திரு. பாலகிருஷ்ணன் தம்பதியர், அவர்களுடைய பத்தாவது திருமணநாளை கொண்டாட நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர். நான்கு தம்பதிகள் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நான்கு தம்பதிகளில் சிலர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர். தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர். விருந்தின்போது திரு. பாலகிருஷ்ணன் ஒவ்வொருவரிடமும் "நீங்கள் எத்தனை பேருக்கு வணக்கம் தெரிவித்தீர்கள்?" என்று கேட்டார். கிடைத்த விடைகள் திரு. பாலகிருஷ்ணனை ஆச்சரியப்படுத்தின. ஏனென்றால் ஒவ்வொருவரும் வேறு வேறு விடைகளை தெரிவித்தனர். அப்படியென்றால் திருமதி.பாலகிருஷ்ணன் கூறிய விடையென்ன?
பின்குறிப்பு:
இந்த கணக்கில் மொத்தம் பத்து நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். திரு. பாலகிருஷ்ணன் தன்னைத் தவிர மற்ற ஒன்பது நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். கொஞ்சம் கஷ்டமான கேள்வி கேட்டு ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நம்ம வாசகர்கள் பயங்கர புத்திசாலிங்கங்கற நம்பிக்கைல இந்த கேள்வியை பதிக்கிறேன்.
Friday, December 09, 2005
வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
0 (she knew everyone)
தவறு நண்பன். இன்னும் முயற்சி செய்யுங்கள். இதற்கு முழுக்க முழுக்க தர்க்கரீதியாக விடை கண்டுபிடிக்கலாம்.
என்னங்க கணக்கு இடிக்குது....?
மொத்தம் 10 பேரு, கேள்வி கேட்கப்பட்டது 9 பேர் கிட்ட
அப்ப அவங்க 0..9 இதுக்குள்ள ஒரு நம்பர் சொல்லணும்
இதுல ஒவ்வொருத்தரும் தன் இணையோட வந்திருக்காங்க அப்ப 9 ங்கிற நம்பர் யாரும் சொல்ல முடியாது
0 .. 8 வரைக்கும்தான் சொல்லியாகணும்.
ஒவ்வொருத்தரும் வேறு வேறு நம்பர் சொல்லணும்னா
கண்டிப்பா 0 முதல் 8 வரை சொல்லியாகணும்
இப்ப ஒருத்தர் 8 சொல்றார்னு வச்சிப்போம் அப்ப அவங்களுக்கு தன் இணையத்தவிர வேறு யாரையும் தெரியாது.. எல்லாருக்கும் வணக்கம் சொல்லி இருக்காங்கணு அர்த்தம்
ஆனா இன்னொருத்தர் 0 சொல்லியாகணுமே?????
அவர் 0 சொல்லறது நிஜம்னா 8 சொல்லறவங்களோடது பொய்யாச்சே???
கணக்கு இடிக்குதே??
கீதா! உங்களுக்கு கணக்கு இடிக்கிற அதே இடத்தில்தான் விடையே ஆரம்பிக்குது. கணக்கில் தவறில்லை. உங்களுக்கு(எல்லோருக்கும்தான்) இன்னும் இரண்டு நாள் அவகாசம். கண்டுபிடிங்க பார்க்கலாம்.
eppa eppa unamthiri oru kulapavathi intha ulagathula illai allavedu enn mulayai naan peranthula irtrunthu fresha vachuiruken-karupu
யோசிக்க முடியலிங்க பதில் சொல்லிடுங்க.
//நான்கு தம்பதிகள் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.//
//தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர். //
//திருமதி.பாலகிருஷ்ணன் கூறிய விடையென்ன?//
இதன்படி,
வந்த 4 தம்பதியினரில் வேண்டுமானால், ஒருவருக்கொருவர் தெரியாமல் இருந்திருக்கக் கூடும்.
ஆனால், பாலகிருஷ்ணன் தம்பதியினருக்கு எல்லாருமே தெரிந்தவர்கள்தானே!!
ஆகவே, திருமதி.பா.கி. யாருக்கும் வணக்கம் சொல்லியிருக்க முடியாது.
:))
திருமதி பாலகிருஷ்னன்னுக்கு யாரும் தெரியவில்லை எனில்(கணவரை தவிர்த்து) 8 பேர்.
அதிக பட்சமாக 8 .குறைந்த பட்சம் 0.
VSK மற்றும் அனானி,
இது ஒரு பழைய பதிவு. தமிழ்மணத்துக்கு என்னவானதென்று புரியவில்லை. (சத்தியமா நான் ஒன்னும் பண்ணலை!!). பல பழைய பதிவுகளை எடுத்து காட்டியிருக்கிறது!?!?
இந்த புதிருக்கான விடைக்கு இங்கே பாருங்கள்!!!
Post a Comment