Tuesday, July 31, 2012

ரீபஸ் - 4 சொற்சித்திரம் சினிமாப் புதிர்

இந்த முறையும் எல்லாமே திரைப்படப் பெயர்கள்(திரைப்படப் பெயர்கள் லிஸ்ட்தான் இணையத்தில் .எளிதாகக் கிடைக்கிறது!!). எனது கணிப்பில் இந்த முறை 3வது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 6வதை மணிப்பிரவாளம்னு சொல்லலாமா?!

1)
2)
3)
4)
5)
6)

சென்ற புதிருக்கான விடைகள் : 
1) கல்கண்டு 
2) ஒட்டியாணம் 
3) கால்கட்டு 
4) புல்லாங்குழல் (இந்த விடையை ராமச்சந்திரன் வைத்தியநாதன் மட்டும்தான் சரியாகக் கூறினார்) 
5) விலையேற்றம் 
6) வெண்மதி 
7) இந்தியா

சென்ற புதிரில் கலந்து கொண்டு விடை கூறியவர்கள் :- சுஜி, வாசுதேவன் திருமூர்த்தி, முத்து, நாகராஜன், இளங்கோவன், கே.பழனிச்சாமி, மீனாட்சி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், Vino 

Thursday, July 26, 2012

பத்து நிமிடப் புதிர் - கலைமொழி 23

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.



சென்ற கலைமொழிக்கான விடை : 'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம் 

விடையளித்தவர்கள் :- மாதவ், 10அம்மா, இளங்கோவன், ராமராவ், அந்தோனி, நாகராஜன், பூங்கோதை, ஹூஸைனம்மா.


நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Wednesday, July 25, 2012

ரீபஸ் புதிர் சொற்சித்திரம் 3

சித்திரமாக்கப்பட்டுள்ள சொற்களை கண்டுபிடியுங்கள்...

இந்த முறை திரைப்படப் பெயர்கள்  இல்லை. எல்லாமே பொதுவான வார்த்தைகள்தான்(சிலது இரண்டு வார்த்தைகளாகவும் இருக்கலாம்!!)
 1)
 2)
 3)
 4)
 5)
 6)
 7)


சென்ற புதிருக்கு எல்லா விடைகளும் சரியாகச் சொன்னவர் நாஜராஜன். மற்றவர்கள் ஒன்றிரண்டு தவறானாலும் பெரும்பாலும் சரியாகவே விடையளித்தனர். கலந்து கொண்டவர்கள் முத்து, வாசுதேவன் திருமூர்த்தி, இளங்கோவன், முகிலன், மீனாட்சி, ராமச்சந்திரன் வைத்தியநாதன்!

சென்ற புதிருக்கான விடைகள் :
1) காக்கிச் சட்டை
2) பில்லா
3) அவர்கள்
4) சி(ஜி)ல்லுன்னு ஒரு காதல்
5) வட்டாரம்
6) ஓரம்போ
7) வாரணம் ஆயிரம்

Monday, July 23, 2012

ரீபஸ் - சொற்சித்திரம் 2 சினிமாப் புதிர்

சென்ற தடவை முதல் மூன்றையும் அனைவரும் சிரமமில்லாமல் கண்டுபிடித்து விட்டனர். 4வதுக்கு "கண் சிமிட்டும் நேரம்" பலரும் என்னுடைய விடையை நெருங்கி வந்திருந்தாங்க. ஆனா என்னோட விடை "கண் மூடும் நேரம்"(இப்ப ஒருக்கா படத்தப் பாருங்க!!) 5வது எல்லாருமே கஷ்டப்பட்டாங்க. மனு மட்டும்தான் "ஆடிக் கழிவு" ன்னு சரியா சொன்னார். மற்றவர்கள் ஆடித் தள்ளுபடின்னு நெருங்கி வந்தாங்க. 6வதும்  "கை நிறைய சம்பாதி"ன்னு நிறைய பேர் சரியாகவே கண்டுபிடிச்சிருந்தாங்க. 7வது தான் இளங்கோவன் விடா முயற்சி பண்ணி "ராஜபாட்டை" அப்படின்னு ஒரு விடை சொன்னார். அது படத்துக்கு பொருத்தமா இருந்ததால ஒத்துக்கிட்டேன். நான் நினைச்சது "சிங்கப்பாதை"( உபயம் :- "சிவாஜி தி பாஸ்"). நாங்க நண்பர்களுக்குள்ள கிண்டலா அடிக்கடி உபயோகிக்கிற வார்த்தை இது. அதனால் எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன். சில பேர் கேள்விய படலைன்னெல்லாம் சொன்னாங்க. அதனால் இது ரொம்ப கஷ்டமாப் போச்சி.

போனமுறை பொதுப்படையா கொடுத்ததால எல்லாரும் கஷ்டப்பட்டுட்டாங்கன்ற நினைப்பில்(நானா நினைச்சுக்கறேன்), இந்த முறை வார்த்தைகளெல்லாம் ஒரே வகையாக கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் எளிதான வகை என்றாலே அது சினிமாப் பெயர்கள் அன்றி வேறென்ன இருக்க முடியும். அதனால இந்த தடவை எல்லாமே திரைப்படப் பெயர்கள்!!

1)
2)
 3)
 4)
 5)
 6)
 7)


சென்ற முறை ஆட்டத்தில் கலந்து கொண்டவர்கள் :- வாசுதேவன் திருமூர்த்தி, கோடீஸ்வரன் துரைசாமி, சாந்தி, 10அம்மா, இளங்கோவன், சதீஷ் வாசன், முத்து, பூங்கோதை, அந்தோனி(மனு), நாகராஜன். அனைவருக்கும் நன்றீஸ்!!

Saturday, July 21, 2012

நிமிடப் புதிர்கள் ரீபஸ் வார்த்தை விளையாட்டு

தமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு "முயற்சி" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொடரவில்லை.
http://yosinga.blogspot.com/2005/11/blog-post_11.html
http://yosinga.blogspot.com/2005/11/2.html

எனக்குத் தெரிந்து இலவச கொத்தனார், ஶ்ரீதர் நாராயணன் ஆகியோரும் இதைத் தமிழில் முயன்றிருக்கிறார்கள். ரீபஸ் புதிர்னா என்னன்னு தெரியாதவங்களும் இந்த லிங்கெல்லாம் ஒரு தடவை படிச்சுட்டு வந்திட்டீங்கன்னா நல்லது.
http://elavasam.blogspot.in/2006/01/blog-post_20.html
http://elavasam.blogspot.in/2006/02/11.html
http://www.sridharblogs.com/2012/06/blog-post.html

தொடர்ந்து இவ்வகைப் புதிர்கள் உருவாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் அவ்வப்பொழுது முயலலாம் என்றிருக்கிறேன். இன்று ஆரம்பம் என்பதால் மிக மிக எளிதானவைகளையே கொடுத்திருக்கிறேன்.

1)
2)
 3)
 4)
5)
 6)



கணிணி வரைகலை தெரிந்த நண்பர்கள் உதவி கிடைச்சா இன்னும் நிறைய செய்யலாம்.

Thursday, July 19, 2012

Vertigo Puzzle - 3

Problem structure and purpose: 


A message will be scrambled vertically. There may be one or more sentences. Black squares represent the word or sentence ending. These black squares cannot be moved. Only letters need to be moved up or down in the same column, to find hidden messages.




Important Notes:(For those attempting for the first time) 


1. It looks similar to crossword puzzles which we are familiar with, but is fundamentally very different.
2. The final answer is read from left to right.
3. Any letter can only be moved up or down to any place in the same column. They can even be moved by crossing the black blocks.


For a Sample Puzzle :-  Please click HERE!!




Vertigo 2a Answer : - That's one small step for a man, one giant leap for mankind. - Neil A. Armstrong 

Vertigo 2b Answer : - A thin man ran; makes a large stride; left planet, pins flag on moon! On to Mars!


Vertigo 2a Participants :- Husainamma, Poongothai, Muthu, Nagarajan.
Vertigo 2b Participants :- Husainamma, Poongothai, Muthu, Nagarajan, Chinnakani.

To Create VertiGo Puzzles :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

To get latest announcements about these types of puzzles, join https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en

Wednesday, July 18, 2012

பத்து நிமிடப் புதிர்கள் - கலைமொழி - 22

புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.



சென்ற கலைமொழிக்கான விடை :-
டிங் டாங் பருப்பு.
நெய்யிலே வேகுது.
மைசூர் அப்பளப்பூ.
பெங்களூர் பாயசம்.
சம்பந்திய கூப்பிடுங்க.
சாப்பாடு போடுங்க.
வெத்தல பாக்கு வையுங்க.
வெளிய பிடிச்சுத் தள்ளுங்க. 

சரியான விடை அனுப்பியவர்கள்:- மாதவ், பூங்கோதை, இளங்கோவன், சின்னக்கனி, தமிழ் பிரியன், முத்து, 10அம்மா,ராமையா,  நாகராஜன், அரசு.


நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Friday, July 13, 2012

ஐந்து நிமிடப் புதிர்கள் - சொல்கலை 8

புதிதாய் இவ்வகைப் புதிரை விடுவிக்க முயல்வோர்க்கு :- http://yosinga.blogspot.in/2012/05/6.html



1.
2.
3.
4.
5.
6.


CLUE : நான் இங்கேதான் இருக்கேன்!!:))


சென்ற சொல்கலைக்கான விடை :
1) மாங்காய்
2) கஞ்சத்தனம்
3) அலங்காரம்
4) கீழ்க்கணக்கு
5) இங்கிதம்

இணங்காத சங்கீதமா



விடை கூறியவர்கள் :- ஹூஸைனம்மா, இளங்கோவன், மாதவ், முத்து, சாந்தி, நாகராஜன், சுர்ஜீத், பூங்கோதை, அந்தோனி, சின்னக்கனி, 10அம்மா.


நீங்களே சொல்கலை புதிரமைக்க :-http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

மற்ற நண்பர்களின் புதிர்கள் குறித்தும் உடனுக்குடன் அறிந்து கொள்ள - https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Sunday, July 08, 2012

யோசித்து குறுக்கெழுத்துப் புதிர் - 2

குழுவாக இணைந்து உருவாக்கும் குறுக்கெழுத்துகளுக்கென http://kurukkezuthu.blogspot.com என்று தனியே ஒரு வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறோம். யோசித்து - 2வது குறுக்கெழுத்தை இன்று அங்கே வெளியிட்டிருக்கிறோம். அனைவரும் அங்கு வந்து அதைப் பிரித்து மேயுமாறு அன்போடு அழைக்கிறோம்.


- யோசிப்பவர் & முத்து.