எனது அறைக்குள், எங்கள் VP திடீரென்று நுழைந்ததை நான் கவனிக்கவில்லை. எனது கணிணித் திரைக்குள், கொத்ஸின் குறுக்கெழுத்தில் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபொழுது, திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினால், அருகில் நின்று கொண்டிருக்கிறார். திரையை மூட சமயம் வாய்க்கவில்லை. பார்த்திருப்பார்!
இருந்தாலும் கண்டுக்காதது போல் வந்த வேலையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பேசிக்கொண்டே, நைஸாக கு.எ. ஐ மூடி வைத்தேன். அவர் போன பின்பு அவர் கொடுத்த வேலை வேலைக்காகாது என்று தெரிந்தது. அதனால் அவரிடம் நேரிடையாகவே அதைப் பற்றி சொல்லிவிடலாம் என்று அவர் அறைக்குச் சென்றேன்.
சிங்கம் பிஸியாக லேப்டாப்புக்குள் மூழ்கியிருந்தது. குரல் கொடுத்துவிட்டு இயல்பாக உள்ளே நுழைந்தேன். இப்பொழுது அவர் கணிணித் திரை தெரிந்தது. அவரும் சிறிது சங்கடத்துடன், திரையில் விரிந்திருந்த சாலிட்டரை மூடிவிட்டு, "என்னப்பா?" என்றார்.
"அடப்பாவி! நீங்களுமா?!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்!?!
Wednesday, September 17, 2008
வெட்டி
Posted by யோசிப்பவர் at 3:28 PM
Labels: நகைச்சுவை, மொத்தம், வேலைக்காகாதவை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அவருக்கும் நம்ம குறுக்கெழுத்து லிங்கைக் குடுத்து இருக்க வேண்டியதுதானே!! :))
Post a Comment