முந்தின கேள்விக்கு விடை சொல்ல இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதால், கிரிக்கெட் சீசனை வீணாக்காமல் ஒரு கிரிக்கெட் கேள்வி கேட்கிறேன்.
தோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்(எந்த கிரவுண்டில் என்று குதற்கமாக கேட்காதீர்கள்). இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா?
Monday, December 12, 2005
தோனியும் சேவாக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பத்ரி சொன்னது சரிதான். 5வது பந்தில் முதல் பாட்ஸ்மேன் ஒரு ரன் ஓடுகிறார். அப்பொழுது ஓவர்த்ரோவில், பந்து பாட்ஸ்மேனின் தலைக்கவசத்தில் பட்டதால், மேலும் 5 ரன்கள், மொத்தம் 6 ரன்கள் பெறுகிறார். அடுத்த பந்தில் இன்னொரு பாட்ஸ்மேன் சிக்ஸரடிக்கிறார். ஆனால் இதில் Short தேவையா என்று எனக்கு தெரியவில்லை.
விக்கெட் கீப்பருக்குப் பின்னால் தரையில் வைக்கப்பட்டிருக்கும் தலைக்கவசத்தில் பந்து பட்டால் அதனால் கிடைக்கும் 5 ரன்கள் மட்டையாளருக்குக் கிடைக்காது. Penalty என்ற உதிரிகள் கணக்கில் சேர்க்கப்படும். ஆகவே நான் சொன்ன முறையில் மட்டும்தான் இந்த நிகழ்வு நடக்கச் சாத்தியம்.
Post a Comment