Wednesday, September 18, 2013

குறுக்கெழுத்துப் போT 6 - விடைகள்

இந்த முறை குறிப்புகள் பலரையும் கவர்ந்திருப்பதாகத் தெரிகிறது. பங்கெடுத்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர், தாங்கள் ரசித்த குறிப்புகளை குறிப்பிட்டு விடை அனுப்பியிருந்தனர். இது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

விடை அனுப்பியவர்கள். : ராமராவ், சாந்தி நாராயணன், முத்து சுப்ரமணியம், கே.ஆர். சந்தானம், சுஜி குரு, வீ.ஆர்.பாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், நாகராஜன், ஹரி பாலகிருஷ்ணன், ராமையா நாராயணன், பூங்கோதை

பங்கெடுத்தவர்களின் கருத்துகள் :

முத்து சுப்ரமணியம் : //அருமை! 1, 11, 12 மிக ரசித்த குறிப்புகள். 18 தெரியவில்லை. 15 சந்தேகம்! //

கே.ஆர்.சந்தானம் :// very good crossword with thought provoking clues//

வீ.ஆர்.பாலகிருஷ்ணன் : //எல்லா குறிப்புகளுமே சிந்தனை யை தூண்டுவதாக அமைந்துள்ளது.
மிகவும் ரசித்தது      வரலாறு  //

பார்த்தசாரதி : //சுவையான குறுக்கெழுத்து. வாழ்த்துகள் . 
அனைத்துக் குறிப்புகளும் அருமை.  ஆனாலும் நன்றாக யோசிக்கவைத்து விடை வந்தவுடன் உங்களுக்கு சபாஷ் சொல்லவைத்த குறிப்புகள்.
குறுக்காக:
1.மரியாதையாக வருக உகரம் அகரமானால் வருடம் ஐம்பத்திரெண்டு. (5)
4.பம்பு செட்டில் தலை கால் புரியாமல் குதித்த நட்சத்திரமற்ற திருநெல்வேலி ஆறு. (3)
9.ஆமாம் என்றவர் முடிவில் இரெண்டெடுத்து விருப்பம் காட்டினார். (4)
11.முன்னிரண்டு பாண்டவர் படும் முடிவற்ற கலவை கலாச்சாரம். (4)
14.அரை வெண்ணிலா வரும் தலை கொஞ்சம் குழம்பி பதிலுக்குப் பதில் பாடு. (3)
15.காசு, பணம், துட்டு மணி மணி. (3) (Most enjoyed)
18.பாடி ஆடி குடமுருட்டி கரைகள் மாற்ற, ரம்மியம். (5)
நெடுக்காக:
1.ஆத்தி, இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் கிள்ளி அதிகாரியாவார் போலயே ஆசிரியர். (5)
5.அவித்து சுடுவதில் நடுவில் பூரம் வைத்து திருப்பு. (4)
9.வலியில் கத்தும் மனைவியா சாட்சி??? (4)
10.ஆயுதமேந்தா விரலால் பொரி முன்னும் பின்னுமான சரித்திரம். (4)
12.ஆம், பாட்டும் பாடி ஆடும் இன்றி ஆட்டுவிப்பவர். (5)

13.சக பிரயாணியிடம் நடுவிலும் இறுதியிலும் கலந்துரையாடி நிறைய தெரிந்து கொள்ளுங்கள். (4)
//

நாகராஜன் :  Wow... After a long time a wonderful crossword from you and most of the clues are really very good and made me think a lot... Great job and keep up the good work... 


ஹரி பாலகிருஷ்ணன் : //ரொம்ப நாள் கழித்து நன்றாக 'யோசிக்க' வைத்த புதிர். :)
1 கு - விடை தெரிந்தாலும் குறிப்பு புரியவில்லை
18 கு - 'பாடி ஆடு' என்று வந்திருக்க வேண்டுமோ? மிகவும் யோசிக்க வைத்தது.
10 நெ - விடை சுலபமாக இருந்தாலும், குறிப்பு சுவையாக இருந்தது
12 நெ - மிகவும் ரசித்தேன் //

பூங்கோதை : //
It has been such a long time!! 

Lots of beautiful clues, 1A was too good.
Also loved 7A, 16A and 17D very much.

Variety of clues, enjoyed thoroughly. //



விடைகள் :

குறுக்காக:
1.மரியாதையாக வருக=="வாருங்கள்" => உகரம் அகரமானால்==>வார(ரு)ங்கள்== வருடம் ஐம்பத்திரெண்டு == வாரங்கள்
4.ப"ம்பு செ"ட்டில் -->தலை கால் புரியாமல் குதித்த ==செம்பு == நட்சத்திரமற்ற திருநெல்வேலி ஆறு.=தாமிர(பரணி) ==செம்பு
6."எதிரி"லிருக்கும் விரோதி. == எதிரி
7.ஆகாது ஆகாது --> ஆகாததுவாம்-ஆகாது= தவாம் ==> கலப்படமான==வாதம்== பேச்சு. == வாதம்
8.தேசம்==நாடு== தேடு. == நாடு
9.ஆமாம் ==ஆம்+ என்ற"வர்" <==முடிவில் இரெண்டெடுத்து== ஆர்வம்== விருப்பம் காட்டினார். == ஆர்வம்
11.முன்னிரண்டு --> "பாண்"டவர் + "படு"ம் <-- முடிவற்ற==பாண்படு"==> கலவை==பண்பாடு== கலாச்சாரம். == பண்பாடு
13.அங்"கசை"வுகளிலேயே ==> சவுக்குத் தெறித்தது.= கசை
14.அரை --> வெண்"ணிலா" + "வ"ரும் <--தலை ==> கொஞ்சம் குழம்பி==லாவணி== பதிலுக்குப் பதில் பாடு. == லாவணி
15.காசு, பணம், துட்டு மணி மணி. == ரூபாய்
16.குற்றமற்றதாய்==மாசறு== "மாறு"ம் <--அந்தமில்லா + ஆதி--> "ச"டங்கு. == மாசறு
18.பாடி ஆடி ==கும்மியடி== "கு"டமுருட்"டி" <-- கரைகள் மாற்ற --> (ர)ம்மிய(ம்). == கும்மியடி

நெடுக்காக:
1.ஆ"த்தி", <==இங்க கொஞ்சம் + அங்க கொஞ்சம் கிள்ளி ==> அதிகாரி"யாவார்" == வாத்தியார் == போலயே ஆசிரியர். == வாத்தியார்
2."குருடு உருவாக" - (உருகு)<== உருகாதே==ருடுவாக--> குழம்பு==கருவாடு== மீன் ஒரே உப்பு. == கருவாடு
3."தொ"ல்காப்பிய"ம்" <== கரை கண்டவர்களுக்கு == தொம்== கேட்கும் ஜதியொலி. == தொம்
4.அன்பகம் நீங்கி ==> "செண்பகம் அம்மன்" - (அன்பகம்) == செண்ம்ம --> எழுந்தருளிய == செம்மண்== சிவந்த மண். == செம்மண்
5.அவித்து சுடுவதில் ==> புட்டு + நடுவில் --> பூ"ர"ம்==வைத்து==புரட்டு== திருப்பு. == புரட்டு
8.நா(த)ம் <-- தொலைத்"த" ==நாம்== நாங்கள். == நாம்
9.வலியில் கத்தும் ==>ஆ+ மனைவியா==>தாரமா ==ஆதாரமா==சாட்சி??? ==ஆதாரமா
10.ஆயுதமேந்தா --> விரலால் -(வில்) +  பொரி==>வறு <--முன்னும் பின்னுமான==வரலாறு== சரித்திரம். == வரலாறு
11.ஆ"சை ப"ற்றி <--சொன்னால் திரும்ப==பசை== ஒட்டிக் கொள்ளும். == பசை
12."ஆம், பாட்டும் பாடி"- ஆடும்<== இன்றி==பாம்பாட்டி== ஆட்டுவிப்பவர். == பாம்பாட்டி
13.சக + பிரயா"ணி"யிட"ம்" <-- நடுவிலும் இறுதியிலும் ==> சகணிம்--> கலந்துரையாடி==கணிசம்== நிறைய தெரிந்து கொள்ளுங்கள். == கணிசம்
17.அ"தை ச"ட்டியிலிருந்து <--எடுத்துத் ==>தைச <--திருப்பிப் போட்டால்== சதை== மாமிசம். == சதை

No comments:

Post a Comment