குறுக்காக:
1.மரியாதையாக வருக உகரம் அகரமானால் வருடம் ஐம்பத்திரெண்டு. (5)
4.பம்பு செட்டில் தலை கால் புரியாமல் குதித்த நட்சத்திரமற்ற திருநெல்வேலி ஆறு. (3)
6.எதிரிலிருக்கும் விரோதி. (3)
7.ஆகாது ஆகாது ஆகாததுவாம் கலப்படமான பேச்சு. (3)
8.தேசம் தேடு. (2)
9.ஆமாம் என்றவர் முடிவில் இரெண்டெடுத்து விருப்பம் காட்டினார். (4)
11.முன்னிரண்டு பாண்டவர் படும் முடிவற்ற கலவை கலாச்சாரம். (4)
13.அங்கசைவுகளிலேயே சவுக்குத் தெறித்தது. (2)
14.அரை வெண்ணிலா வரும் தலை கொஞ்சம் குழம்பி பதிலுக்குப் பதில் பாடு. (3)
15.காசு, பணம், துட்டு மணி மணி. (3)
16.குற்றமற்றதாய் மாறும் அந்தமில்லா ஆதி சடங்கு. (3)
18.பாடி ஆடி குடமுருட்டி கரைகள் மாற்ற, ரம்மியம். (5)
நெடுக்காக:
1.ஆத்தி, இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் கிள்ளி அதிகாரியாவார் போலயே ஆசிரியர். (5)
2.குருடு உருவாக உருகாதே குழம்பு மீன் ஒரே உப்பு. (4)
3.தொல்காப்பியம் கரை கண்டவர்களுக்கு கேட்கும் ஜதியொலி. (2)
4.அன்பகம் நீங்கி செண்பகம் அம்மன் எழுந்தருளிய சிவந்த மண். (4)
5.அவித்து சுடுவதில் நடுவில் பூரம் வைத்து திருப்பு. (4)
8.நாதம் தொலைத்த நாங்கள். (2)
9.வலியில் கத்தும் மனைவியா சாட்சி??? (4)
10.ஆயுதமேந்தா விரலால் பொரி முன்னும் பின்னுமான சரித்திரம். (4)
11.ஆசை பற்றி சொன்னால் திரும்ப ஒட்டிக் கொள்ளும். (2)
12.ஆம், பாட்டும் பாடி ஆடும் இன்றி ஆட்டுவிப்பவர். (5)
13.சக பிரயாணியிடம் நடுவிலும் இறுதியிலும் கலந்துரையாடி நிறைய தெரிந்து கொள்ளுங்கள். (4)
17.அதை சட்டியிலிருந்து எடுத்துத் திருப்பிப் போட்டால் மாமிசம். (2)