Friday, December 30, 2011

கலைமொழி - 6

சென்ற முறை ”ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியது” என்பதை ”சொல்லியது ஐன்ஸ்டீன் ஆல்பர்ட்” என்றும் பொருத்த முடிந்தது. இரண்டுமே அர்த்தம் தரவே செய்கிறது. நான் முதலிலேயே கவனிக்காமல் விட்டு விட்டேன். அரசு, அகிலா ஸ்ரீராம் இருவரும் இப்படி விடையளித்திருந்தார்கள். மீண்டும் இப்படி நிகழாது என்று நம்புவோம்.!!!:)

இன்று ரொம்பவும் சின்னப் புதிர்தான்!!

எப்படி விளையாடுவது?http://yosinga.blogspot.com/2011/12/4.html



கலைமொழி 5 விடை :- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியது , "அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் கேள்வி- நான் பைத்தியமா, இல்லை மற்றவர்களா?"

கலைமொழி -5 க்கான விடை சொன்னவர்கள் முத்து, பூங்கோதை, மாதவ், கலை, அரசு, ஹேமா, சின்னகனி, பத்மா, ஸ்ரீதேவி, அகிலா ஸ்ரீராம், ஹரி ஆகியோர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தி பேங்க் ஜாப் விடை சொன்னவர்கள் : ராமச்சந்திரன் வைத்தியநாதன், அகிலா ஸ்ரீராம், ஈரோடு கோடீஸ், ராம்ஜி யாஹூ, வெண்பூ, முத்து ஆகியோர். இது எளிதானப் புதிர் என்பதால் வாழ்த்துக் கிடையாதுன்னு சொல்லிடுவோமா?!? ஓகே இதுக்கும் வாழ்த்துக்கள்.

அப்புறம் எல்லாருக்கும் இன்னொரு முக்கியமான வாழ்த்து.
னி புத்தாண்டு வாழ்த்துக்ள்!!!

Tuesday, December 27, 2011

1 டூ 9 தெரியுமா?!?

ஒரு ஒன்பது இலக்க எண். ஒவ்வொரு இலக்கமும் 1லிருந்து 9வரையிலான வெவ்வேறு எண்கள்.

இடமிருந்து வலமாக முதல் இலக்கம் 1ஆல் வகுபடும். முதல் இரு இலக்கங்களாலான எண் 2ஆல் வகுபடும். முதல் மூன்று இலக்கங்களாலான எண் 3 ஆல் வகுபடும், முதல் நான்கு இலக்கங்களாலான எண் நான்கால் வகுபடும்.......ஒன்பது இலக்க எண் 9ஆல் வகுபடும். (அதாவது if abcdefghi is a nine digit number, a is divisible by 1, ab is divisible by 2, abc is divisible by 3.....)

அப்படியென்றால் அந்த ஒன்பதிலக்க எண் எது?

கலைமொழி - 5

ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் : கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!!


இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும்.


எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.



இன்னொரு கலைமொழிப் புதிர் அமைப்பவர் உருவாகியிருக்கிறார். அவரது கலைமொழி இங்கே - http://galagalakudumbam.blogspot.com/

கலைமொழி 4க்கான விடை :- எல்லோரும் உன்னிடமிருந்து விலகிப் போனால் யாருமே உன்னருகில் வருவதில்லையானால் நீ தனிமையாக்கப் பட்டதாக உணர்வாயானால் அதற்காக வருத்தப்படாமல் ஒன்று புரிந்து கொள். அப்பொழுது நீ கண்டிப்பாக குளித்தாக வேண்டும்.  

கலைமொழி 4 விடையளித்தவர்கள் :- மாதவ், ஜி.கே.சங்கர், பூங்கோதை, ஹேமா, பத்மா, அனி, அருண், குமரகுரு, ராமசாமி, முத்து

Monday, December 26, 2011

தி பேங்க் ஜாப்

இது ஒரு எளிய கணிதக் கேள்வி. நீங்கள் வங்கியில் நூறு ரூபாய் டெபாஸிட் செய்திருக்கிறீர்கள். பின்னர் அதை ஆறு தடவைகளில் கீழே உள்ள மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறீர்கள்.

எடுத்ததுபேலன்ஸ்(மீதம் இருந்தது)
ரூ 50ரூ 50
ரூ 25ரூ 25
ரூ 10ரூ 15
ரூ 8ரூ 7
ரூ 5ரூ 2
ரூ 2ரூ 0

ரூ 100ரூ 99

எல்லாம் எடுத்து முடித்தபின் எடுத்த தொகைகளையும், பேலன்ஸ் இருந்த தொகைகளையும் கூட்டிப் பார்த்தால் ஒரு ரூபாய் வித்தியாசம் வருகிறதே?!? அந்த ஒரு ரூபாய் யார்கிட்ட இருக்கு???

Friday, December 23, 2011

கணிதக் குறுக்கெழுத்துப் புதிர்

இந்த முறை கணிதக் குறுக்கெழுத்து. சுடோகு போல் இருக்காது என்றாலும் ரொம்பவும் காம்ப்ளக்ஸான கணித அறிவும் தேவையில்லை. Triangular Number, hexoganal number, automorphic number போன்ற வார்த்தைகளைப் பார்த்து மிரள வேண்டாம். கூகிளே துணை என்று கொண்டோர்க்கு குறைவொன்றுமில்லை. எண்களின் லிஸ்ட்டே கிடைக்கிறது. அதனால அவ்வளவு கஷ்டமாயிராது. என்ன, கொஞ்சம் பொறுமை தேவை - தேடிப் படிப்பதற்கும், அதை இங்கே பொருத்திப் பார்ப்பதற்கும்!

முழுமையாகத் தமிழ் வார்த்தைகள் கொடுக்க முடியாததற்கு வருந்துகிறேன்!!

abc
def
ghi
j



குறுக்காக :-

a) ஒரு Fibonacci எண்.(5)
(Fibonacci தமிழில் வேறு பெயர் உண்டா?!)


d) இந்த எண்ணின் வர்க்க மூலத்தில்(Square Root) முதல் இலக்கமும் கடைசி இலக்கமும் ஒரே எண்.(7)


g) 90709 என்ற பாலிண்ட்ரோமால்(Palindrome) வகுபடும் ஒரு எண். இரு 5கள் தொடர்ந்து வரும் ஒரு எண்.(7)
(Palindromeக்கு தமிழில் சரியான வார்த்தை என்ன?)


j) இரண்டே இரண்டு எண்களின் தொகுப்பாலான ஒரு பகா எண்(Prime Number). இரண்டு எண்களும் இடைவெளி இல்லாமல், தொடச்சியாகவே அமைந்துள்ளன. அதாவது xxyyy, xyyyy,xxxyy, xxxxy  போன்று இருக்கலாம்; xxyxy,xyyxx போன்றெல்லாம் இருக்காது.(5)

நெடுக்கு :-

a) ஒரு முக்கோண எண்(Triangular Number). முக்கோண எண் என்பது 1+2+3+4+....என்ற கூட்டுத்தொகைகளில் கிடைக்கும் எண்கள். (3)
(முக்கோண எண் என்பது சரியான பதம்தானா?!?)


b) ஒரு அறுங்கோண எண்(Hexagonal Number). மேலும் Narcissistic Number.(3)
(ஆம்ஸ்ட்ராங் எண் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே!)


c) பத்தொன்பதால் வகுபடும் ஒரு பாலிண்ட்ரோம்(Palindrome).(3)

e) பை(π) தெரியுமல்லவா? அதன் மதிப்பில் புள்ளிக்குப் பின் ”இத்தனையாவது” இடத்தில் மூன்று பூஜ்யங்கள் தொடர்ந்து வரும். அது எத்தனையாவது?!?;-).(3)


f) இதன் வர்க்கத்தை(Square), 3ஆல் பெருக்கினால், வரும் விடையில் கடைசி மூன்று இலக்கங்களும் இதே எண் வரும். இதற்குப் பெயர் "3-automorphic".(3)


g) இந்த எண்ணின் கணத்தில்(Cube) நான்கு 7கள் தொடர்ந்து வரும். இப்படிப்பட்ட எண்ணில் இது மிகவும் சிறிய எண்.(3)


h) இது ஒரு Tribonacci எண்.(3)


i) எல்லா எண்களும் இரட்டை. மேலும் அடுத்தடுத்த மூன்று எண்களின் கணங்களின்(cubes) கூட்டுத் தொகை.(3)

Ref :- http://www2.stetson.edu/~efriedma/numbers.html

கலைமொழி - 4

கலைமொழிப் புதிரால் ஈர்க்கப்பட்ட திரு.ராமசாமி, வெறும் ”நெடுக்காக” என்ற பதம் சரியாகப் புரியவில்லை என்று, இந்த விளையாட்டை ஆடுவது பற்றி ஒரு விளக்கமும் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது விளக்கம் கீழே...

இது மாயக்கட்டமுமில்லை, மந்திரமும் இல்லை. சாதாரண அறிவு விளையாட்டுதான். கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!!


இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும்.


எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


மிகவும் எளிதான ஆட்டம். ஆனால் சுவாரஸ்யமான ஆட்டம். ஆடித்தான் பாருங்களேன்!
கலைமொழி 3க்கான விடை :- ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது 

சென்ற முறை சுஜாதா என்பதே ஒரு க்ளூவாகிப் போனது. இனிமேல் நம் மக்களுக்கு க்ளூ எதுவும் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது நாவல்களில் வந்ததோ, பிரபல எழுத்தாளர்கள் யாரும் எழுதியதோ கிடையாது. கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கலைமொழி 3க்கு விடையளித்தவர்கள் :- பூங்கோதை, கலை, ஹரிஹரன், ஹேமா, முத்து, பத்மா, அனிதா, அருந்ததி, ராமசாமி, ஹரி, மாதவ். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!!!

எச்சரிக்கை : இன்னும் சில மணி நேரங்களில் கணிதக் குறுக்கெழுத்தை எதிர்பாருங்கள்!!

Thursday, December 22, 2011

கலைமொழி - நீங்களே எளிதாகப் புதிரமைக்கலாம்

இந்தக் கலைமொழி விளையாட்டு பலரைக் கவர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். அறிமுகப்படுத்திய நண்பர் மனுவுக்கு நன்றி.

தமிழில் இந்த விளையாட்டு புதிதுதான். அதனால் பலரும் இந்த வகைப் புதிரை அமைக்க ஆரம்பித்தால்(புதிரை விடுவிப்பது அல்ல. புதிர் உருவாக்குவது) இந்த விளையாட்டின் மற்ற பரிமாணங்களையும் நாம் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வகை புதிரை எளிதாக உருவாக்க நான் ஒரு ஆன்லைன் செயலி வடிவமைத்திருக்கிறேன். http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html - இங்கே சென்றால் நீங்களே ஒரு புதிரை வடிவமைத்து Html Code ஆக ஆன்லைன் வடிவத்தைப் பெற்று உங்கள் தளத்தில் வெளியிட முடியும்.

உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

உபசெய்தி : நண்பர் பூங்கோதை தனது முதல் கலைமொழியை இந்த செயலி மூலம் வடிவமைத்து  வெளியிட்டிருக்கிறார் - http://www.tamilpuzzles.com/2011/12/18/km1/. அதையும் விளையாடி மகிழுங்கள்.

Wednesday, December 21, 2011

கலைமொழி - 3

இன்று சுஜாதா எழுதியது.

எச்சரிக்கை : தமிங்கில வார்த்தைகள் கலந்திருக்கலாம்.


விளையாட்டு விதிமுறை/விளக்கம் : கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph) நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும். 

ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.


கலைமொழி 2க்கு வரவேற்பு நன்றாக கூடியிருந்தது. இந்த முறை விடை சொன்னவர்கள் மனு, ஹரி பாலகிருஷ்ணன்,ஹரிஹரன், முத்து, பூங்கோதை, பத்மா, அருந்ததி, ராமசாமி, மாதவ். அனைவருக்கும் நன்றி! 

கலைமொழி 2 விடை :- மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார் என்று குதூகலமான மறுமொழி கேட்டது

Saturday, December 17, 2011

கலைமொழி - 2

சென்ற முறை பொசெ! இந்த முறை சிச!!

விளையாட்டு விதிமுறை/விளக்கம் : கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph) நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.

ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.




கலைமொழி 1க்கான விடை :- ஆம் பெரியப்பா. நான்தான் பேசுகிறேன். இளவரசர் இருக்குமிடத்தை ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன்

மனு, கலை, பூங்கோதை ஆகியோர் மட்டுமே விடையளித்திருந்தனர்.

Thursday, December 15, 2011

கலைமொழி

இந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். முதல் புதிர் எளிதாகவே இருக்கும்படி அமைத்திருக்கிறேன்.

கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph)நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.

ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.

ஓகே. ஆட்டம் ஆரம்பமாகட்டும்! ஸ்டார்ட் மியுஜிக்!!!;-)