Friday, August 02, 2013

சொல் எங்கே சொல் - Classic Word Search Game

ஹாய் நண்பர்ஸ். இன்னிக்கு க்ளாஸிக்கல் ஆங்கிலப் புதிரான "Word Search" விளையாட்ட, தமிழ்ல ஈஸியா நாமளே உருவாக்கறதுக்கு ஒரு சின்ன ப்ரோக்ராம் எழுதியிருக்கேன். இந்த விளையாட்டு குறிப்பா நம்ம வீட்டுல இருக்கிற தமிழ் வாசிக்க ஆரம்பிச்சிருக்கிற குழந்தைகளுக்குப் பிடிக்கும். அவங்களுக்கு நாமளே புதிர்களை இதன் மூலம் ஈஸியா உருவாக்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் உருவாக்குற புதிர்களை ஆன்லைனிலும் ஆடலாம். அல்லது ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டும்  குழந்தைகளை கண்டுபிடிக்கச் சொல்லலாம். நீங்களே புதிர் உருவாக்க ->
http://free.7host07.com/yosippavar/wordsearch//solengesol.asp

இதன் மூலமா உருவாக்கின முதல் புதிர் கீழேயிருக்கு. கட்டங்களுக்குக் கீழே இருக்கிற 7 வார்த்தைங்கள, கட்டங்கள்ள எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கனும். ஒரு வார்த்தைய, கட்டங்களுக்குள்ள கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, அந்த குறிப்பிட்ட வார்த்தை உள்ள கட்டங்களை மட்டும் க்ளிக் பண்ணுங்க. எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, "Completed"ங்கிற பட்டனை அழுத்துங்க. இப்ப நீங்க கண்டுபிடிச்சி வச்சிருக்கிற வார்த்தைகள், Grid வடிவில் பக்கத்தில உள்ள Textboxல தெரியும். அதை அப்படியே காப்பி பண்ணி கமெண்ட்ல பேஸ்ட் பண்ணினீங்கன்னா, நீங்க கண்டுபிடிச்சிட்டீங்கன்றதை நானும் தெரிஞ்சுக்குவேன்.
வந்தியத்தேவன்
சுஜாதா
பாரதியார்
குந்தவை
என்இனியஇயந்திரா
ஜீனோ
விஞ்ஞானம்