நம்ம கெபிகிட்ட(கெக்கே பிக்குனி) கொஞ்சம் தங்க காசுங்க இருக்காம். அதாங்க, இந்த தங்கத்த 1 பவுனுக்கு ரவுண்டு பண்ணி, காசு மாதிரி போட்டு, நடுவுல லக்ஷ்மி படமெல்லாம் போட்டிருக்குமே; அந்த மாதிரி காசுங்க. மொத்தம் எத்தனை காசு வச்சிருக்கீங்கன்னு தெரியாம கேட்டுட்டேன். அதுக்கு
அவங்க உடனே உங்க ஸ்டைல்லயே பதில் சொல்றேன் பேர்வழின்னு "எங்கிட்ட உள்ள காசுங்கள ரெண்டு கூறா பிரிச்சு வச்சிருக்கேன். ரெண்டு கூறுக்கும் இடையில எத்தனை காசு வித்தியாசம் இருக்கோ, அதை முப்பத்தி ஏழால பெருக்கினா வர்ற விடையும், ஒவ்வொரு கூறையும் தனித் தனியா ஸ்கொயர் பண்ணி, அந்த ரெண்டு நம்பருக்கும் இடையில உள்ள வித்தியாசமும் ஒன்னு. அப்ப எங்கிட்ட எத்தனை காசுங்க இருக்கு?" அப்படின்னு கேட்டாங்க. "உங்களோட ரெண்டாவது வாக்கியம் சுத்தமா புரியலை. கொஞ்சம் தமிழ் படுத்தி புரிய வைங்க"ன்னு சொன்னேன். "சரி பொழச்சுப் போ. இங்கிலீஷ்லயே சொல்றேன். Thirty Seven times the difference between the number of coins in each group, EQUALS, the difference between the squares of the two numbers. புரிஞ்சுதா?"ன்னாங்க. ஓரளவு புரிஞ்சுது. ஆனா, மொத்தம் எத்தனை காசுங்கன்னுதான் தெரியலை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?
அவங்க உடனே உங்க ஸ்டைல்லயே பதில் சொல்றேன் பேர்வழின்னு "எங்கிட்ட உள்ள காசுங்கள ரெண்டு கூறா பிரிச்சு வச்சிருக்கேன். ரெண்டு கூறுக்கும் இடையில எத்தனை காசு வித்தியாசம் இருக்கோ, அதை முப்பத்தி ஏழால பெருக்கினா வர்ற விடையும், ஒவ்வொரு கூறையும் தனித் தனியா ஸ்கொயர் பண்ணி, அந்த ரெண்டு நம்பருக்கும் இடையில உள்ள வித்தியாசமும் ஒன்னு. அப்ப எங்கிட்ட எத்தனை காசுங்க இருக்கு?" அப்படின்னு கேட்டாங்க. "உங்களோட ரெண்டாவது வாக்கியம் சுத்தமா புரியலை. கொஞ்சம் தமிழ் படுத்தி புரிய வைங்க"ன்னு சொன்னேன். "சரி பொழச்சுப் போ. இங்கிலீஷ்லயே சொல்றேன். Thirty Seven times the difference between the number of coins in each group, EQUALS, the difference between the squares of the two numbers. புரிஞ்சுதா?"ன்னாங்க. ஓரளவு புரிஞ்சுது. ஆனா, மொத்தம் எத்தனை காசுங்கன்னுதான் தெரியலை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?பி.கு.: விடை சொல்பவர்களுக்கு, அந்த தங்க காசுகளிலிருந்து ஒன்று கூட கொடுக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது!!
6 comments:
கெபி 37 காசு வச்சிருக்கார்.
விளக்கம் ப்ளீஸ்ன்னு கேக்காதீங்க. விளக்கம் தேவையில்லை. ரொம்ப சிம்பிள்.
37ன்னு ஆன்ஸரைச் சொல்லிட்டு போயிடலாம். அப்பால எப்படின்னு கேள்வி கேப்பீங்க..
37x - 37y = x2 - y2
37(x-y) = (x+y) (x-y)
37 = x+y
போதுமா?
பின்னூட்டக் கடமை:
மாத்தி, ஒரு காசு அனுப்பி வைக்கப் படும்னு அறிவிக்கலாமா?
:-)
37 coins
கெபி,
இப்படியெல்லாம் அவசரப்பட்டு கமிட் பண்ணி மாட்டிக்காதீங்க!!;-)
ஏற்கெனவே கௌபாய்மது,பினாத்தல் சுரேஷ், ஒரு அனானி எல்லாரும் பதில் சொல்லிட்டாங்க. நான் தான் பொறுமையா மாடரேட் பண்ணலாம்னு வச்சிருந்தேன். கௌபாய்மது, புதிர் போட்ட கொஞ்ச நேரத்திலேயே பதில் சொல்லிட்டார்! பினாத்தலார் விளக்கமாகவே!!
இனி உங்கள் பொறுப்பு! நான் ஆட்டத்துக்கு வரலை!!;-)
அந்த அளவுக்கு முன்யோசனை இல்லை என்றால், இத்தனை காசுகளை எப்படி பதுக்கி வைப்பேன்?
http://bp3.blogger.com/_eg4SGUh5cBE/SASBC1HetRI/AAAAAAAAAu8/SZ-Tcvj8Tu0/s1600-h/gold_coins.jpg
பினாத்தலார், கௌபாய்மது, அனானிக்கு இமெயிலில் இந்த படம் இலவசமாக அனுப்பி வைக்கப் படும். (ஹிஹி, உங்க பதிவில இருக்கிற படம் தான். கடைத் தேங்காய்:-)
Post a Comment