Friday, March 09, 2012

கலைமொழி -14

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.

எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை : நேற்றிரவு ஒரு கனவு நான் கடவுளுடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது கடவுள் கேட்டார் உனது நண்பன் யார் நான் உன் பெயரை சொன்னேன் அவர் சிரித்துவிட்டு கேட்டார் இன்னும் நீ திருந்தவே இல்லையா 

விடை கூறியவர்கள் : அகிலா ஸ்ரீராம், அரசு, 10அம்மா, தமிழ் பிரியன், முத்து, ஹரி, திரு.பூங்கோதை, விஜி, மாதவ்

Tuesday, March 06, 2012

குறுக்கெழுத்து ஆர்வலர்கள் Meetingகும், MINI குறுக்கெழுத்து விடைகளும்...

வருகின்ற ஞாயிற்றுக் கிழமை(11-Mar-2012), தமிழ் குறுக்கெழுத்து ஆர்வலர்கள் சென்னையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். சென்னையில் அல்லாதவர்களும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையில் சந்திப்பில் கலந்து கொள்வது குறித்தும் யோசித்து வருகிறோம்.  சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் ஆர்வலர்கள் முன்னதாக தகவல் தெரிவித்தால் நல்லது. இந்தப் பதிவிலேயே உங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம். அல்லது yosippavar@gmail.com  என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு மடல் அனுப்பியும் தெரியப்படுத்தலாம். எங்கே, எப்படி, எப்பொழுது போன்றவை, உங்களுக்கு மின்னசஞ்லில் தெரிவிக்கப்படும்.



இப்போ MINI குறுக்கெழுத்து விடைகள்:

இந்த முறை வரவேற்பு கொஞ்சம் கம்மிதான். பலராலும் முழுதாக முடிக்க வேறு முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு புதிர் என்பது எப்பொழுதும் அவிழ்க்க முடிவதாகவே இருக்க வேண்டும். புதிர் அவிழ்த்து முடித்ததும் கிடைக்கும் I've done it என்ற உணர்வை புதிர் அவிழ்ப்பவர்களுக்கு உருவாக்குவதே ஒரு புதிர் அமைப்பின் வெற்றி. அந்த வகையில் இந்த முறை புதிர் அமைப்பு ஒரு தோல்வியான attemptஆகவே எனக்குத் தோன்றுகிறது.


அனைத்து விடைகளும் சரியாகக் கூறியவர்கள் - பூங்கோதை, பார்த்தசாரதி, ஹரி பாலகிருஷ்ணன், நாகராஜன். கலந்து கொண்டு விடை கூறிய மற்றவர்கள் மாதவ், முத்து, அகிலா ஸ்ரீராம், வீ.ஆர்.பாலகிருஷ்ணன், K.R. சந்தானம்.

சரி. இப்பொழுது விடைகளைப் பார்ப்போம்.


குறுக்காக:

1.ஐஸ்வர்யா ராயாக <= “கிழவியா? அதிக”  - ‘விதி’ வீணாய்ப் போனது = கிழயாஅக ==> ”அழகியாக”
5.நடுவில்(மைய) நிற்காமல் தள்ளிப்போ(விலகு) விசை(யே)== ”மைய விலகு விசை”
7. புள்ளினங்களை(புள்ளி எழுத்துக்கள்) கொன்ற --> தாயா, மாணி’க்’க’ம்’ த’ந்’த = தாயாமாணிகதத --> மயங்கிய ==> அடங்காத தவிப்பா? ==”தணியாத தாகமா”
11.து’ரோகி’யான -> நோயாளியைத் துரத்தி = யானது + உயிரோடிரு என்று சொல்லி = பிழை==> கலங்குவது= தவறானது== ”பிழையானது”

நெடுக்காக:

1. ’வி’ரும்பி அமைத்த --> ‘வி’காரம் சரிந்து = ரும்பிஅமைத்த --> குலைந்தது ==> அபூர்வ சகோதரன் == ”அருமைத்தம்பி” 
2.உடல்(மெய்) குறைப்பை -->  விள’க்’கி’ச்’ =விளகி ==> சொல்==”கிளவி” 
3.ஒரு குடுகுடு கிளவி = குடு + “கதை” சொல்ல - பொங்கலன்று(தை) வராததால் --> திரும்பி வந்தாள் ==> விரைவாக == ”கடுகு”
4.இரவு”நேர சை”த்தான் தருவது ==> ஒரு ”நாள்”(அலகிடுதல்)==  ”நேரசை”
6.”கவி” + க”ற்”றது மெய் சேர்த்த -->கவிற்==> பொருள் கொடுத்து பணம் வாங்க==”விற்க”
8.”பிடித்தவையா”- எடுத்து ”வைத்த”= பிடியா=கரியா?==”யானையா”
9.வந்”தாளா து”ச்சாதனா என்ற சொல்லைக் கேட்க==> முடியாது==”தாளாது” 
10. பெரு=”மா” + மதிப்பை= ”விலை” -->தரும் ==>தோரணங் கட்டுவது== ”மாவிலை”