Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

Sunday, July 08, 2012

யோசித்து குறுக்கெழுத்துப் புதிர் - 2

குழுவாக இணைந்து உருவாக்கும் குறுக்கெழுத்துகளுக்கென http://kurukkezuthu.blogspot.com என்று தனியே ஒரு வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறோம். யோசித்து - 2வது குறுக்கெழுத்தை இன்று அங்கே வெளியிட்டிருக்கிறோம். அனைவரும் அங்கு வந்து அதைப் பிரித்து மேயுமாறு அன்போடு அழைக்கிறோம்.


- யோசிப்பவர் & முத்து.

Friday, June 15, 2012

ஸ்ரீதேவியின் புத்தகம் வெளியீடு



பிரசுரம்:

மணிமேகலை பிரசுரம்
7, தணிகாசலம் சாலை
தி.நகர்
சென்னை-17

விலை : ரூ 50/-

வெகு விரைவில் ஆன்லைனில் http://www.nannool.in/

Monday, March 19, 2012

நீங்களே சொல்கலை புதிரமைக்கலாம்

கலைமொழி போலவே சொல்கலையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது கலைமொழியை பலரும் உருவாக்குவது போலவே, சொல்கலையையும் பலரும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சொல்கலைப் புதிரை எளிதாக வடிவமைக்கவும் ஆன்லைன் செயலி எழுதியுள்ளேன். http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp - இங்கே சென்றால் நீங்களே எளிதாக புதிரமைத்து Html Code ஆக ஆன்லைன் வடிவத்தைப் பெற்று உங்கள் தளத்தில் வெளியிட முடியும்.

உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

Tuesday, March 06, 2012

குறுக்கெழுத்து ஆர்வலர்கள் Meetingகும், MINI குறுக்கெழுத்து விடைகளும்...

வருகின்ற ஞாயிற்றுக் கிழமை(11-Mar-2012), தமிழ் குறுக்கெழுத்து ஆர்வலர்கள் சென்னையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். சென்னையில் அல்லாதவர்களும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் சந்திப்பில் கலந்து கொள்வது குறித்தும் யோசித்து வருகிறோம்.  சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் ஆர்வலர்கள் முன்னதாக தகவல் தெரிவித்தால் நல்லது. இந்தப் பதிவிலேயே உங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம். அல்லது yosippavar@gmail.com  என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு மடல் அனுப்பியும் தெரியப்படுத்தலாம். எங்கே, எப்படி, எப்பொழுது போன்றவை, உங்களுக்கு மின்னசஞ்லில் தெரிவிக்கப்படும்.



இப்போ MINI குறுக்கெழுத்து விடைகள்:

இந்த முறை வரவேற்பு கொஞ்சம் கம்மிதான். பலராலும் முழுதாக முடிக்க வேறு முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு புதிர் என்பது எப்பொழுதும் அவிழ்க்க முடிவதாகவே இருக்க வேண்டும். புதிர் அவிழ்த்து முடித்ததும் கிடைக்கும் I've done it என்ற உணர்வை புதிர் அவிழ்ப்பவர்களுக்கு உருவாக்குவதே ஒரு புதிர் அமைப்பின் வெற்றி. அந்த வகையில் இந்த முறை புதிர் அமைப்பு ஒரு தோல்வியான attemptஆகவே எனக்குத் தோன்றுகிறது.


அனைத்து விடைகளும் சரியாகக் கூறியவர்கள் - பூங்கோதை, பார்த்தசாரதி, ஹரி பாலகிருஷ்ணன், நாகராஜன். கலந்து கொண்டு விடை கூறிய மற்றவர்கள் மாதவ், முத்து, அகிலா ஸ்ரீராம், வீ.ஆர்.பாலகிருஷ்ணன், K.R. சந்தானம்.

சரி. இப்பொழுது விடைகளைப் பார்ப்போம்.


குறுக்காக:

1.ஐஸ்வர்யா ராயாக <= “கிழவியா? அதிக”  - ‘விதி’ வீணாய்ப் போனது = கிழயாஅக ==> ”அழகியாக
5.நடுவில்(மைய) நிற்காமல் தள்ளிப்போ(விலகு) விசை(யே)== ”மைய விலகு விசை
7. புள்ளினங்களை(புள்ளி எழுத்துக்கள்) கொன்ற --> தாயா, மாணி’க்’க’ம்’ த’ந்’த = தாயாமாணிகதத --> மயங்கிய ==> அடங்காத தவிப்பா? ==”தணியாத தாகமா
11.து’ரோகி’யான -> நோயாளியைத் துரத்தி = யானது + உயிரோடிரு என்று சொல்லி = பிழை==> கலங்குவது= தவறானது== ”பிழையானது”

நெடுக்காக:

1. ’வி’ரும்பி அமைத்த --> ‘வி’காரம் சரிந்து = ரும்பிஅமைத்த --> குலைந்தது ==> அபூர்வ சகோதரன் == ”அருமைத்தம்பி” 
2.உடல்(மெய்) குறைப்பை -->  விள’க்’கி’ச்’ =விளகி ==> சொல்==”கிளவி” 
3.ஒரு குடுகுடு கிளவி = குடு + “கதை” சொல்ல - பொங்கலன்று(தை) வராததால் --> திரும்பி வந்தாள் ==> விரைவாக == ”கடுகு”
4.இரவு”நேர சை”த்தான் தருவது ==> ஒரு ”நாள்”(அலகிடுதல்)==  ”நேரசை”
6.”கவி” + க”ற்”றது மெய் சேர்த்த -->கவிற்==> பொருள் கொடுத்து பணம் வாங்க==”விற்க”
8.”பிடித்தவையா”- எடுத்து ”வைத்த”= பிடியா=கரியா?==”யானையா”
9.வந்”தாளா து”ச்சாதனா என்ற சொல்லைக் கேட்க==> முடியாது==”தாளாது” 
10. பெரு=”மா” + மதிப்பை= ”விலை” -->தரும் ==>தோரணங் கட்டுவது== ”மாவிலை”


Thursday, December 22, 2011

கலைமொழி - நீங்களே எளிதாகப் புதிரமைக்கலாம்

இந்தக் கலைமொழி விளையாட்டு பலரைக் கவர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். அறிமுகப்படுத்திய நண்பர் மனுவுக்கு நன்றி.

தமிழில் இந்த விளையாட்டு புதிதுதான். அதனால் பலரும் இந்த வகைப் புதிரை அமைக்க ஆரம்பித்தால்(புதிரை விடுவிப்பது அல்ல. புதிர் உருவாக்குவது) இந்த விளையாட்டின் மற்ற பரிமாணங்களையும் நாம் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வகை புதிரை எளிதாக உருவாக்க நான் ஒரு ஆன்லைன் செயலி வடிவமைத்திருக்கிறேன். http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html - இங்கே சென்றால் நீங்களே ஒரு புதிரை வடிவமைத்து Html Code ஆக ஆன்லைன் வடிவத்தைப் பெற்று உங்கள் தளத்தில் வெளியிட முடியும்.

உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

உபசெய்தி : நண்பர் பூங்கோதை தனது முதல் கலைமொழியை இந்த செயலி மூலம் வடிவமைத்து  வெளியிட்டிருக்கிறார் - http://www.tamilpuzzles.com/2011/12/18/km1/. அதையும் விளையாடி மகிழுங்கள்.

Thursday, November 17, 2011

சொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds

      . சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து” என்னும் பெயரில் அறிமுகப்படுத்தினார்.

         அதே விளையாட்டை வலையிலேயே விளையாடும் விதமாக “சொல் ஒன்று சொல்”என்னும் பெயரில் இங்கே ஏற்றியுள்ளேன் - http://free.7host07.com/yosippavar/

        தற்பொழுது சுமார் 40+ வார்த்தைகள் Databaseல் நீங்கள் கண்டுபிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. விளையாடுபவர்கள் புதிய வார்த்தைகளையும் தொகுப்பில் சேர்க்க முடியும். விடைகளை கண்டுபிடித்தவர்கள் அப்படியே அதை கேள்வி வார்த்தை கொடுத்தவர்களுக்கு இமெயிலும் அனுப்ப முடியும். விளையாட்டுக்கான விதிமுறைகள் இங்கே -> http://free.7host07.com/yosippavar//rules.asp

        இப்போதைக்கு 3 அல்லது 4 அல்லது 5 எழுத்து வார்த்தைகள் மட்டுமே சேர்க்க முடியும். விடைகளைக் கெஸ்(guess) செய்ய ஆரம்பிக்குமுன், கேள்வி வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள் என்பதில் கவனம் கொள்ளவும்.

        Code சில சமயம் எரர் அடிக்கலாம்(எழுதினது நானுல்ல!!;-)). Server சில சமயம் Slowஆக இருக்கலாம். விரைவில் அவற்றை சரிப்படுத்துவேன் என்று நம்புவோமாக;-)


        விளையாடிப் பார்த்து நிறை/குறைகளை சொல்வீர்கள் என்ற நம்புகிறேன்.

Thursday, May 13, 2010

கவிதை உறவு போட்டியில் பரிசு

நண்பர்களே,


கவிதை உறவு இலக்கிய இதழ் நடத்திய போட்டியில், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பிரிவில், எனது புத்தகம் ”௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” மூன்றாவது பரிசு வென்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

போட்டியில் வென்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

Saturday, February 06, 2010

ஆன்லைனில் எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல்

டிஸ்கி : இதுவும் ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகியிருப்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? என்று பல கோடி(?!?) பேர் கேட்கிறார்கள். அதற்காகவே இந்தப் பதிவு.

தபால் மூலம் வாங்க, ’TRISAKTHI PUBLICATIONS’ என்ற பெயருக்கு புத்தக விலை ரூ.70+தபால் செலவு ரூ.25க்கு Demand Draft எடுத்து, புத்தகப் பெயரையும் குறிப்பிட்டு,

Chief Editor
Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நேரடியாக வாங்க, மேற்கண்ட முகவரிக்கு வருகை தந்தால், திரிசக்தி பதிப்பகத்தாரின் அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும்(என்னுடையதும் இதில் அடங்கும்!).

ஆன்லைனில் கூட வாங்கலாம். ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்குங்கள் ->
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85

பி.கு.:- இந்தப் பதிவு எனது எல்லா வலைப்பூக்களிலும் வெளியாகும். அதனால் திரட்டிகளில் மறுபடி மறுபடி இந்தத் தலைப்பை காண நேர்ந்தால், அது உங்கள் தலைவிதி!!!;-)

Thursday, January 28, 2010

எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல் வெளியீடு

டிஸ்கி : இது ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், வருகின்ற பெப்ரவரி மாதம் 3ம் தேதி, எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகத்தார், இத்துடன் மேலும் ஒன்பது நூல்களை அன்று வெளியிடுகிறார்கள். விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : ரோட்டரி புத்தகத் திருவிழா, தமிழ் அரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர்.
நாள் : 03-02-2010.
நேரம் : மாலை 6.30 மணி.

பி.கு.:- இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிங்கன்னு நான் சொல்லலை. வாங்கிப் படிச்சீங்கன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-)

Saturday, November 28, 2009

உதவி தேவை நண்பர்களே!!!


ஏற்கனவே இட்லிவடையில் வந்ததுதான். இன்னும் வந்து சேர்ந்த உதவிகள் போதுமானதாயில்லை. எனக்கு வந்த தகவல்கள் உண்மையானதுதான் என்பதை என்னால் முடிந்தவரை நன்கு விசாரித்துவிட்டேன். இணைய நண்பர்கள் கண்டிப்பாக உதவுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதிவு. இந்தப் பதிவின் மூலம் நண்பர் பாலமுருகனுக்கு ஒரிருவராவது உதவினால், மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாவேன்.

One of my friend (Balamurugan) who is working at Cognizant suffering from T Cell Acute Lymphocytic Leukemia (A type of Blood Cancer).He was admitted in CMC Hospital, Vellore. He has got a survival chance of 80% when he finds a proper Donor who can match unrelated allergenic stem cell transplantation(related to Bone Marrow Transplantation).The estimated cost of this treatment would be Rs.70,00,000(Seventy Lakhs).


I would appreciate if you could contribute/Donate your money for his treatment. The money you donate would be one of your general expense but it can save a life. After all we earn money every month to spend. Let’s spend money for a Nobel purpose. Seventy Lakhs is not a small amount for a person coming from a normal middle class family. Let’s join our hands to save a life.

For more details contact my number: 98841 58575



ICICI Account No: 021201511398

ICICI Account Name: Sheik Mohamed Sithik Ali

Branch: Santhome



Note: I make a humble request you to take initiative and contact your friends on behalf of me. And, collect money in person or to your account and later transfer to me, so that I can hand over to our friend.



You can contribute whatever the amount. Please join me to save his life.



Note: Bala has undergone 2 cycles of chemotherapy (It will be done periodically). CMC is in the process of finding the donor. Our friends are also in touch with DATRI (Stem cell Donors Registry, Abiramapuram, Chennai - 18). As Chemo is very costly process, it is better how fast we can reach a suitable donor. Let us pray for his speedy recovery


Patient Details ********************************



Christian Medical College Vellore Association,
Current Account No. 10404158238
Bank Name - State Bank of India
Vellore Town branch,
Br code - 1618
IDS SCUDDER Road,
Vellore - 632004
Swift no - SBININBB473
Patient Name - Balamurugan Gnanaprakasam (Refer Patient Name and Hospital No in the transaction remarks)
Hospital No. 558129D



POC Contacts



Chennai - Kalyani V (104363 ) - 91-44-43583697

US - Kandaswamy Shanmuga(110999) - 201 680 2278

UK - Saranya Jayadev (158703) - 207 163 5074



Note: CTS employee Id given along with POC’s name… This will be useful for CTS employees for contacting the POC

Monday, September 08, 2008

கருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்வு

தமிழ் மணம் கருவிப்பட்டை பிளாக்கரில் பலமுறை தெரியும் பிரச்சினை பல பிளாக்களில் இருக்கிறது. அவற்றை சரி செய்யும் விதமாக, பட்டையை இணைக்கும் நிரலியில் சில மாறுதல்கள் செய்து தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து தமிழ் சசியிடமிருந்து மடல் கிடைத்ததற்கான மறுமொழி வந்தது. நானும் அதை தமிழ்மணம் கருவிப்பட்டை இணைக்கும் பக்கத்தில் செயல்படுத்துவார்கள் என்று காத்திருந்தேன். மேலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒன்றும் நடப்பதாக அறிகுறியில்லை. சரி,இது வேலைக்காகாது, நாமே வலையேற்றினால்தான் உண்டு என்று முடிவு செய்து வலையேற்றிவிட்டேன். முதலில் இந்தப் பதிவிலேயே, அந்த நிரலியை செயல்படுத்த முனைந்தேன். javascript பிளாக்கரில் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் அதை தனிப் பக்கமாக வலையேற்றியிருக்கிறேன். உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில், பலமுறை கருவிப்பட்டைத் தெரியும் பிரச்சினை இருந்தால், அதை நீங்கள் இங்கே சென்று சரி செய்து கொள்ளலாம்.

சுட்டி :- http://karuvipattai.freevar.com/

Wednesday, March 19, 2008

எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் மரணம்

பிரபல ஆங்கில அறிவியல் புனைக் கதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் ஆர்தர் சி. கிளார்க், கொழும்புவில் இன்று காலமானார்.
அவர் குறித்த சில துளிகள் :
  • Clarke attempted to write a six word story as part of a Wired Magazine article but wrote ten words instead. ("God said, 'Cancel Program GENESIS.' The universe ceased to exist.") He refused to lower the word count.
  • At the start of the movie 2010, Dr. Heywood Floyd is engaged in a conversation in front of the White House. Clarke is the man feeding the pigeons to the left of the shot. Later on in the movie, in the hospital scene where Mrs. Bowman dies, the cover of Time shows a photograph of Clarke as the American president, and one of Kubrick as the Russian Premier.
  • He survived the tsunami caused by the 2004 Indian Ocean earthquake, which did however claim his "Arthur C. Clarke Diving School" at Hikkaduwa, which has since been rebuilt.
  • Clarke's novel, Songs of Distant Earth, was the theme for an album of the same name released by ambient musician Mike Oldfield, the creator of the 1973 album Tubular Bells. Most of the sections in the album are named after elements of the novel, such as "The Space Elevator" and "The Sunken Forest". The inlay/sleevenotes include a short piece written by Clarke. Oldfield also used other titles from Clarke's work for songs, including "Sentinel" and "Sunjammer", on Tubular Bells II.
  • In the Millennium (TV series) the log in voice phrases for Peter Watts and Lara Means are quotes from 2001: A Space Odyssey
  • The Divine Comedy recorded a song entitled "Arthur C. Clarke's Mysterious World" for their 2006 album, Victory For The Comic Muse, in tribute to Clarke's well-known TV programme.

  • In an episode of The Goodies, Arthur C. Clarke's show is cancelled after it is claimed he doesn't exist (it is later claimed in the same episode that Clarke was just Graeme Garden in a wig).

மேல் விவரங்களுக்கு :

Saturday, August 04, 2007

பதிவர் பட்டறை - முக்கிய அறிவிப்பு

பதிவர் பட்டறை நாளை "சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகத்தில் (Marina Campus)" நடைபெற இருப்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த மெரினா கேம்பஸ் எங்கே இருக்கிறது? வாலஜா ரோட்டிலிலிருக்கும் சென்னை பல்கலை வளாகத்துக்கு சென்று யாரும் ஏமாற வேண்டாம்(என்னை மாதிரி!!). இந்த மெரினா கேம்பஸ் கடற்கரை சாலையிலேயே, பிரசிடன்ஸி கல்லூரி வளாகத்துக்கு அடுத்ததாக இருக்கிறது. அதனால் நாளை யாரும் வாலஜா சாலைக்கு சென்று ஏமாறாமல், க்டற்கரை சாலையில் இருக்கும் மெரினா கேம்பஸுக்கு வரவும்.

வலைப்பதிவர்கள் நலன் கருதி இத்தகவலை வெளியிடுபவர் யோசிப்பவர்(அப்பாடா! பட்டறை பற்றி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன்!)

Wednesday, July 11, 2007

வகைப்'படுத்தல்'

ஒரு வழியா இன்றைக்கு யோசிங்கவில் எல்லா பதிவுகளையும் வகைப்படுத்தி முடித்துவிட்டேன். அதனால் தமிழ்மணம், மீண்டும் ஒருமுறை பல பழைய பதிவுகளை எடுத்து முகப்பில் காட்டலாம். இதற்கப்புறம், இந்த பழைய பதிவுகள் பிரச்சனை யோசிங்க வலைத்துணுக்கை பொறுத்தவரை இருக்காது என்று நம்பலாம்(ஆனால் இன்னும் குறுஞ்செய்தி வலைத்துணுக்கில் வகைப்'படுத்தல்' பாக்கியிருக்கு!!!).

Wednesday, April 25, 2007

இதற்கு நான் பொறுப்பல்ல!!!

இன்றைக்கு தமிழ்மணத்தில் என்னுடைய பல பழைய பதிவுகள் எடுத்து காண்பிக்கப் பட்டிருக்கும். இதற்கு நான் பொறுப்பல்ல. நேற்று உட்கார்ந்து சில பழைய பதிவுகளை குறிச்சொற்களால் வகைப்படுத்தினேன். அதன் பிறகு இன்று புதிய பதிவிட்டவுடன், புதிதாய் வகைப்படுத்தப்பட்ட பழைய பதிவுகளையும் சேர்த்தெடுத்து தமிழ்மணம் காட்டுவதை இன்றுதான் உணர்ந்தேன். ஏற்கெனவே ஒரு முறை எனது வலைத் துணுக்கில் இது நேர்ந்திருக்கிறது. இன்னும் எனது வலைத்துணுக்கை முழுமையாக வகைப்படுத்தி முடிக்கவில்லை. ஆதலால் இன்னொரு முறையும் இது போல் நேர வாய்ப்பிருக்கிறது(அதற்குள் இந்த Bugகை தமிழ்மணம் சரி செய்யாவிட்டால்) என்று அறிவித்துக் கொள்கிறேன்.

Monday, February 19, 2007

சர்வாதிகாரமும் - ஜனநாயகமும்

மேலும் ஒரு வலைத்துணுக்கு ஆரம்பித்திருக்கிறேன் "எனது சிந்தனைகள்" என்ற பெயரில். மூன்று பதிவுகளுக்குப் பின்தான் தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும், பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், இரு சோதனை பதிவுகளுக்குப் பின், முதல் சிந்தனையான "சர்வாதிகாரமும் - ஜனநாயகமும்" பற்றி படிக்க இங்கே லிங்க் கொடுத்துள்ளேன். அரோக்கியமான கருத்து பறிமாற்றங்கள் வரவேற்கப் படுகின்றன!

Thursday, September 28, 2006

உண்மையில் வெற்றியா?

முதலில் தேன்கூடு நிர்வாகிகளிடமும், வாசகர்களிடமும், முக்கியமாக தேன்கூடு செப்டம்பர் மாத போட்டியில் எனக்கு அடுத்ததாக வந்த அனைவரிடமும், என்னை பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறு வேண்டி கொள்கிறேன். எதற்கு இந்த மன்னிப்பு என்று கேட்கிறீர்களா? தேன்கூடு போட்டியில் எனது கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது நேர்மையான முறையில் பெறப்பட்ட வெற்றியல்ல!!! கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நானும் எனது நண்பர்களும் கள்ள வோட்டு போட்டிருக்கிறோம். இதை ஒத்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமுமில்லை. ஏன் இப்படி செய்தேன்? எழுத்து திறமையுள்ளவர்களை சிறந்த முறையில் ஊக்கப்படுத்துவதற்காக தேன்கூடு குழுவினர் இந்த மாதாந்திர போட்டியை நடத்துகின்றனர். பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் சிறந்த படைப்பை தேர்ந்தெடுக்கும் முறையில் உள்ள குறைகளை அவர்களுக்கு சுட்டிகாட்டவே இப்படி செய்தேன். போட்டிக்கு படைப்பை அனுப்பி விட்டு, தேர்ந்தெடுக்கும் முறையிலுள்ள இந்த குறையினால், வெற்றி பெற முடியாதவர்களின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்.

எனக்கு கிடைத்த வோட்டுகளின் மொத்தக் கணக்கு(இந்த கணக்கு எப்படியென்று தெரியவில்லை?) 31. இதில் கள்ளவோட்டுக்கள் மொத்தம் 15. மீதியுள்ளது 16 வோட்டுக்கள், அதாவது 9.09%. நியாயமாக பார்த்தால் எனது கதை முதல் பத்துக்குள்ளேயே வந்திருக்க கூடாது. முதல் பத்திற்குள் வந்தால்தானே நடுவர் குழுவுக்கு அனுப்புவதற்கு!!!

கள்ள வோட்டு எப்படி போடப்பட்டது? வோட்டு போட ஒரு மின்னஞ்ஜல் முகவரியிருந்தாலே போதுமானது! என்னிடமே மூன்று முகவரிகள் இருக்கின்றன! எனது நண்பர்களிடம் கடன் வாங்கியது மீதி 13. இதில் அந்த பதிமூன்று வோட்டுகளையும் போட்டவர்கள் எனது இந்த கதையை இன்னும் படிக்கவேயில்லை. நான் கேட்டு கொண்டதற்காக வோட்டு மட்டும் போட்டார்கள்.

என்னை கேட்டால், சிறந்த படைப்புகளை, இந்த மாதிரி வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது என்பதே சரியான முறையில்லை. ஏனென்றால், ஒவ்வொரு வாசகர்க்கும் ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும். ஒருவருக்கு மிகவும் பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காது. மேலும் கதை, கவிதை, கட்டுரை என்ற பேதங்கள் இல்லாமல், எல்லாமே ஒரே கூரையின் கீழ் போட்டியில் கலந்து கொள்கின்றன. இது மிக மிக தவறான அணுகுமுறையாக எனக்கு படுகிறது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த மூன்றாம் பரிசை வாங்கி கொள்வதா? மீண்டும் மன்னிக்கவும். மறுதலிக்கிறேன்.

Sunday, March 12, 2006

மறுபடி ஒரு மன்னிப்பு

போன பதிவில் பதிந்த படங்களை அனுப்பியவர் கீதா அல்ல. கணேஷ். மெய்ல் ஐடியால் குழம்பி விட்டேன். மன்னிக்கவும்.

Wednesday, February 15, 2006

சார்பியல் தத்துவம்

அறிவியல் விஷயங்களையும் அவ்வப்பொழுது இந்த வலைத் துணுக்கில் எழுத வேண்டும் என்ற ஆரம்பத்திலேயே ஆசைப்பட்டேன். இப்பொழுது இதை ஒரு தொடர் போல எழுதலாமா என்று யோசிக்கிறேன். இங்கே ஒன்றை சொல்லியாக வேண்டும். இந்த தொடர் எனது சொந்த தொடர் அல்ல. "சார்பியல் தத்துவம் என்றால் என்ன?" - லெ.லந்தாவு.யூ.ரூமர் எனற புத்தகத்தில் உள்ளதையே இதில் தரப் போகிறேன். ஆனாலும் புத்தகத்தில் உள்ள போரடிக்கும் சில விஷயங்களை தவிர்த்து தரப் போகிறேன். இனி தொடர்...

Sunday, February 12, 2006

சரணமும் பல்லவியும் - An Apology

Enakku nerame sariyillai. oru periya thappu paNNitten. Comment Moderation pannumbothu ellaa pinnuuttanggalaiyum check seythu vittu "publish"ai click pannuvathaRku pathil "Reject"ai click paNNivitten. pinnuttam itta anaivaridamum maNNippu keettuk koLkiReen. innum oru naaLil ungaL pinnuuttangaLai ellam mailil irunthu eduththu pathinthu vidukiRen. inRu mailboxum problem pannukiRathu(Time supera workout akuthu enna seyya?). anaivaraiyum konjam poRukkum padi keettuk koLkiReen. avasaraththukku ponguthamiz kuuda sariyaa open akalai. athaan aangilaththileeye thamizil type seythu vitten.