ஓடும் ரயிலில் ஒருவன் கொலை செய்யப்பட்டு விட்டான்(இது செயப்பாட்டு வினைதானே?!?!). சிஐடி யோசி கொலை நடந்த பொழுது அந்தப் பெட்டியில் பயணம் செய்தவர்களை விசாரித்தார். ஒவ்வொருவரும் பின் வருமாறு வாக்குமூலமளித்தனர்.
மஞ்சள் சட்டை போட்டவர்(பேன்ட் வேற கலர்!), "நான் நிரபராதி. சிகப்பு சேலையணிந்த பெண்தான், கொலையுண்டவனோடு கடைசியாக பேசிக் கொண்டிருந்தாள்."
சிகப்பு சேலையணிந்த பெண்(ரோசாப்பூ ரவிக்கைகாரி), "நான் நிரபராதி. நான் கொலை செய்யப்பட்டவனோடு பேசவே இல்லை."
வழுக்கைத் தலை ஆசாமி(அர்விந்த்சாமி இல்லை! ஆசாமி), "நான் நிரபராதி. குதிரை வால் கொண்டை போட்ட பெண்தான் கொலை செய்தாள்."
குதிரை வால் கொண்டைக்காரி(அண்டங்காக்கா கொண்டை அப்போ ஃபேஷனில்லை!), "நான் நிரபராதி. இரண்டு ஆண்களில் யாரோ ஒருவர்தான் கொலை செய்தது."
இந்த முரண்பாடான வாக்குமூலங்களால் முதலில் குழம்பிப் போன சிஐடி யோசி, பின்னர், இவர்கள் கூறியவற்றில் சரியாக நான்கு வாக்கியங்கள் உண்மையென்றும், மீதி நான்கு வாக்கியங்கள் பொய் என்றும் கண்டுபிடித்தார்(அது எப்டின்னெல்லாம் கேனத்தனமா கேக்கக் கூடாது!).
இப்பொழுது நீங்கள் கண்டுபிடியுங்கள், இந்த நான்குபேரில் யார் கொலையாளி?
Saturday, April 28, 2007
புலன் விசாரணை
Posted by யோசிப்பவர் at 4:22 AM 3 comments
Thursday, April 26, 2007
வறுமை
வீட்டு சாப்பாட்டின் தரம் குறைந்த போதும் சரி
பண்டிகை அன்று கூட புத்தாடை அணிய முடியாத போதும் சரி
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற முடியாத போதும் சரி
உணரவில்லை என் வறுமையை நான் !!
ஆனால் பெண்ணே,
உந்தன் ஒற்றை முகச்சுளிப்பில் -
என் நிலை அனைத்தையும் உணர்ந்தேன்
உறங்கிக்கொண்டிருந்த நான் உயிர்த்தெழுந்தேன்
இப்போது வெற்றிப் படிகளில் நான்
உன்னால் தான் பெண்ணே, ஆனால் உனக்காக அல்ல
Posted by யோசிப்பவர் at 9:46 PM 7 comments
Labels: கவிதை மாதிரி?, மொத்தம்
Wednesday, April 25, 2007
இதற்கு நான் பொறுப்பல்ல!!!
இன்றைக்கு தமிழ்மணத்தில் என்னுடைய பல பழைய பதிவுகள் எடுத்து காண்பிக்கப் பட்டிருக்கும். இதற்கு நான் பொறுப்பல்ல. நேற்று உட்கார்ந்து சில பழைய பதிவுகளை குறிச்சொற்களால் வகைப்படுத்தினேன். அதன் பிறகு இன்று புதிய பதிவிட்டவுடன், புதிதாய் வகைப்படுத்தப்பட்ட பழைய பதிவுகளையும் சேர்த்தெடுத்து தமிழ்மணம் காட்டுவதை இன்றுதான் உணர்ந்தேன். ஏற்கெனவே ஒரு முறை எனது வலைத் துணுக்கில் இது நேர்ந்திருக்கிறது. இன்னும் எனது வலைத்துணுக்கை முழுமையாக வகைப்படுத்தி முடிக்கவில்லை. ஆதலால் இன்னொரு முறையும் இது போல் நேர வாய்ப்பிருக்கிறது(அதற்குள் இந்த Bugகை தமிழ்மணம் சரி செய்யாவிட்டால்) என்று அறிவித்துக் கொள்கிறேன்.
Posted by யோசிப்பவர் at 12:45 AM 0 comments
Labels: அறிவிப்புகள், மொத்தம்
Tuesday, April 24, 2007
அட!!!!!!!!
சொல்றதுக்கு ஒன்னுமில்லை! படத்தை பாருங்க!!!
Posted by யோசிப்பவர் at 10:52 PM 5 comments
Labels: அசைபடம், துணுக்குகள், மொத்தம்
சூரிய பகவானின் குதிரைகள்
சூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன். இதுகூட சில பேருக்கு தெரிந்திருக்கும்!
ஆனால், அந்த ஏழு குதிரகளின் பெயர்கள் அவ்வளவாக யாருக்கும் தெரியாது. அவைகளின் பெயர்கள்,
1) காயத்ரி.
2) ப்ருஹதி.
3) உஷ்ணிக்.
4) ஜகத்.
5) திருஷ்டுப்
6) அனுஷ்டுப்
7) பங்க்தி
Posted by யோசிப்பவர் at 4:07 AM 2 comments
Labels: துணுக்குகள், மொத்தம்
Saturday, April 21, 2007
அல்ஜீப்ரா
கீழேயுள்ள சமன்பாட்டில் yன் மதிப்பு என்ன?
(x-a) (x-b) (x-c) .....(x-y) (x-z) = y
பி.கு. : இது மிகவும் எளிதான கணக்கு!!!
Posted by யோசிப்பவர் at 1:47 PM 5 comments
Wednesday, April 18, 2007
பாதாள சாக்கடை - விடை
பாதாள சாக்கடைகளின் மூடி சதுரமாகவோ, முக்கோணமாகவோ இருந்தால், ஏதாவதொரு கோணத்தில் (Angle) மூடி குழிக்குள் விழ வாய்ப்புள்ளது. வட்ட வடிவில் மட்டுமே, எல்லா கோணத்திலும் மூடியின் விட்டம், குழியை விட பெரிதாக இருப்பதால் உள்ளே விழ வாய்ப்பில்லை. அதனால்தான் எப்பொழுதும் வட்ட வடிவ மூடிகளையே பாதாள சாக்கடைக்கு பயன்படுத்துகின்றனர். வெகு சில இடங்களில் அலங்காரத்துக்காக வேறு வடிவங்களையும் பயன்படுத்துகின்றனர்.
aravindaanதான் முதலில் மிகச்சரியான விடையளித்துள்ளார். கொத்ஸ்ஸும் சரியாகவே விடையளித்திருக்கிறார். பாலராஜன்கீதா, Balasubramaniam இருவரும் நன்றாகவே யோசித்திருக்கிறார்கள். அனானி ஒருவரும், விடைக்கு மிக அருகில் நெருங்கி வந்தார்.
Posted by யோசிப்பவர் at 7:03 PM 0 comments
Monday, April 16, 2007
பாதாள சாக்கடை
பி.கு.:
இந்தப் புதிரை ஏற்கெனவே ஒரு முறை டோன்டு கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
Posted by யோசிப்பவர் at 8:41 PM 8 comments
Friday, April 13, 2007
Thursday, April 12, 2007
ஓட்டம்
சம்யுக்தா ஒரு கல்லூரி வீராங்கனை. கல்லூரி வீராங்கனை. கல்லூரியில் நடந்த ஒரு ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டாள். பந்தயத்தில் மொத்தம் 3 கி.மீ. ஓட வேண்டும். இரண்டு கி.மீ ஓடி முடித்ததுமே, சம்யுக்தா தனது கைக்கடிகாரத்தை பார்த்தாள்.
'ஓ! நான் சராசரியாக மணிக்கு நான்கு கி.மீ வேகத்தில் ஓடி கொண்டிருக்கிறேன். ஆனால் சராசரியாக மணிக்கு ஆறு கி.மீ வேகத்தில் ஓடினால்தானே இதில் ஜெயிக்க முடியும்! இன்னும் விரைவாக ஓட வேண்டும்'. என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டுமென்றால், மீதியுள்ள ஒரு கி.மீ தொலைவை எவ்வளவு வேகத்தில் ஓடி கடக்க வேண்டும்?
Posted by யோசிப்பவர் at 4:40 AM 5 comments
Saturday, April 07, 2007
"தில்"லு
Posted by யோசிப்பவர் at 1:51 PM 3 comments
Friday, April 06, 2007
காட்சிப் பிழைகள்
கடைசியாக இங்கே சொடுக்குங்கள். இதனால் திறக்கப்பட்ட பக்கத்தில், நடுவே ஒரு முறை மறுபடியும் சொடுக்குங்கள். இப்பொழுது காட்சிப்பிழையின் நடுவே ஒரு 20 வினாடிகள் தொடர்ந்து பாருங்கள். அப்புறமாக தலையை உயர்த்தி உங்கள் மனைவியையோ, நண்பரையோ பாருங்கள். எப்படி தெரிகிறது?
Posted by யோசிப்பவர் at 5:36 PM 5 comments
Labels: காட்சிப் பிழை, மொத்தம்