Wednesday, June 04, 2008

சிறைச்சாலை - விடை





இந்தப் புதிரை கொஞ்சம் விரிவாக அலசலாம்.

இப்பொழுது ஒரே ஒரு சிவப்பு முத்திரைதான் குத்தப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்(Assumptionதான்).

முதல் மாதத்தின் முடிவில் :-

1) சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ளவன், வேறு யார் முதுகிலும் சிவப்பு முத்திரையே இல்லாததால், ஒரே ஒரு சிவப்பு முத்திரைதான் குத்தப்பட்டுள்ளது, அதுவும் தன் முதுகில் என்று யூகிப்பான். அதை வார்டனிடம் சொல்லி அவன் விடுதலையாகி விடுவான்.

2) மற்றவர்களுக்குத் தெரிவது ஒரே ஒரு சிவப்பு முத்திரை. இதன் மூலம், அவர்கள் முடிவு செய்வது, மொத்தம் ஒன்று அல்லது இரண்டு தான் சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒன்றே ஒன்றாயிருந்தால், அவர்கள் கண்களுக்குத் தெரிந்த கைதியின் முதுகில் குத்தப்பட்டது மட்டும். இரண்டாயிருக்கும் பட்சத்தில், தஙளது சொந்த முதுகிலும் சிவப்பு முத்திரை குத்தப்பட்டிருக்கலாம். இப்பொழுதே எது சரியென்று தீர்மானிப்பது முடியாது. ஆகையால் அடுத்த மாதம் வரை பொறுத்திருப்பார்கள்.

இரண்டாவது மாதத்தின் முடிவில் :-

1) இப்பொழுது எல்லோருக்குமே முதல் மாதம் விடுதலையாகி போய்விட்ட கைதியின் காலி அறை தெரியும். மேலும் எல்லோருக்குமே தெரிவது பச்சை முத்திரை மட்டும்தான். தனது முதுகிலும் சிவப்பு முத்திரை இருந்திருந்திருந்தால், முதல் மாதமே விடுதலையான கைதியால் சரியான விடையை யூகித்திருக்க முடியாது. அதனால் தனது முதுகில் இருப்பது பச்சை முத்திரைதான் என்று முடிவு செய்து, அதை வார்டனிடம் சொல்லி எல்லோருமே விடுதலையாகி விடுவார்கள்.



சரி. இப்பொழுது மொத்தம் இரண்டு சிவப்பு முத்திரைகள் குத்தப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்(Assumption 2).

முதல் மாதத்தின் முடிவில் :-

1) சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ள கைதிகள் இருவருக்கும், ஒரே ஒரு சிவப்பு முத்திரை மட்டும் தெரியும். இதனால் மொத்தம் குத்தப்பட்ட சிவப்பு முத்திரைகள் ஒன்று அல்லது இரண்டு என்பது இவர்களுக்கு உறுதியாகிறது. ஆனால் ஒன்றா இரண்டா என்பதை இந்த மாதமே முடிவு செய்ய முடியாது. அதனால் அடுத்த மாதம் வரை பொறுத்திருப்பார்கள்.

2) மற்றவர்களுக்குத் தெரிவது இரண்டு சிவப்பு முத்திரைகள். அப்படியென்றால் மொத்தம் இரண்டு அல்லது மூன்று சிவப்பு முத்திரைகள் குத்தப்பட்டுள்ளன என்ற முடிவிற்கு வருகிறார்கள். தங்கள் முதுகில் குத்தப்பட்டள்ள வண்ணம் குறித்து இப்பொழுது எந்த முடிவிற்கும் வர முடியாததால், இவர்களும் பொறுத்திருப்பார்கள்.


இரண்டாவது மாதத்தின் முடிவில் :-

1) சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ள கைதிகள் இருவரும், யாருமே விடுதலையாகவில்லை என்பதை கவனிக்கின்றனர். மேலும் அதே ஒரு சிவப்பு முத்திரை இந்தத் தடவையும் தெரிவதை கவனிப்பார்கள். தனது முதுகில் கருப்பு வண்ணத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்தால், இன்னொருவன் முதல் மாதமே விடுதலையாகியிருப்பான். ஆனால் அவன் அப்படி விடுதலையாகவில்லை. ஆகையால் தனது முதுகில் இருப்பது சிவப்பு முத்திரையே என்ற முடிவிற்கு இருவருமே வந்து, அதை வார்டனிடம் சொல்லி, விடுதலையாகி விடுவார்கள்.

2) கருப்பு வண்ண முத்திரைக்காரர்களுக்கு, இந்த மாதமும் இரண்டு சிவப்பு முத்திரைகளும், யாருமே முதல் மாதம் விடுதலையாகவில்லை என்பதும் தெரிகிறது. இப்பொழுதும் அவர்கள் முதுகில் உள்ளதை சரியாக யூகிக்க முடியாததால், மறுபடியும் பொறுத்திருப்பார்கள்.

மூன்றாவது மாதத்தின் இறுதியில் :-

1) கருப்பு வண்ண முத்திரையுள்ளவர்களுக்கு, இந்த மாதம் சிவப்பு முத்திரை குத்தப்பட்ட கைதிகளின் இரு அறைகளும் காலியாகத் தெரியும். இதன் மூலம் தங்கள் முதுகுகளில் குத்தப்பட்டுள்ளது கருப்புதான் என்ற முடிவிற்கு வந்து, அவர்களும் இந்த மாதமே விடுதலையாகி விடுவார்கள்.

மேலேயுள்ள எடுத்துக்காட்டுகளின்படி, கைதிகள் விடுதலையாகும் காலம், குறைவாக குத்தப்பட்ட வண்ண முத்திரையின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.

அதாவது 6 கறுப்பு முத்திரைகளும், 94 சிவப்பு முத்திரைகளும் குத்தபட்டிருந்தால், குறைவான எண்ணிக்கை உள்ள வண்ணம், அதாவது கறுப்பு வண்ண முத்திரையுள்ளவர்கள், அந்த வண்ணத்தின் எண்ணிக்கையளவான மாதங்கள்(ஆறு மாதம்) சிறையில் இருக்க வேண்டியிருக்கும். மற்றவர்கள், அவர்களை விட ஒரு மாதம் அதிகமாக(ஏழு மாதம்).

சரி. நமது கேள்வி என்ன?

எல்லா கைதிகளும் விடுதலையாவதற்கு, குறைந்தபட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்? அதிக பட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்?

எல்லா கைதிகளும் விடுதலையாவதற்கு, குறைந்தபட்சமாக இரண்டு மாதங்கள் ஆகும்.

அதிகபட்சமாக? 99ஓ, 100ஓ இல்லை. 51கூட இல்லை. 50தான். அப்பொழுது இரு வண்ணங்களுமே 50/50 என்று இருப்பதால். இரு வண்ணங்களுமே குறைந்த பட்ச எண்ணிக்கை கொண்டதாகிவிடும்.

பி.கு :- படங்களைப் பார்த்து உங்கள் கண் கெட்டு விட்டதென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை!!:-)






Tuesday, June 03, 2008

கொஞ்சம் ஆறுதலுக்காக

போன பதிவை பார்த்து வெறுப்படைஞ்சவங்களுக்கு, கொஞ்சம் ஆறுதலாக.. கொஞ்சம் கலை வண்ணமுமாய்..























Monday, June 02, 2008

என்ன கொடுமை சார் இது?!?