இது ஒரு எளிய கணிதக் கேள்வி. நீங்கள் வங்கியில் நூறு ரூபாய் டெபாஸிட் செய்திருக்கிறீர்கள். பின்னர் அதை ஆறு தடவைகளில் கீழே உள்ள மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறீர்கள்.
எல்லாம் எடுத்து முடித்தபின் எடுத்த தொகைகளையும், பேலன்ஸ் இருந்த தொகைகளையும் கூட்டிப் பார்த்தால் ஒரு ரூபாய் வித்தியாசம் வருகிறதே?!? அந்த ஒரு ரூபாய் யார்கிட்ட இருக்கு???
எடுத்தது | பேலன்ஸ்(மீதம் இருந்தது) |
ரூ 50 | ரூ 50 |
ரூ 25 | ரூ 25 |
ரூ 10 | ரூ 15 |
ரூ 8 | ரூ 7 |
ரூ 5 | ரூ 2 |
ரூ 2 | ரூ 0 |
ரூ 100 | ரூ 99 |
எல்லாம் எடுத்து முடித்தபின் எடுத்த தொகைகளையும், பேலன்ஸ் இருந்த தொகைகளையும் கூட்டிப் பார்த்தால் ஒரு ரூபாய் வித்தியாசம் வருகிறதே?!? அந்த ஒரு ரூபாய் யார்கிட்ட இருக்கு???
10 comments:
இரண்டு சைடையும் கூட்டக்கூடாது. 100 ரூ வைத்திருந்து 50 எடுக்கிறார் - பேலன்ஸ் 50, மறுபடியும் 50 எடுக்கிறார் பேலன்ஸ் 0. இப்ப ஒரு பக்கம் 100ம் இன்னொரு பக்கம் 50ம் தான் வரும். So கணக்கு தவறு
one should not sum the closing balance field
மீதமுள்ள தொகைகளின் கூட்டு தொகை எடுக்கப்பட்ட தொகைக்கு சமமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எப்பொழுதும் வங்கி கணக்கில் போட்ட மொத்த தொகை= எடுத்த பணத்தின் கூட்டு தொகை + மீதமுள்ள தொகை.
ஈரோடு கோடீஸ்,
சரியான விடைதான். வாழ்த்துக்கள்!!!
ராம்ஜி_யாஹூ,
Right Answer. Congrats!!;)
Thamizhini,
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க!!
பேலன்ஸை டோட்டல் பண்ணினா எப்படி சரியா வரும்? முதல் தடவை 50 எடுத்ததும் அடுத்ததா மீதி 50ஐயுமே எடுத்திருந்தா டோட்டல்ல வித்தியாசம் 50 வருமே. கேள்வியே தப்புன்னு தோணுது.
மீதங்களைக் கூட்டுவது தவறு. ஒவ்வொரு முறை பணம் எடுக்கப்பட்டதும் விட்டுவைத்ததே மீதம்.
கடைசி மீதம் பூஜ்யமானது, 100-ம் எடுக்கப்பட்டது என்பதற்கு அறிகுறி.
வெண்பூ தப்புன்னா ரைட்டுதான்!;)
Muthu,
சரியான விடைதான்!!
Post a Comment