Friday, December 23, 2011

கலைமொழி - 4

கலைமொழிப் புதிரால் ஈர்க்கப்பட்ட திரு.ராமசாமி, வெறும் ”நெடுக்காக” என்ற பதம் சரியாகப் புரியவில்லை என்று, இந்த விளையாட்டை ஆடுவது பற்றி ஒரு விளக்கமும் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது விளக்கம் கீழே...

இது மாயக்கட்டமுமில்லை, மந்திரமும் இல்லை. சாதாரண அறிவு விளையாட்டுதான். கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!!


இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும்.


எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


மிகவும் எளிதான ஆட்டம். ஆனால் சுவாரஸ்யமான ஆட்டம். ஆடித்தான் பாருங்களேன்!
கலைமொழி 3க்கான விடை :- ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது 

சென்ற முறை சுஜாதா என்பதே ஒரு க்ளூவாகிப் போனது. இனிமேல் நம் மக்களுக்கு க்ளூ எதுவும் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது நாவல்களில் வந்ததோ, பிரபல எழுத்தாளர்கள் யாரும் எழுதியதோ கிடையாது. கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கலைமொழி 3க்கு விடையளித்தவர்கள் :- பூங்கோதை, கலை, ஹரிஹரன், ஹேமா, முத்து, பத்மா, அனிதா, அருந்ததி, ராமசாமி, ஹரி, மாதவ். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!!!

எச்சரிக்கை : இன்னும் சில மணி நேரங்களில் கணிதக் குறுக்கெழுத்தை எதிர்பாருங்கள்!!

12 comments:

Show/Hide Comments

Post a Comment