Wednesday, September 16, 2009

குறுக்கெழுத்துப் போT - 4

நாளாச்சு, நாளாச்சு, பதிவு போட்டே நாளாச்சு! குறுக்கெழுத்தாவது போடுவோம்! இந்த முறை குறுக்கெழுத்து கூட தனியாளாக உருவாக்கவி்ல்லை. எழுத்தாளர் ஸ்ரீதேவி பெரும்பாலான குறுக்கெழுத்து வேலைகளை செய்ய, நான் சும்மா மேஸ்திரி(கொத்தனார்?!) வேலைதான் பார்த்தேன். இந்த முறையும் வழக்கம் போல விடை சொல்பவர்களின் மதிப்பெண்கள் இங்கே (தாமதமில்லாமல்) அப்டேட் செய்யப்படும். வழக்கம் போல பரிசுகள் எதுவும் கிடையாது!!!

புதிர் உருவாக்க நாங்கள் உபயோகித்தவை http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/index.html, http://en.wikipedia.org/wiki/Main_Page.

விடைகளை கமெண்ட் மூலமோ, yosippavar@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் மூலமோ தெரிவிக்கலாம். புதிர் சம்பந்தமான பாராட்டுக்கள்/திட்டுக்களை writersridevi@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்.

இது போன்ற புதிர்களை அவிழ்ப்பது குறித்த திரு. வாஞ்சிநாதன் அவர்களின் எளிய அறிமுகத்தை இங்கே காணலாம். மேலும் இது போன்ற புதிர்களை கொத்தனாரின் ப்ளாகிலும், அம்ருதா பார்த்தசாரதி தம்பதியின் வலைத்தளத்திலும் காணலாம்.

புதிர் விடைகளை இங்கேயுள்ள கட்டங்களிலேயே நீங்கள் நிரப்பிப் பார்த்துக் கொள்ளலாம்.


12
345


6


7





8

9
10




11

1213




14
15

குறுக்காக :

1) மஹாத்மாவை அண்டாத நீயா மதுரை மன்னனை அழைத்தாய் இறுதியாக. (4)
3) முன் கதிர் ஊடுருவிய துருவ ஒளியால் கந்தனை அழை. (4)
7) நேரம் ஒழுகாமல் விரும்பியது கொடுக்கும். (5)
8) தகரக் கடலில் இறந்தோரை அடக்கம் செய்யலாம். (2)
9) கண்ணனைக் கவர கலங்கி கருணை குறைவாய் வெண்டை உண். (3,4)
10) மீன் வலையைப் பற்றி முன்னும் பின்னும் இழுத்தால் அடங்காது. (2)
12) கவி மாலன் முட்டை அதிகம் உண்டதால் குழப்பமடைந்து வேற்றுக் கிரகம் போனாரா? (5)
14) பேரிகை முழங்கப் படை பெரும்பாலும் குழம்பி பிந்துகிறது. (4)
15) செந்திலுக்கு கிடைப்பவைகள் சேது நாயகனுக்கு கிடைக்கவில்லையே! (4)


நெடுக்காக :


1) சுமாரான சொகுசு பங்களாவில் நுழைந்த ஆங்கில வாத்து அதிகார ஓசை எழுப்புகிறது. (4)
2) பசுமையே இல்லாமல் தமையன் ஊராகிப் போச்சுடா! (3)
4) அவரோ மணியோசை கேட்டு நிலவின் பிரிய சகியை அழைத்தார். (3)
5) ஆங்கில இசைபாடும் அலகிய தோழி உறங்க மாட்டாள். (4)
6) காலின் கீழாண்ட பூமியும் ஓருலகம்தான். (3,4)
8) புத்தாடையை கிழிக்க அண்ணம் வருமா? (2)
9) மூர்க்கமாக தலை காலை வெட்டியெறி. (2)
10) அந்த முண்டத்தின் மீது துளைத்து எஞ்சியது. (4)
11) தாயும் மச்சும் பசுவின் அழைப்பில்லாமல் இணைந்தால் வியக்கலாம். (4)
12) ஆதி, மூலம் இருப்பது சாவித் துவாரத்திற்கு உள்ளே. (3)
13) சுதந்திர சிறுத்தை சிரசாசனம் செய்தால் கடலைத் தாண்டலாம். (3)

6 comments:

Show/Hide Comments

Post a Comment