Sunday, July 24, 2011

மெகா குறுக்கெழுத்துப் போT விடைகள்

சொன்னதுக்காக எக்ஸ்ட்ராவா மூனு பேர் ஆடியிருக்காங்க. அவ்ளோதான்! மேகீ 22இல் தான் கிட்டத்தட்ட எல்லோருமே தடுமாறிட்டாங்க. ஹரி, R.வைத்தியநாதன், முத்து சுப்ரமண்யம், ஸ்ரீனிவாசராமானுஜம் நாலு பேரும்தான் முதல் அட்டம்ப்ட்லயே கம்ப்ளீட்டா முடிச்சவங்க. KRSm, V.R.பாலகிருஷ்ணனும் ஒன்றுக்கு மேற்பட்ட முயற்சி செஞ்சு முடிச்சாங்க. இந்த முறை புதிர் போட்ட மறுநாளே வெளியூர் போக வேண்டியிருந்ததால், முழுக்க முழுக்க செல்ஃபோனிலேயே இணையம் பார்க்க வேண்டிய தொல்லை. அதிலேயே விடைகளுக்கு பதில் அனுப்புவதும், முக்கியமாக ஸ்கோர் கார்ட் அப்டேட் செய்வதும் மிகுந்த இம்சையாகிவிட்டது. அதனால் பலருக்கும் மிகத் தாமதமாகவே பதில் அனுப்ப முடிந்தது. ஆனாலும் புதிரை விடுவிக்க முயன்றவர்கள் உண்மையில் அனுபவித்து ரசித்திருக்கிறார்கள் என்பது அவர்களது மடல்களில் தெரிந்தது. சரி இனி விடைகளைப் பார்ப்போம்.

இடமிருந்து வலம் :

2) முதல் = ஆதி + (ஊ)க்கம் முதலில்லா =  ஆளுமை.==அதிக்கம்
4) (கண்ண)தாச(ன்) கிருஷ்ணனை நினைக்காவிட்டால் எப்பொழுதும் குழம்பியே இருப்பார் = சதா 
5) நடுவே விரித்”தர் வலை”யை => கசக்கி = வழிநடத்துபவர் == தலைவர்
6) ”போரா”ளிகளுக்குள்ளும் யுத்தமா? == போரா
7) விய”த்தகு வல்”லமைக்குள் => கலைத்தல் = பிரித்தல்.== வகுத்தல்
8) அஸ்திவாரங்களில்லா -> நன(வு) மாளி(கை) => நடுங்கியதால்தான் = அழகா == நளினமா
9) சுபகாரியம் => ரணம்(=காயம்) ஆற்றிக் => சுபகாரியம்-காயம்=சுபரி => கலந்தால் = வெகுமதி == பரிசு
11) ”க”ண்ணி”மை” ஓரங்கள்  இரண்டும் + ஓ”ட”ங்கள் இரண்டும் =>  கலப்பது = பொறுப்பு == கடமை
13) கரைகள்  ”ஊ”மையான”து” = மூங்கிலோசையெழுப்ப == ஊது
15) ஊழல் அரசர் ஆ.....?(நேரடிக் குறிப்பு) == ராசா
16) ஒரு சுற்று பெருத்த => மான் = மாண் + ”பு”தைகுழி வாயிலில் = பெருமை == மாண்பு
18) ”யானை! பாதுகாப்பாய்” - ”யானைப்பாகா!” விரட்டுவாய் = அரபு நகரம்! == துபாய்
21) அவர்கள் அவளில்லாமல் => கர் +  கொடுக்க (=தர) => கலங்கினார் = இடைப்பட்டவர் == தரகர்
23) ”சக்கரம் மாறுதல்” -  தரமாம் = வழுக்கல் == சறுக்கல்
24) காமராசர் - அரசர் = பெரிய == மகா
25) ”கருட வம்சம்” - ”கம்ச” (வதம் நடந்தது) = ஆண்டு == வருடம்
26) கல்வெட்டு - கட்டு (கட்டாதே) =  வெற்றி பெறு == வெல்
27) ”கடன் பட்டனர்” - பட்ட (பட்டமில்லா) => சஞ்சலத்தால் = அண்டை மாநிலத்தவர் == கன்னடர்

மேலிருந்து கீழ் :

1) உயிரை எடுத்து மெய்யாக்கிய(உடலாக்கிய) = குற்றவாளி ==கொலையாளி (நேரடிக் குறிப்பு)
2)  கர்வமா...ஆ = விருப்பமாக == ஆர்வமாக 
3) ”அந்த” உயிரற்ற -> ந்த + பாறை(கல்) => நடுவே  = பழைய துணி == கந்தல்
4) ராஜ = ராச + ஸ்வரங்கள் இரண்டு(ச,ரி)=> கலப்பது = சாதாரணம்.== சராசரி
8) ”நகரம் பார்த்து” - பாரம் (சுமை இறக்கு) = இடம்பெயர்த்து == நகர்த்து
9) இருக்காத இருபது => பது + மசி(மை) = அழகுச்சிலை == பதுமை
10) அழகிய குரவர் = சுந்தரர் (நேரடிக் குறிப்பு)
12) ”மாய மை”னா => தலை குப்புற விழுந்தது =  நடுவிலா == மையமா (இந்த விடை புதிர் கட்டங்களின் மையத்தில் உள்ளது!!;)))
14) ”வாய் வீரா” - வீ (வீனாப் போன என்பதில் எழுத்துப் பிழை இல்லை!) = வருக == வாராய்
17) ”புதியவர்! முதல்வர்” - முதியவர் (முதியவரல்ல) = மைந்தர் == புதல்வர்
19) சந்திப்”பாரா மல்”லுவேட்டி மைனர் = பார்க்காமல் == பாராமல்
20) உ”று”மி இடை + சிவன் => தாண்டவமாடிய =  பொடியன் == சிறுவன்
22) வல்லவர்கள் = வல்லினங்கள்(கசடதபற) => இருவரைத் தொலைத்த நான்கு வல்லவர்கள் -> கசட(தப)ற பேரில் = குற்றமில்லை.= கசடற

No comments:

Post a Comment