Sunday, October 30, 2005

நுழைவு தேர்வு

ஒரு நுழைவு தேர்வில் கீழ்கண்ட மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. மூன்று கேள்விகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. சரியான விடைகளை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் TCS நுழைவுத் தேர்வு எழுத தகுதியுள்ளவர்;)


அ) கேள்வி 'ஆ'வுக்கான விடை

1) 2
2) 3
3) 1


ஆ) வரிசைப்படி இந்த கேள்விகளில் முதலில் எதற்கு '2'வது விடை சரியானது

1) இ
2) அ
3) ஆ


இ) இதுவரை எந்த விடை உபயோகிக்கப்படவில்லை

1) 1
2) 2
3) 3


அப்புறம் முக்கியமான விஷயத்தை மறந்துட்டேனே! எல்லோருக்கும் எனதினிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Wednesday, October 26, 2005

மணல் சிற்பங்கள்



Monday, October 24, 2005

இது கொஞ்சம் கஷ்டம்தான்

கடைசியாக கொடுத்த புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். அதனால் அதற்கு விடையை ஒரு Algorithm(தமிழ் வார்த்தை . . .!?!) வடிவில் தருகிறேன்.


மொத்தம் 12 பந்துகள். இவற்றை வசதிக்காக 1-12 என்று பெயரிட்டு அழைப்போம். முதலில் பந்துகளை நான்கு நான்காக பிரித்துக் கொள்ளுங்கள்.
முதலில் (1, 2, 3, 4) பந்துகளை ஒரு புறமும், (5, 6, 7, 8) பந்துகளை மறுபுறமும் வைத்து எடை போடுங்கள். இதில் நமக்கு மூன்று வித முடிவுகள் கிடைக்கலாம்.

I) இரண்டுமே சமமாக இருந்தால் (9, 10, 11, 12) பந்துகளில் ஒன்றுதான் தவறானது. அதனால் இரண்டாவது எடை, (6, 7, 8) பந்துகளை(நிச்சயமாக சரியான பந்துகள்) ஒரு புறமும், (9, 10, 11) பந்துகளை ஒரு புறமும் வைத்து போடுங்கள். இதிலிருந்தும் நமக்கு மூன்று வித முடிவுகள் கிடைக்கலாம்.


i) இரு பக்கமும் சமமாக இருந்தால், 12வது பந்துதான் தவறான பந்து. அதை சரியான மற்றோரு பந்துடன் வைத்து எடை போட்டால், 12வது எடை அதிகமா, குறைவா என்பது தெரிந்து விடும்.
ii) அப்படியில்லாமல் (9, 10, 11) உள்ள தட்டு எடை அதிகமாயிருந்தால், தவறான பந்து எடை அதிகம் என்பது முடிவாகிறது. இப்பொழுது 9வது பந்தை ஒரு புறமும், 10வது பந்தை ஒரு புறமும் வைத்து எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 11வதுதான் தவறானது. அப்படியில்லையென்றால் எந்த பந்து எடை அதிகம் இருக்கிறதோ அதுதான் தவறான பந்து.
iii) ஒருவேளை (9, 10, 11) உள்ள தட்டு எடை குறைவாயிருந்தால், தவறான பந்து எடை குறைவு என்பது முடிவாகிறது. பிறகு மேலேயுள்ள (ii)வது வரியின் படி தவறான பந்தை கண்டுபிடியுங்கள்.


II) அப்படியில்லாமல் (5, 6, 7, 8) பந்துகள் எடை அதிகமாயிருந்தால், ஒன்று (5, 6, 7, 8) பந்துகளில் எடை அதிகமுள்ள தவறான பந்து இருக்கிறது, அல்லது (1, 2, 3, 4) பந்துகளில் எடை குறைவுள்ள பந்து இருக்கிறது. இப்பொழுது (1, 2, 5)ஐயும், (3, 6, 10)ஐயும் எடை போடுங்கள். இதிலிருந்தும் மூன்று முடிவுகள் கிடைக்கலாம்.


i) அவை சமமாயிருந்தால், 4(குறைவு) அல்லது 7(அதிகம்) அல்லது 8(அதிகம்) தான் தவறான பந்து. இப்பொழுது 7ஐயும், 8ஐயும் எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 4வது எடை குறைவுள்ள தவறான பந்து, இல்லையென்றால் எந்த பந்து எடை அதிகமாயிருக்கிறதோ அது எடை அதிகமுள்ள தவறான பந்து.
ii) ஒருவேளை (3, 6, 10) பந்துகளின் எடை அதிகமாயிருந்தால், 1(குறைவு) அல்லது 2(குறைவு) அல்லது 6(அதிகம்) தான் தவறான பந்து. இப்பொழுது 1ஐயும், 2ஐயும் எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 6வது(அதிகம்) தான் தவறான பந்து, இல்லையென்றால் எந்த பந்து எடை குறைவாயுள்ளதோ அதுதான் தவறான பந்து.
iii) ஒருவேளை (3, 6, 10) பந்துகளின் எடை குறைவாயிருந்தால், 3(குறைவு) அல்லது 5(அதிகம்) தான் தவறான பந்து. இப்பொழுது 3ஐயும், 10ஐயும் எடை போடுங்கள். அவை சமமாயிருந்தால் 5வது(அதிகம்) தான் தவறான பந்து, இல்லையென்றால் 3வது தான் தவறான பந்து.


III) ஒருவேளை (5, 6, 7, 8) பந்துகள் எடை குறைவாயிருந்தால் மேலேயுள்ள (II) எண்ணிட்ட முறைப்படியே தவறான பந்தை கண்டுபிடிக்க உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியதில்லை.

Wednesday, October 19, 2005

துண்டில்லை! நாய்தான்!!!



இன்னொரு சந்தர்ப்பம்

போன புதிருக்கு விடை சொன்ன டைனோவும், சுகந்தியும் ஒரு விவரத்தை கவனிக்கவில்லை(அல்லது மறந்து விட்டீர்கள், அல்லது நான் சரியாக விளக்கவில்லை). குறைபாடுள்ள பந்து எடை அதிகமா அல்லது குறைவா என்பது தெரியாது. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த விவரத்தையும் மனதில் கொண்டு விடை கண்டுபிடியுங்கள். மீண்டும் ஒரு சந்தர்ப்பம்!

Tuesday, October 18, 2005

அட நாமளா இப்படி!?!

காலங்காத்தாலேயே (அதாவது 7.00 மணிக்கு) நல்ல தூக்கத்துல ஃபோன். வீட்டிலிருந்து. என்னன்னு பார்த்தா தினமலரில் நம்ம பிளாக்க பத்தி செய்தி வந்திருக்கு. அட பரவாயில்லையே! நம்ம இந்த அளவுக்கு வளர்ந்துட்டோமா! தினமலருக்கும், அதற்கு செய்தி சேகரித்து கொடுத்த புண்ணியவானுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கடந்த சில மாதங்களாக எந்த புதிய பதிவும் பதியாமலிருந்ததற்கு, நேரமின்மை முக்கிய காரணமாயிருந்தாலும், அக்கறையின்மையும் ஒரு காரணம். இந்த இரண்டாவது காரணத்தை கொஞ்சம் நீக்க (இனிமேலாவது) முயற்சி செய்கிறேன்.

இன்றைக்கும் ஒரு எடை புதிர்தான். உங்கள் முன் மொத்தம் பன்னிரண்டு பந்துகள் இருக்கின்றன. எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கின்றன. இதில் ஒரே ஒரு பந்து மட்டும் எடையில் மற்றவற்றை விட கொஞ்சம் அதிகமாகவோ, கம்மியாகவோ இருக்கிறது. உங்களிடம் ஒரு தராசு இருக்கிறது. இந்த பந்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை, மொத்தம் மூன்று முறைதான் எடை போடலாம். அந்த பந்தை கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, உலக XI அணிக்கு ஆறுதல் பரிசா அனுப்பிடுங்க!