உணரவில்லை என் வறுமையை நான் !
வீட்டு சாப்பாட்டின் தரம் குறைந்த போதும் சரி
பண்டிகை அன்று கூட புத்தாடை அணிய முடியாத போதும் சரி
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற முடியாத போதும் சரி
உணரவில்லை என் வறுமையை நான் !!
ஆனால் பெண்ணே,
உந்தன் ஒற்றை முகச்சுளிப்பில் -
என் நிலை அனைத்தையும் உணர்ந்தேன்
உறங்கிக்கொண்டிருந்த நான் உயிர்த்தெழுந்தேன்
இப்போது வெற்றிப் படிகளில் நான்
உன்னால் தான் பெண்ணே, ஆனால் உனக்காக அல்ல
வீட்டு சாப்பாட்டின் தரம் குறைந்த போதும் சரி
பண்டிகை அன்று கூட புத்தாடை அணிய முடியாத போதும் சரி
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற முடியாத போதும் சரி
உணரவில்லை என் வறுமையை நான் !!
ஆனால் பெண்ணே,
உந்தன் ஒற்றை முகச்சுளிப்பில் -
என் நிலை அனைத்தையும் உணர்ந்தேன்
உறங்கிக்கொண்டிருந்த நான் உயிர்த்தெழுந்தேன்
இப்போது வெற்றிப் படிகளில் நான்
உன்னால் தான் பெண்ணே, ஆனால் உனக்காக அல்ல
- விஜயவேல்
7 comments:
//
ஆனால் உனக்காக அல்ல
//
Super !
ஏன் இந்த பினாத்தல்?
ஒன்னும் புரியலையே நண்பர் யோசிப்பவரே. எதுக்கும் உடம்பை பத்திரமா பாத்துக்குங்க! வெய்யில் ரொம்ப கொளுத்துது ஆமாம், சொல்லி புட்டேன்!
;-)
//ஒன்னும் புரியலையே நண்பர் யோசிப்பவரே.//
நிஜமாகவே புரியவில்லையா?!?!
//எதுக்கும் உடம்பை பத்திரமா பாத்துக்குங்க! வெய்யில் ரொம்ப கொளுத்துது ஆமாம், சொல்லி புட்டேன்!
//
மாசிலா, இதை பினாத்தியது நானல்ல. நண்பர் விஜயவேல். தற்சமயம் பூனாவிலிருக்கிறார். அங்கேயும் வெயில் ஜாஸ்தி என்றுதான் கேள்விப்பட்டேன். ஒருவேளை அதனால்தான் இப்படியோ?!?;-)
உண்மை,
உங்கள் பாராட்டுக்கு உரியவரும் அவர்தான்!!!;)
ஏதோ கொஞ்சம் புரியற மாதிரிதான் தோணுது ஆனாலும் மண்டை காயுது
இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லலாம்.
"உனக்கான தேடலில்
என்னைத் தொலைத்தேன்
என்னைக்கண்ட போது
உன்னைத் தொலைத்தேன்"
இது எப்படி இருக்கு?
:))
nagai.s.balamurali,
//உனக்கான தேடலில்
என்னைத் தொலைத்தேன்
என்னைக்கண்ட போது
உன்னைத் தொலைத்தேன்//
இதுவும் நன்றாய்தான் இருக்கிறது நணபரே!!
ஆனால் நண்பர் விஜயவேலின் கருத்தும், உங்கள் கவிதையின் கருத்தும் வெவ்வேறானவை(முற்றிலும்)!!!
ஒரு ஆணின் வெற்றிக்குப்:பின் பெண் எண்டிறது இது தானோ.
உண்மையான விளக்கம் அவர் அடிமனதின் வலியைச் சொல்லி இருக்கிறார்.
Post a Comment