Friday, August 31, 2007

எதிர்பாராத தூக்கு - விடை

இது கொஞ்சம் பிரபலமான புதிர். அதனால் சரியான விடை வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். மாசிலாவும், வவ்வாலும் வித விதமான பதில்கள் சொன்னாலும், எதுவும் சரியில்லை. அதனால், நானே விடையை சொல்லி விடுகிறேன்.

இந்தப் புதிரில், குற்றவாளி ஏன் தீர்ப்பை கேட்டதும் சந்தோஷப்பட்டான் என்பது புரிந்துவிட்டால், அடுத்த கேள்விக்கும் விடையளித்து விடலாம். தீர்ப்பைக் கேட்டதும் அவன் பின்வருமாறுதான் சிந்தித்திருப்பான். அதாவது, "முதல் ஆறு நாளும், என்னைத் தூக்கில் போடவில்லையென்றால், கண்டிப்பாக ஏழாவது நாளில் தூக்கில் ஏற்றப்படுவோம் என்று நான் எதிர்பார்ப்பேன். அதனால் தீர்ப்பின் படி என்னை ஏழாவது நாளில் தூக்கில் போடவே முடியாது. இப்பொழுது ஆறாவது நாள்! முந்தைய ஐந்து நாட்களிலும் என்னை தூக்கில் போடவில்லை. எழாவது நாளும் தூக்கில் போட முடியாது என்பது ஏற்கனவே எனக்குத் தெரியும். அதனால், ஆறாவது நாளில் என்னை தூக்கில் போடுவார்கள் என்று கண்டிப்பாக எதிர்பார்ப்பேன். அதனால் ஆறாவது நாளும் என்னை தூக்கில் ஏற்ற முடியாது. இதேபோலவேதான், ஐந்தாவது, நான்காவது, மூன்றாவது, இரண்டாவது நாட்களும் கண்டிப்பாக தூக்கில் போட முடியாது. இப்படி இரண்டிலிருந்து, ஏழாவது நாள் வரை எந்த நாளிலுமே என்னை தூகில் போட முடியாததால், கண்டிப்பாக முதல் நாளில்தான் தூக்கில் போடுவார்கள் என்று எதிர்பார்ப்பேன். இப்பொழுது, அந்த நாளிலும் என்னைத் தூக்கில் போட முடியாது."

இப்படி தனக்கான தீர்ப்பை எந்த நாளிலும் நிறைவேற்ற முடியாது என்று அவன் சிந்தித்ததால், அவன் சந்தோஷப்பட்டான்.

ஆக, இப்பொழுது அவன் வாரத்தில் எந்த நாளிலும் தன்னை தூக்கில் போட முடியாது என்று எதிர்பார்க்கிறான். அதனால், அடுத்த வாரத்தின் எந்த நாளில் தூக்கு மேடையில் ஏற்றப்பட்டாலும், அவன் மிகவும் ஆச்சர்யப்பட்டிருப்பான்.

பி.கு: இந்த விடையோடு கொஞ்சம் முரண்படுகிறவர்களும் உண்டு. ஏனென்றால் இதன் அடிப்படையே முரண்பாட்டு கொள்கையில் அமைந்ததுதான். இந்த சிந்தனைப் போக்கை மேலும் மேலும் விரிவுபடுத்தி கொண்டே போகலாம். அப்பொழுது உங்களுக்கு கிடைப்பது முடிவில்லாத முரண்பாடுகள்தானன்றி, எந்த முடிவும் கிடைக்காது.

Monday, August 27, 2007

எதிர்பாராத தூக்கு


ஒரு கொலை! கொடூரமான கொலை!! கொலை செய்தவனை பிடித்துக் கோர்ட்டில் நிறுத்தினார்கள்(நல்லவேளையாக அரசியல் குறுக்கீடுகள் எதுவுமில்லை!). விசாரணை செய்த நீதிபதி, கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தார்(மனிதநேய ஆர்வலர்கள் யாரும் போராடவில்லை). கொலை நடந்த கொடூரமான முறையை கவனத்தில் கொண்ட நீதிபதி, மரணதண்டனை விதித்தோடு திருப்தியடையவில்லை. உளவியல் ரீதியாகவும் அவனை துன்புறுத்த எண்ணினார். அதனால் அடுத்த வாரத்தில், அவன் எதிர்பாராத ஒரு நாளில், அவனை தூக்கிலிடவேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதனால் தினமும், 'இன்று நம்மை தூக்கில் போட்டு விடுவார்களோ என்று ஒவ்வொரு நாளும் அவன் பயந்தே சாவான்' என்று எண்ணினார். ஆனால் இந்த தீர்ப்பை கேட்டதும் கொலையாளி மிகவும் மகிழ்ந்தான். அடுத்தவாரத்தில் ஒரு நாளில், நீதிபதி தீர்ப்பளித்தபடி, அவனை தூக்கிலிட்டார்கள்.

இப்ப கேள்வி(கள்) என்னன்னா(எத்தனை "ன"?!), தீர்ப்பு சொன்னதும் கொலையாளி ஏன் சந்தோஷப்பட்டான்? அவனை வாரத்தின் எந்த நாளில் தூக்கிலிட்டார்கள்?

Friday, August 17, 2007

கிராஃபிக்ஸ் டிசைனருக்கு போரடிச்சா...
இப்படித்தான் ஆகும்!!!

Thursday, August 16, 2007

எடுடா அந்தச் சூரிய மேளம்!!
Thursday, August 09, 2007

குவாட்டர்


உங்களிடம் உருளை(Cylinder) வடிவிலான ஒரு கண்ணாடிக் குவளை(Tumbler) இருக்கிறது. அதில் சரியாக கால்வாசி(Quater) அளவுக்கு தண்ணீர்(விஸ்கி, பிராந்தி இப்படி எந்த தண்ணியா இருந்தாலும் பரவாயில்லை!) நிரப்ப வேண்டும். உங்களிடம் அளப்பதற்குத் தேவையான எந்தக் கருவியும் இல்லை, ஒரே ஒரு அரை பிளேடைத் தவிர. குவளையிலும் எந்த அளவுக் குறியீடுகளும் இல்லை. எப்படி நிரப்புவீர்கள் சரியாக குவாட்டரை?

Saturday, August 04, 2007

பதிவர் பட்டறை - முக்கிய அறிவிப்பு

பதிவர் பட்டறை நாளை "சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகத்தில் (Marina Campus)" நடைபெற இருப்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த மெரினா கேம்பஸ் எங்கே இருக்கிறது? வாலஜா ரோட்டிலிலிருக்கும் சென்னை பல்கலை வளாகத்துக்கு சென்று யாரும் ஏமாற வேண்டாம்(என்னை மாதிரி!!). இந்த மெரினா கேம்பஸ் கடற்கரை சாலையிலேயே, பிரசிடன்ஸி கல்லூரி வளாகத்துக்கு அடுத்ததாக இருக்கிறது. அதனால் நாளை யாரும் வாலஜா சாலைக்கு சென்று ஏமாறாமல், க்டற்கரை சாலையில் இருக்கும் மெரினா கேம்பஸுக்கு வரவும்.

வலைப்பதிவர்கள் நலன் கருதி இத்தகவலை வெளியிடுபவர் யோசிப்பவர்(அப்பாடா! பட்டறை பற்றி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன்!)

Thursday, August 02, 2007

அந்த நாள் ஞாபகம்

இது என்னன்னு தெரியுதா?


இப்ப ?இப்பவாவது?கலையார்வம்!?!பாம்பு இல்லை! என் மொபைல் TAG!!!என்னோட தட்டச்சுப் பலகை!
முதன் முதலா நாங்களே நண்பர்களா சேர்ந்து சமைச்சது (யாரு சாப்பிட்டது?)!!


என்ன இப்ப திடீர்னு பழைய ஞாபகங்கள்னு பார்க்கிறீங்களா? இந்தப் படத்தையெல்லாம் பதிவு செஞ்ச என்னோட கைப்பேசி, தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டது. அதுக்கு இன்னைக்கு 16!!!!