Thursday, March 29, 2012

கலைமொழி-16


இந்த கலைமொழிப் புதிரை இதுவரை முயலாதவர்கள் கூட, சொல்கலை புதிரை தீர்ப்பதை பார்க்கிறேன். அவர்களுக்காக ஒரு சில வார்த்தைகள்: இதுவும் சொல்கலை புதிரைப் போன்றதே. சொல்கலையில் வார்த்தைகள் கலைந்திருக்கும். இங்கு ஒரு சிறிய பத்தியே(paragraph)கலைந்து கிடக்கிறது. சொல்கலையில் எழுத்துக்கள் horizantalஆகவே கலைந்திருக்கும். ஆனால் இங்கே ஒரு பத்தி  rowக்களாகவும்,  columnகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் எழுத்துக்கள் verticalஆகவே, அதாவது நெடுக்காகவே(columnwise) கலைந்திருக்கும்.

இன்றைய புதிரில் மொத்தம் 8 rowக்களும் 18 columnகளும் உள்ளன. இதில் முதல் columnத்தில் உள்ள 8 எழுத்துக்கள் மட்டும் அவற்றுக்குள்ளாகவே கலைந்திருக்கும். அதேபோல் அடுத்த columnத்தில் உள்ள 8 எழுத்துக்கள் அவற்றுக்குள்ளாகவே கலைந்திருக்கும். இப்படியே எல்லா columnகளும்............
இதில் இடையில் கறுப்புக்கட்டங்கள் இருந்தால் அவை இடம் மாறாது. இந்த columகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினால்,இறுதியில் horizontalஆக படிக்கத்தக்க சரியான வரிகள் கிடைக்கும். சொல்கலையை விட சிறிது கடினம் என்றாலும், அதை விட சுவாரஸ்யமாகவே இருக்கும்.

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.

எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம். சென்ற கலைமொழிக்கான விடை: என் தந்தை எழுதிய ‘60 வயது பாலம்’ பதிவிலிருந்து, “அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை ?அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?

சரியான விடை கூறியவர்கள:  அரசு,தமிழ்பிரியன், மாதவ், முத்து, அந்தோணி, ராசுக்குட்டி,10அம்மா, மீனுஜெய், பூங்கோதை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Monday, March 19, 2012

நீங்களே சொல்கலை புதிரமைக்கலாம்

கலைமொழி போலவே சொல்கலையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது கலைமொழியை பலரும் உருவாக்குவது போலவே, சொல்கலையையும் பலரும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சொல்கலைப் புதிரை எளிதாக வடிவமைக்கவும் ஆன்லைன் செயலி எழுதியுள்ளேன். http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp - இங்கே சென்றால் நீங்களே எளிதாக புதிரமைத்து Html Code ஆக ஆன்லைன் வடிவத்தைப் பெற்று உங்கள் தளத்தில் வெளியிட முடியும்.

உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

சொல் கலை - 4

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 20 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.

முந்தையப் புதிர்களில் இருந்த ஒரு சில bugsஐ, சரி செய்துவிட்டேன்.( என்று நினைக்கிறேன்!!)


1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


ராகிர + மொழிபெயர்ப்பு + குமுதம்
 சென்ற சொல்கலைக்கான விடை :-

1) வரலாறு
2) ஊழிக் காற்று
3) திருவல்லிக்கேணி
4) வாய்க்கரிசி
5) காற்றடைத்த
6) அக்கம் பக்கம்
7) தயாராக
8) கண்ட துண்டம்
9) வாயு மைந்தன்
 
காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே

சரியான விடை கூறியவர்கள் :- சாந்தி நாராயணன், இளங்கோவன், மனு, தமிழ் பிரியன், முத்து, முகிலன், மாதவ், ராசுக்குட்டி, அருண்மொழித்தேவன், கலை, பார்த்தசாரதி, மீனாட்சி, பூங்கோதை.

Thursday, March 15, 2012

கலைமொழி - 15

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை :- நகுலன் எழுதிய ”கோட் ஸ்டாண்ட் கவிதைகள்” தொகுப்பில் இடம் பெற்ற கவிதை..

ராமச்சந்திரனா 
என்று கேட்டேன் 
ராமச்சந்திரன் 
என்றார். 
எந்த ராமச்சந்திரன் 
என்று நான் 
கேட்கவுமில்லை, அவர் 
சொல்லவுமில்லை 

விடை கூறியவர்கள் :- தமிழ் பிரியன், மாதவ், பூங்கோதை, அரசு, 10அம்மா, முத்து, முகிலன், ராசுக்குட்டி.

சொல் கலை - 3

சென்ற சொல்கலைக்கும் நல்ல வரவேற்பு. நன்றி!!!:)

இந்த முறை சொல் கலைப் புதிரை 10அம்மா அமைத்துக் கொடுத்திருக்கிறார். புதிர் கொஞ்சம் கடினமாகியிருக்கிறது. ஆனாலும் நீங்கள் இதை சுலபமாக ஊதித் தள்ளி விடுவீர்கள் என நம்புகிறேன். இந்த முறை இறுதி விடையில் மொத்தம் 20 எழுத்துக்கள்.

அனைத்து விடைகளுமே completed பட்டனைத் தட்டியதும், பெட்டியில் தெரிவது போல் மாற்றியாயிற்று. அதனால் பெட்டியில் உள்ளதை copy செய்து commentல் paste செய்வது மட்டுமே உங்கள் வேலை.

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 20 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது

மன்னிக்கவும் நண்பர்களே,

bloggerஇல் அகலம் போதாமையால், இறுதி விடைக்கான கட்டங்களில் 16 மட்டுமே பார்வைக்கு கிடைத்தது. நான் முதலில் கவனிக்கவில்லை. அதனால் இப்பொழுது இறுதி விடைக்கான கட்டங்கள் இரண்டு வரிகளாகத் தெரியும்படி மாற்றிவிட்டேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய மீனாட்சி, தமிழ் பிரியன் ஆகியோருக்கு நன்றி!!


சென்ற சொல் கலைக்கான விடை :- 

1) கல்லுளிமங்கன் 
2) வெளிவாசல்
3) அவசியம்
4) சலசலப்பு
5) இளமையில்
6) மாமணியே
7) தேய்மானம்

வாய்மையே சில சமயம் வெல்லும்.(சுஜாதாவின் நாவல்)

விடை கூறியவர்கள் :- மாதவ், சுரேஷ், பூங்கோதை, மனு, தமிழ் பிரியன், அரசு, 10அம்மா, முத்து, ராசுக்குட்டி, முகிலன், சாந்தி, மீனாட்சி, பார்த்தசாரதி, ராஜேஷ் கார்கா, வீ.ஆர்.பாலகிருஷ்ணன்.

Monday, March 12, 2012

சொல் கலை - 2

இந்தப் புதிருக்கு நான் நினைத்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் scriptஇல் சில குறைபாடுகளும் உள்ளன. சிலருக்கு கட்டங்கள் சரியான முறையில் தெரியவில்லை. வாஞ்சினாதன் 11 ஆரஞ்சுக் கட்டங்கள் தெரிந்தது என்றார். பூங்கோதை Refresh Answer Boxes அழுத்தும்பொழுது தவறான எழுத்து கீழே உள்ள கட்டங்களில் வருவதாகக் கூறினார். ஹரி IE8/IE9 ப்ரவுசர்களில் எரர் அடிப்பதாகக் கூறினார். இதில் ஹரி கூறிய பிரச்சினை எனக்கும் வந்ததால் அது சரி செய்யப்பட்டு விட்டது. வாஞ்சி கூறிய பிரச்சினை எந்தெந்த தருணத்தில் வருகிறது என்று தெரியவில்லை. பூங்கோதை கூறிய பிரச்சினையும் எனக்கு வரவில்லை. அதனால் அந்தக் குறைகளை நீங்கள் காண நேர்ந்தால், எந்தத் தருணத்தில் அந்தப் பிரச்சினை வருகிறது என்பதை எனக்குத் தெரிவித்தால் சரி செய்ய ஏதுவாக இருக்கும். முடிந்தால் ஒரு Screen Shot அனுப்புங்கள்.

இந்த முறை இறுதி விடையில் 14 எழுத்துக்கள் உள்ளன. அதனால் புதிரைத் தீர்க்க ஆரம்பிக்குமுன், முதலில் உள்ள ஏழு வார்த்தைகளிலும் மொத்தமாக 14 கட்டங்கள்தான் உள்ளனவா என்பதை ஒரு முறை எண்ணி விடுங்கள்!!:)

புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :-
முதலில் இருக்கும் ஏழு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 14 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “சுஜாதாவின் சத்யமேவ...” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடை அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.


சென்ற முறையை விட கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனிப் புதிர்...
1.
2.
3.
4.
5.
6.
7.


சுஜாதாவின் சத்யமேவ.....

சென்ற சொல்கலைக்கான விடை : 1) அந்தாதி, 2) பெயரெழுத்து, 3)வங்க தேசம், 4) இளவரசன். இறுதி விடை : வந்தியத்தேவன். 

 விடை கூறியவர்கள் :- பூங்கோதை, மீனாட்சி, வாஞ்சினாதன், சாந்தி, தமிழ் பிரியன், அரசு, 10அம்மா, முத்து, ராசுக்குட்டி, ஹரி

Friday, March 09, 2012

சொல் கலை அறிமுகம்

Hindu, Indian Express போன்ற நாளிதழ்களில் Jumbled Words புதிர்கள் பார்த்திருப்பீர்கள். அதன் தமிழ் வடிவமே இது. இதை இணையத்தில் முதலில் அறிமுகப்படுத்தியவர் பார்த்தசாரதி. நான் அதற்கு கொஞ்சம் கலர் கொடுத்து, கட்டங்களை க்ளிக்கியே, எழுத்துக்களை ஒழுங்காக அடுக்க script எழுதியிருக்கிறேன். கலர்கள் தெரியாவிட்டால் சிறிது நேரம் விட்டு page refresh செய்து பாருங்கள்.

முதலில் இருக்கும் நான்கு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது!!” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடை அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.

முதல் முறை என்பதால் கொஞ்சம் எளிதாகத் தான் கொடுத்திருக்கிறேன். கலைமொழியை விட எளிதான புதிர்தான். இந்தப் புதிர் குறித்த உங்கள் கருத்துக்களையும் தயங்காமல் கூறுங்கள்!!!1.
2.
3.
4.


கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது!!

கலைமொழி -14

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.

எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை : நேற்றிரவு ஒரு கனவு நான் கடவுளுடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது கடவுள் கேட்டார் உனது நண்பன் யார் நான் உன் பெயரை சொன்னேன் அவர் சிரித்துவிட்டு கேட்டார் இன்னும் நீ திருந்தவே இல்லையா 

விடை கூறியவர்கள் : அகிலா ஸ்ரீராம், அரசு, 10அம்மா, தமிழ் பிரியன், முத்து, ஹரி, திரு.பூங்கோதை, விஜி, மாதவ்