Thursday, October 25, 2007

அனிமேட்டர் Vs அனிமேஷன்


Sunday, October 21, 2007

என்னை மாதிரியே

படம் வரைந்தவர் ஓவியர் ஆண்டனி ராஜ்




Friday, October 19, 2007

அனூலஸ் புதிர்

உங்களுக்கு அனூலஸ்(Anulus) அப்படின்னா என்னன்னு தெரியுமா? எனக்கு இதுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியலை. நம்ம பழைய ஓட்டைக் காலணா(ஒரு பக்கம் மட்டும்), ஒரு அனூலஸ்தான். சரி, இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு கேக்கறீங்களா. ஒன்னுமில்லை! அதைவச்சு ஒரு சின்ன கணக்கு போடலாம்னுதான்(படம்லாம் போட்டிருக்கேன் பாருங்க!).

எந்த ஒரு வடிவத்துக்கும் பரப்பளவுன்னு ஒன்னு இருக்கும் இல்லீங்களா? அப்ப இந்த அனூலஸுக்கும் பரப்பளவுன்னு ஒன்னு இருக்குமே. அதை எப்படி கண்டுபிடிக்கிறது? ஃபார்முலா என்ன? இருங்க. இருங்க. இது கேள்வியில்லை. ஏன்னா இது பிஸ்கோத்து மேட்டரு.

இப்ப ஒரு சதுரத்தோட பரப்பளவு கண்டுபிடிக்கனும்னா, நமக்கு அதோட 'ஒரு பக்க' அளவு மட்டும் போதும். ஆனா, அதே ஒரு செவ்வகத்தோட பரப்பளவு கண்டுபிடிக்கனும்னா, 'ஒரு பக்க' அளவு பத்தாது. செவ்வகத்தோட நீளம், அகலம்னு இரண்டு அளவுகள் தெரிஞ்சாதான் கண்டுபிடிக்க முடியும்.

எங்களையெல்லாம் பார்த்தா உனக்கு எலிமென்ட்ரி ஸ்கூல் பசங்க மாதிரி தெரியுதான்னு, நீங்க மனசுக்குள்ள சொல்றது எனக்கு கேக்குது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பொறுமையா அடுத்த பத்தியையும் படிச்சுருங்க.

இப்ப இந்த அனூலஸோட பரப்பளவ கண்டுபிடிக்கனும்னா குறைந்தபட்சம் இரண்டு அளவுகள் தேவைன்னு சின்னப் பையன்(வயசு என்ன?!) கூட சொல்வான். என்னோட கேள்வி என்னன்னா, ஒரே ஒரு அளவு மட்டும் வச்சுகிட்டு அனூலஸோட பரப்பளவை கண்டுபிடிக்க முடியுமா? முடியும்னா, எந்த அளவை வைத்து முடியும்? எப்படி?


(உதவிக் குறிப்பு வேண்டுமானால் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்!)

Wednesday, October 17, 2007

கண்ணுக்குத் தெரியாமல்

திடீரென்று, நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டால் எப்படியிருக்கும்? இப்படித்தான் இருக்கும்...










Thursday, October 04, 2007

காசு விளையாட்டு




முத‌லில் ஒரே மதிப்புள்ள ஆறு நாண‌ய‌ங்களை(ஆறு ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய்/ஐந்து ரூபாய்/உங்கள் வசதியை பொறுத்தது) கீழேயுள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌து போல் மேஜையில் அடுக்குங்க‌ள்.
இப்பொழுது மொத்த‌ம் மூன்று நாண‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ந‌க‌ர்த்த‌ வேண்டும். நாண‌ய‌ங்க‌ளை மேஜையிலிருந்து தூக்கியெல்லாம் வைக்க‌க் கூடாது. இழுத்து ம‌ட்டுமே ந‌க‌ர்த்த‌லாம். ஒரு நாண‌ய‌த்தை ந‌க‌ர்த்தும்பொழுது முடிவில் அது எப்பொழுதுமே வேறு இர‌ண்டு நாண‌ய‌ங்க‌ளை தொடுகிறார்போல் இருக்க‌ வேண்டும். மேலும் ஒரு நாண‌ய‌த்தை ந‌க‌ர்த்தும்பொழுது, ம‌ற்ற‌ நாண‌ய‌ங்க‌ளை த‌ள்ளி நக‌ர்த்திவிட‌க் கூடாது.

இப்ப‌டி நக‌ர்த்த‌க்கூடாது


முடிவில் மூன்று நக‌ர்த்த‌லுக்குப் பின் கீழேயுள்ள‌ ப‌ட‌த்தில் உள்ள‌துபோல் நாண‌ய‌ங்க‌ள் அடுக்க‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும்.


எங்கே முய‌ற்சி செய்யுங்க‌ள் பார்க்க‌லாம்!!