Friday, December 23, 2011

கணிதக் குறுக்கெழுத்துப் புதிர்

இந்த முறை கணிதக் குறுக்கெழுத்து. சுடோகு போல் இருக்காது என்றாலும் ரொம்பவும் காம்ப்ளக்ஸான கணித அறிவும் தேவையில்லை. Triangular Number, hexoganal number, automorphic number போன்ற வார்த்தைகளைப் பார்த்து மிரள வேண்டாம். கூகிளே துணை என்று கொண்டோர்க்கு குறைவொன்றுமில்லை. எண்களின் லிஸ்ட்டே கிடைக்கிறது. அதனால அவ்வளவு கஷ்டமாயிராது. என்ன, கொஞ்சம் பொறுமை தேவை - தேடிப் படிப்பதற்கும், அதை இங்கே பொருத்திப் பார்ப்பதற்கும்!

முழுமையாகத் தமிழ் வார்த்தைகள் கொடுக்க முடியாததற்கு வருந்துகிறேன்!!

abc
def
ghi
j



குறுக்காக :-

a) ஒரு Fibonacci எண்.(5)
(Fibonacci தமிழில் வேறு பெயர் உண்டா?!)


d) இந்த எண்ணின் வர்க்க மூலத்தில்(Square Root) முதல் இலக்கமும் கடைசி இலக்கமும் ஒரே எண்.(7)


g) 90709 என்ற பாலிண்ட்ரோமால்(Palindrome) வகுபடும் ஒரு எண். இரு 5கள் தொடர்ந்து வரும் ஒரு எண்.(7)
(Palindromeக்கு தமிழில் சரியான வார்த்தை என்ன?)


j) இரண்டே இரண்டு எண்களின் தொகுப்பாலான ஒரு பகா எண்(Prime Number). இரண்டு எண்களும் இடைவெளி இல்லாமல், தொடச்சியாகவே அமைந்துள்ளன. அதாவது xxyyy, xyyyy,xxxyy, xxxxy  போன்று இருக்கலாம்; xxyxy,xyyxx போன்றெல்லாம் இருக்காது.(5)

நெடுக்கு :-

a) ஒரு முக்கோண எண்(Triangular Number). முக்கோண எண் என்பது 1+2+3+4+....என்ற கூட்டுத்தொகைகளில் கிடைக்கும் எண்கள். (3)
(முக்கோண எண் என்பது சரியான பதம்தானா?!?)


b) ஒரு அறுங்கோண எண்(Hexagonal Number). மேலும் Narcissistic Number.(3)
(ஆம்ஸ்ட்ராங் எண் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே!)


c) பத்தொன்பதால் வகுபடும் ஒரு பாலிண்ட்ரோம்(Palindrome).(3)

e) பை(π) தெரியுமல்லவா? அதன் மதிப்பில் புள்ளிக்குப் பின் ”இத்தனையாவது” இடத்தில் மூன்று பூஜ்யங்கள் தொடர்ந்து வரும். அது எத்தனையாவது?!?;-).(3)


f) இதன் வர்க்கத்தை(Square), 3ஆல் பெருக்கினால், வரும் விடையில் கடைசி மூன்று இலக்கங்களும் இதே எண் வரும். இதற்குப் பெயர் "3-automorphic".(3)


g) இந்த எண்ணின் கணத்தில்(Cube) நான்கு 7கள் தொடர்ந்து வரும். இப்படிப்பட்ட எண்ணில் இது மிகவும் சிறிய எண்.(3)


h) இது ஒரு Tribonacci எண்.(3)


i) எல்லா எண்களும் இரட்டை. மேலும் அடுத்தடுத்த மூன்று எண்களின் கணங்களின்(cubes) கூட்டுத் தொகை.(3)

Ref :- http://www2.stetson.edu/~efriedma/numbers.html

கலைமொழி - 4

கலைமொழிப் புதிரால் ஈர்க்கப்பட்ட திரு.ராமசாமி, வெறும் ”நெடுக்காக” என்ற பதம் சரியாகப் புரியவில்லை என்று, இந்த விளையாட்டை ஆடுவது பற்றி ஒரு விளக்கமும் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது விளக்கம் கீழே...

இது மாயக்கட்டமுமில்லை, மந்திரமும் இல்லை. சாதாரண அறிவு விளையாட்டுதான். கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!!


இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும்.


எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.


மிகவும் எளிதான ஆட்டம். ஆனால் சுவாரஸ்யமான ஆட்டம். ஆடித்தான் பாருங்களேன்!
கலைமொழி 3க்கான விடை :- ஜீனோ தாவி நின்று கொண்டு பதினைந்து செகண்டுக்கு ஒரு முறை வாலாட்டி அவ்வப்போது வவ் வவ் என்று குரைத்தது 

சென்ற முறை சுஜாதா என்பதே ஒரு க்ளூவாகிப் போனது. இனிமேல் நம் மக்களுக்கு க்ளூ எதுவும் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது நாவல்களில் வந்ததோ, பிரபல எழுத்தாளர்கள் யாரும் எழுதியதோ கிடையாது. கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கலைமொழி 3க்கு விடையளித்தவர்கள் :- பூங்கோதை, கலை, ஹரிஹரன், ஹேமா, முத்து, பத்மா, அனிதா, அருந்ததி, ராமசாமி, ஹரி, மாதவ். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!!!

எச்சரிக்கை : இன்னும் சில மணி நேரங்களில் கணிதக் குறுக்கெழுத்தை எதிர்பாருங்கள்!!