இந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார்.
இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத்தலுக்குப் பின் இடம் மாறுவதற்கு மொத்தம் பன்னிரெண்டு இடங்கள் உள்ளன. அதாவது A இடம் மாறுவதற்கு இரண்டாம் இடத்திலிருந்து, 13வது இடம் வரை வாய்ப்பிருக்கிறது. அதே போல் "2" இடம் மாறுவதற்கு ஒன்றாவது இடமும், 3லிருந்து 13வரையும் வாய்ப்புள்ளது. எந்தச் சீட்டும் கலைத்தலுக்குப் பின், முன்பிருந்த இடத்திலேயே இருக்க முடியாது. அப்படி இருந்தால், அந்தச் சீட்டு எல்லா கலைத்தலின் போதும் அதே இடத்திலேயே இருக்கும்.
இப்பொழுது A இடம் மாறுவதற்கு மொத்தம் 12 வாய்ப்புகள் என்பதால், அந்த 12 வாய்ப்புகளையும் சோதித்துப் பார்த்து விட்டால், விடையை கண்டுபிடித்து விடலாம்.
முதலில் A முதல் கலைத்தலுக்குப் பின் இரண்டாவது இடத்துக்கு செல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் இரண்டாவது கலைத்தலுக்குப் பின் இரண்டாம் இடத்தில் இருக்கும் 9, முதல் கலைத்தலுக்குப் பின் முதல் இடத்தில் இருந்திருக்க வேண்டும்.
இப்பொழுது 10வது இடத்திலிருப்பது 9வது இடத்துக்கு வருகிறது. அப்படியென்றால், இறுதியில் 9வது இடத்திலிருக்கும் 5, முதல் கலைத்தலுக்குப் பின் 10வது இடத்தில் இருந்திருக்க வேண்டும்.
இப்படியே நிரப்பிக் கொண்டு சென்றால் நமக்கு இறுதியில் கிடைக்கும் வரிசை 10, 9, Q, 8, K, 3, 4, A, 5, J, 6, 2, 7
சரி, Ace இரண்டாவது இடத்துக்குச் சென்றால் என்ற சாத்தியக்கூறு சரியாக வருகிறது. Ace, 3வது இடத்துக்குச் சென்றால்...? Ace 4வது இடத்துக்குச் சென்றால்...? கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தால், Ace இரண்டாவது இடத்தைத் தவிர மற்றெந்த இடத்துக்குச் சென்றாலும், சரியான வரிசை அமைக்க முடியாது. முரண்பாடு வரும்.
ஆகையால், A இரண்டாவது இடத்துக்குச் செல்வது ஒன்று மட்டும்தான் சாத்தியமான வழிமுறை ஆகிறது. ஆகையால் 10, 9, Q, 8, K, 3, 4, A, 5, J, 6, 2, 7 என்ற வரிசையே சரியானது. அதுவே முதல் கலைத்தலுக்குப்பின் கிடைக்கும் வரிசை என்று முடிவாகிறது.
4 comments:
ஒரு சின்ன சேஞ்ச்.. மொத்தம் 12 இடங்கள் இல்லை. 11 தான்.
ஏனென்றால். "ஏ" முதல் இடத்திலும் வராது அதே போல் 8ம் இடத்திலும் வராது. காரணம். இந்த இரண்டு இடத்தில் இருந்தாலும் கலைத்தலில் இடம் மாறவில்லை என்று அர்த்தம். முதல் இடத்தில் இருந்தால் முதல் கலைத்தலில் இடம் மாறவில்லை, 8ம் இடத்தில் இருந்தால் இரண்டாம் கலைத்தலில் இடம் மாறவில்லை. எனவே எந்த சீட்டுமே முதல் கலைத்தலில் வர 11 பாஸிபிலிட்டிஸ்தான்.. சரியா?
அதே போல் நான் விடையை கண்டுபிடித்தது உங்கள் வழிமுறைக்கு எதிர்திசையில் :)
அதாவது முதல் குலுக்கலுக்கு பிறகு "ஏ" இரண்டாம் இடத்தில் இருப்பதாக கற்பனை செய்வோம். இரண்டாம் குலுக்கலுக்கு பிறகு "ஏ" 8ம் இடத்திற்கு சென்று விட்டது. அப்படியானால், முதல் குலுக்கலுக்குப் பிறகு "2" 8ம் இடத்திற்கு சென்றிருக்கும். அதை எழுதிக் கொள்ளவும்.
இப்போது இரண்டாம் குலுக்கலுக்குப் பிறகு "2" முதலில் இருந்த 8ம் இடத்திலிருந்து "க்யூ"வின் இடத்திற்கு சென்றுள்ளது. அதனால் முதல் குலுக்கலுக்குப் பிறகு 8ம் சீட்டு "க்யூ" இடத்திற்கு சென்றிருக்கும்..
இப்படியே வரிசையாக ஃபில் செய்யலாம். நான் இப்படித்தான் விடை கண்டுபிடித்தேன்.
//ஒரு சின்ன சேஞ்ச்.. மொத்தம் 12 இடங்கள் இல்லை. 11 தான்.
//
ஆமாம், Ace முதல் இடத்தில் வருவதும், 8ம் இடத்தில் வருவதும் Obvious Contradictions. Agreed!!;-))
//அதே போல் நான் விடையை கண்டுபிடித்தது உங்கள் வழிமுறைக்கு எதிர்திசையில் ://
போர்த்திகிட்டு படுத்தால் என்ன? படுத்துகிட்டு போர்த்தினால் என்ன? குளிராமல் இருந்தால் சரிதானே!!;-))
Post a Comment