கீதா ஆரம்பித்த விதத்தை பின்பற்றி யாராவது விடை சொல்லி விடுவீர்கள் என்று நினைத்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.
இந்த கணக்கில் கேள்வி கேட்கபட்டவர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்கள் கூறிய விடைகள் 0விருந்து..8வரை. ஒவ்வொருவருக்கும் தனது இணையை கண்டிப்பாக தெரியும். வசதிக்காக இவர்களை அ0,அ1..அ8(அதாவது அ0 கூறிய விடை 0, அ1 கூறிய விடை 1..) என்றழைப்போம். இவர்களில் அ8 மொத்தம் 8 பேருக்கு வணக்கம் கூறியிருக்கிறார், தனது இணையை தவிர. அதே நேரத்தில் அ0 யாருக்கும் வணக்கம் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து தெளிவாவது அ0வும் அ8ம் தான் இணையாயிருக்க முடியும்.
அடுத்ததாக அ7. இவர் தனது இணைக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அ0வுக்கும் வணக்கம் தெரிவித்திருக்க முடியாது. அதே நேரத்தில் அ1, அ8க்கு மட்டும்தான் வணக்கம் தெரிவித்திருக்க முடியும்.இதன் மூலம் தெளிவாவது அ7ம், அ1ம் ஜோடி.
இதேபோல் அ6ம், அ2ம் ஒரு இணை, அ5ம், அ3ம் ஒரு இணை.
இனி பதில் சொன்னவர்களில் இணையில்லாமல் இருப்பவர் அ4 மட்டும்தான். அவர்தான் திருமதி. பாலகிருஷ்ணன். அவர் கூறிய விடை 4.
Thursday, December 15, 2005
வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!! - விடை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அடடடா just miss. ஹ்ம். நான் எப்படி கணக்கு போட்டேன்னா அ0 வந்து 0 பேருக்கு வணக்கம் சொன்னார். அ8 வந்து 8 பேருக்கு வணக்கம் சொன்னார்.
அப்ப அ0 யாருக்கும் சொல்லலை அ8 எல்லாருக்கும் (அ0 வை சேர்த்துக்கிட்டென் கேள்வி கேட்பவரை மறந்துட்டேன்)
இது தப்பாச்சே கணக்கு இடிக்குதேன்னு.
ஆனா கேள்வி கேட்பவரை சேர்த்துதான் 0-8 வரை என்று முதலில் ஆரம்பித்ததை மறந்துட்டேன். அதான் கணக்கு இடிச்சது.
Post a Comment