இன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட "ஒரே ஒரு ஊர்ல" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.
உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும்? (ஒரு கேள்விதான் அலவ்டு!!)
வெண்பூ சுட்டிக் காட்டியதால் புதிரில் சின்னத்(?!) திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா?! தாங்கலைப்பா!)
தொடர்பில்லாத குறிப்பு : இந்தப் புதிர் கொஞ்சம் எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள், பயங்கர கஷ்டமான புதிரை படிக்க விரும்புகிறீர்களா? இங்கே செல்லவும். அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதால், நான் முயற்சி செய்யவில்லை(எஸ்கேப்பு)!
Thursday, September 18, 2008
உண்மையைத் தேடி
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
ஏற்கனவே பதில் தெரியுமென்பதால் எஸ்கேப்பு....
.
.
யாரோ ஒருவரிடம் சென்று "உனக்கு எதிரிலிருப்பவரிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்" என்று கேட்கவும்.. சரியா???
சரியா தப்பா சொல்லிட்டீங்களே வெண்பூ!!
நீங்கள் சொன்னது நான் லிங்க் கொடுத்திருக்கும் பழைய புதிருக்கான விடை. இப்ப கேள்வி வேற. உன்னிப்பா பாருங்க!!:)
அதற்கும் அதேதான் யோசிப்பவர் :))
உங்கள் எதிரில் இருப்பவரிடம் "உங்கள் இருவரில் உண்மை பேசுபவர் யார் என்று கேட்டால் யாரை காட்டுவார்?" என்பதுதான் கேள்வி.
உண்மை பேசுபவர் பொய்யரை கை காட்டுவார், காரணம் அதுதான் பொய்யர் சொல்லும் பதிலாக இருக்கும்.
பொய் பேசுபவர் தன்னையே கை காட்டுவார், காரணம் அதுதான் உண்மை பேசுபவரின் பதிலுக்கு எதிரானதாக இருக்கும்.
எனவே, யார் சுட்டப்படுகிறாரோ அவரே பொய்யர். அடுத்தவர் உண்மையானவர்.
வெண்பூ,
ஓ! இதுக்கு இப்படி ஒரு நேர் வழி இருக்கோ! நான் கொஞ்சம் சுத்தி வளைச்சு யோசிச்சேன். இப்போ நீங்க விளக்கினதுக்கப்புறம், இதுவே போதும்னு தோணுது. சரி, இப்படி வைச்சுக்கலாம். நீங்கள் கேள்வி கேட்பவரிடம், கேள்வி அவரைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது உங்கள் கேள்வியில் நேரிடையாக நீங்கள் கேள்வி கேட்பவரை மட்டுமே சுட்ட வேண்டும். மற்றவரை சுட்டக் கூடாது. கோபப்படாதீங்க. ஒரு மாற்று சிந்தனைன்னு வச்சுக்கலாமா?!:-)
வெண்பூ,
திருத்தம் போட்டிருக்கிறேன். இப்ப ஓ.கே.யான்னு சொல்லுங்க!
சிம்பிள்..
"உங்களுக்கு காது கேட்குமா??"
உண்மை பேசுபவராக இருந்தால் ஆம் என்பார்..
பொய் செல்பவர் கேட்காது என்று பொய் சொல்வார்.. ஆனாலும் கேள்வி அவருக்கு கேட்டதே!!
நர்சிம்
ம்ம்ம்ம்.... கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. முயற்சி செய்கிறேன் :)))
சரியான்னு தெரியல... ஆனா ரொம்ப ஈசிதான் :)))
காந்தியை கொன்னது கோட்சே, சரியா?
அப்படின்னு கேக்கலாம். ஆமான்னு சொன்னா அவருதான் உண்மையாளர்...
ஹா..ஹா..ஹா.. (நான் இன்னும் முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்.. பதில் தெரிஞ்சா சொல்றேன்)
சுலபம் என்று நினைக்கிறேன்.
அந்த இருவரில் யாராவது ஒருவரிடம் நேருக்கு நேராக இந்தக் கேள்வியைக்
கேளுங்கள்:
" நீ இப்போது என்னைப் பார்க்கிறாயா?"
எதிரே இருப்பவர் எப்போதும் உண்மை பேசுபவரானால், ஆம் என்பார்.
எதிரே இருப்பவர் எப்போதும் பொய் பேசுபவரானால், இல்லை என்பார்.
என்ன சரியா?
கேள்வி...."சூரியன் கிழக்கே தானே உதிக்கும்?"
அந்த குறுக்கெழுத்து புதிருக்கு விடைகள்?
கடைசியாக போட்ட இரண்டு புதிர்களுமே(இதுவும், குறுக்கெழுத்தும்) சொதப்பிவிட்டன. என்னுடைய தவறுதான். சரிபார்க்காமலேயே பதிந்து விட்டேன்.
வெண்பூ,
உங்களை விடையை விட எளிதானதாக, இதற்கு நர்சிம், rangudu, அமர் எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்கள். நீங்களும், நானும் ஏன் இப்படி சுற்றி வளைத்து யோசித்தோம்?!?:)
//யோசிப்பவர் said...
வெண்பூ,
உங்களை விடையை விட எளிதானதாக, இதற்கு நர்சிம், rangudu, அமர் எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்கள். நீங்களும், நானும் ஏன் இப்படி சுற்றி வளைத்து யோசித்தோம்?!?:)
//
அட விடுங்க யோசிப்பவர்.. அவங்க எல்லாம் சின்ன பசங்க.. நம்ம எல்லாம் யாரு? ஜீனியஸ்ல.. அதனால (சரி... சரி.. அங்க யாரோ மூணு பேரு கட்டைய தூக்குறாங்க.. அதனால் அப்பீட்டு) :))))
****
உண்மையில், தோல்வியை ஒத்துக்கொள்கிறேன் யோசிப்பவர். எந்த பிரச்சினைக்குமே சுலபமான ஒரு வழி இருக்கும் என்பது அடிக்கடி மறந்து விடுகிறது. நான் எழுதிய இரண்டாவது பதில் "காந்தியை கொன்றது கோட்சாவா?" என்பதை கூட நான் சீரியஸ் பதிலாக நினைக்கவில்லை :(
Post a Comment