Friday, April 18, 2008

எழுத்திலே கலைவண்ணம் வரைந்தான்!!
















சுத்தி சுத்தி சுத்துனா!?!

நெடு விடுப்பில்(லாங் லீவ்) செல்லவிருப்பதால், அதற்குமுன், ஒரு கணக்கை கேட்டு வைத்து விடலாம் என்று ஒரு கெட்ட எண்ணம்!?!

ஒரு நீட்ட உருளைக்கிழங்கு இருக்குது. ஸாரி, ஒரு நீட்ட உருளை(சிலிண்டர்) இருக்குது. அத்தோட நீளம் 90செ.மீ., சுத்தளவு 24செ.மீ.. அத்த சுத்தி சுத்தி, ஒரு நூல(கயிறுபா) சுத்துறாங்க. அந்த நூலு, உருளைய சரியா 5 தடவை சுத்திருக்கு(அதாவ்து கரீட்டா அஞ்சு ரவுண்டு அடீச்சிருக்கு). அப்படி 5 தடவை சுத்துனதுல, நூலோட ரெண்டு முனையும், உருளையோட மேலேயும் கீழேயும் இருந்துச்சு(பட்த்த பாத்துகோபா!).

இப்போ கேள்வி என்னத்த பெரிசா கேட்டுறப் போறேன்? அந்த நூலோட நீளம் என்ன? அவ்வளவுதான்!

Tuesday, April 15, 2008

காசு தங்கக் காசு

நம்ம கெபிகிட்ட(கெக்கே பிக்குனி) கொஞ்சம் தங்க காசுங்க இருக்காம். அதாங்க, இந்த தங்கத்த 1 பவுனுக்கு ரவுண்டு பண்ணி, காசு மாதிரி போட்டு, நடுவுல லக்ஷ்மி படமெல்லாம் போட்டிருக்குமே; அந்த மாதிரி காசுங்க. மொத்தம் எத்தனை காசு வச்சிருக்கீங்கன்னு தெரியாம கேட்டுட்டேன். அதுக்கு அவங்க உடனே உங்க ஸ்டைல்லயே பதில் சொல்றேன் பேர்வழின்னு "எங்கிட்ட உள்ள காசுங்கள ரெண்டு கூறா பிரிச்சு வச்சிருக்கேன். ரெண்டு கூறுக்கும் இடையில எத்தனை காசு வித்தியாசம் இருக்கோ, அதை முப்பத்தி ஏழால பெருக்கினா வர்ற விடையும், ஒவ்வொரு கூறையும் தனித் தனியா ஸ்கொயர் பண்ணி, அந்த ரெண்டு நம்பருக்கும் இடையில உள்ள வித்தியாசமும் ஒன்னு. அப்ப எங்கிட்ட எத்தனை காசுங்க இருக்கு?" அப்படின்னு கேட்டாங்க. "உங்களோட ரெண்டாவது வாக்கியம் சுத்தமா புரியலை. கொஞ்சம் தமிழ் படுத்தி புரிய வைங்க"ன்னு சொன்னேன். "சரி பொழச்சுப் போ. இங்கிலீஷ்லயே சொல்றேன். Thirty Seven times the difference between the number of coins in each group, EQUALS, the difference between the squares of the two numbers. புரிஞ்சுதா?"ன்னாங்க. ஓரளவு புரிஞ்சுது. ஆனா, மொத்தம் எத்தனை காசுங்கன்னுதான் தெரியலை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?

பி.கு.: விடை சொல்பவர்களுக்கு, அந்த தங்க காசுகளிலிருந்து ஒன்று கூட கொடுக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது!!

Thursday, April 10, 2008

சதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்

ஒரே ஒரு ஊர்ல ஒரு சதுரம் இருந்துச்சாம். அந்த சதுரத்துக்குள்ள ஒரு வட்டமாம். அந்த வட்டத்தோட விளிம்பு, நாலு பக்கமும் சதுரத்தோட விளிம்புங்கள தொட்டுகிட்டு இருந்திச்சாம். இப்ப சதுரத்தோட ஒரு மூலைல, வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இடையில கொஞ்சம் இடம் இருக்கும்ல; அதை அடைச்ச மாதிரி ஒரு செவ்வகம் வந்து உக்காந்திச்சு. அதாவது அந்த செவ்வகத்தோட ரெண்டு பக்கமும், சதுரத்தோட மூலைல ஒட்டிகிட்டு இருக்கும். அதே நேரத்துல செவ்வகத்தோட எதிர் முனை, வட்டத்த தொட்டுகிட்டு இருக்கும். இப்ப அந்த செவ்வகத்தோட ஒரு பக்கம் 7 அடி; இன்னொரு பக்கம் 14 அடி. அப்படின்னா நடுவுல இருக்கிற வட்டத்தோட ஆரம் என்ன?

Tuesday, April 08, 2008

100=1

நம்ப வலைத்துணுக்கில் கணக்கு, புதிரெல்லாம் போட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுன்னு, பல லட்சக்கணக்கான வாசகர்களின் அங்கலாய்ப்புகளுக்கு செவிசாய்த்து, இந்த 'சிம்பிளான' கணக்குப் புதிரைக் கேட்கிறேன். விடையை முந்தி சொல்பவர்களுக்கு, ஒரு அலுமினிய டம்ளர் கூட கிடைக்காது என்று அறிவித்து கொள்கிறேன்.

  • a = b (சும்மா வச்சுக்குங்க)

  • 99a = 99b (ரெண்டு பக்கமும் 99ஆல பெருக்குங்க)

  • (100 - 1)a = (100 - 1)b (சும்மா பிரிங்க)

  • 100a - a = 100b - b

  • 100a - 100b = a - b

  • 100(a - b) = 1(a - b)

  • 100 = 1 (ஹா! எப்டியிது? விளக்கவும்!!)



  • இதே மாதிரி ஒரு கேள்வி முன்னாடியே நம்ம வலைத்துணுக்கில் கேட்டிருக்கிறேன். அதனால் இது எளிய கேள்விதான்!!!




    கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, ஜஸ்ட் ரிலாக்ஸ்!!!


    Saturday, April 05, 2008

    சில விளம்பரங்கள்







    Thursday, April 03, 2008

    பேலன்ஸ்! பேலன்ஸ்!! பேலன்ஸ்!!!