வழக்கமா பாலாதான் இந்த வேலையை செய்வார். நாமளும் அதே மாதிரி ஒரு தடவை செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னைக்கு அந்த ஆசையை தீர்த்துகிட்டேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள இடை வரிகளின் பல்லவியை கண்டுபிடியுங்கள்(முடிந்தால் பாடல்கள் இடம்பெற்ற படங்களின் பெயரையும்).
1) தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்கபோகமே.
2) தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே.
3) மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்.
4) பழியே புரியும் கொடியோன் புசிக்க, பாலும் பழமும் தன்னை தேடித்தரும்.
5) எச்சிலை தன்னிலே எறியும் சோற்றுக்கு பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே.
6) நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது.
7) அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது, ஆணவம் இன்றோடொழிந்தது.
8) அச்சடித்திருக்கும் காகிதப் பெருமை, ஆண்டவனார்க்கும் இல்லையடா.
9) கஞ்சி குடிப்பதற்கில்லா, அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லா
10) அன்னங்கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்.
அப்புறம் மேலேயுள்ள எல்லா பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றும் கண்டுபிடியுங்கள்.
Saturday, February 11, 2006
சரணமும் பல்லவியும் (பாலா மன்னிக்கவும்)
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்
பதில்: ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே.. குற்றால அழகை நானும் ரசிப்பதற்கு..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு
//அப்புறம் மேலேயுள்ள எல்லா பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றும் கண்டுபிடியுங்கள்.//
இது எல்லாமே CS ஜெயராமன் அவர்கள் பாடிய பாடல்கள் போலத் தெரிகிறதே...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
yellaame c.s.jayaraman paadiya paadalkal.
- aththuzhaai
Pudhayal
Pavai vilakku
Parasakthi
7, rathakkanneer
Pavai vilakku
-aththuzhaai
5வது பாட்டு :
கா கா கா...ஆகாரம் உண்ண எல்லோரும் இங்கே
படம் : பராசக்தி
- கைப்புள்ள
1.விண்ணோடும் முகிலோடும்
7. நடிகவேள் ராதா என்று நினைவு
அவசரமாகச் செல்வதால் பிறகு
மறுபடி வருகிறேன்
- madhumitha
1.விண்ணொடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
2. நெஞ்சு பொறுக்குதில்லையே
-Anonymous
எல்லாமே C.S.ஜெயராமன் பாடியவை
-Anonymous
1. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
9. நெஞ்சு பொறுக்குதில்லையே
yosippavar,
//பாலா மன்னிக்கவும்//
athenna ! "patent" paNNiyA vaiththirukkiREn :)
1. viNNOdum mukilOdum viLaiyAdum veNNilavE -- irumbuth thirai (?)
7. kuRRam purinthavan vaazkaiyil nimmadhi ---- raththak kaNNIr
10. vaNNa thamiz peNNoruththi en ethirE vanthAL --- ?????
I think, all songs were sung by CS Jayaraman !!!!
-enRenRum-anbudan.BALA
நானும் எப்பவும் இந்த மாறியெல்லாம் பங்கெடுத்துக்க மாட்டேன்.
1) ஆகா நம் ஆசை நிறைவேறுமா, கடல் அலையைப் போல மறைந்து போக நேருமா?.
மற்றதெல்லாம் தெரியல.:(
MGR?
-Premalatha
1)"விண்ணோடும் முகிலோடும்" என்ற சரியான பதிலை முதலில் அனுப்பியவர் மதுமிதா. மறுபடி வருகிறேன் என்று சொன்னவர் அப்புறம் இங்கே வரவில்லை. நடிக வேள் ஞாப்கம் வந்த பிறகும் பாடல் நினைவுக்கு வரவில்லையா?!?! அனாநிமஸும் இதற்கு சரியான பதில் கூறியிருந்தார்.
2) இதற்கு அனாநிமஸ் தவறான விடை அளித்திருந்தார்.ஆனால் இந்த பாடல் இன்னொறு கேள்விக்கு பதில். அதனால் இதற்கு இன்னும் விடை வரவில்லை
3) சீமாச்சு சரியான பதிலையே கூறியிருக்கிறார். ஒரே ஒரு சின்ன வார்த்தை திருத்தம், " ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே.. குற்றால அழகை 'நாம் காண்பதற்கு'(ரசிப்பதற்க்கு அல்ல என்று நினைவு)
4) இன்னும் விடை வரவில்லை.
5) கைப்புள்ள சரியான விடை அளித்திருந்தார்.
6) இன்னும் விடை வரவில்லை.
...
பாலா எழுதியுள்ளா மூன்று பதில்களுமே சரி.
அப்புறம் எல்லா பாடல்களுக்கும் உள்ள தொடர்பையும் அனைவருமே சரியாக கண்டுபிடித்திருக்கிறார்கள்(பிரேமலதா தவிர! இவர்தான் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை!!!).
இன்னும் விடை காணாத பாடல்களுக்கும் இன்னும் இரண்டு நாட்களில் விடகள் எதிர்பார்க்கிறேன்.
இன்னும் விடை காணா பாடல்கள் - 2, 4, 6, 8, 9.
9வது பாடலுக்கும் சரியான விடை வந்து விட்டது. இன்னும் விடை காணா பாடல்கள் 2, 4, 6, 8 (இரட்டைப் படை)
9.ஞ்சு பொறுக்குதில்லையே
இன்றைய நிலவரம் நேற்று விட்டுப்போனது போல அப்படியே இருக்கிறது. இரட்டைப்படை பாடல்களை யாரும் கண்டுபிடிக்க காணோம். இறுதி விடை நாளை.
2) அன்பினாலே உண்டாகும் இன்பநிலை..(பாச வலை)
4) இதுதான் உலகமடா, மனிதா..
6) தேச ஞானம் கல்வி, ஈசன் பூசை எல்லாம்..
8) நல்லவன் கையில் நாணயமிருந்தால், நாலு பேருக்கு சாதகம்..
Post a Comment