Thursday, December 22, 2011

கலைமொழி - நீங்களே எளிதாகப் புதிரமைக்கலாம்

இந்தக் கலைமொழி விளையாட்டு பலரைக் கவர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். அறிமுகப்படுத்திய நண்பர் மனுவுக்கு நன்றி.

தமிழில் இந்த விளையாட்டு புதிதுதான். அதனால் பலரும் இந்த வகைப் புதிரை அமைக்க ஆரம்பித்தால்(புதிரை விடுவிப்பது அல்ல. புதிர் உருவாக்குவது) இந்த விளையாட்டின் மற்ற பரிமாணங்களையும் நாம் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வகை புதிரை எளிதாக உருவாக்க நான் ஒரு ஆன்லைன் செயலி வடிவமைத்திருக்கிறேன். http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html - இங்கே சென்றால் நீங்களே ஒரு புதிரை வடிவமைத்து Html Code ஆக ஆன்லைன் வடிவத்தைப் பெற்று உங்கள் தளத்தில் வெளியிட முடியும்.

உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

உபசெய்தி : நண்பர் பூங்கோதை தனது முதல் கலைமொழியை இந்த செயலி மூலம் வடிவமைத்து  வெளியிட்டிருக்கிறார் - http://www.tamilpuzzles.com/2011/12/18/km1/. அதையும் விளையாடி மகிழுங்கள்.

Wednesday, December 21, 2011

கலைமொழி - 3

இன்று சுஜாதா எழுதியது.

எச்சரிக்கை : தமிங்கில வார்த்தைகள் கலந்திருக்கலாம்.


விளையாட்டு விதிமுறை/விளக்கம் : கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph) நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும். 

ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.


கலைமொழி 2க்கு வரவேற்பு நன்றாக கூடியிருந்தது. இந்த முறை விடை சொன்னவர்கள் மனு, ஹரி பாலகிருஷ்ணன்,ஹரிஹரன், முத்து, பூங்கோதை, பத்மா, அருந்ததி, ராமசாமி, மாதவ். அனைவருக்கும் நன்றி! 

கலைமொழி 2 விடை :- மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார் என்று குதூகலமான மறுமொழி கேட்டது