Showing posts with label குறுக்கெழுத்து. Show all posts
Showing posts with label குறுக்கெழுத்து. Show all posts

Thursday, April 09, 2015

மெகா குறுக்கெழுத்துப் போT - 2

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே! இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை தமிழ் எண்களையும் சில குறிப்புகளில்  உபயோகித்திருக்கிறேன். இந்த தமிழ் எண்கள் ஐடியா எங்கள் "What a சினிமா" கேம் மூலம் தோன்றியது. * போட்டிருக்கும் குறிப்புகளுக்கு அகராதியைத் தேட வேண்டியிருக்கலாம். விளையாடி விடைகளை மெய்ல் அனுப்புங்க.


இது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழுத்து (Cryptic Crosswords)  எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற  திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.

இப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.

மெகா குறுக்கெழுத்துப் போT -2

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ராசியில்லா எண்ணம் ஈடேறும் முக்கணவன். (5)
3.மலையூர் தகர உடல் வேண்டி எரி. (5)
6.நியாயம். (2)
7.சம காந்தம் சிந்தும் லேசான சிரிப்பு. (6)
8.இடமிருந்து வலமே. (4)
9.இலக்கமற்று எண்பதை துடி. (2)
10.பொடிப் பொடியான கோணமற்ற செருப்புகள். (3)
12.காலொடிந்த சேவல் கெண்டை. (2) *
13.இடம் எதிரில் குத்திட்ட படகு. (4).
15.நாகரிகத்தில் பெண்மணி. (2)
16.விருதை கூறி ஐந்தை விடுத்தால் வித்து. (2)
17.அகத்திய நடிகர் ஊர். (4)
19.மலையமான் அணிந்த ஆரம். (2)
20.எண் எட்டும் கவீழ்ந்து மிகவும் அரைக்கும்.(3)
22.ஜண கண மன எழுதியவர் தராத நுணுக்கம். (2)
23.மலிங்காத் தாடியில் விசிறி. (4)
24.சத்தமாக எறியும் சண்டைக்கலை. (6)
25.பிரளய நேரம் எங்கும் சேற்று நிலம். (2) *
26.பெருங்கோ. (5)
27.சேட்டை செய்பவர் வேடர். (5) *

நெடுக்காக:
1.அமைதியானவர் கொடுத்த இனிய சாபம் உடலற்றது. (5)
2.அக்காள். (5)
3.வருடி திரும்ப திரும்ப ஆரம்பித்தான் மன்னன். (2)
4.வறுமை இருதல் மசியாதிருத்தல் பிசகுதல். (5)
5.தலைமுடி நகை தரும் மலை. (5)
6.பல் நீளம் மென்மைக் குறைத்து திறப்பில் சிறிய இடைவெளி. (4)
11.பெண்கள் சிரமிழந்தால் ஆணானை ஆகிடுமே. (3)
12.சேகரித்துப் பார்த்தால் குடிசைப் பகுதி. (2)
13.இடையொடிந்த பெண். துன்புறுத்து. (2)
14.காலொடிந்த குதிரை கட்டுமிடத்தில் தாள கதி. (3)
15.வ படி. (2)
16.சலார். (2) *
17.சர்க்கரை உறைக்கிறதா? (5)
18.அந்தாதி அந்தாதி இழந்த காரன் சகுனி. (5)
19.நெஞ்சு நீக்கு மாதம். (4)
20.முட்டாள்த்தனம். (5)
21.பண்ணையார். (5)
25.சவ்வரிசி மாமிசம். (2) *
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

நீங்களே குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்க -> http://www.puthirmayam.com/tools/crosswordbuilder.php

Wednesday, July 16, 2014

குறுக்கெழுத்துப் போT 7 விடைகள்

குறுக்காக :


1) மண்புழு : பரசுராமன் ஆயுதத்தால்="மழு" + "புண்" பட்டால் -->குலைந்து போகும் == மண்புழு == விவசாய நண்பன்

3) மிசை : ஆண்கள் மூக்கின் கீழ் ="மீசை"--> ஒரு மாத்திரை குறைத்த== மிசை == உணவு

4) திராட்சை ரசம் : சட்டி பேரம் --> 'பேசடி' இன்றேல் ==>"ட்ரம்" + ராஜ திக்கு="ராச திசை"---> புரியாதபடி குழப்பிடும் == திராட்சைரசம் == மது

6) ரகசியம் பேசு : "சிகப்பு பேரரசி" + 'சுயம்வரம்' பாதியில் நின்றதால் ="சுயம்"--> சிரப்பு குன்றியதை==>கபேரசிசுயம் == ரகசியம்பேசு == அந்தரங்கத்தில் சொல்

9) நோவு : "துறவு" + விரதம்="நோன்பு" --> துன்புற குன்றியதால்=வுநோ == நோவு == வலி

10) பரிகசி : உணவு வேட்கை = "பசி" + நடுவே இரு ஸ்வரங்கள் தொடர்ந்து பாடியதை="ரிக" == பரிகசி == கிண்டலடி

நெடுக்காக : 

1) மந்தி : சந்திர = "மதி" + கா"ந்"தை <--நடுவில் வைத்தால் == மந்தி == குரங்காகிவிடும்

2) புரட்டாசி : பெண் மாதத்திற்கு(கன்னி ராசி மாதம்) == புரட்டாசி == 'ஏற்ற'வாரின்றி="தக்க" இன்றி--> "புசிக்க தரட்டா" என்றாள்

3) மிஞ்ச : ஐந்தாம் திதியில் =பஞ்சமி--> பாக்கி இருக்க==மிஞ்ச

5) ரகம்பிரி : பகுத்து வை (நேரடிக் குறிப்பு)

6) களவு : கல்லாததில்(கல்லாதது உல"களவு")  உள்ள திருட்டுத்தனம்

7) சுதேசி : சொந்த நாட்டைச் சேர்ந்தவன் == சுதேசி== தலைமை --> "தே"வ + குழந்தை="சிசு" --> கட்டி அணைத்தான்


விடை சொன்னவர்கள் :

பார்த்தசாரதி ஶ்ரீனிவாசன்
ராமராவ்
முத்து சுப்ரமண்யம்
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
ராமச்சந்திரன் வைத்தியநாதன்
சுஜி குரு
ஶ்ரீதரன்
மனு(அந்தோனி இம்மனுவேல்)
நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
Jay
Tamil R
அனு
Poongothai
கே.ஆர். சந்தானம்
Shanthi

Tuesday, July 08, 2014

குறுக்கெழுத்துப் போT 7

இது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழுத்து (Cryptic Crosswords)  எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற  திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.

இப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.


குறுக்கெழுத்துப் போT 7

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பரசுராமன் ஆயுதத்தால் புண்பட்டால் குலைந்து போகும் விவசாய நண்பன். (4)
3.ஆண்கள் மூக்கின் கீழ் ஒரு மாத்திரை குறைத்த உணவு. (2) (அருஞ்சொல்)
4.சட்டி பேரம் பேசடி இன்றேல் ராஜ திக்கு புரியாதபடி குழப்பிடும் மது. (7)
6.சிகப்பு பேரரசி சுயம்வரம் பாதியில் நின்றதால் சிரப்பு குன்றியதை அந்தரங்கத்தில் சொல். (7)
9.துறவு விரதம் துன்புற குன்றியதால் வலி. (2)
10.உணவு வேட்கை நடுவே இரு ஸ்வரங்கள் தொடர்ந்து பாடியதை கிண்டலடி. (4)

நெடுக்காக:
1.சந்திர காந்தை நடுவில் வைத்தால் குரங்காகிவிடும். (3)
2.பெண், மாதத்திற்கு ஏற்றவாரின்றி புசிக்க தரட்டா என்றாள். (5)
3.ஐந்தாம் திதியில் பாக்கி இருக்க. (3)
5.பகுத்து வை. (5)
7.கல்லாததில் உள்ள திருட்டுத்தனம். (3)
8.சொந்த நாட்டைச் சேர்ந்தவன் தலைமை தேவ குழந்தை கட்டி அணைத்தான். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

நீங்களே குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்க -> http://www.puthirmayam.com/tools/crosswordbuilder.php

Saturday, September 07, 2013

குறுக்கெழுத்துப் போT - 6

இது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழுத்து (Cryptic Crosswords)  எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற  திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.

இப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.


குறுக்கெழுத்துப் போT

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மரியாதையாக வருக உகரம் அகரமானால் வருடம் ஐம்பத்திரெண்டு. (5)
4.பம்பு செட்டில் தலை கால் புரியாமல் குதித்த நட்சத்திரமற்ற திருநெல்வேலி ஆறு. (3)
6.எதிரிலிருக்கும் விரோதி. (3)
7.ஆகாது ஆகாது ஆகாததுவாம் கலப்படமான பேச்சு. (3)
8.தேசம் தேடு. (2)
9.ஆமாம் என்றவர் முடிவில் இரெண்டெடுத்து விருப்பம் காட்டினார். (4)
11.முன்னிரண்டு பாண்டவர் படும் முடிவற்ற கலவை கலாச்சாரம். (4)
13.அங்கசைவுகளிலேயே சவுக்குத் தெறித்தது. (2)
14.அரை வெண்ணிலா வரும் தலை கொஞ்சம் குழம்பி பதிலுக்குப் பதில் பாடு. (3)
15.காசு, பணம், துட்டு மணி மணி. (3)
16.குற்றமற்றதாய் மாறும் அந்தமில்லா ஆதி சடங்கு. (3)
18.பாடி ஆடி குடமுருட்டி கரைகள் மாற்ற, ரம்மியம். (5)

நெடுக்காக:
1.ஆத்தி, இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் கிள்ளி அதிகாரியாவார் போலயே ஆசிரியர். (5)
2.குருடு உருவாக உருகாதே குழம்பு மீன் ஒரே உப்பு. (4)
3.தொல்காப்பியம் கரை கண்டவர்களுக்கு கேட்கும் ஜதியொலி. (2)
4.அன்பகம் நீங்கி செண்பகம் அம்மன் எழுந்தருளிய சிவந்த மண். (4)
5.அவித்து சுடுவதில் நடுவில் பூரம் வைத்து திருப்பு. (4)
8.நாதம் தொலைத்த நாங்கள். (2)
9.வலியில் கத்தும் மனைவியா சாட்சி??? (4)
10.ஆயுதமேந்தா விரலால் பொரி முன்னும் பின்னுமான சரித்திரம். (4)
11.ஆசை பற்றி சொன்னால் திரும்ப ஒட்டிக் கொள்ளும். (2)
12.ஆம், பாட்டும் பாடி ஆடும் இன்றி ஆட்டுவிப்பவர். (5)
13.சக பிரயாணியிடம் நடுவிலும் இறுதியிலும் கலந்துரையாடி நிறைய தெரிந்து கொள்ளுங்கள். (4)
17.அதை சட்டியிலிருந்து எடுத்துத் திருப்பிப் போட்டால் மாமிசம். (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Sunday, July 08, 2012

யோசித்து குறுக்கெழுத்துப் புதிர் - 2

குழுவாக இணைந்து உருவாக்கும் குறுக்கெழுத்துகளுக்கென http://kurukkezuthu.blogspot.com என்று தனியே ஒரு வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறோம். யோசித்து - 2வது குறுக்கெழுத்தை இன்று அங்கே வெளியிட்டிருக்கிறோம். அனைவரும் அங்கு வந்து அதைப் பிரித்து மேயுமாறு அன்போடு அழைக்கிறோம்.


- யோசிப்பவர் & முத்து.

Saturday, June 16, 2012

யோசி-த்து குறுக்கெழுத்துப் போT

இந்தப் புதிரை நானும், திரு.முத்துவும் இணைந்து உருவாக்கினோம். அவரது வலைப்பூவில் நேற்றே பதிப்பித்து விட்டோம். இதுவரை இந்தப் புதிரை அங்கே பார்க்காதவர்களுக்காக, இங்கேயும் ஒரு முறை பதிப்பிக்கிறேன் யோசி-த்து குறுக்கெழுத்து

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நண்பா இடையில் பற்களில் கொஞ்சம் திருப்பி சிறந்தகுணமா? (5)
5.பரணி பாடக் காரணம் பார்க்காமல் காண்போர் (3)
6.வசம்பை தேட சில்லறை செலவழித்து உத்தர நாடு செல் (5)
8.உயிர் பிழைக்க தலை அறுத்த முதலை பதப்படுத்தி படுத்தி எடு (5)
10.பெரும்பாலும் மகுடம் தண்ணீர் எடுக்கும் (3)
11.குழந்தை புத்தி; வளர்நிலா (5)

நெடுக்காக:
1.வரகு கொடுக்கவா? வாங்க, வாங்க!!(7)
2.தருமியின் கவியில் நக்கீரன் கண்டது தவறே! (3)
3.அரிசி கலைந்தால் அன்பு (3)
4.சாப்பாட்டுக் கடை மூடும் நேரம் வந்தார் அங்காடி ஊழியர் (7)
7.படிச்ச கலைஞருள் ஒருவர் மாமனாரின் மற்றொரு மாப்பிள்ளை (3)
8.இலக்குவன் பரதனுக்கு இளைத்தவனா? இல்லை இளையவன்! (3)
9.அந்த வளையில் குடியிருப்பது ”மழைக்கால பாகவதர்” (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

Tuesday, May 15, 2012

MICRO குறுக்கெழுத்துப் போT


மெகா ஆச்சு! மினி ஆச்சு! இப்போ மைக்ரோ குறுக்கெழுத்து. 5x5 கட்டங்கள்! ஏழே வார்த்தைகள்!!

வழக்கம் போல க்ரிப்டிக் குறுக்கெழுத்து. இந்த வகை குறுக்கெழுத்து உங்களுக்குப் புதுசுன்னா இங்கே போய் கொஞ்சம் படிச்சிட்டு வந்திடுங்க!!! விடை வார்த்தைகளை கட்டங்களில், நேரடியாக ஆங்கில கீபோர்டிலேயே(English phonetic layout) டைப் செய்யலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முறை கட்டங்களை க்ளிக் செய்து செலக்ட் செய்யும் தொல்லை இல்லை. ”அம்மா” என்பது விடையானால், முதல் கட்டத்தை மட்டும் செலக்ட் செய்துவிட்டு "ammaa" என்று டைப் செய்தால் போதுமானது.

SCORE BOARD இங்கே -> https://docs.google.com/spreadsheet/ccc?key=0Ar2P_1bHQf2UdERWQ282OVEwLWYyQnJmQmp5c2NVVVE

குறுக்காக:
1.அச்சகத்தில் கூட இருக்கும்
5.இவரால் விளையும் நண்ணீர் மீனினம் இடையில் கலக்கியது
6.அடாத சொல்
7.ஏசித் திரும்பினால் வெளு

நெடுக்காக:
2.விழா கதவடைத்து பாட்டி சுட்டதை உடலுடன் உண்டதால் கலங்கி தஞ்சாவூர் பொம்மை செய்தது
3.அதற்குப் பதில் அல்ல உயிரற்ற அது
4.இந்த தலையற்ற கூரியவேல் முனைகள் இடையில் முடி
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
நீங்களே குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்க -> http://www.puthirmayam.com/tools/crosswordbuilder.php

Tuesday, March 06, 2012

குறுக்கெழுத்து ஆர்வலர்கள் Meetingகும், MINI குறுக்கெழுத்து விடைகளும்...

வருகின்ற ஞாயிற்றுக் கிழமை(11-Mar-2012), தமிழ் குறுக்கெழுத்து ஆர்வலர்கள் சென்னையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். சென்னையில் அல்லாதவர்களும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் சந்திப்பில் கலந்து கொள்வது குறித்தும் யோசித்து வருகிறோம்.  சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் ஆர்வலர்கள் முன்னதாக தகவல் தெரிவித்தால் நல்லது. இந்தப் பதிவிலேயே உங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம். அல்லது yosippavar@gmail.com  என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு மடல் அனுப்பியும் தெரியப்படுத்தலாம். எங்கே, எப்படி, எப்பொழுது போன்றவை, உங்களுக்கு மின்னசஞ்லில் தெரிவிக்கப்படும்.



இப்போ MINI குறுக்கெழுத்து விடைகள்:

இந்த முறை வரவேற்பு கொஞ்சம் கம்மிதான். பலராலும் முழுதாக முடிக்க வேறு முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு புதிர் என்பது எப்பொழுதும் அவிழ்க்க முடிவதாகவே இருக்க வேண்டும். புதிர் அவிழ்த்து முடித்ததும் கிடைக்கும் I've done it என்ற உணர்வை புதிர் அவிழ்ப்பவர்களுக்கு உருவாக்குவதே ஒரு புதிர் அமைப்பின் வெற்றி. அந்த வகையில் இந்த முறை புதிர் அமைப்பு ஒரு தோல்வியான attemptஆகவே எனக்குத் தோன்றுகிறது.


அனைத்து விடைகளும் சரியாகக் கூறியவர்கள் - பூங்கோதை, பார்த்தசாரதி, ஹரி பாலகிருஷ்ணன், நாகராஜன். கலந்து கொண்டு விடை கூறிய மற்றவர்கள் மாதவ், முத்து, அகிலா ஸ்ரீராம், வீ.ஆர்.பாலகிருஷ்ணன், K.R. சந்தானம்.

சரி. இப்பொழுது விடைகளைப் பார்ப்போம்.


குறுக்காக:

1.ஐஸ்வர்யா ராயாக <= “கிழவியா? அதிக”  - ‘விதி’ வீணாய்ப் போனது = கிழயாஅக ==> ”அழகியாக”
5.நடுவில்(மைய) நிற்காமல் தள்ளிப்போ(விலகு) விசை(யே)== ”மைய விலகு விசை”
7. புள்ளினங்களை(புள்ளி எழுத்துக்கள்) கொன்ற --> தாயா, மாணி’க்’க’ம்’ த’ந்’த = தாயாமாணிகதத --> மயங்கிய ==> அடங்காத தவிப்பா? ==”தணியாத தாகமா”
11.து’ரோகி’யான -> நோயாளியைத் துரத்தி = யானது + உயிரோடிரு என்று சொல்லி = பிழை==> கலங்குவது= தவறானது== ”பிழையானது”

நெடுக்காக:

1. ’வி’ரும்பி அமைத்த --> ‘வி’காரம் சரிந்து = ரும்பிஅமைத்த --> குலைந்தது ==> அபூர்வ சகோதரன் == ”அருமைத்தம்பி” 
2.உடல்(மெய்) குறைப்பை -->  விள’க்’கி’ச்’ =விளகி ==> சொல்==”கிளவி” 
3.ஒரு குடுகுடு கிளவி = குடு + “கதை” சொல்ல - பொங்கலன்று(தை) வராததால் --> திரும்பி வந்தாள் ==> விரைவாக == ”கடுகு”
4.இரவு”நேர சை”த்தான் தருவது ==> ஒரு ”நாள்”(அலகிடுதல்)==  ”நேரசை”
6.”கவி” + க”ற்”றது மெய் சேர்த்த -->கவிற்==> பொருள் கொடுத்து பணம் வாங்க==”விற்க”
8.”பிடித்தவையா”- எடுத்து ”வைத்த”= பிடியா=கரியா?==”யானையா”
9.வந்”தாளா து”ச்சாதனா என்ற சொல்லைக் கேட்க==> முடியாது==”தாளாது” 
10. பெரு=”மா” + மதிப்பை= ”விலை” -->தரும் ==>தோரணங் கட்டுவது== ”மாவிலை”


Tuesday, February 07, 2012

MINI குறுக்கெழுத்துப் போT

Mini குறுக்கெழுத்து போT
இன்று ஒரு Mini குறுக்கெழுத்து. திரு ஹரி பாலகிருஷ்ணன் தமிழில் குறுக்கெழுத்துக்கள் உருவாக்குவதற்காகவே ஸ்பெஷலாக ஒரு Tool எழுதியுள்ளார். இதன் மூலம் குறுக்கெழுத்து உருவாக்குவது மட்டுமல்லாமல், விடைகளை நீங்கள் ஆன்லைனிலேயே தீர்ப்பதும் எளிதாகியுள்ளது. விடை வார்த்தைகளை கட்டங்களில், நேரடியாக ஆங்கில கீபோர்டிலேயே(English phonetic layout) டைப் செய்யலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முறை கட்டங்களை க்ளிக் செய்து செலக்ட் செய்யும் தொல்லை இல்லை. ”அம்மா” என்பது விடையானால், முதல் கட்டத்தை மட்டும் செலக்ட் செய்துவிட்டு "ammaa" என்று டைப் செய்தால் போதுமானது.


ஓகே. நம்முடையது க்ரிப்டிக் வகை குறுக்கெழுத்து என்பது வழக்கமாக நமது குறுக்கெழுத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்குத் தெரியும். புதிதாக பங்கெடுத்துக் கொள்வோர், இந்த வகை குறுக்கெழுத்தை எப்படி Solve செய்வது என்று கொஞ்சம் இங்கே க்ளிக் செய்து படித்து விட்டு வந்து விடுங்கள்.


மொத்தமாத்தான் பதில் சொல்லனும்னு இல்லை. ஒன்னு ரெண்டா விடைகள் சொன்னாக் கூட, நான் சரியாத் தப்பான்னு சொல்றேன்.:)

ஸ்கோர் கார்ட் இங்கே - https://docs.google.com/spreadsheet/ccc?key=0Ar2P_1bHQf2UdGVBblBFMks1c2U1QTZycDBOcUI4WkE

குறுக்காக:
1.ஐஸ்வர்யா ராயாக கிழவியா? அதிக விதி வீணாய்ப் போனது.(5)
5.நடுவில் நிற்காமல் தள்ளிப்போ விசை(யே).(2,3,2)
7.மயங்கிய புள்ளினங்களை கொன்ற தாயா, மாணிக்கம் தந்த அடங்காத தவிப்பா?(4,3)
11.துரோகியான நோயாளியைத் துரத்தி உயிரோடிரு என்று சொல்லிக் கலங்குவது தவறானது.(5)

நெடுக்காக:
1.அபூர்வ சகோதரன் விரும்பி அமைத்த விகாரம் சரிந்து குலைந்தது.(7)
2.உடல் குறைப்பை விளக்கிச் சொல்.(3)
3.ஒரு குடுகுடு கிளவி கதை சொல்ல பொங்கலன்று வராததால் திரும்பி வந்தாள் விரைவாக!!(3)
4.இரவுநேர சைத்தான் தருவது ஒரு நாள்(3)
6.கவி கற்றது மெய் சேர்த்த பொருள் கொடுத்து பணம் வாங்க.(3)
8.பிடித்தவையா, எடுத்து வைத்த கரியா?(3)
9.வந்தாளா துச்சாதனா என்ற சொல்லைக் கேட்க முடியாது.(3)
10.தோரணங் கட்டுவது பெரு மதிப்பைத் தரும்.(3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Sunday, July 24, 2011

மெகா குறுக்கெழுத்துப் போT விடைகள்

சொன்னதுக்காக எக்ஸ்ட்ராவா மூனு பேர் ஆடியிருக்காங்க. அவ்ளோதான்! மேகீ 22இல் தான் கிட்டத்தட்ட எல்லோருமே தடுமாறிட்டாங்க. ஹரி, R.வைத்தியநாதன், முத்து சுப்ரமண்யம், ஸ்ரீனிவாசராமானுஜம் நாலு பேரும்தான் முதல் அட்டம்ப்ட்லயே கம்ப்ளீட்டா முடிச்சவங்க. KRSm, V.R.பாலகிருஷ்ணனும் ஒன்றுக்கு மேற்பட்ட முயற்சி செஞ்சு முடிச்சாங்க. இந்த முறை புதிர் போட்ட மறுநாளே வெளியூர் போக வேண்டியிருந்ததால், முழுக்க முழுக்க செல்ஃபோனிலேயே இணையம் பார்க்க வேண்டிய தொல்லை. அதிலேயே விடைகளுக்கு பதில் அனுப்புவதும், முக்கியமாக ஸ்கோர் கார்ட் அப்டேட் செய்வதும் மிகுந்த இம்சையாகிவிட்டது. அதனால் பலருக்கும் மிகத் தாமதமாகவே பதில் அனுப்ப முடிந்தது. ஆனாலும் புதிரை விடுவிக்க முயன்றவர்கள் உண்மையில் அனுபவித்து ரசித்திருக்கிறார்கள் என்பது அவர்களது மடல்களில் தெரிந்தது. சரி இனி விடைகளைப் பார்ப்போம்.

இடமிருந்து வலம் :

2) முதல் = ஆதி + (ஊ)க்கம் முதலில்லா =  ஆளுமை.==அதிக்கம்
4) (கண்ண)தாச(ன்) கிருஷ்ணனை நினைக்காவிட்டால் எப்பொழுதும் குழம்பியே இருப்பார் = சதா 
5) நடுவே விரித்”தர் வலை”யை => கசக்கி = வழிநடத்துபவர் == தலைவர்
6) ”போரா”ளிகளுக்குள்ளும் யுத்தமா? == போரா
7) விய”த்தகு வல்”லமைக்குள் => கலைத்தல் = பிரித்தல்.== வகுத்தல்
8) அஸ்திவாரங்களில்லா -> நன(வு) மாளி(கை) => நடுங்கியதால்தான் = அழகா == நளினமா
9) சுபகாரியம் => ரணம்(=காயம்) ஆற்றிக் => சுபகாரியம்-காயம்=சுபரி => கலந்தால் = வெகுமதி == பரிசு
11) ”க”ண்ணி”மை” ஓரங்கள்  இரண்டும் + ஓ”ட”ங்கள் இரண்டும் =>  கலப்பது = பொறுப்பு == கடமை
13) கரைகள்  ”ஊ”மையான”து” = மூங்கிலோசையெழுப்ப == ஊது
15) ஊழல் அரசர் ஆ.....?(நேரடிக் குறிப்பு) == ராசா
16) ஒரு சுற்று பெருத்த => மான் = மாண் + ”பு”தைகுழி வாயிலில் = பெருமை == மாண்பு
18) ”யானை! பாதுகாப்பாய்” - ”யானைப்பாகா!” விரட்டுவாய் = அரபு நகரம்! == துபாய்
21) அவர்கள் அவளில்லாமல் => கர் +  கொடுக்க (=தர) => கலங்கினார் = இடைப்பட்டவர் == தரகர்
23) ”சக்கரம் மாறுதல்” -  தரமாம் = வழுக்கல் == சறுக்கல்
24) காமராசர் - அரசர் = பெரிய == மகா
25) ”கருட வம்சம்” - ”கம்ச” (வதம் நடந்தது) = ஆண்டு == வருடம்
26) கல்வெட்டு - கட்டு (கட்டாதே) =  வெற்றி பெறு == வெல்
27) ”கடன் பட்டனர்” - பட்ட (பட்டமில்லா) => சஞ்சலத்தால் = அண்டை மாநிலத்தவர் == கன்னடர்

மேலிருந்து கீழ் :

1) உயிரை எடுத்து மெய்யாக்கிய(உடலாக்கிய) = குற்றவாளி ==கொலையாளி (நேரடிக் குறிப்பு)
2)  கர்வமா...ஆ = விருப்பமாக == ஆர்வமாக 
3) ”அந்த” உயிரற்ற -> ந்த + பாறை(கல்) => நடுவே  = பழைய துணி == கந்தல்
4) ராஜ = ராச + ஸ்வரங்கள் இரண்டு(ச,ரி)=> கலப்பது = சாதாரணம்.== சராசரி
8) ”நகரம் பார்த்து” - பாரம் (சுமை இறக்கு) = இடம்பெயர்த்து == நகர்த்து
9) இருக்காத இருபது => பது + மசி(மை) = அழகுச்சிலை == பதுமை
10) அழகிய குரவர் = சுந்தரர் (நேரடிக் குறிப்பு)
12) ”மாய மை”னா => தலை குப்புற விழுந்தது =  நடுவிலா == மையமா (இந்த விடை புதிர் கட்டங்களின் மையத்தில் உள்ளது!!;)))
14) ”வாய் வீரா” - வீ (வீனாப் போன என்பதில் எழுத்துப் பிழை இல்லை!) = வருக == வாராய்
17) ”புதியவர்! முதல்வர்” - முதியவர் (முதியவரல்ல) = மைந்தர் == புதல்வர்
19) சந்திப்”பாரா மல்”லுவேட்டி மைனர் = பார்க்காமல் == பாராமல்
20) உ”று”மி இடை + சிவன் => தாண்டவமாடிய =  பொடியன் == சிறுவன்
22) வல்லவர்கள் = வல்லினங்கள்(கசடதபற) => இருவரைத் தொலைத்த நான்கு வல்லவர்கள் -> கசட(தப)ற பேரில் = குற்றமில்லை.= கசடற

Sunday, July 17, 2011

மெகா குறுக்கெழுத்துப் போT

பல மாதங்களாக ஒரு சில டெக்னிக்கல் பிரச்சனைகளினால்(சோம்பேறித்தனம்) பதிவு எதுவும் எழுதவில்லை. இந்தக் குறுக்கெழுத்தை உருவாக்க ஆரம்பித்தே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறதென்றால், டெக்னிக்கல் பிரச்சனை எவ்வளவு பெரியதென்று பார்த்துக் கொள்ளுங்களேன்! எப்படியும் பத்து பேருக்கு மேல் இந்தக் குறுக்கெழுத்தை முனைந்து தீர்க்க முயல மாட்டீர்கள் என்று தெரியும். அதனாலேயே என்னத்துக்குப் போட்டு மெனக்கிட்டுக்கிட்டு என்று டெக்னிக்கல் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகிறது. இருந்தாலும் பிரச்சனையை சமாளித்து இந்த ‘மெகா’ குறுக்கெழுத்தை(11x11 என்பதால் மெகா!) உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம். எங்கே, அந்தப் பத்துபேரும் வந்து உடனே ஆஜராகி வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்!!!

அந்தப் பத்துடன் யாராவது புதுசா ஒன்னு ரெண்டு பேர் சேர்ந்து புதிரை அவிழ்க்கனும்னு நெனைச்சீங்கன்னா ஒரு எட்டு இங்கனயெல்லாம் போய் இந்த மாதிரிப் புதிர்களை எப்படி அவிழ்க்கிறதுன்னு படிச்சு புரிஞ்சிட்டு வந்துருங்க. ஏன்னா, இது தமிழ் வாரப் பத்திரிக்கைகளில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் டைப்பை சேர்ந்ததில்லை.

மத்தபடி வழக்கம்போலதான். நீங்க புதிரை அவிழ்கும்போது இங்கேயிருக்கிற கட்டங்கள்ளயே விடைகளை நிரப்பிப் பார்த்துக் கொள்ள முடியும். உங்க விடைகளை Commentஇலோ, yosippavar@gmail.com என்ற மின்மடல் முகவரிக்கோ அனுப்புங்கள். எந்தெந்த விடைகள் சரி/தப்புன்னு மட்டும் அப்பப்போ நாங்க சொல்லுவோம். மத்தவங்க எத்தன விடைகள் சரியா சொல்லியிருக்காங்கன்னு இங்க போய் பார்த்துக்குங்க.

சரி, சரி! எல்லாம் இப்ப ஆட்டய கவனி!!!


_1
_2_____3__
_4__
_5______

__
_6__

__
_7________
__
_8______

__
_9__10
__

11__12
13__
__
__
14

__

__
__
__
15__
16__17

__
1819__
20

21__22__

__
23________
__

24__
__

25______
26__
27________
__

இடமிருந்து வலம் :

2) முதல் ஊக்கம் முதலில்லா ஆளுமை.(5)
4) கண்ணதாசன் கிருஷ்ணனை நினைக்காவிட்டால் எப்பொழுதும் குழம்பியே இருப்பார்.(2)
5) வழிநடத்துபவரைப் பிடிக்க கசக்கி நடுவே விரித்தர் வலையை.(4)
6) போராளிகளுக்குள்ளும் யுத்தமா?(2)
7) வியத்தகு வல்லமைக்குள் கலைத்தல் பிரித்தல்.(5)
8) அஸ்திவாரங்களில்லா நனவு மாளிகை நடுங்கியதால்தான் அழகா?(4)
9) சுபகாரியம் ரணமாற்றிக் கலந்தால் வெகுமதி உண்டு.(3)
11) கண்ணிமை ஓரங்கள் இரண்டும், ஓடங்கள் இரண்டும் கலப்பது பொறுப்பு.(3)
13) மூங்கிலோசையெழுப்ப கரைகள் ஊமையானது.(2)
15) ஊழல் அரசர் ஆ.....?(2)
16) ஒரு சுற்று பெருத்த மான் புதைகுழி வாயிலில் அடைந்தது பெருமை.(3)
18) யானைப்பாகா! விரட்டுவாய் யானை! பாதுகாப்பாய் அரபு நகரம்!(3)
21) இடைப்பட்டவர் அவளில்லாமல் அவர்கள் கொடுக்க கலங்கினார்.(4)
23) வழுக்கல் சக்கரம் மாறுதல் இல்லாத தரமாம்!(5)
24) பெரிய காமராசர்! அரசரில்லை!!(2)
25) கருட வம்சம் ஆண்டு வர கம்ச வதம் நடந்தது.(4)
26) கல்வெட்டு கட்டாதே! வெற்றி பெறு!!(2)
27) பட்டமில்லா அண்டை மாநிலத்தவர் சஞ்சலத்தால் கடன் பட்டனர்.(5)

மேலிருந்து கீழ் :

1) உயிரை எடுத்து மெய்யாக்கிய குற்றவாளி.(4)
2) விருப்பமாக கர்வமா...ஆ!(5)
3) அந்த உயிரற்ற பாறை நடுவே பழைய துணி.(4)
4) ராஜ ஸ்வரங்கள் இரண்டு கலப்பது சாதாரணம்.(4)
8) இடம்பெயர்த்து நகரம் பார்த்து சுமை இறக்கு.(5)
9) இருக்காத இருபது மசி அழகுச்சிலை.(3)
10) அழகிய குரவர்.(5)
12) மாய மைனா தலை குப்புற விழுந்தது நடுவிலா?(3)
14) வீனாப் போன வாய் வீரா வருக!!!(3)
17) மைந்தர் புதியவர்! முதல்வர் முதியவரல்ல!
19) பார்க்காமல் சந்திப்பாரா மல்லுவேட்டி மைனர்?(4)
20) உறுமி இடை சிவன் தாண்டவமாடிய பொடியன்.(4)
22) இருவரைத் தொலைத்த நான்கு வல்லவர்கள் பேரில் குற்றமில்லை.(4)

உருவாக்கம் : யோசிப்பவர், ஸ்ரீதேவி

Friday, November 06, 2009

குறுக்கெழுத்துப் போT - 5 விடைகள்

விடை சொல்லும் நேரம் வந்தாச்சு! முதலில் 20-20 போட்ட பூங்கோதை, வாஞ்சி, லாவெர்டண்டீஸ் மூவருக்கும் சபாஷ்!

இம்முறை புதிர் விடைகளை பெயர்கள், இடங்கள், சினிமா, புத்தகம் என்ற நான்கு வட்டத்திற்குள் அடைக்க முயற்சித்தோம். (Names, Places, Things, Animals விளையாடியுள்ளீர்களா ?!) work out ஆகிவிட்டது என்றாலும் interesting ஆக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆங்காங்கே “தேவராட்டி”, ”கிரேக்க நாடக திரை”, “டிங்கா டிங்கா” போன்ற கடின குறிப்புகளை உபயோகப்படுத்தி இருந்தாலும் கண்டுபிடிக்க கூடிய அளவிலேயே இருந்ததாக எண்ணுகிறோம்.

குறுக்காக :
2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்?
மேன்மை = தரம், மரணமடையவா = சாவதா ----> சாவதா, தரம் உள்ளே சென்று தசாவதாரம் ஆனது!

6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா?
”கன்னி தாயா சேயா”வில் கயா காணாமல் “ன்னிதாசேயா” ஆனது. குழப்பத்தை போக்கினால், டிங்கா டிங்கா ஓவியத்திற்கு பெயர் பெற்ற ”தான்சேனியா” வரும்!

8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான்.
எளிய குறிப்புதான் - வசீகரா!

9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது.
அக் + கிறக்க பானம் = ரம் -----> அக்ரம்! பந்தை பாட்டில் மூடியால் சேதப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியதாய் ஒப்புக் கொண்ட பிரபலம். பல பேரும் தடுமாறிய குறிப்பு இதுதான்.

12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே.
கம்பர்! எளிதான குறிப்பே.

16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது.
யவனிகா! தா”னியகாவ”ல் நடுவில் கசங்கி உள்ளது. நாடக திரைக்கு யவனிகா என்ற கிரேக்க மூலப்பெயரும் உண்டு.

17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள்.
அதே பாலை + நீங்கள் ஆங்கிலத்தில் = யு -------> அலைபாயுதே!

19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம்.
வீரப்பன் காட்டை கொளுத்தினால் “சத்தீ” + (ஆ)ஸ்கார் = சத்தீஸ்கார்! கோஸாப் பட்டு பற்றி அறிய

நெடுக்காக :

1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள்.
அமிதாப்! பலர் எளிதாகவே கண்டு பிடித்து விட்டார்கள். one man industry என்ற பெயர் 70ஸ் நபர்கள் அறிந்திருப்பார்கள்.

3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி.
சாலினி!

4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம்.
ரகுவம்சம்! இஷ்வாகு குலத்தின் fastest chariot rider = ரகு (அந்த கால ஷுமேக்கர்) , சந்ததி = வம்சம்

5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி.
ராஜா ராணி! வெறும் கிரீடத் தம்பதி என்று கொடுக்கலாமா என யோசித்தோம். விடை கண்டுபிடித்தவர்கள் பலருக்கும் அது கலைஞர் வசனம் எழுதிய படம் என்பது தெரியுமா?

7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை.
சேதக்! குறிப்பிலேயே விடை உள்ளது.

9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது.
அபு! ஏசியாட் குட்டி யானை என்று கொடுத்திருந்தால் பலருக்கும் எளிதாக இருந்திருக்கலாம்! இதையும் இதற்கு related குறிப்பான ”அக்ரம்”மிலும் பலபேர் சிரமப்பட்டு விட்டனர்.

10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன்.
ரஜினிகாந்த்! super star க்கு விளக்கம் தேவையா?

11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும்.
யா(தவ)ர்!

13) பாபம் மாற்றிய புண்ணிய நதி.
பம்பா!

14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன்.
நா(யக)ன்!

15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான்.
பபூ(ன்) + தேர் => வழிகுழம்பி ”பதேபூர்!”

18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே.
லைக்கா! குறிப்பிலேயே விடை உள்ளது. லைக்கா யாருன்னு தெரியுமில்ல!

பின் குறிப்பு
உங்களின் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!

Saturday, October 24, 2009

குறுக்கெழுத்துப் போT - 5

Hello everybody,
இந்த மாத குறுக்கெழுத்து புதிரை தீபாவளி ரிலீஸாக வெளியிட நினைத்தேன். ஆனால், அதிகப்படியாக வந்திருந்த ஸ்வீட், காரத்தால் (பூங்கோதை, பார்த்தசாரதி, இலவச கொத்தனார்) ஒரு வார தாமதம் ஏற்பட்டுவிட்டது. Just ஒரு வாரம் தான்! பொங்கல் ரிலீஸ் என்று ஆகவில்லையே!

வெல், அடுத்தடுத்து குறுக்கெழுத்து solve பண்ணி fed up ஆகியிருப்பீர்களோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் இம்முறை புதிரை சற்று எளிதாகவே அமைத்துள்ளேன்.

இது போன்ற குறுக்கெழுத்து புதிரை அவிழ்ப்பதற்கு திரு. வாஞ்சி அவர்களின் எளிய அறிமுகம் இங்கே! வழக்கம் போல மதிப்பெண் பட்டியல் இங்கே.

இனி புதிருக்கான கட்டவலையும், குறிப்புகளும் . . . . . .

1
234
5






67
8







910

11



1213
14





15
16
1718







19


குறுக்காக :

2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்? (6)
6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா? (5)
8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான். (4)
9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது. (4)
12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே. (4)
16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது. (4)
17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள். (5)
19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம். (6)

நெடுக்காக :

1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள். (4)
3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி. (3)
4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம். (6)
5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி. (4)
7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை. (3)
9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது. (2)
10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன். (6)
11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும். (2)
13) பாபம் மாற்றிய புண்ணிய நதி. (3)
14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன். (4)
15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான். (4)
18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே. (3)

Friday, October 02, 2009

குறுக்கெழுத்து போT - 4 விடைகள்

இந்த முறை விடை சொன்னவர்கள் மிக மிக குறைவுதான்(மொத்தமே 5 பேர்தான்). ரொம்ப கஷ்டமாக இருந்ததா? இல்லை இதெல்லாம் ஒரு புதிர்னு சொல்லி லூஸ்ல விட்டுட்டீங்களான்னு தெரியவில்லை.

விடை சொன்ன அந்த 5 பேர் :

1) வாஞ்சிநாதன்
2) வீ.ஆர். பாலகிருஷ்ணன்.
3) குன்னத்தூர் சந்தானம்
4) பூங்கோதை
5) அரசு

இதில் எல்லாவற்றுக்கும் சரியான விடையளித்தவர்கள் பாலகிருஷ்ணனும், பூங்கோதையும்.

குறுக்காக

1. சொக்காய் - மதுரை மன்னனை நிறைய பேர் பாண்டியன் என்று நினைத்து குழம்பிவிட்டார்கள். குழம்ப வேண்டும் என்றுதான் கொடுத்திருந்தோம். பலரும் சொக்கா’வா’ என்றே விடை சொன்னார்கள். அழைத்தாய் இறுதியாக என்று கொடுத்திருந்ததால் சொக்காய் என்பதே சரியான வார்த்தை. இருந்தாலும் ’சொக்காவா’க்கும் மதிப்பெண் கொடுத்தோம்.

3. அரோகரா - கந்தன் புகழ் பாடு என்று கொடுத்திருக்க வேண்டும். தவறை சுட்டிக் காட்டிய வாஞ்சிக்கு நன்றி. ஆனாலும் எல்லோரும் கண்டுபிடித்து விட்டார்கள். துருவ ஒளி - அரோரா - வட/தென் துருவங்களில் மட்டும் பனிப்பரப்பினால் இயற்கையாக தோன்றும் வண்ண ஒளி.

7. சிந்தாமணி - எளிய குறிப்புதான். விரும்பியது கொடுக்கும் மணி - சிந்தாமணி.

8. தாழி - ’த’கரம் + கடல் (ஆழி) . குழம்புவீர்கள் என்று நினைத்தோம். ம்ஹும். நீங்களாவது குழம்புவதாவது.

9. வெண்ணை உருண்டை - கருணை குறைவாய் என்பது ’க’ இல்லாமல் ருணை என்பதை குறிக்கிறது. இதனுடன் ’வெண்டை உண்’ என்பதில் உள்ள எழுத்துக்களை கலக்கினால் கண்ணனைக் கவரலாம். இதிலும் ஒரு பிழை உண்டு. ’வெண்ணெய்’ என்பதே சரியான வார்த்தை. இனி கவனமாக இருக்க வேண்டும்.

10. மீறி - ’மீன் வலையைப் பற்றி’ என்பதன் முதல் கடைசி எழுத்துக்கள் சேர்ந்து அடங்காமல் போனது.

12. விண்கலமா - ’கவி மாலன்’ முட்டை அதிகம் உண்டால் கவி மால’ண்’ ஆவார். அவர் குழம்பினால் வேற்றுக் கிரகம் போவார்.

14. துந்துபி - பேரிகை என்ற க்ளுவிற்கு பதில் அறுபது தமிழ் வருடங்களில் ஒன்று என வரும்படி கொடுக்கலாம் என்று நினைத்தோம். பிறகு வாக்கிய அழகிற்காக மாற்றி விட்டோம்.

15. மிதியடி - இந்த க்ளு எனக்கே பிடித்திருந்தது. சேது நாயகன் என்ற வார்த்தைக்கு விக்ரமிடமிருந்து விலகி, ராமர் என்று யோசித்தால் எளிதில் கண்டு பிடித்திருக்கலாம். அதையும் மூன்று பேர் சரியாக யோசித்துள்ளனர்.


நெடுக்காக

1. சொடக்கு - ஆங்கில வாத்தை டக் என்று எளிதில் விடுவித்து விடுவீர்கள் என்று தெரிந்தே தான் கொடுத்தோம்.

2. காஞ்சி - சத்தியமாக நூற்றாண்டு விழா பாதிப்பில் தமையனை அழைக்கலீங்க! அது சரி . . . ’ஏப்ரல் மே யில...’ பாடல் க்ளுவில் தெரியவில்லையா?!?

4. ரோகிணி - அவ’ரோ’+ மணியோசை = ’கிணி’. சோதிட ஸாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியர். அவர்களில் சந்திரனுக்கு மிகவும் பிரியமான மனைவி ரோகிணி.

5. ராக்கோழி - மீண்டும் ஆங்கில என்று உபயோகிக்க எங்களுக்கே விருப்பமில்லைதான். என்ன செய்ய? ராக் தமிழ் வார்த்தை கிடையாதாமே?

6. பாதாள உலகம் - மிக எளிதான் குறிப்புதான். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறோம்.

8. தாடை - க்ளுவை டைப்பியதும் எங்களுக்கே முகம் கிழிந்து விட்டது போல ஒரு உணர்வு! நீங்கள் யாரும் கிழித்து விடுவீர்களோ என்ற பயமும் கூட!!

9. வெறி - ஆக்ரோஷமாக என்று கொடுக்கலாமா என நினைத்தோம். எப்படி கொடுத்திருந்தாலும் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தெரிந்து விட்டதால் விட்டு விட்டோம் ( எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தில் மேல் நம்பிக்கைதான் )

10. மீந்தது - கொஞ்சம் கஷ்டப்பட்டீர்களோ? அந்த முண்டத்தில் - ந்த என்று பிடித்திருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

11. அம்மாடி - இந்த விடை தான் எண்ணியிருந்தோம். ஆனால் போஸ்ட் பண்ணிய பிறகு தான் ஆத்தாடி என்பதும் சரியாக வருவதை தெரிந்து கொண்டோம். ஆனாலும் விடை சொன்ன அனைவரும் அம்மாடி என்றே கூறியிருந்தது மகிழ்ச்சியளித்தது.

12. வித்து - ஆதி மூலம் இடையில் கமா போட்டிருக்க வேண்டாமோ?

13. மாருதி - சுதந்திரம் <=> விடுதலை. சுதந்திர சிறுத்தை <=> ?!

- ஸ்ரீ தேவி

Wednesday, September 16, 2009

குறுக்கெழுத்துப் போT - 4

நாளாச்சு, நாளாச்சு, பதிவு போட்டே நாளாச்சு! குறுக்கெழுத்தாவது போடுவோம்! இந்த முறை குறுக்கெழுத்து கூட தனியாளாக உருவாக்கவி்ல்லை. எழுத்தாளர் ஸ்ரீதேவி பெரும்பாலான குறுக்கெழுத்து வேலைகளை செய்ய, நான் சும்மா மேஸ்திரி(கொத்தனார்?!) வேலைதான் பார்த்தேன். இந்த முறையும் வழக்கம் போல விடை சொல்பவர்களின் மதிப்பெண்கள் இங்கே (தாமதமில்லாமல்) அப்டேட் செய்யப்படும். வழக்கம் போல பரிசுகள் எதுவும் கிடையாது!!!

புதிர் உருவாக்க நாங்கள் உபயோகித்தவை http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/index.html, http://en.wikipedia.org/wiki/Main_Page.

விடைகளை கமெண்ட் மூலமோ, yosippavar@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் மூலமோ தெரிவிக்கலாம். புதிர் சம்பந்தமான பாராட்டுக்கள்/திட்டுக்களை writersridevi@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்.

இது போன்ற புதிர்களை அவிழ்ப்பது குறித்த திரு. வாஞ்சிநாதன் அவர்களின் எளிய அறிமுகத்தை இங்கே காணலாம். மேலும் இது போன்ற புதிர்களை கொத்தனாரின் ப்ளாகிலும், அம்ருதா பார்த்தசாரதி தம்பதியின் வலைத்தளத்திலும் காணலாம்.

புதிர் விடைகளை இங்கேயுள்ள கட்டங்களிலேயே நீங்கள் நிரப்பிப் பார்த்துக் கொள்ளலாம்.


12
345


6


7





8

9
10




11

1213




14
15

குறுக்காக :

1) மஹாத்மாவை அண்டாத நீயா மதுரை மன்னனை அழைத்தாய் இறுதியாக. (4)
3) முன் கதிர் ஊடுருவிய துருவ ஒளியால் கந்தனை அழை. (4)
7) நேரம் ஒழுகாமல் விரும்பியது கொடுக்கும். (5)
8) தகரக் கடலில் இறந்தோரை அடக்கம் செய்யலாம். (2)
9) கண்ணனைக் கவர கலங்கி கருணை குறைவாய் வெண்டை உண். (3,4)
10) மீன் வலையைப் பற்றி முன்னும் பின்னும் இழுத்தால் அடங்காது. (2)
12) கவி மாலன் முட்டை அதிகம் உண்டதால் குழப்பமடைந்து வேற்றுக் கிரகம் போனாரா? (5)
14) பேரிகை முழங்கப் படை பெரும்பாலும் குழம்பி பிந்துகிறது. (4)
15) செந்திலுக்கு கிடைப்பவைகள் சேது நாயகனுக்கு கிடைக்கவில்லையே! (4)


நெடுக்காக :


1) சுமாரான சொகுசு பங்களாவில் நுழைந்த ஆங்கில வாத்து அதிகார ஓசை எழுப்புகிறது. (4)
2) பசுமையே இல்லாமல் தமையன் ஊராகிப் போச்சுடா! (3)
4) அவரோ மணியோசை கேட்டு நிலவின் பிரிய சகியை அழைத்தார். (3)
5) ஆங்கில இசைபாடும் அலகிய தோழி உறங்க மாட்டாள். (4)
6) காலின் கீழாண்ட பூமியும் ஓருலகம்தான். (3,4)
8) புத்தாடையை கிழிக்க அண்ணம் வருமா? (2)
9) மூர்க்கமாக தலை காலை வெட்டியெறி. (2)
10) அந்த முண்டத்தின் மீது துளைத்து எஞ்சியது. (4)
11) தாயும் மச்சும் பசுவின் அழைப்பில்லாமல் இணைந்தால் வியக்கலாம். (4)
12) ஆதி, மூலம் இருப்பது சாவித் துவாரத்திற்கு உள்ளே. (3)
13) சுதந்திர சிறுத்தை சிரசாசனம் செய்தால் கடலைத் தாண்டலாம். (3)

Monday, June 29, 2009

குறுக்கெழுத்துப் போT - 3 - விடைகள்

இந்த முறைப் போTக்கு சுமாரான வரவேற்பே இருந்தது. நீண்ட இடைவெளி விட்டு விட்டதால் இருக்கலாம். இந்த முறை முதல் ஆளாக முடித்தது பெனாத்தலார். குறுக்காக 5க்கு குறிப்பு இல்லைங்கிறதையும் சுட்டிக் காட்டினார்(கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்து). அப்பொழுதுதான் கவனித்தேன் - குறுக்காக 5க்கு குறிப்பே எழுதவில்லை. அப்புறம் அவசர அவசரமாக யோசித்து குறிப்பை எழுதினேன்.

இந்த முறை பங்கெடுத்துக் கொண்டவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே கட்டங்களை முழுதும் முடித்திருந்தார்கள். எளிதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இனி விடைகளைப் பார்க்கலாம்.

குறுக்காக :
2) ”ல”ட்டைப் பிட்டு + அ”த்தி”க் காம்பில் வைத்தால் = கரிக்கழிவு (3).
விடை : லத்தி.

3) ”சகித்துக் கொள்ள” = அ”ங்”கு இடையை -> நடுவில் தா(க்)கு (3).
விடை : தாங்கு

5) ”சமவெளி நாகரிகத்தின்” -> இறுதி உயிரைத் திரித்து = யோசி (3).
விடை : சிந்தி

7) ”படுதா”மரையில் மறைந்திருப்பது திரை (3).
விடை : படுதா

8) ”கூடம்” இடையில் + “வ”சிக்க ஆரம்பித்தால் = ஆறும் நாறும் (3).
விடை : கூவம்

10) ”வ(கை)”யின் கரத்தில் + மனைவி அமர்ந்தால் = சொகுசு (3).
விடை : வசதி

11) ”தடி” <- நடுவே -> க”ட்”டுப் போட்டால் = மறைக்கலாம் (3).
விடை : தட்டி

12) ”து”ணி வெட்டி + விஞ்ஞான ஜனாதிபதிக்கு -> முடி திருத்தினால் = எடை போடலாம் (3).
விடை : துலாம்.

13) கதராடையில் சரி பாதி கிழித்து + தமய”ந்தி”யின் காலில்லா அண்ணன் இறந்தால் = ஒளி வீசும் (3).
விடை : காந்தி.

15) வலியில் கத்தித் + துள்ளினால் = அக்கினிக்கு உணவு (3).
விடை : ஆகுதி.

16) அறு”வை” அறுத்து + “கை(கரம்)” காலை ஒட்டினால் = மின்னும் கரி (3).
விடை : வைரம்.

17) வள்ளலின் + கரங்களில் = திரும்பிய பெண்மணி (3).
விடை : காரிகை.

நெடுக்காக :

1) ”இவன்” இடையில் + ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் தேய்ந்து வந்ததால் = இளையவன் ஆனான் (6).
விடை : இலக்குவன்.

3) ”தகர வரிசை” படிக்கிறாள் = வேலைக்காரி (2).
விடை : தாதி.

4) அங்”கும்” இறுதியாக + சு”ப்ப”ன் நடுவே நுழைந்து = பார்த்தால் சேரி (4).
விடை : குப்பம்.

5) “சித்தனை” அழைத்த + ”மகிழ்ச்சி”யில் ஆணையைத் தொலைத்தால் = தத்துவம் பிறக்கும் (6).
விடை : சித்தாந்தம்.

6) ”சிறையில் இருப்பவன்” திரும்பி வந்தால் = ஆச்சர்யமடை(2).
விடை : திகை

8) ”கூ”டல் தொடங்க + தலையற்று ச”திர்” ஆடும் + நேரம் = நடுங்கும் (6).
விடை : கூதிர்காலம்.

9) ”கொம்பில் ஏறும் செடியில்” + ”முந்தானை”யை படரவிட்டு + ”ஒரு ஸ்வரம்” இசைத்தால் = பழம் சாப்பிடலாம் (6).
விடை : கொடிமுந்திரி.

12) வணங்கி + கைநீட்டி = ஆசிர்வாதம் தரும் (4).
விடை : துதிக்கை.

14) கொ”சுவை”க் கொஞ்சம் நசுக்கினால் = ருசிக்கலாம் (2).
விடை : சுவை.

15) பசுவும் + காக்கையும் சேர்ந்திருந்தால் = பிரமாதம் (2).
விடை : ஆகா.

இப்படியாக, பங்கெடுத்துக் கொண்டவர்கள் அனைவரும், இறுதியில் புதிர் “ஆகா” என்றிருந்ததாக கூறியுள்ளனர்!!!;-)