போன தடவை குறுக்கெழுத்துப் புதிர் போட்டதோட நிறுத்திக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனால் போன மாதத் தென்றலில் வாஞ்சிநாதன், நம்ம குறுக்கெழுத்தப் பத்தி ஒரு வரி சொல்லி, லிங்க் வேற குடுத்துட்டார். சரி, நம்மளை ஒருத்தர் இம்புட்டு தூரம் நம்புறாரேன்னு நினைச்சப்ப நெஞ்சம் கனத்தது; கண்கள் பனித்தது; உள்ளம் பூத்தது....!!! அதனால மறுபடி கஷ்டப்பட்டு கு.எ.புதிர் தயார் செய்து விட்டேன்.(ராஜினாமா வாபஸ்!)
இந்த தடவை நம்ம கொத்ஸ், கொஞ்சம் சீக்கிரமாவே அவரோட புதிரை போட்டுட்டார். அதனால் நாமும் இப்ப அதையே பண்ணினால் மக்களுக்கு வெறுத்துப் போயிடும்னு தோனுது. இருந்தாலும் உருவாக்கின புதிரை உடனே போடலைன்னா மண்டை வெடிச்சுடும்னு எங்க குருநாதர் சாபம் ஒன்னு இருக்கு. அதனால இன்றைக்கே போட்டுவிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். மக்களே, பொருத்தருள்க. இந்த குறுக்கெழுத்தைப் போட்டருள்க.
போன தடவை மாதிரியே மதிப்பெண் பக்கமும் உண்டு. உங்கள் மதிப்பெண்களை விடை சொன்ன அரை மணி நேரத்திற்குள்(அதாவது நான் உங்கள் விடையை பார்த்த பின் அரை மணி நேரத்திற்குள்;-)) இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இனியும் ரொம்ப அறுக்காமல், கு.எ.ஐ பார்க்கலாம்
1 | 2 | 5 | ||||||
3 | ||||||||
4 | 6 | 7 | 8 | |||||
9 | ||||||||
13 | ||||||||
14 | 10 | |||||||
11 | ||||||||
15 | 16 | 12 |
இடமிருந்து வலம் :-
1) கத்திக் குத்தை உற்றுப் பார்த்தால் நாக்கு குழறும் (3).
4) நினைவை அழித்து வீரத்தின் இறுதியில் பார்த்தால் அதுவே கிடைக்கும் (3).
6) எலும்புச் சாம்பலை அள்ளி ஓரத்தின் ஓரத்தை நறுக்கி கூர்மையான அயுதம் செய் (5).
10) திராவிடர் முன்னேற்றக் கழகம் திரும்பிய ஊர் (3).
14) பெண் குழந்தை (5).
மேலிருந்து கீழ் :-
1) திருட்டு முழி புத்திரி செல்வம் தேடித் தருவாள் (5).
2) குடுமிக்கு முடிவெட்டிப் பொட்டு வைத்து இன்பத்தில் முடிந்தால் வீடு வந்து சேரும் (5).
5) பிரயாணத்தின் நடுவே காணாமல் போய்விட்டால் கிலி பிடிக்கும் (3).
6) குசினிக்கு அடுத்த பாதியில் நீக்கு (5).
8) வைரத்தின் முனை மழுங்கினால் திருப்பிச் சுடலாம் (2).
9) பொட்டிழந்த கையைத் திருப்பி புகைப் பிடித்தால் ரத்தினம் கிடைக்கும் (5).
13) எனது பூஜ்யம் மிகுந்த கணிதத்தின் அடிப்படை (2).
14) எருமைத் தலையில் ஒரு உண்மை சேர்த்தால் உயர்வு (3).
வலமிருந்து இடம் :-
3) இடைஞ்சல் செய்ய உயிர்மாறிய தலையில் தொடு (2).
5) ஒட்டுவதைத் தேய்த்து இலையை வெட்டி வியாதி வந்தால் தேகம் மெலியும் (3,2).
9) அசுரத்தச்சன் ஈறு கெட்டு தலையில்லாமல் அருகில் வந்தால் நினைவிழக்க நேரிடும் (5).
11) தருதலை ஒரு மரமண்டை தெரியுமா? (2).
12) ஓசை கொஞ்சம் குறைந்தால் கௌரவக் கணக்கு இறுதியுமாகுமே (3).
16) முன்னோர் பொருளுடன் உரியது. இப்பொழுது பெண்களுக்கும் உண்டு. (5).
கீழிருந்து மேல் :-
7) சுழியில்லா நெருப்பு வலையில் சிறு துளி சுரக்கும் (3).
12) தெருக்கள் கூடுமிடத்தில் வீரன் வந்தால் தலை தப்பாதாயினும் ஒளி கிடைக்கும் (5).
15) யானையின் கை உடைந்தால் பறந்து விடும் (3).
பின் குறிப்பு :-
இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
41 comments:
இ.வ
1. திக்கு
4. மறம்
6. ஆ(அ)த்திரம்
10. கமுதி
14. பெண் பிள்ளை
மே.கீ
1. திருமகள்
2. குடும்பம்
5. பயம்
6. அடுக்களை
8. ரவை
9. மரகதம்
13. எண்
14. பெருமை
வ.இ
3.தடு
5. பசலைநோய்
9. மயக்கம்
11. தலை
12. சவம்
கீ.மே
7. திவலை
12. சந்திரன்
15. தும்பி
பிரசண்ட் போட்டுக்குறோம்.
தமிழ் பிரியன்,
நீங்கதான் இன்றைக்கு முதல் போனி. முதல் போனியே நல்ல போனியாக இருக்கிறது.
இ.வ. 6, வ.இ. 12 இரண்டும் தவறு. மற்றதெல்லாம் சரி.
இந்த ரெண்டையும் கொஞ்சம் மாத்தி யோசிங்க!!;-)
வ.இ. 16 இன்னும் சொல்ல வில்லை!!
6. அஸ்திரம் (தமிழ் சொல்லா?)
12. சதம்
தமிழ் பிரியன்,
கவனிக்காமல் விட்டுவிட்டேன். வ.இ.11ம் தவறு. மாத்திப் பாருங்க!
தமிழ் பிரியன்,
இப்பொழுது இரண்டும் சரி. வ.இ. 11 மட்டும் பாக்கி.
அது தமிழில் புழங்கப்படும் வார்த்தைதானே. அதை தமிழ்ப்'படுத்தி'னால் கூட, விடை தப்பாகாது!!
16. சொத்துரிமை
11 மட்டும் இந்த மரமண்டைக்கு எட்டலைங்க... :(
16ம் சரி. 11 மிகவும் எளிதுதான் தமிழ் பிரியன். எவ்வளவோ கண்டுபிடிச்சுட்டீங்க! இதைக் கண்டுபிடிக்க மாட்டீங்களா?;-))
http://i37.tinypic.com/k56bl3.jpg
இதை பாருங்க, புதுமையா பின்னூட்டம் போடுவோமில்ல!
இடமிருந்து வலம் :-
1)திக்கு
4) மறம்
6) அஸ்திரம்
10) கமுதி
14) பெண்பிள்ளை
மேலிருந்து கீழ் :-
1) திருமகள்
2) குடும்பம்
5) பயம்
6) அடுக்களை
8) ரவை
9) மரகதம்
13) எண்
14) பெருமை
வலமிருந்து இடம் :-
3) தடு
5) பசலை நோய்
9)மயக்கம்
11) தலை
12) சமம்
16) சொத்துரிமை
கீழிருந்து மேல் :-
7) திவலை
12) சந்திரன்
15) தும்பி
பெனாத்தலாரே,
வ.இ. 12 மட்டும் தவறு. மற்றதெல்லாமே சரி. புதுமையான பின்னூட்டமா? எங்ககிட்டேயேவா?!;-)
viji,
வ.இ. 11,12 மட்டும்தான் தவறு. மற்றதெல்லாம் சரிதான். இந்த இரண்டை மட்டும் சரி செய்ங்க!!
இடமிருந்து வலம் :-
1) கத்திக் குத்தை உற்றுப் பார்த்தால் நாக்கு குழறும் (3) - திக்கு
4) நினைவை அழித்து வீரத்தின் இறுதியில் பார்த்தால் அதுவே கிடைக்கும் (3). - மறம்.
6) எலும்புச் சாம்பலை அள்ளி ஓரத்தின் ஓரத்தை நறுக்கி கூர்மையான அயுதம் செய் (5). அஸ்திரம்
10) திராவிடர் முன்னேற்றக் கழகம் திரும்பிய ஊர் (3). கமுதி
14) பெண் குழந்தை (5). பெண்பிள்ளை
மேலிருந்து கீழ் :-
1) திருட்டு முழி புத்திரி செல்வம் தேடித் தருவாள் (5). திருமகள்
2) குடுமிக்கு முடிவெட்டிப் பொட்டு வைத்து இன்பத்தில் முடிந்தால் வீடு வந்து சேரும் (5). குடும்பம்
5) பிரயாணத்தின் நடுவே காணாமல் போய்விட்டால் கிலி பிடிக்கும் (3). பயம்
6) குசினிக்கு அடுத்த பாதியில் நீக்கு (5). அடுக்களை
8) வைரத்தின் முனை மழுங்கினால் திருப்பிச் சுடலாம் (2). ரவை
9) பொட்டிழந்த கையைத் திருப்பி புகைப் பிடித்தால் ரத்தினம் கிடைக்கும் (5). மரகதம்
13) எனது பூஜ்யம் மிகுந்த கணிதத்தின் அடிப்படை (2). எண்
14) எருமைத் தலையில் ஒரு உண்மை சேர்த்தால் உயர்வு (3). பெருமை
வலமிருந்து இடம் :-
3) இடைஞ்சல் செய்ய உயிர்மாறிய தலையில் தொடு (2). தடு
5) ஒட்டுவதைத் தேய்த்து இலையை வெட்டி வியாதி வந்தால் தேகம் மெலியும் (3,2). பசலை நோய்
9) அசுரத்தச்சன் ஈறு கெட்டு தலையில்லாமல் அருகில் வந்தால் நினைவிழக்க நேரிடும் (5). மயக்கம்
11) தருதலை ஒரு மரமண்டை தெரியுமா? (2). தரு
12) ஓசை கொஞ்சம் குறைந்தால் கௌரவக் கணக்கு இறுதியுமாகுமே (3). சவம்
16) முன்னோர் பொருளுடன் உரியது. இப்பொழுது பெண்களுக்கும் உண்டு. (5). சொத்துரிமை
கீழிருந்து மேல் :-
7) சுழியில்லா நெருப்பு வலையில் சிறு துளி சுரக்கும் (3). திவலை
12) தெருக்கள் கூடுமிடத்தில் வீரன் வந்தால் தலை தப்பாதாயினும் ஒளி கிடைக்கும் (5). சந்திரன்
15) யானையின் கை உடைந்தால் பறந்து விடும் (3). தும்பி
வடகரை வேலன்,
எல்லாம் சரிதான், வ.இ.12ஐத் தவிர. ஒரு எழுத்து மாத்திப் பாருங்க!!;-)
12 சதம் ?
11. தரு
12 சதம் ?
இடமிருந்து வலம் :-
1) கத்திக் குத்தை உற்றுப் பார்த்தால் நாக்கு குழறும் (3). திக்கு
4) நினைவை அழித்து வீரத்தின் இறுதியில் பார்த்தால் அதுவே கிடைக்கும் (3). மறம்
6) எலும்புச் சாம்பலை அள்ளி ஓரத்தின் ஓரத்தை நறுக்கி கூர்மையான அயுதம் செய் (5). அஸ்திரம்
10) திராவிடர் முன்னேற்றக் கழகம் திரும்பிய ஊர் (3). கமுதி
14) பெண் குழந்தை (5). பெண்பிள்ளை
மேலிருந்து கீழ் :-
1) திருட்டு முழி புத்திரி செல்வம் தேடித் தருவாள் (5). திருமகள்
2) குடுமிக்கு முடிவெட்டிப் பொட்டு வைத்து இன்பத்தில் முடிந்தால் வீடு வந்து சேரும் (5). குடும்பம்
5) பிரயாணத்தின் நடுவே காணாமல் போய்விட்டால் கிலி பிடிக்கும் (3). பயம்
6) குசினிக்கு அடுத்த பாதியில் நீக்கு (5). அடுக்களை
8) வைரத்தின் முனை மழுங்கினால் திருப்பிச் சுடலாம் (2). ரவை
9) பொட்டிழந்த கையைத் திருப்பி புகைப் பிடித்தால் ரத்தினம் கிடைக்கும் (5). மரகதம்
13) எனது பூஜ்யம் மிகுந்த கணிதத்தின் அடிப்படை (2). எண்
14) எருமைத் தலையில் ஒரு உண்மை சேர்த்தால் உயர்வு (3). பெருமை
வலமிருந்து இடம் :-
3) இடைஞ்சல் செய்ய உயிர்மாறிய தலையில் தொடு (2). தடு
5) ஒட்டுவதைத் தேய்த்து இலையை வெட்டி வியாதி வந்தால் தேகம் மெலியும் (3,2). பசலை நோய்
9) அசுரத்தச்சன் ஈறு கெட்டு தலையில்லாமல் அருகில் வந்தால் நினைவிழக்க நேரிடும் (5). மயக்கம்
11) தருதலை ஒரு மரமண்டை தெரியுமா? (2). தரு
12) ஓசை கொஞ்சம் குறைந்தால் கௌரவக் கணக்கு இறுதியுமாகுமே (3). சதம்
16) முன்னோர் பொருளுடன் உரியது. இப்பொழுது பெண்களுக்கும் உண்டு. (5). சொத்துரிமை
கீழிருந்து மேல் :-
7) சுழியில்லா நெருப்பு வலையில் சிறு துளி சுரக்கும் (3). திவலை
12) தெருக்கள் கூடுமிடத்தில் வீரன் வந்தால் தலை தப்பாதாயினும் ஒளி கிடைக்கும் (5). சந்திரன்
15) யானையின் கை உடைந்தால் பறந்து விடும் (3).தும்பி
தமிழ் பிரியன்,
கம்ப்ளீட்டட். ஓகே!!;-)
வடகரை வேலன்,
சரியான விடைதான். சந்தேகமேன்?!
முடித்து விட்டீர்கள்!!;-)
கொத்ஸ்,
ஒரே ஸ்டெரெச்சில் எல்லாவற்றையும் சரியாகப் போட்டு விட்டீர்கள்! கலக்கல்!!
11. தரு
12. கொஞ்சம் குழப்பமா இருக்கு. இறுதியாகும்னா
“சவம்” சரியா?
viji,
இப்பொழுது 11 சரி. 12 தவறு. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. முடிச்சிடலாம்.
12. சதம்.
சரிதானுங்க???
Viji,
சரிதானுங்க.முடிச்சுட்டீங்க!!!;-)
// யோசிப்பவர் said...
Viji,
சரிதானுங்க.முடிச்சுட்டீங்க!!!;-)
//
ஹையா...! :). முதன் முதலா எல்லாத்துக்கும் சரியா சொல்லிட்டேன்.
இ.வ
1. திக்கு
4. மறம்
6. அஸ்திரம்
10. கமுதி
14. பெண்பிள்ளை
மே.கி
1. திருமகள்
2. குடும்பம்
5. பணம்
6. அடுக்களை
8. ரவை
9. மரகதம்
13. எண்
14. பெருமை
வ.இ
3. தடு
5. பசலை நோய்
9. மறக்கும்?
11. தடை?
12. சதம்
16. சொத்துரிமை
கீ.மே
7. திவலை
12. சந்திரன்
15. தும்பி
கப்பி,
நன்றாகவே முயன்றிருக்கிறீர்கள். மேகீ 5, வஇ 9,11, இந்த மூன்றும் தவறு. மற்றதெல்லாம் சரியே!!
இடமிருந்து வலம் :-
1) திக்கு
4) மறம்
6) அஸ்திரம்
10) கமுதி
14) பெண்பிள்ளை
மேலிருந்து கீழ் :-
1) திருமகள்
2) குடும்பம்
5) பயம்
6) அடுக்களை
8) ரவை
9) மரகதம்
13) எண்
14) பெருமை
வலமிருந்து இடம் :-
3) தடு
5) பசலை நோய்
9) மயக்கம்
11) தலை
12) சதம்
16) சொத்துரிமை
கீழிருந்து மேல் :-
7) திவலை
12) சந்திரன்
15) தும்பி
Cheenu,
முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும். வ.இ. 11 தவிர மற்றதெல்லாம் சரியே. அந்த ஒன்றை மட்டும் மறுபடியும் போடுங்க!!
இடமிருந்து வலம் :-
1) திக்கு
4) மறதி
6) அஸ்திரம்
10) குமுதி
14) பெண்பிள்ளை
மேலிருந்து கீழ் :-
1) திருமகள்
2) குடும்பம்
5) பயம்
6) அடுக்களை
9) மரகதம்
13) எண்
14) பெருமை
வலமிருந்து இடம் :-
3) தடு
5) பசலை நோய்
9) மயக்கம்
11) தலை
12) சதம்
16) சொத்துரிமை
கீழிருந்து மேல் :-
7) திவலை
12) சந்திரன்
15) தும்பி
-அரசு
அரசு,
இ.வ.10 தவறு. இது மிக எளிதானது. எப்படி தவறிழைத்தீர்கள்?!;-)
வ.இ.11ம் தவறு. மற்ற விடைகள் அனைத்தும் சரியே!!
11 - தரு
10 - கமுதி ??
-அரசு
அரசு,
இரண்டும் சரியான விடையே!! முடித்துவிட்டீர்கள்!!
இடமிருந்து வலம் :-
1) திக்கு
4) மறம்
6) அஸ்திரம்
10) கமுதி
14) பெண்பிள்ளை
மேலிருந்து கீழ் :-
1) திருமகள்
2) குடும்பம்
5) பயம்
6) அடுக்களை
8) ரவை
9) மரகதம்
13) எண்
14) பெருமை
வலமிருந்து இடம் :-
3) கெடு
5) பசலை நோய்
9) மயக்கம்
11) தரு
12) சதம்
16) சொத்துரிமை
கீழிருந்து மேல் :-
7) திவலை
12) சந்திரன்
15) தும்பி
பாச மலர்,
வ.இ. 3ஐத் தவிர அனைத்து விடைகளும் சரியானவை. அதுவும் ரொம்ப ஈஸிதான். சரி பண்ணுங்க!!
வ.இ. 3. தடு
பாச மலர்,
வ.இ. 3ஐயும் சரியாகப் போட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள்!!
வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).
இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......
இந்த தடவை விடை சொன்னவர்களில் பெரும்பாலானோர் அனைத்து விடைகளையும் சரியாகப் போட்டு முடித்துவிட்டதால். தனியாக பதிவிட்டு விடை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்(சோம்பேறித்தனமா இருக்கு). அப்படி யாருக்காவது விளக்கங்கள் கண்டிப்பாகத் தேவையென்று நினைத்துக் கேட்டால் போடுகிறேன். இப்போதைக்கு யார் முடித்திருக்கிறார்கள் என்று மட்டும் கூறி முடித்துக் கொள்கிறேன்.
1) தமிழ் பிரியன்.
2) Viji
3) வடகரை வேலன்
4) இலவச கொத்தனார்
5) அரசு
6) பாச மலர்
7) வீ. ஆர். பாலகிருஷ்ணன்
8) வசுப்ரதா
9) R.நாராயணன்
ஆகிய அனைவரும் முழுவதும் முடித்து விட்டார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
என்னுடைய பதில்கள் இதோ. சரியா என்று கூறுங்கள்.
இடமிருந்து வலம்:
1. திக்கு
4. மறம்
6. அஸ்திரம்
10. கமுதி
14. பெண்பிள்ளை
மேலிருந்து கீழ்:
1. திருமகள்
2. குடும்பம்
5. பயம்
6. அடுக்களை
8. ரவை
9. மரகதம்
13. எண்
14. பெருமை
வலமிருந்து இடம்:
3. தடு
5. பசலை நோய்.
9. மயக்கம்.
11. தரு.
12. சதம்
16. சொத்துரிமை
கீழிருந்து மேல்:
7. திவலை.
12. சந்திரன்.
15. தும்பி.
Post a Comment