் எப்பொழுதும் 9தால் வகுபடுகிறது என்பதை நிரூபித்தாலே போதுமானது. நீங்கள் நிரூபித்திருப்பதும் சரிதான். ஆனால் நிரூபணம் முடிந்த பின்னும் தேவையில்லாமல் சுற்றியிருக்கிறீர்கள்.

அடுத்ததாக ஜெய்ஷ்ரீ! முதலாவது, இரண்டாவது, என்று பார்த்தால் ஜெய்ஷ்ரீ இரண்டாவதுதான். ஆனால் சரியான நிரூபணம்.(ஆமாம்! அது என்ன 0 <= a,b,c,d,..<=9, இதை தவிர வேறு எண்களை a,b,c,d,.. க்கு கொடுக்க முடியுமா?!?!)

பத்ரி அண்ணாச்சியை பற்றி சொல்லலேன்ன இந்த வலைத்துணுக்கு இருக்கறதே தப்பு. இதெல்லாம் ஒரு கணக்கா? ஃபூ என்று ஊதித் தள்ளிவிட்டார். அவர்தான் முதலில் விடையளித்திருக்கிறார்(ஏனோ பிளாக்கர் யோசனைகளில் விடையளிக்கவில்லை?).

கடமை என்று ஒன்றிருப்பதால் எனது விடை கீழே(நான் என்னத்த புதுசா சொல்லப் போறேன். அதேதான்).

நாம் எடுக்கும் பல இலக்க எண், வசதிக்காக நான்கு இலக்க எண் என்றே வைத்துக் கொள்வோம். அதை "abcd" என்று குறிப்போம்.

abcd = (a*1000) + (b*100) + (c*10) + d
=>1000a + 100b + 10c + d ---->(1)


அப்புறம் தனி இலக்கங்களைக் கூட்டுகிறோம்.

= a + b + c + d ----------------->(2)

இப்பொழுது (1)லிருந்து (2) கழிக்கிறோம்.

1000a + 100b + 10c + d ---->(1)
0000a + b + c + d ---->(2)
--------------------------------
999a + 99b + 9c + 0 ------->(3)
--------------------------------

இப்பொழுது (3) எண்தான் நண்பருக்கு கிடைத்த கடைசி விடை. இதில்தான் நண்பர் ஒரு இலக்கத்தை அடிப்பார்.

(3) எண் 9தால் வகுபடக்குடிய எண் என்பது இங்கேயே முடிவாகிவிடுகிறது. இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.


நண்பர் சுபமூகா இந்த வித்தையை பார்த்துவிட்டு தன் வலைப்பதிவில் மேலும் இரு வித்தைகள் பற்றி சொல்லியிருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


Thursday, January 27, 2005

ஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .

நானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய (வலைப்பதிவு)செய்திகள் எதையும் படிக்காமல் இதை எழுதிக்(தட்டி) கொண்டிருக்கிறேன்.

முதலில் கணித வித்தை.

உங்கள் நண்பர் அல்லது நண்பியை பல இலக்க எண் ஒன்றை எழுதி கொள்ள சொல்லுங்கள். எழுதிவிட்டார்களா? இப்பொழுது அதில் இருக்கும் ஒவ்வொரு தனி இலக்கங்களையும் கூட்ட சொல்லுங்கள்(சரியா வரலை!!). அதாவது இப்ப 9573 என்று எழுதி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை இப்படிக் கூட்ட வேண்டும் (9+5+7+3). இப்பொழுது அப்படி கூட்டி வந்த விடையை முதலில் எழுதிய பல இலக்க எண்ணிலிருந்து கழிக்க சொல்லுங்கள்(9573-24). கழித்து விட்டார்களா? மிதி வந்த விடையிலிருந்து ஏதாவது ஒரு எண்ணை அடித்து விட சொல்லுங்கள்(9549 -> 9_49). அடித்து விட்டார்களா? மீதி இருக்கும் இலக்கங்களை சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் கூறும் எண்களிலிருந்து அவர்கள் அடித்த எண் எது என்று நீங்கள் சொல்லி அவர்களை அச்சர்யப்படுத்துங்கள். எப்படி அவர்கள் அடித்த எண்ணை சொல்வது?

ரொம்ப சுலபம். அவர்கள் கூறும் எண்களை கூட்டுங்கள்(9+4+9=22). அதை ஒன்பதால்(9) வகுங்கள்(22/9). மீதி 4 வரும். இந்த மீதியுடன் எதைக் கூட்டினால் 9 வரும் என்று பாருங்கள்(4+5=9). அப்படியானால் 5 தான் அவர்கள் அடித்த எண். நீங்கள் மனக்கணக்கில் புலியாயிருந்தால் நேரடியாகவே கூட்டுத்தொகையுடன் எதை கூட்டினால் 9தின் வகுபடு எண்('Multiples' என்பதன் தமிழ் வார்த்தை சரியா?) வரும் என்றும் கண்க்கிட்டுக் கொள்லலாம்.

இருங்க! இருங்க!! இன்னும் கேள்வியே கேட்கலியே!!!

இப்போ கேள்வி

இந்த வித்தை எப்படி வேலை செய்கிறது. அதாவது விளக்கமாக கேட்டால் அந்த கடைசி விடை ஏன் எப்பொழுதும் 9தால் வகுபடக் கூடிய எண்ணாகவே இருக்கிறது? இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு விளக்கமான பதில் தருபவர்களுக்கு 'கணித மாமேதை' என்ற விருதை நாம் கொடுத்தாலும் யாரும் மதிக்கப் போவதில்லை என்பதால், அவர்கள் பெயர் மட்டும் நமது Comment பகுதியில் அவர்களது Commentக்கு கீழேயே பொறிக்கப்படும்(நிரந்தரமாக) என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, January 19, 2005

யவனர்கள் உண்மையில் யார்?

யவனர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தில் யவனர்கள் ரோமானியர்கள் என்று படித்திருக்கிறேன்(தகவல் தவறாகக் கூட இருக்கலாம்). ரவியா (ரவி-யா?!) யவனர்கள்=கிரேக்கர்கள் என்று அடித்துக் கூறுகிறார். உண்மை தெரிந்த தமிழறிஞர்கள் யாராவது இதற்கு ஆதாரத்துடன் விடை கொடுத்தால் நன்றாக இருக்கும்(நானும் தெரிந்து கொள்வேன்).

Tuesday, January 18, 2005

தமிழ் அகராதி

நவன் கொடுத்துள்ள அண்ணா பல்கலைகழகத்தின் பக்கத்திலிருந்து இது அவர்களின் ஆராய்ச்சிப் பிரிவில் இருப்பது தெரிகிறது. இன்னொரு சுட்டி வேலை செய்யவில்லை. அண்ணா பல்கலைகழகத்தில் இதைப் பற்றி யாரைத் தொடர்பு கொள்வதென்று தெரியவில்லை. இது பற்றி யாராவது உதவினால், அவர்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு உதவ தயாராயிருக்கிறேன்.

325 வலைப்பதிவர்கள் இருந்தும், இது பற்றி மூன்று பேர் மட்டுமே யோசித்தது கொஞ்சம் கவலையளிக்கிறது. மூர்த்தி, விஜய் இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நவன், உங்கள் தகவலுக்கு நன்றி. நீங்களும் இது குறித்து யாரை அணுகலாம் என்று யோசியுங்கள். தகவல் எதேனும் தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். நான் இந்த பணி செய்ய ஆவலாயுள்ளேன்.

Monday, January 17, 2005

மாலன் தந்த யோசனை


தமிழ் குறுஞ்செய்தி- பரவசப்படுத்தவில்லை

4.கைத் தொலைபேசிகளில் தகவலை உள்ளிட பலநேரங்களில் ஒரே விசையைப் பலமுறை பயன்படுத்த நேரிடும். (இந்தியில் ஒரே விசையை 7 முதல் 9 முறை பயன்படுத்த வேண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.) ஒரு எழுத்தை உள்ளைடும் போது அடுத்து என்ன எழுத்து தோன்றும் என்று ஊகிக்கக் கணினியைப் பழக்கி விட்டால் இந்தப் பிரசினையை ஓரளவு சமாளிக்கலாம். இதை Predictive Text Input என்று சொல்கிறார்கள். இதை சாத்தியமாக்க ஒரு சொல் தொகுதியை - அகராதி போல- உருவாக்க வேண்டும். இதை பலர் கூடிச் செய்யலாம்.

மேலேயுள்ள வரிகள் அல்வாசிட்டி விஜய்யின் போட்டுத்தாக்கில் மாலன் கொடுத்த யோசனை. Predictive Text Input என்பது செல்பேசியில் இருக்கும் அகராதி(Dictionary) வசதி. இப்படி ஒரு அகராதி உருவாக்குவது செல்பேசி குறுஞ்செய்திக்கு மட்டுமல்லாது, வேறு பல விஷயங்களுக்கு கூட உபயோகப்படும் (உ.தா. தமிழில் Spell Check, Sorting). அவர் கூறுவது போல பலர் கூடி இதை செய்தால்தான் முடியும். வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்காமல் உடனே ஒரு குழு அமைக்கலாம். இதற்காக உங்கள் வேலை பாதிக்கப் பட வேண்டாம். அதற்கான வழிமுறைகளையும் நாம் கண்டுபிடிப்போம். யாராவது செய்வார்கள், செய்த பின் பார்த்துக் கொள்ளலாம், என்று சும்மா இருக்காமல் நல்ல விஷயத்தை நாமே தொடங்கலாம்.

நான் தயார். யார் யார் வருகிறீர்கள்?

Sunday, January 16, 2005

யவனர்கள் என்பவர்கள்....

போனப் பதிவில் கேள்விகள் கேட்ட ஐந்து நிமிடத்துக்குள் விடைகளளித்த ரோஸாவசந்துக்கு நம்முடைய பாராட்டுக்கள். ஆனால் அவருக்கு 2க்கு 1
மதிப்பெண்தான்.

முதல் கேள்விக்கான ரோஸாவசந்தின் விடை சரியானதுதான். வால்மீகியின் இயற்பெயர் 'இரத்னாகர்'.

இரண்டாவது, யவனர்கள். யவனர்கள் என்று குறிப்பிடப் படுபவர்கள் 'ரோமானியர்கள்'. ஆனால் ரோஸாவசந்தின் விடையிலிருந்து எனக்கு புதிதாக ஒரு கேள்வி முளைத்தது.

நமது சரித்திரக்கதைகளில் 'கிரேக்கர்கள்' எப்படி குறிப்பிடப் படுகிறார்கள்?

Tuesday, January 11, 2005

வால்மீகி? யவனர்?

கேள்வி கேட்டு ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு சரித்திரக் கேள்விகள்தான்.

1. வால்மீகி இருக்காரே, நம்ம வால்மீகி!! அதாங்க இந்த இராமாயணம் கூட எழுதினாரே(டேய்! அடங்குடா!!!), அவரோட இயற்பெயர் என்ன?

2. நிறைய சரித்திரக் கதைகள் படிச்சிரிப்பீங்க. அதுலேல்லாம் "யவனர்கள்" அப்படின்னு வரும் தெரியுமா, அந்த "யவனர்கள்" எந்த நாட்டைச் சேர்ந்தவங்க?

பழமொழி விளக்கம் - 2

ஏற்கெனவே சில பழமொழிகள் காலப்போக்கில் திரிந்து போனதைப் பற்றி நம் வலைத் துணுக்கில் பார்த்தோம். அந்த வரிசையில் இன்னொரு பழமொழி.

"ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பது வழக்கத்தில் உள்ள பழமொழி(இப்படில்லாம் பயமுறுத்தினா யார்கிட்டதான் வைத்தியம் பாக்குறது?).

இதன் உண்மையான வடிவம் இதுதான்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்". அதாவது ஆயிரம் வேர்களைப் பற்றி நன்கு அறிந்து உபயோகப்படுத்தியவன் அரை வைத்தியன்(அட! ஒரே ஒரு எழுத்து மாறிப் போனதில் அர்த்தம் எப்படி மாறிப் போச்சு பாருங்க!!).

Thursday, January 06, 2005

கொஞ்சம் பொன்மொழிகள்

மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.

எல்லோரும் தம்மை விட்டுவிட்டு மற்றவரையே சீர்திருத்த முயல்கிறார்கள்.
- ரவீந்தரநாத் தாகூர்.

பி.கு.: மேலேயுள்ள பொன்மொழிகள் யாரையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டவை அல்ல("மகா நடிகன்" பார்த்த Effectஆ?!?!).