Tuesday, February 27, 2007

சில்லறை விடை

யாரோ ஒருவன் மட்டும் சரியான விடையளித்திருக்கிறார். பாராட்டுக்கள்!!!

இந்த புதிரில் நாம் ஷூவின் விலை எவ்வளவாயிருந்தாலும், சில்லறைகளை எண்ணாமல் சில குறிப்பிட்ட பைகளை மட்டும் கொடுத்து வாங்கி விட வேண்டும்.

இதற்கு நாம் ஒவ்வொரு பையிலும், அடுத்தடுத்த இரண்டின் மடங்கு(பைனரி!) மதிப்புள்ள பணத்தை கட்டிக்கொள்ள வேண்டும். அதாவது முதல் பையில் 2^0=1 ரூபாய், இரண்டாவது பையில் 2^1=2 ரூபாய், 3வதில் 2^2=4, 4வதில் 2^3=8....9வது பையில் 2^8=256 ரூபாய், 10வது பையில் மீதியுள்ள 489 ரூபாய் என்று கட்டிக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஷூவின் விலை என்னவாயிருந்தாலும், சில்லறைகளை எண்ணிக் கொண்டிருக்காமல், சில பைகளை மட்டும் கொடுத்து வாங்கி விட முடியும்.

உதாரணத்துக்கு, ஷூவின் விலை 229 ரூபாய் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது 1, 3, 6, 7, 8 ஆகிய பைகளை மட்டும் கொடுத்து வாங்க வேண்டும். அதுவே ஷூவின் விலை 739 ரூபாய் என்றால், நீங்கள் கொடுக்க வேண்டிய பைகள் 2, 4, 5, 6, 7, 8, 10.

Monday, February 19, 2007

சர்வாதிகாரமும் - ஜனநாயகமும்

மேலும் ஒரு வலைத்துணுக்கு ஆரம்பித்திருக்கிறேன் "எனது சிந்தனைகள்" என்ற பெயரில். மூன்று பதிவுகளுக்குப் பின்தான் தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும், பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், இரு சோதனை பதிவுகளுக்குப் பின், முதல் சிந்தனையான "சர்வாதிகாரமும் - ஜனநாயகமும்" பற்றி படிக்க இங்கே லிங்க் கொடுத்துள்ளேன். அரோக்கியமான கருத்து பறிமாற்றங்கள் வரவேற்கப் படுகின்றன!

Saturday, February 17, 2007

சில்லறை




பத்ரியை பார்த்ததும் ஜோன்ஸுக்கு சிரிப்பு வந்து விட்டது.

"என்னடா, கோயில் உண்டியலை உடைச்சுட்டியா?" நக்கலாக கேட்டான் ஜோன்ஸ்.

"அடப் போடா நீ வேற! நம்ம அண்ணாச்சி, கடைல சில்லறை வேணும்னு கேட்டிருந்தார். இன்னைக்கு பேங்க்குக்கு போனப்ப ஞாபகம் வந்தது. சரின்னு, கையிலிருந்த ஆயிரம் ரூபாய்க்கும் சில்லறை வாங்கி, ஒரு ரூபாயா கொண்டுபோய் கடைல கொடுத்தா, அவர் ஏற்கனவே வேற இடத்துல 1500 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டாராம். இது வேண்டாம்னுட்டார்." சலித்தபடி பத்ரி அந்த சாக்குப் பையை ஓரமாக வைத்தான்.

"இப்ப இதை என்ன பண்ணப் போற? திரும்பவும் கொண்டு போய் பேங்குல கொடுத்துற வேண்டியதுதானே?"

"டைம் இப்பவே ஆறாகி விட்டதே! சாயங்காலம் போய் ஒரு ஷூ வாங்கலாம்னு நினைச்சேன். ஆனா இப்ப கடைல போய் நின்னுகிட்டு சில்லறைய எண்ணிகிட்டிருந்தா நல்லாவா இருக்கும்? நாளைக்குதான் வாங்கமுடியும் போல!", என்றான் எரிச்சலோடு.

ஜோன்ஸ் சிறிது நேரம் யோசித்தான். "நீ கடைல போய் சில்லறைய எண்ண வேண்டாம். ஆனா, இன்னைக்கே ஷூ வாங்கிரலாம். நான் சொல்றபடி செய்."

பிறகு இருவரும் சாக்குப்பையிலிருந்த சில்லறைகளை பிரித்து, எண்ணி, பத்து பைகளில் கட்டினர்.

ஜோன்ஸ், "இப்ப நீ சில்லறைகளை எண்ணாமலேயே பணம் கொடுத்து ஷூ வாங்கிரலாம்!" என்று கண் சிமிட்டினான்.

அப்படியென்றால் அவர்கள் சில்லறைகளை எவ்வாறு பிரித்துக் கட்டியுள்ளனர்?

Tuesday, February 13, 2007

பிரிக்க முடியுமா - விடை


Thursday, February 08, 2007

துளி ஓவிய நடனம்








Monday, February 05, 2007

பிரிக்க முடியுமா?

கீழே படத்திலுள்ள கனசதுரத்தை பாருங்கள்.

இது இரண்டு மரத்துண்டுகளால் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு துண்டுகளையும், சாதாரணமாக நீங்கள் பிரிக்க முடியாது(ஃபெவிக்காலெல்லாம் இல்லை!). படத்தை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும். ஆனால், தச்சர் இதை செய்யும்பொழுது, இரண்டு துண்டுகளையும் தனித்தனியே செதுக்கித்தானே சேர்த்திருப்பார். அவர் இந்த துண்டுகளை சேர்த்த அதே முறையில் அவற்றை பிரிக்கவும் முடியும். அப்படியானால் இந்த இரு துண்டுகளும் எவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன? (முடிந்தால் படம் போட்டு காட்டவும்!!!)

Thursday, February 01, 2007

நவுருது நவுருது...


நவுருதா, நவுரலையா?