Friday, November 06, 2009

குறுக்கெழுத்துப் போT - 5 விடைகள்

விடை சொல்லும் நேரம் வந்தாச்சு! முதலில் 20-20 போட்ட பூங்கோதை, வாஞ்சி, லாவெர்டண்டீஸ் மூவருக்கும் சபாஷ்!

இம்முறை புதிர் விடைகளை பெயர்கள், இடங்கள், சினிமா, புத்தகம் என்ற நான்கு வட்டத்திற்குள் அடைக்க முயற்சித்தோம். (Names, Places, Things, Animals விளையாடியுள்ளீர்களா ?!) work out ஆகிவிட்டது என்றாலும் interesting ஆக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆங்காங்கே “தேவராட்டி”, ”கிரேக்க நாடக திரை”, “டிங்கா டிங்கா” போன்ற கடின குறிப்புகளை உபயோகப்படுத்தி இருந்தாலும் கண்டுபிடிக்க கூடிய அளவிலேயே இருந்ததாக எண்ணுகிறோம்.

குறுக்காக :
2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்?
மேன்மை = தரம், மரணமடையவா = சாவதா ----> சாவதா, தரம் உள்ளே சென்று தசாவதாரம் ஆனது!

6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா?
”கன்னி தாயா சேயா”வில் கயா காணாமல் “ன்னிதாசேயா” ஆனது. குழப்பத்தை போக்கினால், டிங்கா டிங்கா ஓவியத்திற்கு பெயர் பெற்ற ”தான்சேனியா” வரும்!

8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான்.
எளிய குறிப்புதான் - வசீகரா!

9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது.
அக் + கிறக்க பானம் = ரம் -----> அக்ரம்! பந்தை பாட்டில் மூடியால் சேதப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியதாய் ஒப்புக் கொண்ட பிரபலம். பல பேரும் தடுமாறிய குறிப்பு இதுதான்.

12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே.
கம்பர்! எளிதான குறிப்பே.

16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது.
யவனிகா! தா”னியகாவ”ல் நடுவில் கசங்கி உள்ளது. நாடக திரைக்கு யவனிகா என்ற கிரேக்க மூலப்பெயரும் உண்டு.

17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள்.
அதே பாலை + நீங்கள் ஆங்கிலத்தில் = யு -------> அலைபாயுதே!

19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம்.
வீரப்பன் காட்டை கொளுத்தினால் “சத்தீ” + (ஆ)ஸ்கார் = சத்தீஸ்கார்! கோஸாப் பட்டு பற்றி அறிய

நெடுக்காக :

1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள்.
அமிதாப்! பலர் எளிதாகவே கண்டு பிடித்து விட்டார்கள். one man industry என்ற பெயர் 70ஸ் நபர்கள் அறிந்திருப்பார்கள்.

3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி.
சாலினி!

4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம்.
ரகுவம்சம்! இஷ்வாகு குலத்தின் fastest chariot rider = ரகு (அந்த கால ஷுமேக்கர்) , சந்ததி = வம்சம்

5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி.
ராஜா ராணி! வெறும் கிரீடத் தம்பதி என்று கொடுக்கலாமா என யோசித்தோம். விடை கண்டுபிடித்தவர்கள் பலருக்கும் அது கலைஞர் வசனம் எழுதிய படம் என்பது தெரியுமா?

7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை.
சேதக்! குறிப்பிலேயே விடை உள்ளது.

9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது.
அபு! ஏசியாட் குட்டி யானை என்று கொடுத்திருந்தால் பலருக்கும் எளிதாக இருந்திருக்கலாம்! இதையும் இதற்கு related குறிப்பான ”அக்ரம்”மிலும் பலபேர் சிரமப்பட்டு விட்டனர்.

10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன்.
ரஜினிகாந்த்! super star க்கு விளக்கம் தேவையா?

11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும்.
யா(தவ)ர்!

13) பாபம் மாற்றிய புண்ணிய நதி.
பம்பா!

14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன்.
நா(யக)ன்!

15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான்.
பபூ(ன்) + தேர் => வழிகுழம்பி ”பதேபூர்!”

18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே.
லைக்கா! குறிப்பிலேயே விடை உள்ளது. லைக்கா யாருன்னு தெரியுமில்ல!

பின் குறிப்பு
உங்களின் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!

4 comments:

Show/Hide Comments

Post a Comment