Thursday, July 31, 2014

கலைமொழிப் புதிர் - 34

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.




நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, July 16, 2014

குறுக்கெழுத்துப் போT 7 விடைகள்

குறுக்காக :


1) மண்புழு : பரசுராமன் ஆயுதத்தால்="மழு" + "புண்" பட்டால் -->குலைந்து போகும் == மண்புழு == விவசாய நண்பன்

3) மிசை : ஆண்கள் மூக்கின் கீழ் ="மீசை"--> ஒரு மாத்திரை குறைத்த== மிசை == உணவு

4) திராட்சை ரசம் : சட்டி பேரம் --> 'பேசடி' இன்றேல் ==>"ட்ரம்" + ராஜ திக்கு="ராச திசை"---> புரியாதபடி குழப்பிடும் == திராட்சைரசம் == மது

6) ரகசியம் பேசு : "சிகப்பு பேரரசி" + 'சுயம்வரம்' பாதியில் நின்றதால் ="சுயம்"--> சிரப்பு குன்றியதை==>கபேரசிசுயம் == ரகசியம்பேசு == அந்தரங்கத்தில் சொல்

9) நோவு : "துறவு" + விரதம்="நோன்பு" --> துன்புற குன்றியதால்=வுநோ == நோவு == வலி

10) பரிகசி : உணவு வேட்கை = "பசி" + நடுவே இரு ஸ்வரங்கள் தொடர்ந்து பாடியதை="ரிக" == பரிகசி == கிண்டலடி

நெடுக்காக : 

1) மந்தி : சந்திர = "மதி" + கா"ந்"தை <--நடுவில் வைத்தால் == மந்தி == குரங்காகிவிடும்

2) புரட்டாசி : பெண் மாதத்திற்கு(கன்னி ராசி மாதம்) == புரட்டாசி == 'ஏற்ற'வாரின்றி="தக்க" இன்றி--> "புசிக்க தரட்டா" என்றாள்

3) மிஞ்ச : ஐந்தாம் திதியில் =பஞ்சமி--> பாக்கி இருக்க==மிஞ்ச

5) ரகம்பிரி : பகுத்து வை (நேரடிக் குறிப்பு)

6) களவு : கல்லாததில்(கல்லாதது உல"களவு")  உள்ள திருட்டுத்தனம்

7) சுதேசி : சொந்த நாட்டைச் சேர்ந்தவன் == சுதேசி== தலைமை --> "தே"வ + குழந்தை="சிசு" --> கட்டி அணைத்தான்


விடை சொன்னவர்கள் :

பார்த்தசாரதி ஶ்ரீனிவாசன்
ராமராவ்
முத்து சுப்ரமண்யம்
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
ராமச்சந்திரன் வைத்தியநாதன்
சுஜி குரு
ஶ்ரீதரன்
மனு(அந்தோனி இம்மனுவேல்)
நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
Jay
Tamil R
அனு
Poongothai
கே.ஆர். சந்தானம்
Shanthi

Tuesday, July 08, 2014

குறுக்கெழுத்துப் போT 7

இது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழுத்து (Cryptic Crosswords)  எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற  திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.

இப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.


குறுக்கெழுத்துப் போT 7

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பரசுராமன் ஆயுதத்தால் புண்பட்டால் குலைந்து போகும் விவசாய நண்பன். (4)
3.ஆண்கள் மூக்கின் கீழ் ஒரு மாத்திரை குறைத்த உணவு. (2) (அருஞ்சொல்)
4.சட்டி பேரம் பேசடி இன்றேல் ராஜ திக்கு புரியாதபடி குழப்பிடும் மது. (7)
6.சிகப்பு பேரரசி சுயம்வரம் பாதியில் நின்றதால் சிரப்பு குன்றியதை அந்தரங்கத்தில் சொல். (7)
9.துறவு விரதம் துன்புற குன்றியதால் வலி. (2)
10.உணவு வேட்கை நடுவே இரு ஸ்வரங்கள் தொடர்ந்து பாடியதை கிண்டலடி. (4)

நெடுக்காக:
1.சந்திர காந்தை நடுவில் வைத்தால் குரங்காகிவிடும். (3)
2.பெண், மாதத்திற்கு ஏற்றவாரின்றி புசிக்க தரட்டா என்றாள். (5)
3.ஐந்தாம் திதியில் பாக்கி இருக்க. (3)
5.பகுத்து வை. (5)
7.கல்லாததில் உள்ள திருட்டுத்தனம். (3)
8.சொந்த நாட்டைச் சேர்ந்தவன் தலைமை தேவ குழந்தை கட்டி அணைத்தான். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

நீங்களே குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்க -> http://www.puthirmayam.com/tools/crosswordbuilder.php