பல மாதங்களாக ஒரு சில டெக்னிக்கல் பிரச்சனைகளினால்(சோம்பேறித்தனம்) பதிவு எதுவும் எழுதவில்லை. இந்தக் குறுக்கெழுத்தை உருவாக்க ஆரம்பித்தே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறதென்றால், டெக்னிக்கல் பிரச்சனை எவ்வளவு பெரியதென்று பார்த்துக் கொள்ளுங்களேன்! எப்படியும் பத்து பேருக்கு மேல் இந்தக் குறுக்கெழுத்தை முனைந்து தீர்க்க முயல மாட்டீர்கள் என்று தெரியும். அதனாலேயே என்னத்துக்குப் போட்டு மெனக்கிட்டுக்கிட்டு என்று டெக்னிக்கல் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகிறது. இருந்தாலும் பிரச்சனையை சமாளித்து இந்த ‘மெகா’ குறுக்கெழுத்தை(11x11 என்பதால் மெகா!) உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம். எங்கே, அந்தப் பத்துபேரும் வந்து உடனே ஆஜராகி வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்!!!
அந்தப் பத்துடன் யாராவது புதுசா ஒன்னு ரெண்டு பேர் சேர்ந்து புதிரை அவிழ்க்கனும்னு நெனைச்சீங்கன்னா ஒரு எட்டு இங்கனயெல்லாம் போய் இந்த மாதிரிப் புதிர்களை எப்படி அவிழ்க்கிறதுன்னு படிச்சு புரிஞ்சிட்டு வந்துருங்க. ஏன்னா, இது தமிழ் வாரப் பத்திரிக்கைகளில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் டைப்பை சேர்ந்ததில்லை.
மத்தபடி வழக்கம்போலதான். நீங்க புதிரை அவிழ்கும்போது இங்கேயிருக்கிற கட்டங்கள்ளயே விடைகளை நிரப்பிப் பார்த்துக் கொள்ள முடியும். உங்க விடைகளை Commentஇலோ, yosippavar@gmail.com என்ற மின்மடல் முகவரிக்கோ அனுப்புங்கள். எந்தெந்த விடைகள் சரி/தப்புன்னு மட்டும் அப்பப்போ நாங்க சொல்லுவோம். மத்தவங்க எத்தன விடைகள் சரியா சொல்லியிருக்காங்கன்னு இங்க போய் பார்த்துக்குங்க.
சரி, சரி! எல்லாம் இப்ப ஆட்டய கவனி!!!
இடமிருந்து வலம் :
2) முதல் ஊக்கம் முதலில்லா ஆளுமை.(5)
4) கண்ணதாசன் கிருஷ்ணனை நினைக்காவிட்டால் எப்பொழுதும் குழம்பியே இருப்பார்.(2)
5) வழிநடத்துபவரைப் பிடிக்க கசக்கி நடுவே விரித்தர் வலையை.(4)
6) போராளிகளுக்குள்ளும் யுத்தமா?(2)
7) வியத்தகு வல்லமைக்குள் கலைத்தல் பிரித்தல்.(5)
8) அஸ்திவாரங்களில்லா நனவு மாளிகை நடுங்கியதால்தான் அழகா?(4)
9) சுபகாரியம் ரணமாற்றிக் கலந்தால் வெகுமதி உண்டு.(3)
11) கண்ணிமை ஓரங்கள் இரண்டும், ஓடங்கள் இரண்டும் கலப்பது பொறுப்பு.(3)
13) மூங்கிலோசையெழுப்ப கரைகள் ஊமையானது.(2)
15) ஊழல் அரசர் ஆ.....?(2)
16) ஒரு சுற்று பெருத்த மான் புதைகுழி வாயிலில் அடைந்தது பெருமை.(3)
18) யானைப்பாகா! விரட்டுவாய் யானை! பாதுகாப்பாய் அரபு நகரம்!(3)
21) இடைப்பட்டவர் அவளில்லாமல் அவர்கள் கொடுக்க கலங்கினார்.(4)
23) வழுக்கல் சக்கரம் மாறுதல் இல்லாத தரமாம்!(5)
24) பெரிய காமராசர்! அரசரில்லை!!(2)
25) கருட வம்சம் ஆண்டு வர கம்ச வதம் நடந்தது.(4)
26) கல்வெட்டு கட்டாதே! வெற்றி பெறு!!(2)
27) பட்டமில்லா அண்டை மாநிலத்தவர் சஞ்சலத்தால் கடன் பட்டனர்.(5)
மேலிருந்து கீழ் :
1) உயிரை எடுத்து மெய்யாக்கிய குற்றவாளி.(4)
2) விருப்பமாக கர்வமா...ஆ!(5)
3) அந்த உயிரற்ற பாறை நடுவே பழைய துணி.(4)
4) ராஜ ஸ்வரங்கள் இரண்டு கலப்பது சாதாரணம்.(4)
8) இடம்பெயர்த்து நகரம் பார்த்து சுமை இறக்கு.(5)
9) இருக்காத இருபது மசி அழகுச்சிலை.(3)
10) அழகிய குரவர்.(5)
12) மாய மைனா தலை குப்புற விழுந்தது நடுவிலா?(3)
14) வீனாப் போன வாய் வீரா வருக!!!(3)
17) மைந்தர் புதியவர்! முதல்வர் முதியவரல்ல!
19) பார்க்காமல் சந்திப்பாரா மல்லுவேட்டி மைனர்?(4)
20) உறுமி இடை சிவன் தாண்டவமாடிய பொடியன்.(4)
22) இருவரைத் தொலைத்த நான்கு வல்லவர்கள் பேரில் குற்றமில்லை.(4)
உருவாக்கம் : யோசிப்பவர், ஸ்ரீதேவி