Thursday, March 29, 2012

கலைமொழி-16


இந்த கலைமொழிப் புதிரை இதுவரை முயலாதவர்கள் கூட, சொல்கலை புதிரை தீர்ப்பதை பார்க்கிறேன். அவர்களுக்காக ஒரு சில வார்த்தைகள்: இதுவும் சொல்கலை புதிரைப் போன்றதே. சொல்கலையில் வார்த்தைகள் கலைந்திருக்கும். இங்கு ஒரு சிறிய பத்தியே(paragraph)கலைந்து கிடக்கிறது. சொல்கலையில் எழுத்துக்கள் horizantalஆகவே கலைந்திருக்கும். ஆனால் இங்கே ஒரு பத்தி  rowக்களாகவும்,  columnகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் எழுத்துக்கள் verticalஆகவே, அதாவது நெடுக்காகவே(columnwise) கலைந்திருக்கும்.

இன்றைய புதிரில் மொத்தம் 8 rowக்களும் 18 columnகளும் உள்ளன. இதில் முதல் columnத்தில் உள்ள 8 எழுத்துக்கள் மட்டும் அவற்றுக்குள்ளாகவே கலைந்திருக்கும். அதேபோல் அடுத்த columnத்தில் உள்ள 8 எழுத்துக்கள் அவற்றுக்குள்ளாகவே கலைந்திருக்கும். இப்படியே எல்லா columnகளும்............
இதில் இடையில் கறுப்புக்கட்டங்கள் இருந்தால் அவை இடம் மாறாது. இந்த columகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினால்,இறுதியில் horizontalஆக படிக்கத்தக்க சரியான வரிகள் கிடைக்கும். சொல்கலையை விட சிறிது கடினம் என்றாலும், அதை விட சுவாரஸ்யமாகவே இருக்கும்.

எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.

எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம். 



சென்ற கலைமொழிக்கான விடை: என் தந்தை எழுதிய ‘60 வயது பாலம்’ பதிவிலிருந்து, “அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை ?அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?

சரியான விடை கூறியவர்கள:  அரசு,தமிழ்பிரியன், மாதவ், முத்து, அந்தோணி, ராசுக்குட்டி,10அம்மா, மீனுஜெய், பூங்கோதை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

24 comments:

Show/Hide Comments

Post a Comment