இந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். முதல் புதிர் எளிதாகவே இருக்கும்படி அமைத்திருக்கிறேன்.
கீழே உள்ள கட்டங்களில் ஒரு பத்தி(Paragraph)நெடுக்காக மட்டும் (Only Columnwise) கலைந்துள்ளது(jumbled). பத்தி என்று சொல்லிவிட்டதால், அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாகவும் இருக்கலாம். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.
ஆன்லைனிலேயே விளையாடும்படி நிரலி எழுதியிருக்கிறேன். எழுத்துக்களை எளிதாக க்ளிக் செய்தே நீங்கள் இடம் மாற்றலாம்.
ஓகே. ஆட்டம் ஆரம்பமாகட்டும்! ஸ்டார்ட் மியுஜிக்!!!;-)
Thursday, December 15, 2011
கலைமொழி
Posted by யோசிப்பவர் at 1:59 PM
Labels: Puzzles, அறிமுகம், கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஆம், பெரியப்பா, நான்தான் பேசுகிறேன். இளவரசர் இருக்குமிடத்திஅ ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன்.
முதல் மறுமொழி வந்ததா என்று தெரியவில்லை. அதனால் மீண்டும் எழுதுகின்றேன்.
ஆம், பெரியப்பா, நான்தான் பேசிகிறேன். இளவரசர் இருக்குமிடத்தை ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன்.
சரியான விடை கலை! வாழ்த்துக்கள்! அடுத்த புதிரை விரைவில் எதிர்பாருங்கள்.
Super good,no words are obvious - I guess, very difficult to achieve in Tamil. Last line alone first word is visible (aam), but that is insignificant and looks more like a misleading than the actual word.
ஆம் பெரியப்பா, நான்தான் பேசுகிறேன், இளவரசர் இருக்குமிடத்தை ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன் .
nice choice of passage.
//கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கின்றன.//
நன்றி பூங்கோதை மேடம். சரியான விடை.
Post a Comment