ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.
மனு, கலை, பூங்கோதை ஆகியோர் மட்டுமே விடையளித்திருந்தனர்.
யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுகிட்டே இருங்க!!!
Posted by யோசிப்பவர் at 10:57 AM 12 comments
Labels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு
இந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். முதல் புதிர் எளிதாகவே இருக்கும்படி அமைத்திருக்கிறேன்.
கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph)நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.
ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.
ஓகே. ஆட்டம் ஆரம்பமாகட்டும்! ஸ்டார்ட் மியுஜிக்!!!;-)
Posted by யோசிப்பவர் at 1:59 PM 6 comments
Labels: Puzzles, அறிமுகம், கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு