Saturday, December 12, 2009

பெருக்கத் தெரியுமா? - விடை

1)
வரிசை 6ன் கடைசி எண் 1 என்பது தெளிவு.
வரிசை 3ல் கடைசி எண் 1 என்பது மூன்று பெருக்கல்களில் மட்டுமே வரும். (9, 9), (3, 7), (7, 3).
முதலில் (9, 9) வாய்ப்பை பார்ப்போம்.
அதில் வரிசை 1ன் இரண்டாம் எண் 7 தான் வரும்.
ஆனால் வரிசை 5ன் கடைசி 22 என்பது எந்த 79 பெருக்கல்களுக்கும் வரவில்லை! எனவே (9, 9) வாய்ப்பு தவறு!
இதே காரணத்தால் (3, 7) வாய்ப்பும் வராது.

எனவே (7, 3) வாய்ப்பே சரியானது.
அதில் வரிசை 1ன் இரண்டாம் எண் 3 தான் வரும்
வரிசை 2ன் முதல் எண் 6 தான்.
வரிசை 3ன் முதல் எண் 1 அல்லது 2 ஐ தவிர வேறெதுவும் வராது. (937 * 3 = 2811).
எனவே வரிசை 5ன் இரண்டாம் எண் 0 மட்டுமே வரும்! (ஏனென்றால் அதற்கு முந்தைய நெடுக்கு கூட்டலில் இருந்து carry வராது)

இதிலிருந்து வரிசை 1ன் முதல் எண் 3 அல்லது 8 என்பது தெளிவு. (337 * 6 = 2022 & 837 * 6 = 5022)
இதில் வரிசை எண் 1ன் முதல் எண் 3 என்பது எந்த பெருக்கலுக்கும் வரிசை 4 ஐ சரிப்படுத்தாது!
எனவே 8 என்பதே சரி.
விடை :-
2) மேற்கண்டபடியே யோசித்தால் அடுத்த புதிருக்கு கீழ்கண்ட விடை வரும்.

- ஸ்ரீதேவி

Wednesday, December 02, 2009

பெருக்கத் தெரியுமா?



உடனே துடைப்பம், மாப் வகையறாக்களை தூக்கி கொண்டு வராதீர்கள்!

இந்த முறை மிக மிக ....... மிக எளிதான புதிர்தான்!(அத நாங்க சொல்லனும்!) சிம்பிள் பெருக்கல்!

அடிப்படை பெருக்கல் தெரிந்தவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம்! மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட ...
"I will use onlyyyy calculator" என்று கூறுபவர்கள் விலகிக் கொள்ளலாம்.

கேள்வி எளியது. கீழேயுள்ள இரண்டு பெருக்கல்களிலும் ’* வரும் இடங்களில் உள்ள எண்களை கண்டுபிடியுங்கள்.

Saturday, November 28, 2009

உதவி தேவை நண்பர்களே!!!


ஏற்கனவே இட்லிவடையில் வந்ததுதான். இன்னும் வந்து சேர்ந்த உதவிகள் போதுமானதாயில்லை. எனக்கு வந்த தகவல்கள் உண்மையானதுதான் என்பதை என்னால் முடிந்தவரை நன்கு விசாரித்துவிட்டேன். இணைய நண்பர்கள் கண்டிப்பாக உதவுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதிவு. இந்தப் பதிவின் மூலம் நண்பர் பாலமுருகனுக்கு ஒரிருவராவது உதவினால், மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாவேன்.

One of my friend (Balamurugan) who is working at Cognizant suffering from T Cell Acute Lymphocytic Leukemia (A type of Blood Cancer).He was admitted in CMC Hospital, Vellore. He has got a survival chance of 80% when he finds a proper Donor who can match unrelated allergenic stem cell transplantation(related to Bone Marrow Transplantation).The estimated cost of this treatment would be Rs.70,00,000(Seventy Lakhs).


I would appreciate if you could contribute/Donate your money for his treatment. The money you donate would be one of your general expense but it can save a life. After all we earn money every month to spend. Let’s spend money for a Nobel purpose. Seventy Lakhs is not a small amount for a person coming from a normal middle class family. Let’s join our hands to save a life.

For more details contact my number: 98841 58575



ICICI Account No: 021201511398

ICICI Account Name: Sheik Mohamed Sithik Ali

Branch: Santhome



Note: I make a humble request you to take initiative and contact your friends on behalf of me. And, collect money in person or to your account and later transfer to me, so that I can hand over to our friend.



You can contribute whatever the amount. Please join me to save his life.



Note: Bala has undergone 2 cycles of chemotherapy (It will be done periodically). CMC is in the process of finding the donor. Our friends are also in touch with DATRI (Stem cell Donors Registry, Abiramapuram, Chennai - 18). As Chemo is very costly process, it is better how fast we can reach a suitable donor. Let us pray for his speedy recovery


Patient Details ********************************



Christian Medical College Vellore Association,
Current Account No. 10404158238
Bank Name - State Bank of India
Vellore Town branch,
Br code - 1618
IDS SCUDDER Road,
Vellore - 632004
Swift no - SBININBB473
Patient Name - Balamurugan Gnanaprakasam (Refer Patient Name and Hospital No in the transaction remarks)
Hospital No. 558129D



POC Contacts



Chennai - Kalyani V (104363 ) - 91-44-43583697

US - Kandaswamy Shanmuga(110999) - 201 680 2278

UK - Saranya Jayadev (158703) - 207 163 5074



Note: CTS employee Id given along with POC’s name… This will be useful for CTS employees for contacting the POC

Tuesday, November 10, 2009

உங்கள் ரோல் மாடல் யார்?

உங்களுடைய ரோல் மாடலை தேர்ந்தெடுக்க எளிய வழி.

ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை மூன்றால் பெருக்குங்கள். வந்த விடையோடு மூன்றை கூட்டுங்கள். பின் மறுபடி 3ஆல் பெருக்குங்கள். கடைசியாக கிடைத்திருக்கும் இரண்டிலக்க எண்ணில் உள்ள இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். அந்தக் கூட்டுத்தொகையிலிருந்து இரண்டை கழியுங்கள். முடிந்தது.

கணக்கை சரியாக போட வேண்டும். எதையும் மிஸ் செய்து விடக் கூடாது. கூட்டல் கழித்தல் எல்லாம் ஒரு தடவைக்கு, இரண்டு தடவை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் தவறான ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்து தொலைத்து விடுவீர்கள்

இப்பொழுது கடைசியாக உங்களுக்கு கிடைத்திருக்கும் எண்ணைக் கொண்டு, கீழிருக்கும் லிஸ்டில், உங்கள் ரோல் மாடல் யார் என்று கண்டு கொள்ளுங்கள். அவரையே நீங்கள் Follow செய்தால், வலையுலகில் வெற்றி நிச்சயம் என்பது உறுதி கிடையாது.




1) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
2) காந்தி.
3) ஐஸக் நியூட்டன்.
4) அப்துல் கலாம்.
5) பில் கேட்ஸ்.
6) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
7) யோசிப்பவர்.
8) பிராட் பிட்.
9) ஷிட்னி ஷெல்டன்.

Friday, November 06, 2009

குறுக்கெழுத்துப் போT - 5 விடைகள்

விடை சொல்லும் நேரம் வந்தாச்சு! முதலில் 20-20 போட்ட பூங்கோதை, வாஞ்சி, லாவெர்டண்டீஸ் மூவருக்கும் சபாஷ்!

இம்முறை புதிர் விடைகளை பெயர்கள், இடங்கள், சினிமா, புத்தகம் என்ற நான்கு வட்டத்திற்குள் அடைக்க முயற்சித்தோம். (Names, Places, Things, Animals விளையாடியுள்ளீர்களா ?!) work out ஆகிவிட்டது என்றாலும் interesting ஆக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆங்காங்கே “தேவராட்டி”, ”கிரேக்க நாடக திரை”, “டிங்கா டிங்கா” போன்ற கடின குறிப்புகளை உபயோகப்படுத்தி இருந்தாலும் கண்டுபிடிக்க கூடிய அளவிலேயே இருந்ததாக எண்ணுகிறோம்.

குறுக்காக :
2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்?
மேன்மை = தரம், மரணமடையவா = சாவதா ----> சாவதா, தரம் உள்ளே சென்று தசாவதாரம் ஆனது!

6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா?
”கன்னி தாயா சேயா”வில் கயா காணாமல் “ன்னிதாசேயா” ஆனது. குழப்பத்தை போக்கினால், டிங்கா டிங்கா ஓவியத்திற்கு பெயர் பெற்ற ”தான்சேனியா” வரும்!

8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான்.
எளிய குறிப்புதான் - வசீகரா!

9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது.
அக் + கிறக்க பானம் = ரம் -----> அக்ரம்! பந்தை பாட்டில் மூடியால் சேதப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியதாய் ஒப்புக் கொண்ட பிரபலம். பல பேரும் தடுமாறிய குறிப்பு இதுதான்.

12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே.
கம்பர்! எளிதான குறிப்பே.

16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது.
யவனிகா! தா”னியகாவ”ல் நடுவில் கசங்கி உள்ளது. நாடக திரைக்கு யவனிகா என்ற கிரேக்க மூலப்பெயரும் உண்டு.

17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள்.
அதே பாலை + நீங்கள் ஆங்கிலத்தில் = யு -------> அலைபாயுதே!

19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம்.
வீரப்பன் காட்டை கொளுத்தினால் “சத்தீ” + (ஆ)ஸ்கார் = சத்தீஸ்கார்! கோஸாப் பட்டு பற்றி அறிய

நெடுக்காக :

1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள்.
அமிதாப்! பலர் எளிதாகவே கண்டு பிடித்து விட்டார்கள். one man industry என்ற பெயர் 70ஸ் நபர்கள் அறிந்திருப்பார்கள்.

3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி.
சாலினி!

4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம்.
ரகுவம்சம்! இஷ்வாகு குலத்தின் fastest chariot rider = ரகு (அந்த கால ஷுமேக்கர்) , சந்ததி = வம்சம்

5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி.
ராஜா ராணி! வெறும் கிரீடத் தம்பதி என்று கொடுக்கலாமா என யோசித்தோம். விடை கண்டுபிடித்தவர்கள் பலருக்கும் அது கலைஞர் வசனம் எழுதிய படம் என்பது தெரியுமா?

7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை.
சேதக்! குறிப்பிலேயே விடை உள்ளது.

9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது.
அபு! ஏசியாட் குட்டி யானை என்று கொடுத்திருந்தால் பலருக்கும் எளிதாக இருந்திருக்கலாம்! இதையும் இதற்கு related குறிப்பான ”அக்ரம்”மிலும் பலபேர் சிரமப்பட்டு விட்டனர்.

10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன்.
ரஜினிகாந்த்! super star க்கு விளக்கம் தேவையா?

11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும்.
யா(தவ)ர்!

13) பாபம் மாற்றிய புண்ணிய நதி.
பம்பா!

14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன்.
நா(யக)ன்!

15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான்.
பபூ(ன்) + தேர் => வழிகுழம்பி ”பதேபூர்!”

18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே.
லைக்கா! குறிப்பிலேயே விடை உள்ளது. லைக்கா யாருன்னு தெரியுமில்ல!

பின் குறிப்பு
உங்களின் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!

Saturday, October 24, 2009

குறுக்கெழுத்துப் போT - 5

Hello everybody,
இந்த மாத குறுக்கெழுத்து புதிரை தீபாவளி ரிலீஸாக வெளியிட நினைத்தேன். ஆனால், அதிகப்படியாக வந்திருந்த ஸ்வீட், காரத்தால் (பூங்கோதை, பார்த்தசாரதி, இலவச கொத்தனார்) ஒரு வார தாமதம் ஏற்பட்டுவிட்டது. Just ஒரு வாரம் தான்! பொங்கல் ரிலீஸ் என்று ஆகவில்லையே!

வெல், அடுத்தடுத்து குறுக்கெழுத்து solve பண்ணி fed up ஆகியிருப்பீர்களோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் இம்முறை புதிரை சற்று எளிதாகவே அமைத்துள்ளேன்.

இது போன்ற குறுக்கெழுத்து புதிரை அவிழ்ப்பதற்கு திரு. வாஞ்சி அவர்களின் எளிய அறிமுகம் இங்கே! வழக்கம் போல மதிப்பெண் பட்டியல் இங்கே.

இனி புதிருக்கான கட்டவலையும், குறிப்புகளும் . . . . . .

1
234
5






67
8







910

11



1213
14





15
16
1718







19


குறுக்காக :

2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்? (6)
6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா? (5)
8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான். (4)
9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது. (4)
12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே. (4)
16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது. (4)
17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள். (5)
19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம். (6)

நெடுக்காக :

1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள். (4)
3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி. (3)
4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம். (6)
5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி. (4)
7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை. (3)
9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது. (2)
10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன். (6)
11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும். (2)
13) பாபம் மாற்றிய புண்ணிய நதி. (3)
14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன். (4)
15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான். (4)
18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே. (3)

Thursday, October 15, 2009

எண் என்ப... - விடை

142857

இந்த எண்ணில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? 1லிருந்து 7யை வகுத்தால் கிடைப்பது

1/7 = 0.142857142857142857.....

= 0.142857

இது மட்டுமல்ல!

1/7 = 0.142857142857....
2/7 = 0.285714285714....
3/7 = 0.428571428571....
4/7 = 0.571428571428....
5/7 = 0.714285714285....
6/7 = 0.857142857142....

அனைத்து விடைகளிலும் அதே ஆறு எண்கள் அதே வரிசையில் மீண்டும் மீண்டும் வருவதை கவனியுங்கள்!

எண் 7 க்கு பிறகு இந்த சிறப்பை பெறும் அடுத்த எண் 19. ஆம்! 1/19, 2/19, 3/19, .... , 18/19 விடைகளில் புள்ளிக்கு (decimal) பிறகு 18 எண்களை எழுதுங்கள். இங்கும் அதே வரிசையில் அதே வித பண்போடு எண்கள் மீண்டும் மீண்டும் வருவதை காண்பீர்கள்!!

மேலும் இந்த பண்பை பற்றி தெரிய விரும்புபவர்கள் primitive roots for prime numbers பற்றி படியுங்கள்.

- ஸ்ரீதேவி.

Thursday, October 08, 2009

எண் என்ப...?!

அரிச்சுவடியில் ஆரம்பிக்கும் எண்களின் ஆர்ப்பாட்டம், ஆயுள் வரை நீடித்தாலும், சில எண்கள் மட்டும் கவர்ச்சிகரமாய் அமைந்து விடுகிறது. இத்தகைய எண்களை கண்டுபிடித்ததாலேயே ராமானுஜம் உலகப்புகழ் பெற்றார்.

இப்பொழுது நீங்கள் கண்டுபிடிக்கப்போகும், இந்த ஒன்பதால் வகுபடும் ஆறு இலக்க எண்ணும் பிரபலமான ஒன்றுதான். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

1. அனைத்து இலக்கங்களும் வேறு வேறு எண்களால் ஆனது.
2. இரண்டாம் இலக்கத்தையும் மூன்றாம் இலக்கத்தையும் பெருக்கினால் நான்காம் இலக்கம் வரும்.
3. ஐந்தாம், மூன்றாம் இலக்கங்களை கூட்டினாலும், நான்காம் இலக்கத்திலிருந்து முதல் இலக்கத்தை கழித்தாலும் ஆறாவது இலக்கம் வரும்.

எனில் அந்த ஆறு இலக்க எண் எது?

முடிந்தால் அந்த எண் ஏன் சிறப்பு வாய்ந்தது என்றும் கண்டுபிடியுங்கள்!!!


- ஸ்ரீதேவி.

Friday, October 02, 2009

குறுக்கெழுத்து போT - 4 விடைகள்

இந்த முறை விடை சொன்னவர்கள் மிக மிக குறைவுதான்(மொத்தமே 5 பேர்தான்). ரொம்ப கஷ்டமாக இருந்ததா? இல்லை இதெல்லாம் ஒரு புதிர்னு சொல்லி லூஸ்ல விட்டுட்டீங்களான்னு தெரியவில்லை.

விடை சொன்ன அந்த 5 பேர் :

1) வாஞ்சிநாதன்
2) வீ.ஆர். பாலகிருஷ்ணன்.
3) குன்னத்தூர் சந்தானம்
4) பூங்கோதை
5) அரசு

இதில் எல்லாவற்றுக்கும் சரியான விடையளித்தவர்கள் பாலகிருஷ்ணனும், பூங்கோதையும்.

குறுக்காக

1. சொக்காய் - மதுரை மன்னனை நிறைய பேர் பாண்டியன் என்று நினைத்து குழம்பிவிட்டார்கள். குழம்ப வேண்டும் என்றுதான் கொடுத்திருந்தோம். பலரும் சொக்கா’வா’ என்றே விடை சொன்னார்கள். அழைத்தாய் இறுதியாக என்று கொடுத்திருந்ததால் சொக்காய் என்பதே சரியான வார்த்தை. இருந்தாலும் ’சொக்காவா’க்கும் மதிப்பெண் கொடுத்தோம்.

3. அரோகரா - கந்தன் புகழ் பாடு என்று கொடுத்திருக்க வேண்டும். தவறை சுட்டிக் காட்டிய வாஞ்சிக்கு நன்றி. ஆனாலும் எல்லோரும் கண்டுபிடித்து விட்டார்கள். துருவ ஒளி - அரோரா - வட/தென் துருவங்களில் மட்டும் பனிப்பரப்பினால் இயற்கையாக தோன்றும் வண்ண ஒளி.

7. சிந்தாமணி - எளிய குறிப்புதான். விரும்பியது கொடுக்கும் மணி - சிந்தாமணி.

8. தாழி - ’த’கரம் + கடல் (ஆழி) . குழம்புவீர்கள் என்று நினைத்தோம். ம்ஹும். நீங்களாவது குழம்புவதாவது.

9. வெண்ணை உருண்டை - கருணை குறைவாய் என்பது ’க’ இல்லாமல் ருணை என்பதை குறிக்கிறது. இதனுடன் ’வெண்டை உண்’ என்பதில் உள்ள எழுத்துக்களை கலக்கினால் கண்ணனைக் கவரலாம். இதிலும் ஒரு பிழை உண்டு. ’வெண்ணெய்’ என்பதே சரியான வார்த்தை. இனி கவனமாக இருக்க வேண்டும்.

10. மீறி - ’மீன் வலையைப் பற்றி’ என்பதன் முதல் கடைசி எழுத்துக்கள் சேர்ந்து அடங்காமல் போனது.

12. விண்கலமா - ’கவி மாலன்’ முட்டை அதிகம் உண்டால் கவி மால’ண்’ ஆவார். அவர் குழம்பினால் வேற்றுக் கிரகம் போவார்.

14. துந்துபி - பேரிகை என்ற க்ளுவிற்கு பதில் அறுபது தமிழ் வருடங்களில் ஒன்று என வரும்படி கொடுக்கலாம் என்று நினைத்தோம். பிறகு வாக்கிய அழகிற்காக மாற்றி விட்டோம்.

15. மிதியடி - இந்த க்ளு எனக்கே பிடித்திருந்தது. சேது நாயகன் என்ற வார்த்தைக்கு விக்ரமிடமிருந்து விலகி, ராமர் என்று யோசித்தால் எளிதில் கண்டு பிடித்திருக்கலாம். அதையும் மூன்று பேர் சரியாக யோசித்துள்ளனர்.


நெடுக்காக

1. சொடக்கு - ஆங்கில வாத்தை டக் என்று எளிதில் விடுவித்து விடுவீர்கள் என்று தெரிந்தே தான் கொடுத்தோம்.

2. காஞ்சி - சத்தியமாக நூற்றாண்டு விழா பாதிப்பில் தமையனை அழைக்கலீங்க! அது சரி . . . ’ஏப்ரல் மே யில...’ பாடல் க்ளுவில் தெரியவில்லையா?!?

4. ரோகிணி - அவ’ரோ’+ மணியோசை = ’கிணி’. சோதிட ஸாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியர். அவர்களில் சந்திரனுக்கு மிகவும் பிரியமான மனைவி ரோகிணி.

5. ராக்கோழி - மீண்டும் ஆங்கில என்று உபயோகிக்க எங்களுக்கே விருப்பமில்லைதான். என்ன செய்ய? ராக் தமிழ் வார்த்தை கிடையாதாமே?

6. பாதாள உலகம் - மிக எளிதான் குறிப்புதான். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறோம்.

8. தாடை - க்ளுவை டைப்பியதும் எங்களுக்கே முகம் கிழிந்து விட்டது போல ஒரு உணர்வு! நீங்கள் யாரும் கிழித்து விடுவீர்களோ என்ற பயமும் கூட!!

9. வெறி - ஆக்ரோஷமாக என்று கொடுக்கலாமா என நினைத்தோம். எப்படி கொடுத்திருந்தாலும் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தெரிந்து விட்டதால் விட்டு விட்டோம் ( எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தில் மேல் நம்பிக்கைதான் )

10. மீந்தது - கொஞ்சம் கஷ்டப்பட்டீர்களோ? அந்த முண்டத்தில் - ந்த என்று பிடித்திருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

11. அம்மாடி - இந்த விடை தான் எண்ணியிருந்தோம். ஆனால் போஸ்ட் பண்ணிய பிறகு தான் ஆத்தாடி என்பதும் சரியாக வருவதை தெரிந்து கொண்டோம். ஆனாலும் விடை சொன்ன அனைவரும் அம்மாடி என்றே கூறியிருந்தது மகிழ்ச்சியளித்தது.

12. வித்து - ஆதி மூலம் இடையில் கமா போட்டிருக்க வேண்டாமோ?

13. மாருதி - சுதந்திரம் <=> விடுதலை. சுதந்திர சிறுத்தை <=> ?!

- ஸ்ரீ தேவி

Wednesday, September 16, 2009

குறுக்கெழுத்துப் போT - 4

நாளாச்சு, நாளாச்சு, பதிவு போட்டே நாளாச்சு! குறுக்கெழுத்தாவது போடுவோம்! இந்த முறை குறுக்கெழுத்து கூட தனியாளாக உருவாக்கவி்ல்லை. எழுத்தாளர் ஸ்ரீதேவி பெரும்பாலான குறுக்கெழுத்து வேலைகளை செய்ய, நான் சும்மா மேஸ்திரி(கொத்தனார்?!) வேலைதான் பார்த்தேன். இந்த முறையும் வழக்கம் போல விடை சொல்பவர்களின் மதிப்பெண்கள் இங்கே (தாமதமில்லாமல்) அப்டேட் செய்யப்படும். வழக்கம் போல பரிசுகள் எதுவும் கிடையாது!!!

புதிர் உருவாக்க நாங்கள் உபயோகித்தவை http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/index.html, http://en.wikipedia.org/wiki/Main_Page.

விடைகளை கமெண்ட் மூலமோ, yosippavar@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் மூலமோ தெரிவிக்கலாம். புதிர் சம்பந்தமான பாராட்டுக்கள்/திட்டுக்களை writersridevi@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்.

இது போன்ற புதிர்களை அவிழ்ப்பது குறித்த திரு. வாஞ்சிநாதன் அவர்களின் எளிய அறிமுகத்தை இங்கே காணலாம். மேலும் இது போன்ற புதிர்களை கொத்தனாரின் ப்ளாகிலும், அம்ருதா பார்த்தசாரதி தம்பதியின் வலைத்தளத்திலும் காணலாம்.

புதிர் விடைகளை இங்கேயுள்ள கட்டங்களிலேயே நீங்கள் நிரப்பிப் பார்த்துக் கொள்ளலாம்.


12
345


6


7





8

9
10




11

1213




14
15

குறுக்காக :

1) மஹாத்மாவை அண்டாத நீயா மதுரை மன்னனை அழைத்தாய் இறுதியாக. (4)
3) முன் கதிர் ஊடுருவிய துருவ ஒளியால் கந்தனை அழை. (4)
7) நேரம் ஒழுகாமல் விரும்பியது கொடுக்கும். (5)
8) தகரக் கடலில் இறந்தோரை அடக்கம் செய்யலாம். (2)
9) கண்ணனைக் கவர கலங்கி கருணை குறைவாய் வெண்டை உண். (3,4)
10) மீன் வலையைப் பற்றி முன்னும் பின்னும் இழுத்தால் அடங்காது. (2)
12) கவி மாலன் முட்டை அதிகம் உண்டதால் குழப்பமடைந்து வேற்றுக் கிரகம் போனாரா? (5)
14) பேரிகை முழங்கப் படை பெரும்பாலும் குழம்பி பிந்துகிறது. (4)
15) செந்திலுக்கு கிடைப்பவைகள் சேது நாயகனுக்கு கிடைக்கவில்லையே! (4)


நெடுக்காக :


1) சுமாரான சொகுசு பங்களாவில் நுழைந்த ஆங்கில வாத்து அதிகார ஓசை எழுப்புகிறது. (4)
2) பசுமையே இல்லாமல் தமையன் ஊராகிப் போச்சுடா! (3)
4) அவரோ மணியோசை கேட்டு நிலவின் பிரிய சகியை அழைத்தார். (3)
5) ஆங்கில இசைபாடும் அலகிய தோழி உறங்க மாட்டாள். (4)
6) காலின் கீழாண்ட பூமியும் ஓருலகம்தான். (3,4)
8) புத்தாடையை கிழிக்க அண்ணம் வருமா? (2)
9) மூர்க்கமாக தலை காலை வெட்டியெறி. (2)
10) அந்த முண்டத்தின் மீது துளைத்து எஞ்சியது. (4)
11) தாயும் மச்சும் பசுவின் அழைப்பில்லாமல் இணைந்தால் வியக்கலாம். (4)
12) ஆதி, மூலம் இருப்பது சாவித் துவாரத்திற்கு உள்ளே. (3)
13) சுதந்திர சிறுத்தை சிரசாசனம் செய்தால் கடலைத் தாண்டலாம். (3)

Sunday, August 02, 2009

ஜாலியா ஒரு புதிர்

இன்றைக்கு ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர். கீழே சிலபல தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களை கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த ஊர்கள்தான். ஜாலியா கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) Mr Paddy Fence.
2) Mr Bad.
3) Sweep Drink.
4) Honey Bee.
5) Fly Road.
6) Varanda Stone.
7) Fruit You.
8) Temple Box.

பி.கு.:- காமெடியாக வந்த ஒரு குறுஞ்செய்தியை புதிராக மாற்றியிருக்கிறேன். ஒரிஜினல் குறுஞ்செய்தியை உருவாக்கியவர்க்கு நன்றி!!!

Monday, June 29, 2009

குறுக்கெழுத்துப் போT - 3 - விடைகள்

இந்த முறைப் போTக்கு சுமாரான வரவேற்பே இருந்தது. நீண்ட இடைவெளி விட்டு விட்டதால் இருக்கலாம். இந்த முறை முதல் ஆளாக முடித்தது பெனாத்தலார். குறுக்காக 5க்கு குறிப்பு இல்லைங்கிறதையும் சுட்டிக் காட்டினார்(கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்து). அப்பொழுதுதான் கவனித்தேன் - குறுக்காக 5க்கு குறிப்பே எழுதவில்லை. அப்புறம் அவசர அவசரமாக யோசித்து குறிப்பை எழுதினேன்.

இந்த முறை பங்கெடுத்துக் கொண்டவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே கட்டங்களை முழுதும் முடித்திருந்தார்கள். எளிதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இனி விடைகளைப் பார்க்கலாம்.

குறுக்காக :
2) ”ல”ட்டைப் பிட்டு + அ”த்தி”க் காம்பில் வைத்தால் = கரிக்கழிவு (3).
விடை : லத்தி.

3) ”சகித்துக் கொள்ள” = அ”ங்”கு இடையை -> நடுவில் தா(க்)கு (3).
விடை : தாங்கு

5) ”சமவெளி நாகரிகத்தின்” -> இறுதி உயிரைத் திரித்து = யோசி (3).
விடை : சிந்தி

7) ”படுதா”மரையில் மறைந்திருப்பது திரை (3).
விடை : படுதா

8) ”கூடம்” இடையில் + “வ”சிக்க ஆரம்பித்தால் = ஆறும் நாறும் (3).
விடை : கூவம்

10) ”வ(கை)”யின் கரத்தில் + மனைவி அமர்ந்தால் = சொகுசு (3).
விடை : வசதி

11) ”தடி” <- நடுவே -> க”ட்”டுப் போட்டால் = மறைக்கலாம் (3).
விடை : தட்டி

12) ”து”ணி வெட்டி + விஞ்ஞான ஜனாதிபதிக்கு -> முடி திருத்தினால் = எடை போடலாம் (3).
விடை : துலாம்.

13) கதராடையில் சரி பாதி கிழித்து + தமய”ந்தி”யின் காலில்லா அண்ணன் இறந்தால் = ஒளி வீசும் (3).
விடை : காந்தி.

15) வலியில் கத்தித் + துள்ளினால் = அக்கினிக்கு உணவு (3).
விடை : ஆகுதி.

16) அறு”வை” அறுத்து + “கை(கரம்)” காலை ஒட்டினால் = மின்னும் கரி (3).
விடை : வைரம்.

17) வள்ளலின் + கரங்களில் = திரும்பிய பெண்மணி (3).
விடை : காரிகை.

நெடுக்காக :

1) ”இவன்” இடையில் + ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் தேய்ந்து வந்ததால் = இளையவன் ஆனான் (6).
விடை : இலக்குவன்.

3) ”தகர வரிசை” படிக்கிறாள் = வேலைக்காரி (2).
விடை : தாதி.

4) அங்”கும்” இறுதியாக + சு”ப்ப”ன் நடுவே நுழைந்து = பார்த்தால் சேரி (4).
விடை : குப்பம்.

5) “சித்தனை” அழைத்த + ”மகிழ்ச்சி”யில் ஆணையைத் தொலைத்தால் = தத்துவம் பிறக்கும் (6).
விடை : சித்தாந்தம்.

6) ”சிறையில் இருப்பவன்” திரும்பி வந்தால் = ஆச்சர்யமடை(2).
விடை : திகை

8) ”கூ”டல் தொடங்க + தலையற்று ச”திர்” ஆடும் + நேரம் = நடுங்கும் (6).
விடை : கூதிர்காலம்.

9) ”கொம்பில் ஏறும் செடியில்” + ”முந்தானை”யை படரவிட்டு + ”ஒரு ஸ்வரம்” இசைத்தால் = பழம் சாப்பிடலாம் (6).
விடை : கொடிமுந்திரி.

12) வணங்கி + கைநீட்டி = ஆசிர்வாதம் தரும் (4).
விடை : துதிக்கை.

14) கொ”சுவை”க் கொஞ்சம் நசுக்கினால் = ருசிக்கலாம் (2).
விடை : சுவை.

15) பசுவும் + காக்கையும் சேர்ந்திருந்தால் = பிரமாதம் (2).
விடை : ஆகா.

இப்படியாக, பங்கெடுத்துக் கொண்டவர்கள் அனைவரும், இறுதியில் புதிர் “ஆகா” என்றிருந்ததாக கூறியுள்ளனர்!!!;-)

Thursday, June 11, 2009

குறுக்கெழுத்துப் போT - 3

ஒரு மிக நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பின்பு, மறுபடி புதிர் பக்கம் வந்து விட்டேன். இன்றைக்கு(அல்லது இந்த மாதம்) குறுக்கெழுத்து புதிர்தான். ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால்(கொத்ஸ் கூட மூனு மாசமா லீவு!), உங்களுக்கு குறுக்கெழுத்துக் கேள்விகளைப் பார்த்ததும் தலை சுற்றலாம். அதனால் இது போன்ற (க்ரிப்டிக்) குறுக்கெழுத்துக்கான வாஞ்சிநாதனின் அறிமுகத்தை இங்கே க்ளிக்கி படித்து விட்டு வந்து விடுவது நல்லது. நாங்கல்லாம் இதில் பழந்தின்னு கொட்டை போட்டவங்களாக்கும் என்பவர்கள் டைரக்டாக கீழே கேள்விகளை படிக்க ஆரம்பிக்கலாம்.

விடைகளை இங்கே கட்டங்களிலேயே நீங்கள் நிரப்பிப் பார்க்கலாம். ஆனால் எனக்கு விடைகளை கமெண்டில்தான் சொல்ல வேண்டும். விடை சொல்பவர்களுக்கான மதிப்பெண்கள், அவ்வப்பொழுது இந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்.



13456
2

7
89
10
11
12

13
1415
1617


குறுக்காக :
2) லட்டைப் பிட்டு அத்திக் காம்பில் வைத்தால் கரிக்கழிவு (3).
3) சகித்துக் கொள்ள அங்கு இடையை நடுவில் தாக்கு (3).
5) சமவெளி நாகரிகத்தின் இறுதி உயிரைத் திரித்து யோசி (3).
7) படுதாமரையில் மறைந்திருப்பது திரை (3).
8) கூடமிடையில் வசிக்க ஆரம்பித்தால் ஆறும் நாறும் (3).
10) வகையின் கரத்தில் மனைவி அமர்ந்தால் சொகுசு (3).
11) தடி நடுவே கட்டுப் போட்டால் மறைக்கலாம் (3).
12) துணி வெட்டி விஞ்ஞான ஜனாதிபதிக்கு முடி திருத்தினால் எடை போடலாம் (3).
13) கதராடையில் சரி பாதி கிழித்து தமயந்தியின் காலில்லா அண்ணன் இறந்தால் ஒளி வீசும் (3).
15) வலியில் கத்தித் துள்ளினால் அக்கினிக்கு உணவு (3).
16) அறுவை அறுத்து கை காலை ஒட்டினால் மின்னும் கரி (3).
17) வள்ளலின் கரங்களில் திரும்பிய பெண்மணி (3).

நெடுக்காக :

1) இவன் இடையில் ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் தேய்ந்து வந்ததால் இளையவன் ஆனான் (6).
3) தகர வரிசை படிக்கிறாள் வேலைக்காரி (2).
4) அங்கும் இறுதியாக சுப்பன் நடுவே நுழைந்து பார்த்தால் சேரி (4).
5) சித்தனை அழைத்த மகிழ்ச்சியில் ஆணையைத் தொலைத்தால் தத்துவம் பிறக்கும் (6).
6) சிறையில் இருப்பவன் திரும்பி வந்தால் ஆச்சர்யமடை(2).
8) கூடல் தொடங்க தலையற்று சதிர் ஆடும் நேரம் நடுங்கும் (6).
9) கொம்பில் ஏறும் செடியில் முந்தானையை படரவிட்டு ஒரு ஸ்வரம் இசைத்தால் பழம் சாப்பிடலாம் (6).
12) வணங்கி கைநீட்டி ஆசிர்வாதம் தரும் (4).
14) கொசுவைக் கொஞ்சம் நசுக்கினால் ருசிக்கலாம் (2).
15) பசுவும் காக்கையும் சேர்ந்திருந்தால் பிரமாதம் (2).




பி.கு.:-
முதலில் குறுக்காக 5க்கான கேள்வி விடுபட்டுப் போயிருந்ததை, சுட்டிக் காட்டிய பெனாத்தலாருக்கு ஸ்பெஷல் நன்றி!!!